Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
பதில் தாருங்கள்
அண்மையில் டி.சே எழுதிய கவிதை நண்பர் ஒருவரால் களத்தில் இடப்பட்டதைத் தொடர்ந்து ஆங்காங்கே இடம்பெற்ற சர்சைகளையும் வாதங்களையும் விதண்டாவாதங்களையும் கவனித்தேன்.
அவற்றுக்குப் பதிலளிக்க முயன்றால் ஒவ்வொரு களமும் பூட்டப்படுகிறது.
கெட்ட வார்த்தைகள்,தலித் இலக்கியம் பின்னவீனத்துவம் பற்றி அரைகுறையான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன கள உறுப்பினர்கள் இவற்றைப் பற்றி விவாதிப்பதும் அவற்றைப் பற்றி அறிவதும் முக்கியம் என நினைக்கிறேன்.வெறுமனே களத்தைப் பூட்டிவிடுவதால் சண்டையைத் தவிர்க்க முடியும் ஒழிய அறிவைப் பெற்றுக்கொள்ள முடியாது
இந்தத் தலைப்புகளினை விவாதிப்பதற்கு களத்தின் எந்தப் பகுதி பொருத்தமானது என்று யாராவது சொல்லுங்கள்
இவற்றை விரும்பாதவர்களுக்கு இந்தத் தலைப்புகளின் கீழ் இன்னின்ன கருத்துகள் விவாதிக்கப்படும் என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருப்பதால்.அவற்றைப் படித்து ஆட்சேபணை தெரிவிப்பதில் காலத்தை வீணாக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.
எங்கே ஆரம்பிக்கலாம்
\" \"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உண்மைதான் ஈழவன்... அசிங்கம் அசிங்கம் என்று சனம் உள்ளதுகளை மறைக்குதுகள்.. நாங்க பார்க்க பேச வழியில்ல..! மொழி என்னத்துக்கு இருக்கு...வாயால வீணி வழிய கதைக்க பேசத்தானே..! அதை நாங்க ஐநா சபையிலும் வைச்சு... பாருங்கோ எங்க மொழிட வளர்ச்சியை என்று காட்டப் போறம்..ஆனா இந்தக் களம் அதுக்கு விடுகுதே இல்ல... எனி மேல் களத்தில உள்ளவை யாரும் அசிங்கம் என்று சொல்லாதேங்கோ...! நடுவீட்டில மலம் கழியுங்கோ..ஒண்டுக்குப் போங்கோ..வெளில போகேக்க உடுப்புப் போடாதேங்கோ...எல்லாருக்கும் உள்ளதுதானே..அதில என்ன இருக்கு மறைக்க...அசிங்கமா...இப்படிச் செய்து ஒரு கற்காலப் புரட்சிக்கு இன்றே வழிசமைங்கோ...!
கூச்சல் கூவல் என்று இருந்த மனிதன் மொழி உருவாக்கினது நாகரிக வளர்ச்சி என்றுதான் சொல்லுறாங்க..அந்த மொழிக்கும் ஒரு நாகரிகம் இருக்கு...உலகில் அதுக்கு ஒரு அளவீடு இருக்கு...இப்படி சொல்லுறது லூசுகள்..! ஐநாவில போய் டேய் கொபி அனான்..கேப்பமாரி முள்ளமாரி பேமாளி எண்றா சவுக்கியமா இருக்கியா...என்று பேசக் கற்றுக்கணும்...அப்பதான் தமிழின் நாகரிகம் தமிழரின் நாகரிகம் புரட்சி...சீர்திருத்தம் உலகத்துக்கு பாடமாகும்...!
தூசணம் என்று என்ன இருக்கு.. பாடசாலை மேடைல போய் மாணவர்கள் மத்தியில அடேய் மரமண்டைப் பசங்களா...டிசே எழுதினதை கடைப்பிடிங்கடா...அதில உள்ளதுகளை வைச்சு ஒரு 1000 சொல்லுக்கு கட்டுரை அமையுங்கடா... தலைப்பு "றோட்டில பஸ்ஸில போற பெண்களை எவ்வளவு மட்டமா அளக்கிறேள்" என்றது தான்...! அளக்கிறது மட்டுமில்ல...அதை வெளில சொல்லுற துணிச்சல் வரனும் அப்பதான்...றோட்டில நிண்டு சேட்டை விட...கடத்திட்டு போக.. லிவ்விங் ருகெதர் என்று நினைச்சதெல்லாம் முடிக்க...துணிச்சல் வரும்...அதேவேளை அதுதான் எங்க நாகரிகம் அற்புதம் என்றதை உலகம் அறியும்..! அசிங்கம் களைச்சு மொழியின் நாகரிக வளர்ச்சிக்கும் வழி பிறக்கும். அதைவிட்டிட்டு இந்தக் களத்தில ஏன் அதுகளை பூட்டினமோ...! எங்களுக்கும் உது பிடிக்கல்ல..! சுதந்திரமா வாய்ல வாறதுகளை பேச எழுத விடுங்க...எங்க பேச்சு எழுத்துச் சுதந்திரத்த பாதிக்கச் செய்ய வேணாம்...எங்க மொழிக்கு ஒரு புரட்சிகர நாகரிகம் கற்றுத் தர நினைக்கிற எழுத்தாளர்கள் நாங்க...எங்க முயற்சிகளை வீணடிக்காதேங்கோ...!
அதுமட்டுமல்ல...வயதுவந்தோர் பக்கம் என்று ஒன்று திறவுங்கோ...அங்க நாங்க அந்தரகங்கள் என்றதையே இல்லாமச் செய்து காட்டிறம்..நாங்கள் யார்..தமிழுக்கு அதன் வளர்ச்சிக்கு என்று உதித்த நவகால நாவலர்கள்..! நாவலர் தமிழுக்க சாதி இலக்கணம் வகுக்கலாம்..நாங்கள் பாலியல் இலக்கணம் வகுக்க கூடாதோ..இப்பவே விடுங்கோ...வகுத்து தொகுத்து நடைமுறைப்படுத்தியும் காட்டுறம்...! அதில எங்க அனுபவங்கள் மிக மிக அதிகம்..அதுகளில ஒரு ஆய்வுக்கட்டுரையே வைக்கிறம்...! அது தமிழில புரட்சி பண்ணுதோ இல்லையோ என்று அப்புறம் சொல்லுங்கோ..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
சரியாகச் சொன்னீர்கள் குருவீகாள்
எமது தமிழ் மொழி தேமதுரத் தமிழோசை உங்கள் வாயால் சொன்னமில்லை பாத்தமில்ல
புரியல்ல தெரியல்ல
என்றெல்லாம் வாயில்வடி வீணியாகிக் கரைந்தொழுகிக் காற்றோடு கலப்பதிலும் பார்க்க
இன்றைக்கும் பேசப்படும் தூசண வார்த்தைகள் ஏன் பெண்களையே குறி வைக்கின்றன என்று பார்ப்பது பிரயோசனமாக இருக்கும்.
தமிழ் மொழி பண்பாடை மற்றவர்களுக்குப் கற்றுக்கொடுக்கும் முதல் எமதினத்தின் அடிப்படியாம் தமிழை அகர முதல கற்றுவரும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
என் கொங்கை நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க என்று மாணிக்கவாசகர் பாடலாம்.
உமையம்மையின் முலையுரசி தழும்புற்ற தோளன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடலாம்.
யானையின் முகபாடத்தை இளநங்கையின் சாயாத முலைகள் போன்றவை என்று திருவள்ளுவர் கூறலாம்
சமஸ்கிருதத்தில் ஸ்தனங்கள் என்றும் பிருஷ்டம் என்றும் அல்குல் என்றும் சொன்னால் நாகரீகம் தமிழில் சொன்னால் அநாகரீகம்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றறியாமலே அவியும் உங்கள் மேதாவிலாசத்தை மெச்சுகிறேன்.
சரி இவை இவை கெட்ட வார்த்தைகள் என்பதற்கு என்ன வரைவிலக்கணம் வைத்திருக்கிறீர்கள்
\" \"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Eelavan Wrote:சரியாகச் சொன்னீர்கள் குருவீகாள்
எமது தமிழ் மொழி தேமதுரத் தமிழோசை உங்கள் வாயால் சொன்னமில்லை பாத்தமில்ல
புரியல்ல தெரியல்ல
என்றெல்லாம் வாயில்வடி வீணியாகிக் கரைந்தொழுகிக் காற்றோடு கலப்பதிலும் பார்க்க
இன்றைக்கும் பேசப்படும் தூசண வார்த்தைகள் ஏன் பெண்களையே குறி வைக்கின்றன என்று பார்ப்பது பிரயோசனமாக இருக்கும்.
தமிழ் மொழி பண்பாடை மற்றவர்களுக்குப் கற்றுக்கொடுக்கும் முதல் எமதினத்தின் அடிப்படியாம் தமிழை அகர முதல கற்றுவரும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
என் கொங்கை நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க என்று மாணிக்கவாசகர் பாடலாம்.
உமையம்மையின் முலையுரசி தழும்புற்ற தோளன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடலாம்.
யானையின் முகபாடத்தை இளநங்கையின் சாயாத முலைகள் போன்றவை என்று திருவள்ளுவர் கூறலாம்
சமஸ்கிருதத்தில் ஸ்தனங்கள் என்றும் பிருஷ்டம் என்றும் அல்குல் என்றும் சொன்னால் நாகரீகம் தமிழில் சொன்னால் அநாகரீகம்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றறியாமலே அவியும் உங்கள் மேதாவிலாசத்தை மெச்சுகிறேன்.
சரி இவை இவை கெட்ட வார்த்தைகள் என்பதற்கு என்ன வரைவிலக்கணம் வைத்திருக்கிறீர்கள்
முதலில் மேதாவித்தனம் என்ற விளிப்பை விடுங்கோ..! இது என்னவோ பாடசாலைப் பட்டிமன்றம் போல ஆகுது..! எதிரணியினரின் மேதாவித்தனம்...என்றது போல..! ஒரு அனுபவமிக்க எழுத்தாளர் நீங்கள்..அப்படியான சொற்களைப் பாவிப்பதைத் தவிர்ப்பது நல்லது..!
அப்புறம் உங்கள் உதாரணங்களும் அவை பாவிக்கப்பட்ட இடங்களும் முறைகளும் டிசே பாவிச்ச முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு..! உதாரணத்துக்கு திருவள்ளுவர் சொன்னது ஒரு குறிப்பு..! டிசே சொன்னது குறிப்பு அல்ல.. வக்கிரத்தனத்தின் வெளிப்பாடு...! மொழி நடையைப் பொறுத்துத்தான் கொள்ளும் பொருளுக்கான தன்மை மாறுபடும்..! இப்போ..ஒரு நிர்வாண உடலை ஒரு வைத்தியன் பார்ப்பதற்கும்....ஒரு திருமணமான சோடி பார்ப்பதற்கும் இடையில் என்ன வேறுபாடோ..அதே போலத்தான் இதுவும்...! சந்தர்ப்பம்...விளக்கும் முறை..மொழி நடை இவை கருத்தாவை என்னென்ன வழிக்கு இட்டுச் சொல்லும் என்பதை தமிழ் அழகுறச் சொல்லுகிறது அதன் இலக்கணத்தில்...! அப்புறம் என்ன... வரைவிலக்கணம் கேட்கிறீங்கள்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஈழவன் உம்போன்ற தேசத்துரோகிகள் சமூகவிரோதிகளை யாழ்களித்தில் உடனடியாக தடை செய்வதிலிருந்து ஆரம்பிக்கலாம். வந்து கூத்தைப்பாத்து முகப்பாவனைகளை போட்டுவிட்டு போம் கருத்து எழுதுற கனவுகளை விட்டுவிடும். ஆசையிருந்தால் கொஞ்சம் ஜால்ரா அடியும். இல்லாடி உமக்கு இங்கை இடமில்லை.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Eelavan Wrote:பதில் தாருங்கள்
இந்தத் தலைப்புகளினை விவாதிப்பதற்கு களத்தின் எந்தப் பகுதி பொருத்தமானது என்று யாராவது சொல்லுங்கள்
இவற்றை விரும்பாதவர்களுக்கு இந்தத் தலைப்புகளின் கீழ் இன்னின்ன கருத்துகள் விவாதிக்கப்படும் என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருப்பதால்.அவற்றைப் படித்து ஆட்சேபணை தெரிவிப்பதில் காலத்தை வீணாக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.
எங்கே ஆரம்பிக்கலாம்
நாதன் உங்கள் வலைப்புூவிலேயே இதற்கு என்று
ஒரு பகுதி ஆரம்பிக்கலாமே? நானும் வாறன்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
எல்லோரும் கோபம் கொள்ளாமல கொஞ்சம் சிந்தித்துக் கருத்தெழுதலாமே. தாக்குதலாகக் கருத்துக்கள் சென்று கொண்டிருந்தால் தீர்வுகள் கிடைக்காது. வன்மங்கள்தான் வளரும். களவிதிகள் என்று எங்கள் முன் வைப்போர் கூட அதனை முறையாகக் கையாள்வது கிடையாது. ஆளுக்கொரு நியாயம் தான் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன. இது கூட பிரைச்சினைகளுக்கு அத்திவாரமிடுகின்றன. ஒரு சிறப்பான விடயத்தை வெட்டியொட்டுவது தப்பல்ல. ஆனால் அதை முடிந்தவரை தமிழிலேயே போட்டால் எல்லோருக்கும் புரிந்து கொள்ள வசதியாகவிருக்கும். மொழிப்பெயர்ப்புக்கு நேரப்பிரைச்சினையும் உண்டுதான். அதனால் ஒரு யோசனையை நான் சமர்பிக்கின்றேன். இங்கு களத்தில் நல்ல ஆங்கிலப் புலமையுள்ளோர் உங்களுக்கு உதவி செய்ய முடியுமாயின் உங்கள் பெயர்களைத் தெரிவியுங்கள். மொழி பெயர்க்க நேரம் கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர் பெயர் குறிப்பிட்ட ஒருவருக்கு தனிமடல் மூலம் தான் வாசித்த பகுதியின் முகவரியையும் விடயத்தையும் சுருக்கமாக குறிப்பிட்டு அனுப்பினால் அவரும் மொழி பெயர்த்து களத்தில் இடலாம். மற்றவர்களும் உங்கள் ஆலோசனையை தெரியப்படுத்துங்களேன். இது எனது கருத்து மாத்திரமே.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அன்பின் குருவிகாள்
வணக்கம்
தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.மேதாவித்தனம் என்பதற்கும் மேதாவிலாசம் என்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு.
மேதாவித்தனம் அரைகுறையாகத் தெரிந்துவைத்துக்கொண்டு எல்லாம் அறிந்தவன் மாதிரி காட்டிக்கொள்வது மேதாவிலாசம் என்பது உண்மையிலேயே அறிவுள்ளது நான் உங்களை எப்படி விளித்தேன் என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்
மற்றது யானையின் முகபாடத்தைப் பார்க்கும் போது திருவள்ளுவருக்கு இளநங்கையின் சாயாத கொங்கைகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
டி.சேயின் கவிதையில் டிசே பெண்ணின் உறுப்புகளை ரசிக்கவில்லை.கலாசாரம் பண்பாடு பற்றிக் கதைத்துக் கொண்டே கீழ்க்கண்ணால் நோக்குபவர்களைப் பற்றியே குறிப்பிட்டிருக்கிறார்.இரண்டிலும் கருத்தியல் ரீதியான ஆபாசம் இல்லை.நீங்கள் சொல்லும் மொழிப் பயன்பாடு இரண்டிலும் ஒன்றே.
இப்போதைக்கு ட்.சே கவிதையை விட்டுவிடுவோம்.மற்றைய விடயங்களைப் பார்ப்போம்
ஆண் பெண் உறுப்புகளின் மீது நாங்கள் கொண்டுள்ள கவர்ச்சி,மயக்கம் எதிர்ப்பால் உறுப்புகள் மீதான ஆர்வம் போன்றவைதான் தூஷணங்களாக உருவெடுத்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.எங்களுக்கு மட்டுமே சொந்தமென நாங்கள் நினைக்கும் ஒரு பொருளைப்பற்றி இன்னொருவன் குறிப்பிடும்போது அது எமக்குள் தோற்றுவிக்கும் அதிர்ச்சியே தூஷணத்தின் மதிப்பு.
இவ்வாறு உடலுறுப்புகளைப் பற்றிப் பேசுவதே பாவம் என்று இருப்பதால் தான் அவற்றைப் பற்றிப் பேசுவது தூசணம் என்றாகிறது.
இந்தப் பாவ மதிப்பீடுகளை விட்டுவிட்டுப் பாருங்கள் எது தூசணம்
உணவுண்ணும் வாய் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு வெளித்தள்ளும் உறுப்புகளும் முக்கியமானவை.ஆனால் உணவுண்ணுதலை விரும்பிப் பேசும் நாம் மலம் கழிப்பதையும் சலங்கழிப்பதையும் பற்றிப் பேச மறுக்கிறோம்.ஏனென்றால் சலம் கழிப்பதும் மலம் கழிப்பதும் தவறான செயல்கள் என்று ஆரம்பத்திலிருந்தே பதிக்கப்பட்டிருக்கிறது எமது சிந்தனை.அது அவைபற்றிய கதையாடல்களை மறுக்கிறது
ஒவ்வொரு மனிதனும் தான் சலம் கழிப்பதையும் மலம் கழிப்பதையும் மறுக்கின்றான்.சலமும் மலமும் போகாத புனிதராகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ள விரும்புகிறான்
இதைத்தான் மொழியியியல் வன்முறை என்பார்கள்.அதாவது மொழியில் சில சொற்களை தீண்டத் தகாதவை ஆக்கி வைத்திருக்கிறோம் அவற்றை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் போது அது தூஷணமாகின்றது
முக்கியமான இன்னொரு விடயம் தமிழில் தூஷணம் என்ற சொல்லே இல்லைத் தெரியுமா?
அதற்கிணையாகப் பிரயோகிக்கப்பட்ட சொல் நிந்தனை ஆனால் நிந்தனைக்கும் தூஷணத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது
தூஷணம் என்பது எங்களால் வரையறுக்கப்பட்ட சில வார்த்தைகள் ஆனால் நிந்தனை என்றால் ஒருவனை நாயே பேயே முட்டாள் குரங்கே என்று என்ன வேண்டுமானலும் கூறி நிந்தனை செய்வது.
ஆதித்தமிழில் தூஷணம் என்ற பகுதியே இல்லை என்று நினைக்கிறேன்.தவறாக இருந்தால் யாராவது திருத்துங்கள்.
நாரதர் மற்றும் குறுக்காலை போவான் களத்தில் இதைவிடப் பல வாதப்பிரதிவாதங்கள் நடந்திருக்கின்றன.பல அபிப்பிராய பேதங்களால் பலர் விலகியிருக்கிறார்கள் பலர் இன்னும் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள் ஆக களம் நின்றுவிடவில்லை நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது.குறைகளும் பலவீனங்களும் நிறைந்ததுதானே மனித வாழ்க்கை.
எழுத எழுத தணிக்கை செய்வது மனதுக்கு கஷ்டமான காரியம் தான் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுத்தெழுத்தாக நான் தட்டியதை யாரவது அழித்துவிட்டால் மனதுக்கு கஷ்டமாகத் தான் இருக்கும்.ஆனால் எதற்காக எழுதுகிறோம் எங்கள் மேதாவிலாசத்தைப் பறைசாற்றிக்கொள்ளவா அல்லது இதன மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவா என்று யோசித்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்
வசி வலைப்பதிவில் இதை நான் எழுதினால் என்னடா இப்பத்தான் எங்களுக்கு அரிச்சுவடி சொல்லித்தருகிறாயா என்று சிக்கெடுத்துவிடுவார்கள்.அங்கே இவையெல்லாம் விவாதிக்கப்பட்டுக் கடந்து போய்விட்டன.களத்தில் இதுபற்றிய உரையாடல் சென்றுகொண்டிருந்ததால் உள்ளே வந்தேன் இதைவிடச் சுவாரசியமான விடயம் வலைப்பதிவுகளில் ஓடுகிறது இனி கொஞ்ச நாள் அந்தப் பக்கம்
நீங்கள் எப்போது வலைப்பதிவுக்கு வருகிறீர்கள்?கிருபனும் வந்துவிட்டார்
\" \"
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
உங்கள் தரவுகளுக்கு நன்றி ஈழவன் !
பொதுவாகவே எல்லாவற்றிற்கும் அழைப்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. அவற்றை இடம் பார்த்து அதற்கேற்றவாறு நாம பாவிக்கின்றோம். எனது நண்பனை நான் தனிமையில் வாடா போடா என்றழைத்துக் கதைப்பேன் என்பதற்காக ஒரு பொதுவான இடத்திலும் நண்பன்தானே என்ற உரிமையில் நான் அப்படி அழைப்பது நாகரீகமாக இருக்குமா?? நீங்கள் சொல்கின்ற செயல்கள் அனைத்தையும் குறிப்பிடுவதற்கு எத்தனையோ நாகரீகமான வார்த்தைகள் இல்லையா?? நான் காலைக்கடன்களை முடித்துவிட்டு வருகின்னென்று ஒருவருக்கு பொதுவாகக் குறிப்பிட்டால் அது புரியாமல் போய்விடுமா?? எப்படி நாகரீகமாக உடைகள் அணிந்து வாழவிருபுவது போல நாகரீகமாக பேச நினைப்பதும் தவறா.?? எமக்கெல்லாம் சகிப்புத்தன்மையும் புரிந்துணவும் நிறையவேயிருந்தால் பிறகு ஏன் ஆடைகள் கொண்டு அங்கங்கள் மறைப்பான். கோயில் சிற்பங்கள் போல் நிர்வாணமாகவே வாழலாமே.
எனது கருத்தையும் தெளிவு படுத்தவே இதனை எழுதுகின்றேன் உங்ளுடன் வாதாட்டமாகவல்ல.
இங்கே எனது மாமனார் எனக்கு கூறிய கதையொன்றையும் கூற விரும்புகின்றேன்.. எனது மாமனார் யாழ் இந்துக்கல்லு}ரியில் படித்தபோது விடுதியிலேயே தங்கிப்படித்தார். இளைஞர்கள் என்றால் குறும்புகளுக்கும் பஞ்சமில்லையே. விடுதியில் இருந்த இளைஞனொருவர் அடிக்கடி பக்கத்து வீட்டுப் பலாமரத்தில் அடிக்கடி பழங்களை இரவில் திருடி வருவாராம். இதனை மற்றவர்கள் தடுத்தும் அவர் நிறுத்தவில்லையாம். பக்கத்து வீட்டாலும் புகார் பாடசாலைக்கு வந்தவிட்டது. ஆனால் இளைஞனும் திருட்டை நிறுத்தவில்லை.. ஒரு நாள் அவ்விளைஞன் திருடிக் கொண்டு வரும்போது விடுதிப் பொறுப்பாளரிடமே பிடிபட்டு விட்டாராம். விடுதிப் பொறுப்பாளர் அவ்விளைஞனில் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தவராம். இளைஞனை கையும் களவுமாக பிடித்த பொறுப்பாளர் நீயா இதைச் செய்கின்றாய் என்று கண்கலங்கக் கேட்டவிட்டு ஒன்றும் சொல்லாமல சென்று விட்டாராம். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்விளைஞன் அன்று இரவு முழுக்கத் நித்திரை கொள்ளாமல் முழித்தபடியே கவலையிலிருந்தாராம். விடிந்து பார்த்தபோது அவ்விளைஞன் கயிற்றில் தொங்கி தற்கொலை செய்திருந்தாராம். சில விளையாட்டாக திருடுவது பொதுவாக நடைபெறும் ஒன்றுதான். அவ்விளையாட்டு மற்றவர்களின் நல்லபிப்பிராயங்களை மாற்றும்போது எப்படி வினையாகின்றது பார்த்தீர்களா??
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
வசம்பு,
முலைகளை வெளிப்படுத்த வேறெந்த நாகரீக வார்த்தையை எதிர்பார்க்கிறீர்கள்?
மார்பகம்?
--------------------------------------------
நிற்க,
வயதுவந்தவர்களுக்கும் மனமுதிர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமென்று வாதப் பக்கமொன்றைத் திறந்து அங்கே வாதிப்போம். அப்போது என்ன நடக்குமென்று நினைக்கிறீர்கள்? விரல்சூப்பிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் எல்லோரும் விழுந்தடித்து வரத்தான் போகிறார்கள்.
ஈழநாதனின் பக்கத்தில் இதை வாதிப்பது சிறுபிள்ளைத்தனமானதாகத்தான் இருக்கும். ஏனென்றால் அதை வாசிப்பவர்கள் தனியே யாழ்க்களத்தில் இருப்பவர்கள் மட்டுமில்லையே?
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
குஸ்புவுக்கு ஆதரவாகக் கதைப்பவர்களைக் கொல்ல வேண்டுமென்று சொன்னவர்களும் இந்த விவாதத்துக்கு வருவதாகச் சொன்னது (அதுவும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டிருக்கும் நகைக்குறிகளுடன்) பெரிய மாற்றமென்று கொள்ளலாமா தெரியவில்லை.
(இன்னொரு இடத்தில் நடந்ததைக் காவுவதாக எனக்கு அன்பான மிரட்டல் வந்தபின்னும் இதைச் சொல்கிறேன். ஏனென்றால் ஒரேநபர்தானே எல்லாம் சொல்கிறார்?)
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
குருவிகாள் நீங்கள் தடைசெய்யப்பட்டது பற்றி எந்த விபரமும் எனக்குத் தெரியாது.
களத்திலும் அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.
மட்டுறுத்தினர் விளக்கம் கொடுப்பார்கள் என நம்புகிறேன்
அன்பின் வசம்பு
நீங்கள் சொல்வதில் எனக்கு ஓரளவு உடன்பாடு உண்டு.ஆனால் மாலையில் மலம் கழிப்பதைக் காலைக்கடன் என்று சொல்லலாமா இல்லையே?
பெரியோர் நிறைந்த சபையில் மலங்கழித்தல் என்று சொல்வது வரவேற்புக்குரியதல்ல என்பதால் தான் எங்கள் முன்னோர் கொல்லைக்குப் போதல் முதலிய சொல்லாடல்களை உருவாக்கினார்கள் அதனையே
மங்கலம்,குழூஉ குறி.இடக்கரடக்கல் என்று ஒவ்வொரு வழக்காக வழங்கினார்கள்.
இன்றைய காலத்தில் நோக்கும் போது இவ்வாறான மங்கல அமங்கலப் பாகுபாடுகள் எல்லாச் சொற்களுக்கும் தேவையா
என்பதுதான் எனது கேள்வி.ஒரு வேளை மலங்கழித்தலுக்கு அது தேவைப்படலாம் முலை என்பதை ஸ்தனம் என்றும் யோனி என்பதை அல்குல் என்றும் சொல்லும்போது அவை அதே அர்த்தம் உள்ள சமஸ்கிருதச் சொற்கள் என்று உங்களுக்கே தெரியும் அப்படியிருக்க அவற்றைப் பயன்படுத்துவது எப்படி நியாயம்
சரி ஆண்குறி என்ற வார்த்தைப் பிரயோகம் ஆபாசம் என்கிறீர்கள் அதை மங்கல வழக்காக எப்படிச் சொல்வீர்கள்?
நாஞ்சில் நாடன் என்னை விட அழகாகக் கூறி இருக்கிறார்.நாஞ்சில் நாடனைத் தெரியாதவர்களுக்கு-
இவரது கதையையே தங்கர் பச்சான் அழகி படமாக எடுத்தார்
\" \"
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
ஈழவன், தவறுதலாகப் பதிந்துவிட்டீர்கள்.
நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்தான் 'சொல்ல மறந்த கதை' ஆனது. அழகி தங்கர் பச்சானின் கதை. கல்வெட்டு என்று நினைக்கிறேன் மூலக்கதையின் பெயர்.
இத்தகவல் உங்களுக்குத் தெரியும். ஆனால் தவறுதலாகச் சொல்லிவிட்டீர்களென்றே நினைக்கிறேன்.
நாஞ்சில் நாடனின் கட்டுரை நானும் பார்த்தேன். மிக்க நன்று. அதை இங்கே போடுமளவுக்கு யாழ்க்களம் இல்லையென்றே நினைக்கிறேன். ஆனால் எங்கள் இலக்கியங்கள் பண்பாடுகள் பற்றியெல்லாம் 'வெள்ளைத் தனமாக' கதைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் படிக்க வேண்டிய முக்கிய கட்டுரை. அவர்களுக்கெல்லர் அதைப்படிக்க எங்கே நேரமும் மனமும் வரப்போகிறது?
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நன்றி நல்லவன் தவறுதலாகத் தான் பதிந்துவிட்டேன் நாஞ்சில் நாடனின் கதை சொல்ல மறந்த கதையின் திரைகதை என்பதே சரி திருத்தத்திற்கு நன்றி.
யாழ்களத்திலுள்ளவர்கள் படிக்கவேண்டும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பிலேயே நானும் ஆரம்பித்தேன்
\" \"
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
இப்ப எங்களிற்கு தேவையான முக்கிய விவாதம் நடத்துங்கோ
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
Eelavan wrote:
சரி ஆண்குறி என்ற வார்த்தைப் பிரயோகம் ஆபாசம் என்கிறீர்கள் அதை மங்கல வழக்காக எப்படிச் சொல்வீர்கள்?
நான் எந்த இடத்திலும் ஆண்குறி பெண்குறி என்ற வார்த்தைகள் ஆபாசம் என்று குறிப்பிடவில்லை. அவை இயல்பான சொற்கள் தான். இவற்றை விரசமாக வேறு சொற்களால் பாவிப்பதைத்தான் நான் வேறு பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். அதே போல் காலைக்கடன் என்று சொல்வது போல் மாலைக்கடனென்றும் சொல்லலாம் தானே. நன்றி ஈழவன்.
*** நீக்கப்பட்டுள்ளது: உரிய பகுதியில் எழுதவும்
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
இந்தப்பகுதியில் ஏற்கனவே குருவிகள் சிறு மாற்றத்துடன் வந்து தன்னைக் களத்தில் தடைசெய்திருப்பதாக எழுதியதற்கு பதில் கருத்தாகவே நான் அதனை எழுதியிருந்தேன். நான் இங்கு எழுதியது தவறாகத் தெரிந்திருந்தால் அதை உரிய பகுதிக்கு மாற்றுவது தான் மட்டுறுத்தினரின் வேலையேயன்றி நீக்குவது அல்ல. உங்களின் அவசரச் செயற்பாடுகளுக்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு.