Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் ஆதரவுக்கான தடையைஎதிர்த்து அமெரிக்காவில் வழக்கு
#1
தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட பூர்வ செற்பாடுகளுக்கு ஆதரவாகக் கூடாது என்று அமெரிக்காவில் விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.
அமெரிக்காவிலுள்ள மனித உரி மைகள் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் என்பன இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்யவிருக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் சேவையாற்றுவதற்கும் அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட அவசரகால பொருளாதார சட்டத்திற்குத் தடையாக இருக்கிறது.
அமெரிக்காவின் மீது 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் புஷ் இந்த அவசரகாலச் சட்டத் தைப் பிரகடனப்படுத்தினார்.
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஒகாலனின் குர்திஸ் விடுதலை அமைப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொருளுதவி மற்றும் சேவைகளை வழங்குவதனையும் இந்தச் சட்டம் தடைசெய்தது.
இத்தகைய சட்டத்தால் எந்தவொரு அமைப்பினதும் சட்டபூர்வ மனிதாபி மான நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் அமெரிக்க குடிமக்கள் பாதிக்கப்படு வதாக ஆட்சேபனைகள் எழுந்தன.
இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அமெரிக்க தமிழ் அமைப்புகள் இலங் கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவும் புலிகளின் நிர்வாகப் பகுதியில் சேவையாற்றவும் தடையாக இருக்கும் இந்த 2001 ஆம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்ய உள்ளன.
சட்டபூர்வ உரிமைகளுக்கான மையத் தினரால் இந்த வழக்குத் தொடரப்பட வுள்ளது.
மற்றோர் அமெரிக்க தேசாபிமான சட்டமானது. ஒகாலனின் குர்திஸ்தான் விடுதலை அமைப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சியளித் தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் சேவையாற்றுதலைத் தடை செய்வதைச் சட்டபூவர்மற்றது என்று கடந்த ஜூலை மாதம் அமெரிக்க நீதிபதி ஒட்றி கொலின்ஸ் அறிவித்திருந்தமை குறிப் பிடத்தக்கதாகும்.

நன்றி உதயன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)