Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெ.கரிகாலனின் கவிதைகள்
#1
என் நண்பர் ஜெ.கரிகாலனின் கவிதைகள் இங்கே தருகிறேன்.(நான் சா.கரிகாலன்)
ரசித்து மகிழுங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இருண்ட வெளிகள்

கால அருவியின் சீரான இயக்கம்.
இருண்டவெளிகளுக்குள்
இரைச்சல்களில் நசியும் இசை.

ஆதி இசை அறுந்து
கூச்சல்களின் கரு அழிந்தது.
பூமியெங்கும் மனிதக் கால்களுக்குள்
மண்ணின் தொடு உணர்வு கொதித்தது.

எல்லாக் கால்களும் சேர்ந்து -
ராட்சத ரயில்பூச்சி நகர்ந்தது.
மனிதம் செத்துப் பிழைக்கிறது.

ரயில்பூச்சியின் கழிவுகளில்
நாகரிகம் நாறியது.
நாற்றம் நகரங்களில் உற்பத்தியாகி
குப்பிகளில் விற்கப்படுகிறது.

முடைநாற்ற வீதிகளில்
மூக்கைப்பொத்தி மனிதனை சபித்து
ஓடித்திரிகிறேன்.



நன்றி : ஜெ.கரிகாலன்


மேலும் தொடரும்................


----- -----
Reply
#2
Karikaalan Wrote:இருண்ட வெளிகள்

ஆதி இசை அறுந்து
கூச்சல்களின் கரு அழிந்தது.
பூமியெங்கும் மனிதக் கால்களுக்குள்
மண்ணின் தொடு உணர்வு கொதித்தது.

எல்லாக் கால்களும் சேர்ந்து -
ராட்சத ரயில்பூச்சி நகர்ந்தது.
மனிதம் செத்துப் பிழைக்கிறது.





நன்றி : ஜெ.கரிகாலன்

மிக்க நன்றி கரிகாலன் நண்பரின் அர்த்தம் பொதிந்த கவிதையைக் கொடுத்தமைக்கு.

பல காலுள்ள ரயில் பூச்சியைக் கண்டாலே அருவருப்பாக இருக்கும். இதே போல தான் பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் கால்கள் இணைந்து ரயில் பூச்சியாக மண்ணெங்கும் ஊர்ந்து போகும் பொழுது அருவருப்பாகத் தானிருக்கும்.

நாகரீகங்களும் அருவருப்பாக இருக்கும் - இத்தகைய மனிதர்களைப் பார்த்தால்.

ஒரு புதிய பார்வை - ரயில் பூச்சி ஊர்ந்து செல்லும் காட்சி...

வாழ்த்துகளும் பாராட்டும்...
-----------------


-----------------




-----------------
Reply
#3
<b>எல்லாக் கால்களும் சேர்ந்து -
ராட்சத ரயில்பூச்சி நகர்ந்தது.
மனிதம் செத்துப் பிழைக்கிறது. </b>

ஜெ.கரிகாலன் அவர்களின் கவிதை பதிந்தமைக்கு நன்றிகள்.
Reply
#4
சூழலலை நாசமாக்கும் மனிதர்கள் மேல் எழும் கோபம் தான் இந்தகவிஞனின் கவிதையோ? தொடருங்கள்
inthirajith
Reply
#5
என் நண்பரின் கவி வரிகளை விளங்கிக் கொள்வது சற்று
கடினம்தான்.எனக்கும் முதலில் விளங்கவில்லை. இக்கவிதை
போதைப் பித்தர்களைப் பற்றியது.வாசித்தமைக்கு நன்றி
நண்பர்களே


நிச்சயமாக மேலும் தொடரும்............
(தற்போது சற்று நேரக் குறைவு)


----- -----
Reply
#6
மதுபானம், போதை பற்றியதான் கவிதை. நல்ல வரிகள்.

கால அருவியின் சீரான இயக்கம்.
இருண்டவெளிகளுக்குள்
இரைச்சல்களில் நசியும் இசை.

என்று ஒவ்வொரு வரிகளும் வித்தியாசமாக அமைந்துள்ளன. இரைச்சல்களும் இசை என்கிறார்கள் சிலர். இரைச்சல்களில் இசை நசிகின்றது என்கிறார் இந்தக் கவிஞர். ஒவ்வொருவர் பார்வையும் வேறு தானே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#7
இருண்டவெளிகள் 2

கருப்புப் பூச்சியொன்று
இழைந்தது கண்டேன்
உன் உடற்பரப்பிலொரு
அழகிய மச்சம்.

சுட்டுவிரல், கட்டைவிரல்
குவித்துப் பிடிக்கப்போனேன்.
ஆட்டம் காண்பித்து
ஓடி ஒளிந்ததுவே - எங்கோ
உன் உடலிடுக்கிற்குள்.

இறக்கும் ஒளியில்
இல்லையென்ற ஆடையுடன்
நீ கட்டியணைத்துச் செல்கிறாய்,
ஒவ்வொரு நாளும்
இருட்டுவாசிகள் சுவர்க்கத்திற்கு.

கடவுள் நான்,
எனை எங்கு அழைத்துச் செல்வாய்?
சுவர்க்கத்திலிருந்து வருகிறேன்


----- -----
Reply
#8
கரிகாலன் உங்கள் நண்பரின் கவிதைகள் நல்லாயிருக்கு. இங்கு இனைத்தமைக்கு நன்றிகள்

Reply
#9
<b>கருப்பு</b>ப் பூச்சியொன்று
<b>இழைந்தது</b> கண்டேன்
உன் உடற்பரப்பிலொரு
அழகிய மச்சம்.

இவைக்கு பொருள் என்ன... கரிகாலன்..?!

அழகிய கற்பனை... கறுப்புப் பூச்சி இழைத்தது மச்சம் என்றால்...உங்கள் கற்பனையில் உடல் என்ன...??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நல்ல தரமா இருக்கு கவிதைகள்..! தொடர வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
இருண்டவெளிகள் 3


கொதித்துக் கொப்பளிக்கும்
கடல்பரப்பின் வெகுஉயரே
உயிர் துரத்திப் பறக்கின்றன -
வெளி கடக்கும் நாரைகள்.


கடலின் ஆழத்தில்
வெடித்தன பாறைகள்.
கெண்டை மீன்கள்,
தங்கக் குஞ்சுகள் -
நம்பிவிட்டன தொட்டிகளை

இரும்புக்கூண்டுகளுக்குள்
பெரிய குருவிகள் சொல்கிற கதை
ஓமரத்தின் சாவு

எங்கிருந்தோ கேட்கிறது
வெடித்த இதயங்களின் மீது
சொட்டி ஒலிக்கும் கருணை.

உயிர்ப்பைக் கொல்லும்
விஞ்ஞானிக்கு விளங்காதது
உயிரின் பூத்தல்.

அதிர்வுகள் உண்டாக்கிய
பாவத்தெறிப்புகளின் வழி
உள்ளொழுகி இறங்கியது -
தேவதையின் மெல்லியகானம்.

எங்கும் இறைந்து கிடக்கின்றன
கவிதையின் லிபிக்கள்-
சிதைந்த கவிஞனின்
சதைத் துண்டுகளோடு.

மனிதனைப் பற்றி
இன்னும் விளங்குவதாயில்லை.
எந்த நரகத்திலிருந்து வந்தார்கள்
இந்த உலகத்திற்கு?!

தொடரும்...


----- -----
Reply
#11
நீங்கள் புரிந்துகொள்வதற்குச் சிக்கலான, மர்மமான வலையினுள் பிடித்து வைக்கப் பட்டுள்ளீர்கள். சுரண்டல் தந்திரமாய்ச் செயல்படும் உலகிலிருந்து தப்புவது சிரமமானது. உங்களது மொழியை மேற்கத்திய அதிர்வுகளுக்குள் நீங்களே சிக்கிக் கொள்ளுமாறு செய்திருக்கிறீர்கள். உலகம் முழுவதும் போலி அதிர்வை, மேற்கத்திய அதிர்வை, கோலோச்சுமாறு விட்டுக் கொடுத்து விட்டீர்கள் அல்லது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்கள். ஆணாதிக்க உலகின் பார்வைக்குப் பெண்களின் உடலுறுப்புகளை வெளிப்படுத்திக்காட்டும் ஜீன்ஸ் கலாசார உலகில் நீங்கள் இசையடிமையாகவும், ஹிப்பிகளாகவும் மாற்றப்பட்டுள்ளதால் இரகசிய சதி உள்ளது. மின்னணுவியல் புரட்சி அடிமைப்படுத்தலை எளிமையாக்கியிருக்கிறது. அழகியின் அரவணைப்பில் சுகம் காணும் மாயையில் நீங்களெல்லாம் பேயின் மடியில் உறங்குகிறீர்கள். உங்களுக்கான மண் தாய். தாயின் மடியில் உங்களது பாரம்பரியம் பிறந்தது. நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள். உங்களுக்கான இசை உங்கள் மண்ணில் இருக்கிறது. உங்கள் மொழியிலிருக்கிறது.
தாயின் அன்பு மீது போதை கொள்ளுங்கள்.
மண்ணின் மீது போதை கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தரப்பட்டிருக்கிற போதைத்துகள்கள், திரவங்கள் பேய் உங்களுக்குச் ஊட்டியிருக்கிற உணவுகள். உங்களைச் சாகடிக்கும் போதை. பேயின் மடியில் கிடக்கும் உங்களுக்குப் பேய் தருவது தாலாட்டன்று. கூச்சல்களுக்குப் பழகிக்கொண்டு விட்டீர்கள். அதிர்வுகளில் உங்களின் நரம்புகள் எப்பொழுதும் புடைத்துக் கொண்டிருக்கின்றன. உங்களது இரத்தவோட்டத்தில் போதைப்பொருள் கலந்து ஒருவகை மயக்கம் இன்பத்தைத் தருகின்றது அல்லது அது பழகிப்போன கிறக்கம். நுகர்வு வெளியின் படாடோ பத்தில் சுற்றி வருகின்றீர்கள். உங்களுக்கான குடும்ப சங்கிலித்தொடரின் இணைப்பை அறுத்துக் கொண்டுள்ளீர்கள். ஏன்? சிந்தியுங்கள். குடும்பமும் சமூகமும் காபரே காரியின் ரிப்பன் உடைபோல நார்நாராய்த் தொங்குகிறது. இரண்டு வகையான போதைவெளிக்குள் நீங்கள் இயங்குகிறீர்கள். ஒன்று: நுகர்வின்பம் தரும் மதுபோதை. மற்றொன்று நுகர்வு உலகின் கைப்பெறாப் பகுதிகள் மீதான ஏக்கத்தை மறக்க நீங்கள் இரத்தத்தில் ஏற்றிக்கொள்கின்ற போதை.

என்ன கொடுமை! வாழ்க்கைச் சுரண்டப்படுவதில் என்ன ஒரு நுட்பம்? என்ன ஒரு நூதனத்துவம்?! சிந்தனையை முடக்குவதற்கு, முடப்படுத்துவதற்குப் போதைதான் சிறந்த கருவி என்பதை உலகாளும் சுரண்டல்கூட்டம் நன்கு புரிந்துகொண்டுள்ளது. மதுவில் ஊறுகிறது உங்களது மூளை. மாயபோதைக்குள் செருகிக் கொண்டுவிட்டன உங்களது அகக்கண்கள்.


----- -----
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)