10-20-2005, 03:30 AM
பிரிட்டனில் இனி குழந்தை பிறந்தால் அக்குழந்தைகளின் அம்மாவுக்கு மட்டுமின்றி, அப்பாவுக்கும் மூன்று மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பிரிட்டனில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு சந்தோஷம் அளிக்கும் திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குழந்தை பிறந்தால் அதை பராமரிக்க பெண்களுக்கு பேறுகால விடுப்பு அளிப்பது போல் ஆண்களுக்கும் விடுப்பு அளிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆலன் ஜான்சன் இதுகுறித்து கூறியதாவது:
தற்போது பிரிட்டனில் ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் தாய்க்கு ஆறுமாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் மேலும் ஆறுமாதம் சம்பளமற்ற விடுப்பும் அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் குழந்தையின் தந்தைக்கு இரண்டு வாரங்களுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும். தற்போதுள்ள இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. இனிமேல் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் தந்தைகளுக்கும் மூன்று மாதங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும். அதே போல் பெண்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதமாக நீட்டிக்கப்படுகிறது. இதில் குழந்தை பெற்ற பெண்கள் ஆறுமாதம் கழித்து வேலைக்கு செல்ல விரும்பினால், குழந்தையின் தந்தைக்கு மேலும் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கவே அதிகம் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி மே மாத தேர்தலுக்காக தொழிலாளர் கட்சி சார்பில் பேறு கால விடுப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து வர்த்தக நிறுவனங்களுடன் கலந்தாலோசனை செய்தோம். இத்திட்டத்திற்கு நிறுவன இயக்குனர்கள் மற்றும் பிரிட்டன் தொழில் துறையின் கூட்டுக் குழுவின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு ஆலன் ஜான்சன் கூறினார்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->