<b>சில குறிப்புகள்:</b>
Indoor Helicopter - Outdoor Helicopter
இரண்டும் remote control மூலம் இயக்கப்படுகின்றவை தான்.
Outdoor Helicopter செய்வதென்றால் பணம் அதிகமாகச் செலவளிக்கவேண்டும். நேரம் அதிகம் தேவைப்படும். வெளிச் சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதேனும் சிறிய பிழை ஏற்பட்டாலும் வருகின்ற பாதிப்பு அதிகம்.
Indoor Helicopter செய்வதற்கு செலவளிக்கும் பணம் ஒப்பீட்டளவில் குறைவு. நேரமும் அப்படித்தான். வெளிச்சூழலைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் வீட்டுக்குள்ளேயே பறக்கவிடலாம். மற்றும் Battery மூலம் இயங்குவதால் ஏற்படும் ஆபத்து குறைவானதாகவே இருக்கும்.
அடிப்படையில் Indoor Helicopter இனதும் Outdoor Helicopter இனதும் இயங்கும் முறையும் ஒன்றுதான். எனவே எனது நண்பரிடம் அடிப்படை விளக்கங்களையே கேட்டேன். நான் எழுதிய சில கேள்விகளையும், அவர் அதற்குத்தந்த சுருக்கமான சில பதில்களையும் இங்கே எழுதுகிறேன்:
1a)
நான்(கேள்வி): உலங்குவர்னூர்தியின் நீளத்திற்கும் அகலத்திற்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா?
நண்பர்(பதில்): ஆம் இருக்கிறது.
1b)
நான்(கேள்வி): உதாரணமாக நான் 50 செமீ நீளத்தில் ஒரு உலங்குவானூர்தி செய்வதாக இருந்தால், அதன் அகலம் எந்தளவாக இருக்க வேண்டும்?
நண்பர்(பதில்): 50 செமீ அளவில் செய்வது சுலபமல்ல. குறைந்தது 1 மீற்றர் நீளம் தேவை. காரணம், புவியீர்ப்பு சக்தியிலிருந்து விடுபட்டு மேல்நோக்கிச் செல்வதற்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்ய கட்டாயம் 1 மீற்றர் நீளமாவது தேவை. ஒரு மீற்றர் நீளத்தில் அமைக்கப்படும் போது அதன் அகலம் 10 செமீ இற்குள் அடங்கவேண்டும். அகலம் கூடக்கூடாது, ஆனால் குறையலாம். ஒடுக்கம் கூட கூட செயற்பாட்டின் வேகம் கூடும்.
உதாரணம்:
10 செமீ அகலம்: இங்கு வளியின் உராய்வு கூட - செயற்பாட்டின் வேகம் குறைய வாய்ப்புண்டு.
6 செமீ அகலம்: இங்கு வளியின் உராய்வு குறைய - செயற்பாட்டின் வேகம் கூட: உதாரணத்திற்கு முன்நோக்கி செல்லும் போது வளியின் உராய்வு குறைகிறது, எனவே வேகமாகச் செல்ல வாய்புள்ளது.
1c)
நான்(கேள்வி): உயரம் எந்தளவாக இருக்கவேண்டும்?
நண்பர்(பதில்): உயரம் - நிலத்தில் இருந்து உடம்பின் கீழ்ப்பகுதி 10cm
2)
நான்(கேள்வி):உலங்கு வானூர்தியின் தலைப்பகுதி எவ்வளவு நீளமாக இருக்கவேண்டும்? வால்பகுதி எவ்வளவு நீளமாக இருக்கவேண்டும்?
நண்பர்(பதில்)<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->படம் பார்க்கவும்)
3)
நான்(கேள்வி): ஃபானை தேர்ந்தெடுக்கும் பொழுது நிறைக்கு ஏற்றாற்போல் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு உதாரணம்? மற்றும் வால்பகுதியில் இருக்கும் மோட்டரை எப்படித் தெரிவு செய்வது? எந்த அளவில் தேர்ந்தெடுக்க வேண்டும்?
நண்பர்(பதில்): நடுமோட்டர் ஒரு சுத்து சுத்தினால் அதே அச்சில் இருந்து பொருத்தப்பட்டு எடுக்கப்படும் அச்சுக்கம்பி 5 சுத்து சுத்தவேண்டும். (படம் பார்க்கவும்)
4)
நான்(கேள்வி): உலங்கு வானூர்தியின் நடுப்பகுதியைத் தேர்ந்தெடுத்துத்தானே ஃபானைப் பூட்டவேண்டும். அப்படியாயின் எப்படி அந்த நடுப்பகதியைக் கண்டுபிடிப்பது?
நண்பர்(பதில்): கட்டித் தொங்கவிட்டால் ஒருபக்கமும் ஏறி இறங்காமல் சமமாக இருக்கவேண்டும். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (படம் பார்க்கவும்)
http://kurumpoo.yarl.net/images/heli.html
நண்பரின் அறிவுரைகள் சில:
*...கெலிகொப்ரர் செய்வது மற்றும் அதன் செயற்பாடு பற்றி ஒருசில கடிதத்தாளில் எழுதிவிடமுடியாது...
*...மிகவும் நுணுக்குமாக செய்ப்படவேண்டிய விடயம். 1mm உராய்வு ஒரு பக்கம் கூடினாலே அந்தப்பக்கம் வரும் பாதிப்பு பல. திடீர் விசப்பரீட்சை வேண்டாம்... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
*...முதலிலே பட்டம் ஒன்றை செய்து காத்தில் வெற்றிகரமாகப் பறக்கவிடுங்கள். பின்னர் 2 பென்சில்களை தாங்கி அந்தப்பட்டத்தைப் பறக்கசெய்யுங்கள். அதில் ஏற்படும் மாற்றங்களை அவதானியுங்கள். சின்னப்பட்டம் பறக்க எவ்வளவு காத்து வீசவேண்டும். ஒரு பெரிய பட்டம் பறக்க எவ்வளவு காத்து வீசவேண்டும். அவற்றைக் கணக்கிடுங்கள். பாரத்தைத் தூக்க எவ்வளவு சக்தி தேவை என்பதை அவதானியுங்கள்...
*...காத்து உங்களை நோக்கி வீசும்போது தனியாக நடவுங்கள். எவ்வளவு தூம் உங்களை நடக்கவிடாமல் தடுக்கிறது? ஒரு பெரிய காட்போர்ட் மட்டையை உங்கள் முன் பிடித்தவாறு நடவுங்கள். நீங்கள் தனியாக நடந்த வேகத்திலும் பார்க்க, காட்போர்ட்டுடன் நடக்கும் போது வேகம் குறைந்திருக்கும். இவற்றின் காரணங்களை அறியுங்கள். ஏன் வேகம் குறைகிறது? எதற்காக எப்படி என்ற கேள்விகளுக்கு விடை காணுங்கள்.
*...கெலிகொப்ரர் ஒரு இயந்திரம். அதை வைத்து முன்னுக்குப் பின்னுக்கு வலதுபக்கம் இடதுபக்கம் எல்லாம் போகலாம்...
உலங்கு வானூர்தி (குறிப்பாக Indoor helicopter) செய்வது பற்றிய விளக்கம்:
http://www.angelfire.com/blues/heli_project/ -இந்த இணையத்தளம் சிறிய ரக Indoor Helicopter ஐ இலகுவாக செய்வதற்கான விளக்கத்தைத் தருகிறது. மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்று பாருங்கள். விளக்கங்கள் தேவைப்பட்டால், அந்த விளக்கங்களைத் தரும் நண்பருக்கு மின்னஞ்சல் எழுதினால் உடனடியாகப் பதில் தருவார்.
http://www.flyheli.de/
உதிரிப்பாகங்கள் வாங்குவதற்கான இணையத்தளம்:
http://www.hobby-lobby.com
http://www.rcgroups.com
உதிரிப்பாகங்கள் வாங்கும் போது கவனிக்கவேண்டியவை:
http://www.ezonemag.com/
http://www.heliguy.com/
ஒரு உலங்கு வானூர்தி எப்படி இயங்குகிறது என்பது பற்றிய விளக்கம்:
http://www.howstuffworks.com/helicopter1.htm
இது எனது வலைப்பதிவில் முன்னர் எழுதியது:
(பிழைகள் ஏதும் இருந்தால் திருத்தங்களைச் சொல்லுங்கள்)
http://kurumpoo.yarl.net/archives/000577.html
http://kurumpoo.yarl.net/archives/001381.html