Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது ஒரு சோதனை
#1
இது ஒரு சோதனை. தமிழில் எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.
Reply
#2
எழுதுங்கள் எழுதுங்கள்
இனியென்ன
சோதனை வெற்றிதானே......
Reply
#3
வணக்கம்,

சோதனையில் வெற்றி அடைந்து விட்டீர்கள்.
வாழ்த்துக்களுடன் வரவேற்றுக் கொள்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.
Reply
#4
<!--QuoteBegin-tamilan+-->QUOTE(tamilan)<!--QuoteEBegin-->இது ஒரு சோதனை. தமிழில் எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்களால் நிச்சயம் முடியும்.

சிந்தித்தல்,
முடிவெடுத்தல்,
தேவையற்றதைத் தவிர்த்தல்,
எழுதல்,
மீண்டும் சரி பார்த்தல்,
முன் வைத்தல்.

மீண்டும் பார்த்தல்,
தேவைப்படின் மட்டும் திருத்தல்.

இப்படித் தொடர்ந்தால் நிச்சயம் உங்களை பிடிக்கவே முடியாது.

(மொழியில் புலமையுள்ளவர்கள் அல்லது ஓரளவு தெரிந்தவர்கள் முறையாக எழுதுவதால் , புதியவர்களுக்கும் முறையாக எழுத வழி கிடைக்கும்.)

வாழ்த்துகள்................
Reply
#5
புதியவர்களுக்கு மட்டும் இல்லை.
பொதுவாக எல்லோரும் கருத்தில் எடுக்கவேண்டிய ஆலோசனைகள்.
Reply
#6
<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->புதியவர்களுக்கு மட்டும் இல்லை.  
பொதுவாக எல்லோரும் கருத்தில் எடுக்கவேண்டிய ஆலோசனைகள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னைப் போன்றவர்களுக்கு நன்மையாக இருக்கிறது அஐீவன் அண்ணாவின் கருத்துகள்.
நானும் பின்பற்றத் தொடங்கிவிட்டேன்.
எங்களுக்கு இப்படியான கருத்துகளை எழுதுங்கள்.
நன்றி.
Reply
#7
சிந்தி...முடிவெடு...தவிர்...எழுது..சரிபார்...முன்வை...தேவை பார்...கருத்தில் மாற்றம் இன்றித் திருத்து....!
அப்படித்தானே அஜீவன் அவர்களே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->சிந்தி...முடிவெடு...தவிர்...எழுது..சரிபார்...முன்வை...தேவை பார்...கருத்தில் மாற்றம் இன்றித் திருத்து....!
அப்படித்தானே அஜீவன் அவர்களே....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இல்லை. உங்கள் வெறுப்புகளை வேறு இடங்களில் காட்டுங்கள்.வளரும் குழந்தைகளிடம் காட்ட வேண்டாம்.

[highlight=red:9d51960df8]தயவு செய்து புதியவர்கள் கவனத்துக்காக:-[/highlight:9d51960df8]
ஒருவர் தவறான விதத்தில் உங்களைக் கோபமூட்டி உங்கள் மனநலத்தை பாதிப்படைச் செய்து சந்தோசப்பட நினைத்தால்,
தயவு செய்து உடன் பதில் எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அதைச் செய்தால் நீங்கள்தான் புத்திசாலி. நீங்கள் ஒருநாள் வெல்வீர்கள்.
மற்றவர் எப்படியென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உலகத்துக்கும், சமுதாயத்துக்கும் நல்லது செய்வதற்கு முன்,தான் என்ன செய்கிறேன் என்று யோசித்தால் அதுவே பெரிய விமோசனம்.

இளம் சமுதாயம் , ஏன் எம்மோடு இணைய மறுக்கிறது என்பதற்கு காரணம் தேடி வெகு துாரம் அலைய வேண்டியதில்லை.

எம்மைப் போன்றவர்களால்தான் தமிழ் சாகிறது.
இப்படியே போனால், நாளைய சமுதாயம் நிச்சயம் தமிழை வெறுத்து ஒதுக்குவதை யாராலும் தடுக்க முடியாது..................


அஜீவன்
Reply
#9
வணக்கம்
யாழில் கருத்துக்களம் மிகவும் சிறப்பாகவுள்ளது. நான் மருத்துவம் என்ற பகுதியில் எனது கருத்தக்களை எழதவிரும்புகிறேன்.
Reply
#10
நன்றி
Reply
#11
வணக்கம் ராணி,
உங்களை யாழ் கருத்துக்களம் நட்புடன் வரவேற்றுக் கொள்கின்றது. மருத்துவப் பகுதி உங்கள் கருத்துக்களாலும், தகவல்களாலும் நிறைவு பெறட்டும்.

உங்கள் போன்றவர்களால் யாழ் களம் இன்னும் சிறப்படைய வேண்டும், எனவே தொடர்ந்து நிறைய எழுதுங்கள். எல்லோரும் இணைந்திருந்து வளர்த்தெடுப்போம்!

நன்றி

[b]


Reply
#12
கருத்துக்களத்தில் எனது கருத்துக்களை கூற ஆவலாகவுள்ளது அனுமதி வழங்கவும்.
ஆரம்பம் என்பதால் தமிழ் எழுத்துக்களை கணனியில் எழுதுவுது கடினமாகவுள்ளது. எழுத்துப்பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.
Reply
#13
AJeevan Wrote:[quote=kuruvikal]சிந்தி...முடிவெடு...தவிர்...எழுது..சரிபார்...முன்வை...தேவை பார்...கருத்தில் மாற்றம் இன்றித் திருத்து....!
அப்படித்தானே அஜீவன் அவர்களே....!

இல்லை. உங்கள் வெறுப்புகளை வேறு இடங்களில் காட்டுங்கள்.வளரும் குழந்தைகளிடம் காட்ட வேண்டாம்.

[highlight=red:059ee7a512]தயவு செய்து புதியவர்கள் கவனத்துக்காக:-[/highlight:059ee7a512]
ஒருவர் தவறான விதத்தில் உங்களைக் கோபமூட்டி உங்கள் மனநலத்தை பாதிப்படைச் செய்து சந்தோசப்பட நினைத்தால்,
தயவு செய்து உடன் பதில் எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அதைச் செய்தால் நீங்கள்தான் புத்திசாலி. நீங்கள் ஒருநாள் வெல்வீர்கள்.
மற்றவர் எப்படியென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உலகத்துக்கும், சமுதாயத்துக்கும் நல்லது செய்வதற்கு முன்,தான் என்ன செய்கிறேன் என்று யோசித்தால் அதுவே பெரிய விமோசனம்.

இளம் சமுதாயம் , ஏன் எம்மோடு இணைய மறுக்கிறது என்பதற்கு காரணம் தேடி வெகு துாரம் அலைய வேண்டியதில்லை.

எம்மைப் போன்றவர்களால்தான் தமிழ் சாகிறது.
இப்படியே போனால், நாளைய சமுதாயம் நிச்சயம் தமிழை வெறுத்து ஒதுக்குவதை யாராலும் தடுக்க முடியாது..................


அஜீவன்

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

சொன்னவர் இவர் <img src='http://www.webulagam.com/religion/words/images/2002/vivekananda.jpg' border='0' alt='user posted image'> செயற்படுத்துவது....நியாயமான சிந்தனை உள்ள மனிதர்கள்....!
..................................................................
குருவிகளுக்கும் சுதந்திரமாக தனது கருத்தை முன்வைக்க இடமுண்டு....கருத்தோடு இசைபவரும் இருக்கலாம்...இல்லாதவரும் இருக்கலாம்....நாம் யார்க்கும் அறிவுரை சொல்லவில்லை...அல்லது இதைக் கடைப் பிடி என்று வலியுறுத்தவும் இல்லை எமது கருத்தின் தன்மை அறியாது.... எதிர்மறை அர்த்தம் கொள்வதற்கு நாம் பொறுப்பும் இல்லை....!
அது மட்டுமன்றி நாம் யாரிடமும் அநுதாபம் ஆதரவு இப்படி எதையும் எதிர்பார்த்தும் எமது கருத்தை எழுதுவதில்லை.....காலத்திற்கு எது தேவையோ அதை நாம் உணர்ந்த மட்டில் சொல்கிறோம் அவ்வளவும் தான்......! படிப்பதும் விடுவதும் உங்கள் கையில்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
பாவம் _________________________________________________________<img src='http://www.webulagam.com/religion/words/images/2002/vivekananda.jpg' border='0' alt='user posted image'>
Reply
#15
பாவம் அவரல்ல...ஆசானாகிய அவர் சொன்னதை கேட்க மறுக்கும் மாணவனிற்கு தெளிவுறுத்துவதை விட்டு மாணவனின் அருவருடியாய் அவன் எதிர்காலமே நிச்சயமற்றதாய் ஆவதற்கு...ஓ அப்படி ஆனாலும் பலருக்குப் பிழைப்பிருக்குத்தானே....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
kuruvikal Wrote:பாவம் அவரல்ல...ஆசானாகிய அவர் சொன்னதை கேட்க மறுக்கும் மாணவனிற்கு தெளிவுறுத்துவதை விட்டு மாணவனின் அருவருடியாய் அவன் எதிர்காலமே நிச்சயமற்றதாய் ஆவதற்கு...ஓ அப்படி ஆனாலும் பலருக்குப் பிழைப்பிருக்குத்தானே....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
நீங்கள் பிழைப்பதற்காக பலரை பாவித்துக் கொள்கிறீர்கள்.அது உங்களுக்கு புரியாமலிருக்கலாம்.அது எல்லோருக்கும் புரிகிறது.தன்னைப் போல்தான் அடுத்தவரும் என்று நினைப்பது மானிட இயல்பு.

நாங்கள் செய்வது பிழைப்பு அல்ல ,உழைப்பு.

அது மட்டுமல்ல புதியவர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து வளர்த்து விடவே விரும்புகிறோம்.
அவர்களது வளர்ச்சியை முளையிலே கிள்ளுவதல்ல எமது நோக்கம்.
இளைவர்களிடம் அன்புடன் எதையாவது விளக்கிச் சொல்ல வேண்டுமே தவிர,எமது ஆதங்கங்களை திணிப்பதல்ல முறை.

kuruvikal Wrote:சிந்தி...முடிவெடு...தவிர்...எழுது..சரிபார்...முன்வை...தேவை பார்...கருத்தில் மாற்றம் இன்றித் திருத்து....!
அப்படித்தானே அஜீவன் அவர்களே....!

நீங்கள்தான் என் பெயரை இங்கே இழுத்தீர்கள்.நானல்ல.தவறான ஒன்றுக்கு ஜால்ரா போடுவது என் குணமல்ல.

AJeevan Wrote:[quote=kuruvikal]குறும்படமா.... கருத்து நிரம்பலாக வெளிப்பட்டுள்ளது...அப்போ குறும்படத்தால் முழு நீளக்கதைக்கொப்ப கருத்துப் பகரலாம்..கருவோடு கனியாகிய நிழல் யுத்தம்...! பாராட்டுக்கள் அஜீவன் மற்றும் நடிக நடிகைகள்....மற்றும் சகல துறைக் கலைஞர்கள்! <span style='color:red'>காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்...........!
[size=15]நன்றி குருவிகள்........,

<img src='http://www.yarl.com/forum/files/aj.camera..jpg' border='0' alt='user posted image'>
சுவிஸ் திரைப்பட சம்மேளனம் நடாத்திய சுவிஸ் மூவி திரைப்பட விழாவில் நிழல்யுத்தம் குறும்படத்தை சிறந்த குறும்படமாக தேர்வு செய்த போது

Swiss Movie Film Festival நடுவர்கள் ,தியெட்டர்,தொலைக்காட்சி,சினிமா மற்றும் மீடியாக்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்பதும்,இது தொடர்பாக பல்கலைக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் என்பதும் குறிப்பிட்டே ஆகவேண்டியுள்ளது.

1.நீங்கள் காட்சியமைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?

2.\"காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்..........

AJeevan
Diploma in Cinematography
the officieal member of swiss movie
www.ajeevan.com

[size=16]Sat Nov 01, 2003 6:31 pm லிருந்து பதில் சொல்லாமல் பிழைத்துக் கொண்டீர்கள்?</span>

இப்படியானவர்கள், மற்றவர்களுக்கு அதே வார்தையை கூற எப்படி முடிகிறது என்பதுதான்...................?

அன்புடன்,
அஜீவன்

[quote]சுதந்திரமாக தனது கருத்தை முன்வைக்க எவருக்கும் இடமுண்டு....கருத்தோடு இசைபவரும் இருக்கலாம்...இல்லாதவரும் இருக்கலாம்
Reply
#17
எமது கருத்தை உங்களுக்கென்று ஆக்கிக் கொண்டு கருத்தாடுகிறீர்கள் நல்லது....அப்போதுதான் எல்லோரிடமும் தெளிவு பிறக்கும்... அன்பும் அரவணைப்பும் ஆக்கம் நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர தூர நோக்கற்று அழிவை நோக்கியதாக இருக்கக் கூடாது...கொள்ளைக் கூட்டத்தவனும் அன்புடன் ஆதரித்து வழிகாட்டுவது கொள்ளை எப்படி அடிப்பதென்று.... அந்த நிலை எமக்கு வேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு...உங்களது என்னவோ எமக்குத் தெரியாது....!

அடுத்து உங்கள் படம் தொடர்பில் நாம் பட்டம் பெற்ற பட்டதாரிகளாக இருந்துதான் விமர்சனத்தை அளிக்க வேண்டும் என்பது ஒரு ரசிகனுக்குத் தேவையில்லாதது....ஒரு படைப்பை அதுவும் யாழ் களத்தில் உள்ள அஜீவன் என்பவரது என்ற நிலை எடுக்காமல் பார்த்த போது எமக்குத் தோன்றியதை எழுதினோம்.......படத்தின் ஒரு கட்டத்தில் ஒரு காரின் வரவுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடங்கள் இழுத்ததேன்...அதன் மூலம் பார்வையாளருக்குச் சொல்ல வந்ததென்ன....அடுத்தது பெண்கள் என்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே சந்தேகப் பிராணிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது....அந்தப் பெண் உடை பற்றிய விடயத்தைக் கேட்டவுடன் சிந்தித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனுடன் முகம் சுழிப்பதும் எந்த அர்த்தத்தில்.....எடுத்த எடுப்பிலேயே தனது சந்தேகத்தை கணவனிடம் பக்குவமாகக் கேட்கும் பெண்கள் உலகில் இல்லையோ...அல்லது சமூகத்தில் வளரக்கூடாதோ..... அல்லது பெண்களில் பெரும்பாலானவர்கள் அப்படியான இயல்புள்ளவர்கள் தானா...?! உங்கள் கதையின் கருவே பெண்கள் சந்தேகப் பிராணிகள் என்பதா....?! இப்படிப் பல கேள்விகள் எமக்கு மட்டும் சொந்தமானதாக எழும் போது அதை எல்லாம் எழுதி விளக்கம் கோரமுடியுமா என்ன...அதை வளர்ந்து வரும் கலைஞனால் சகித்துக் கொள்ள முடியுமா...? இப்படிச் சிந்தித்தோம்... இப்போ நீங்களே கேட்கிறீர்கள் எமது சந்தேகம் தரப்பட்டுள்ளது சிறிது விளக்கினால் இன்னும் தெளிவு பெறுவோம்......!

எம்மிடம் பட்டதாரிகளுக்குள்ள பார்வை இல்லாது இருக்கலாம் ஏனெனில் நாம் பாமர ரசிகர்கள்.....!

நாம் எமது சுதந்திரத்தையே பாவிக்கின்றோம் மற்றவரதைப் பறிக்கவில்லை....பாதிக்க வைக்கவில்லை.....அதற்கான தகுதியும் எம்மிடம் இல்லை...இருக்கப் போவதும் இல்லை.....!
நீங்கள்(கருத்தாளர்கள் சிலர்) உங்கள் சுதந்திரத்தை பாவிக்காது விலகி ஓடுவதற்கு நாம் என்ன செய்ய முடியும்.....! தங்கள் கருத்தை சுதந்திரமாகத் தெரிவிக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு...அதை களத்தில் எழுதினால் எப்படித் திணிப்பாகும்....என்ன ஆயுதம் அல்லது பொருளாதாரத் தடை அல்லது களத்தில் கருத்தை நிமிடத்துக்கு நிமிடம் மாற்றுதல்....அல்லது தனிப்பட செய்தி அனுப்பி எனது கருத்தைக் கேள் அல்லது கொன்றுவிடுவேன் எனப்பயமுறுத்தல்களா செய்கிறோம்......எமது கருத்தை வரிவடிவில் தருகிறோம் ஏற்கக் கூடியதென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்...இங்கே எங்குள்ளது திணிப்பு......!

:twisted: Idea :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
kuruvikal Wrote:எமது கருத்தை உங்களுக்கென்று ஆக்கிக் கொண்டு கருத்தாடுகிறீர்கள் நல்லது....அப்போதுதான் எல்லோரிடமும் தெளிவு பிறக்கும்... அன்பும் அரவணைப்பும் ஆக்கம் நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர தூர நோக்கற்று அழிவை நோக்கியதாக இருக்கக் கூடாது...கொள்ளைக் கூட்டதவனும் அன்புடன் ஆதரித்து வழிகாட்டுவது கொள்ளை எப்படி அடிப்பதென்று.... அந்த நிலை எமக்கு வேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு...உங்களது என்னவோ எமக்குத் தெரியாது....!

அடுத்து உங்கள் படம் தொடர்பில் நாம் பட்டம் பெற்ற பட்டதாரிகளாக இருந்துதான் விமர்சனத்தை அளிக்க வேண்டும் என்பது ஒரு ரசிகனுக்குத் தேவையில்லாதது....ஒரு படைப்பை அதுவும் யாழ் களத்தில் உள்ள அஜீவன் என்பவரது என்ற நிலை எடுக்காமல் பார்த்த போது எமக்குத் தோன்றியதை எழுதினோம்.......படத்தின் ஒரு கட்டத்தில் ஒரு காரின் வரவுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடங்கள் இழுத்ததேன் ஏன்...அதன் மூலம் பார்வையாளருக்குச் சொல்ல வந்ததென்ன....அடுத்தது பெண்கள் என்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே சந்தேகப் பிராணிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது....அந்தப் பெண் சாறி பற்றிய விடயத்தைக் கேட்டவுடன் சிந்தித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனுடன் முகம் சுழிப்பதும் எந்த அர்த்தத்தில்.....எடுத்த எடுப்பிலேயே தனது சந்தேகத்தை கணவனிடம் பக்குவமாகக் கேட்கும் பெண்கள் உலகில் இல்லையோ...அல்லது சமூகத்தில் வளரக்கூடாதோ..... அல்லது பெண்களில் பெரும்பாலானவர்கள் அப்படியான இயல்புள்ளவர்கள் தானா...?! உங்கள் கதையின் கருவே பெண்கள் சந்தேகப் பிராணிகள் என்பதா....?! இப்படிப் பல கேள்விகள் எமக்கு மட்டும் சொந்தமானதாக எழும் போது அதை எல்லாம் எழுதி விளக்கம் கோரமுடியுமா என்ன...அதை வளர்ந்து வரும் கலைஞனால் சகித்துக் கொள்ள முடியுமா...? இப்படிச் சிந்தித்தோம்... இப்போ நீங்களே கேட்கிறீர்கள் எமது சந்தேகம் தரப்பட்டுள்ளது சிறிது விளக்கினால் இன்னும் தெளிவு பெறுவோம்......!

எம்மிடம் பட்டதாரிகளுக்குள்ள பார்வை இல்லாது இருக்கலாம் ஏனெனில் நாம் பாமர ரசிகர்கள்.....!

:twisted: Idea :twisted:

இக்குறும்படத்தில் அறிவுரை சொல்லப்படவில்லை. அது அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்.நடக்கும் ஒரு விடயத்தை முன் வைப்பது மட்டுமே எனது தன்மை.
முடிவுகளை எடுக்க வேண்டியது பார்வையாளனின் பொறுப்பு.இக்குறும் படம் ஒட்டு மொத்த பெண்கள் பற்றிக் குறிப்பிடுவதான தங்கள் கருத்து தவறானது.
ஒரு குறும்படத்தில் முழு உலக பிரச்சனையை அலச முடியாது.

இங்கே ,எடுக்கப் பட்டுள்ள கதைக் கருவுக்கான இருசாராரின் பிரச்சனைகளும் முன் வைக்கப் பட்டிருக்கின்றன.
kuruvikal Wrote:<img src='http://www.yarl.com/forum/files/nala.ajeevan.1.jpg' border='0' alt='user posted image'>ம்ம்ம்...
பெண்ணென்றால் தனியழகு - என்று
கவிகள் பல படித்ததுண்டு
இன்று
பெண் தன் தனியழகிழந்து
துணையழகு பெற்றதேன்...!

உண்மையில்
பெண் அழகுதானா.....?!
அன்றில் கம்பர் முதல்
வைரமுத்து வரை
முழுப் பித்தர்தானோ.....!
புரியாத புதிராச்சே...!
இன்று
எங்குதான் நேர்மையும்
இயற்கையும் தம் அழகு காட்டுது
அது அந்தக்காலம்
நம்ம பாட்டி காலம்
பாட்டி...பாட்டி...பாட்டி!
மேலேயுள்ள உங்கள் கவி வரிகளை வைத்து, முழு பெண்களையும் இப்படித்தான் எடை போடுகிறீர்கள் என்று கருதுவதா?

Quote:படத்தின் ஒரு கட்டத்தில் ஒரு காரின் வரவுக்காக கிட்டத்தட்ட ஒரு நிமிடங்கள் இழுத்ததேன் ஏன்...அதன் மூலம் பார்வையாளருக்குச் சொல்ல வந்ததென்ன....

அது படத்துக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது.
மீண்டும் படத்தைப் பாருங்கள்.
அல்லது
நீங்கள் அதற்காக ,என்ன செய்யவீர்கள்
அல்லது
என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்?

அத்தோடு தயவு செய்து,

1.நீங்கள் காட்சியமைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?

2."காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்.......... "என்றால் எப்படி என தெளிவுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்............?
என்ற கேள்விக்கு பதில் தாருங்கள்.

அன்புடன்,
அஜீவன்
Reply
#19
இது ஒரு சோதனை வேதனையைத்தருகிறது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#20
கவிதையில் கேட்க்கப்பட்டது சந்தேகமே அன்றி முடிவல்ல....ஆனால் படத்தின் கரு.......?! அங்கு அந்தச் சந்தேகம்..... என்பது இல்லாவிடில் படத்தின் போக்கு.....காட்சியமைப்பு......எப்படி இருந்திருக்கும்........??!!!!! இது படம் தொடர்பான எமது ஒரு கோணம் மாறிய சிந்தனையே அன்றி.....படத்தின் மேலான விமர்சனம் அல்ல....!

இதற்குள் உங்கள் கேள்விகளுக்குப் பதில் பொதிந்திருக்கிறது....!

குருவிகள்...!
படிப்பு..பத்துவரை
தகைமை..சமூகத்தில் சராசரி மனிதன்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)