Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கலாம்;அப்துல்கலாம்
#1
ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கலாம்: ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் கொலைக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. பெண் விடுதலைப்புலி தணு வெடிகுண்டுடன் வந்து இந்த கொலையில் ஈடுபட்டாள்.

தணுவுடன் வந்த சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலைப்புலி முருகன் அவரது மனைவி நளினி, ஜி.பேரறிவாளன், சின்னசாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ததில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சின்னசாந்தன் கடந்த 14 வருடங்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் ஜெயிலில் இருந்து வருகிறார்கள். 3 பேரும் தங்களுக்கு மன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளனர்.

இவர்களுடன் நாடு முழுவதும் மொத்தம் 50 தூக்கு தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர்.

1993-ம் ஆண்டு 21 போலீசாரை கொன்ற வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளிகள் ஞானபிரகாசம், மாதையா, பிலவேந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனீந்தர்சிங் பிட்டா மீது வெடிகுண்டு வீசி தாக்கிய காலிஸ்தான் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தேவிந்தர்சிங் புல்லார் ஆகியோரும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கருணை மனு அளித்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கருணை மனுக்களை பரிசீலனை செய்த ஜனாதிபதி அப்துல்கலாம் இது தொடர்பாக பல்வேறு யோசனைகளை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் மரண தண்டனையில் இருந்து ராஜீவ் கொலையாளிகள் முருகன், பேரறிவாளன், சின்னசாந்தன் ஆகியோருக்கு மன்னிப்பு அளிக்கலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். இது போல் மற்ற மரண தண்டனை கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறும் கூறியுள்ளார்.

மரண தண்டனை கைதிகள் அனுப்பிய கருணை மனுக்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவை ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்து வந்தது.

இந்த மனுக்கள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த மாதம் உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் பரிந்துரை செய்து இருந்தார். ஆனால் அனைத்து மனுக்கள் மீதும் பரிசீலனை முடிவுற்ற நிலையில் அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்றும், இந்த மனுக்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு தகுதியற்றவையாக உள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்து விட்டது.

இதனால் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்துறை மந்திரி சிவராஜ்பட்டீலுக்கு கடிதம் எழுதினார். அதில், "கருணை மனுக்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. மரண தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து அவர்கள் வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி ஆன்மீக வழிகாட்டு நெறிகளை போதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், "மரண தண்டனை கைதிகளில் ஒருவருக்கு 75 வயதாகி விட்டது. அவர் விடுதலை செய்யப்பட்டால் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இது போன்ற கைதிகளை சுமையாக கருதாமல் மனித சொத்தாக பாவித்து நல்வழிப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவர்கள் வாழ்வின் மீதம் உள்ள நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்'' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

கருணை மனுவை உள்துறை அமைச்சகம் தகுதியவற்றவை என்று கூறி ஏற்க மறுத்து விட்ட நிலையில் ஜனாதிபதி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இதை ஏற்று கருணை மனுவை பரிசீலிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதில் உள்துறை அமைச்சகம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தூக்கு கைதிகள் தண்டனையில் இருந்து தப்பு வார்களா? என்பது தெரிய வரும்.
thinakural.com
http://www.lankasrinews.com/sp.php
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
உண்மையில் அப்துல்கலாம் மிகவும் துணிச்சல்வாய்தவர்தான். வெளிப்படையாக இவ்வாறு பரிந்துரைப்பது உண்மையில் அவருக்கு பெரும் எதிர்ப்பை தமிழ்நாடுதவிர்ந்தமக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் ஏற்படுத்தலாம். அவர் ஒரு தமிழன் என்பது இதில் நிருபணமாகிறது. தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள். இதில் இருந்து தமிழ்நாட்டில் இருக்கும் சதாரண தமிழர்களின் (அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள்) மனநிலையை நாங்கள் புரிந்துகொள்ளலாம்.
Reply
#3
ஆதிபன் !

மரியாதைக்குரிய அப்துல்கலாம் அவர்களை தமிழராக மட்டுமே பார்ப்பது தவறு. வேண்டுமானால் தைரியமான சுயநலமற்ற ஒரு இந்தியர் என்று கூறலாம். அவரது சிந்தனைகள் யாவும் இனம் மொழி மதங்களை கடந்து மக்களைப் பற்றியதே. இங்கு அவர் ஒரு தீர்க்கதரிசியாக கருணைமனு போட்ட அத்தனை பேருக்கும் பொதுவாகவே தனது கருத்தைக் கூறினார். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதையிட்டு பெருமையடைகின்றேன்.


தண்டணை என்பது குற்றவாளியை திருத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர . அந்தக் குற்றவாளியை கூண்டோடு ஒளிப்பதாக இருக்கக்கூடாது
Reply
#4
ராஜீவ் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மன்னிப்பு: இந்திய அரச தலைவர் பரிந்துரை!!
ஜதிங்கட்கிழமைஇ 17 ஒக்ரொபர் 2005இ 17:11 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ
ராஜீவ் கொலை வழக்கில் முருகன்இ பேரறிவாளன்இ சின்ன சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய அரசாங்கத்தை இந்திய அரச தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தியுள்ளார்.


இந்த வழக்கில் முருகன்இ பேரறிவாளன்இ சின்ன சாந்தன் கடந்த 14 வருடங்களாக சிறையில் உள்ளனர். 3 பேரும் இந்திய அரச தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளனர்.

இவர்களுடன் இந்தியா முழுவதும் மொத்தம் மரண தண்டனை விதிக்கப்பட்ட 50 பேரும் இந்திய அரச தலைவருக்குக் கருணை மனுக்களை அனுப்பியுள்ளனர்.

1993 ஆம் ஆண்டு 21 காவல்துறையினர் இறந்த வழக்கில் சத்தியமங்கலம் வீரப்பன் குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் ஞானபிரகாசம்இ மாதையாஇ பிலவேந்திரன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனீந்தர்சிங் பிட்டா மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் காலிஸ்தான் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தேவிந்தர்சிங் புல்லார் ஆகியோரும் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கருணை மனு அளித்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கருணை மனுக்களை பரிசீலனை செய்த இந்திய அரச தலைவர் அப்துல் கலாம் இது தொடர்பாக பல்வேறு யோசனைகளை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் மரண தண்டனையில் இருந்து முருகன்இ பேரறிவாளன்இ சின்ன சாந்தன் ஆகியோருக்கு மன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

இதுபோல் மற்ற மரண தண்டனை கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறும் கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டோர் அனுப்பிய கருணை மனுக்கள் இந்திய உள்துறை அமைச்சகம் மூலம் இந்திய அரச தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவை பரிசீலனையில் இருந்து வந்தது.

இந்த மனுக்கள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த மாதம் உள்துறை அமைச்சகத்துக்கு இந்திய அரச தலைவர் அப்துல்கலாம் பரிந்துரை செய்து இருந்தார். ஆனால் அனைத்து மனுக்கள் மீதும் பரிசீலனை முடிவுற்ற நிலையில் இந்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்றும்இ இந்த மனுக்கள் அரச தலைவரின் பொது மன்னிப்புக்கு தகுதியற்றவையாக உள்ளன என்றும் இந்திய அரசு தெரிவித்து விட்டது.

இதையடுத்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீலுக்கு அரச தலைவர் அப்துல் கலாம் மீண்டும் கடிதம் எழுதினார்.

அதில்இ "கருணை மனுக்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. மரண தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து அவர்கள் வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு ஆலோசனை நடத்தி ஆன்மீக வழிகாட்டு நெறிகளை போதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும்இ "மரண தண்டனை கைதிகளில் ஒருவருக்கு 75 வயதாகி விட்டது. அவர் விடுதலை செய்யப்பட்டால் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இது போன்ற கைதிகளை சுமையாக கருதாமல் மனித சொத்தாக பாவித்து நல்வழிப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவர்கள் வாழ்வின் மீதம் உள்ள நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கருணை மனுவை உள்துறை அமைச்சகம் தகுதியவற்றவை என்று கூறி ஏற்க மறுத்து விட்ட நிலையில் இந்திய அரச தலைவர் கடிதம் எழுதியுள்ளதால் கருணை மனுக்களை இந்திய அரசு நிராகரித்துவிட இனி வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கருணை மனுவை பரிசீலிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது

http://www.eelampage.com/?cn=20908
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#5
[size=15]மன்னிக்கும் மனம் கொண்ட அதிபர் அப்துல் கலாம் அவர்களுக்கு நன்றிகள்.

ஒருவரை மரணதண்டனை கொடுத்து தண்டிப்பதால் எவரும் மனம் திருந்த வாய்ப்பு ஏற்படாது.
மனம் திருந்தி வாழ்வோரைப் பார்த்துத்தான் அடுத்தவர் அது போன்ற செயலை செய்யாமல் இருக்க முடியும்.
அத்தோடு
வாழ்வதை விட சாவது ஒன்றும் பெரிய தண்டனையில்லை.

ஒருவர் உயிரைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை.
Reply
#6
அப்துல் கலாமுக்கு அன்பான வணக்கத்தயும் நன்றியயும் நானும் சொல்லிக்கொள்ளுறன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#7
அவசியம்... இங்க சொல்லனும்..ஏன்னா கலாம்..24 மணி நேரமும் யாழ் களப்புரட்சி பாத்திடெல்லோ இருக்கிறார்..! யாழ் களத்தை பாவிச்சத்துக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
அத்துடன் ஒரு து}க்குத்தண்டனைக் கைதி குடியரசுத்தலைவருக்கு கருணைமனு அனுப்பி குறிப்பிட்ட காலத்தினுள் ( 3 வருடங்கள் என்று நினைக்கின்றேன் ) குடியரசுத்தலைவரிடமிருந்து பதில் கிடைக்காத பட்சத்தில் து}க்குத்தண்டனை தானாகவே ஆயுள் தண்டனையாகின்றது. இப்போதுள்ள பிரைச்சினை குடியரசுத்தலைவரின் ஆலோசனையை ஏற்று அரசு அவர்களுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யுமா இல்லையா என்பதே??
;
Reply
#9
ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாக செய்திகளில் படித்தேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
ஆனால் மதன் இறுதி முடிவு சோனியாவின் கைகளில்தானே உள்ளது. அதனால் சில வேளைகளில் நல்லமுடிவுகளும் கிடைக்கலாம்.
Reply
#11
ம் சாத்தியம் இருக்கின்றது. கடந்த முறை காங்கிரஸ் எதிர்த்த போதிலும் நளினிக்கு தண்டனை குறைப்புக்கு ஆதரவளித்தது சோனியாவின் செல்வாக்கை அதிகப்படுத்தியது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
[size=14]
<b>தூக்கு கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது பற்றி
பாராளுமன்றத்தில் விவாதம்
அப்துல்கலாம் யோசனை </b>

புதுடெல்லி, அக். 27-

தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி, விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனை தெரிவித்து உள்ளார்.

கருணை மனுக்கள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் உள்ளிட்ட சில மரண தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளனர். அந்த கருணை மனுக்களை பரிசீலனை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் அனுப்பி வைத்து இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் வயது, உடல் மற்றும் மனநலம், குடும்ப பின்னணி ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

பரிசீலனை

உள்துறை அமைச்சகம் அந்த மனுக்களை பரிசீலனை செய்து மந்திரிசபையின் ஒப்புதலுடன் தனது கருத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்கும். அதன் அடிப்படையில் ஜனாதிபதி முடிவு எடுப்பார்.

அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி நாட்டின் முதல் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ள வஜாகத் அபிபுல்லாவின் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதி யோசனை

அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கைதிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பது பற்றியும், மரண தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் பிரச்சினை பற்றியும் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ``இதுதொடர்பான எல்லா அம்சங்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி விரிவான கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்'' என்றார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)