Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்கள் இலையை நோக்கட்டும்!
#1
சோற்றுக்கு வேண்டும் உலை
சாப்பாட்டுக்கு வேண்டும் இலை

உணவுண்பது ஒரு கலை
காத்திருக்கிறது உனக்காக இலை

இலையில்
இருக்கின்றன
இன்சுவைப்பதார்த்தங்கள்

உலகினில்
உயிர் வாழ
உணவு முக்கயம்
உணவு வேண்டுமெனும்
உணர்வு முக்கியம்
உணர்வென்பது
உருவமற்றது
உணவென்பது
உருவமுள்ளது
உருவமற்ற
உணர்வின் தூண்டலால்
உருவமுள்ள
உணவையுண்டு
உலகத்தில்
உயிர் வாழ்வோழ்ம்


இந்தக் கவிதைக்கு பாராட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழரின் பண்பாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்காத இந்தக் கவிதையை நீங்கள் தாராளமா உங்கடை மனிசிமார் பொம்பிளைப்பிள்ளையள் எல்லாருக்கும் காட்டலாம்.நடுவீட்டில போஸ்ரல் அடிச்சும் ஒட்டலாம்.
Reply
#2
முழுக்க 'உ' வரியிலதானே தொடங்கியிருக்க வேணும்? அப்பிடி இந்தாத்தானே அது 'கவிதை'?
உதைக் கவிதையயெண்டு எடுக்க ஏலாது. எதுக்கும் 'கவிதை' வல்லாளர்களிடம் கேட்டுப் பாப்பம்.
Reply
#3
இல்ல கோமதி.. மொத்தம் இதில 3 கவித இருக்கு.. வடிவா பாருங்கோ..
Reply
#4
இவோன்.....கவிதை நல்லாயிருக்கிறது....எப்படி இவ்வளவு திறமையாக கவிதை இயற்றுறியள் .. VERY SWEET....சிலவேளை கிழடு சொன்னால் சீரியஸாக எடுக்கமாட்டியளாக்கும்...வாங்கோ கு்ஞ்சு குமரனெல்லாம் வந்து வாழ்த்துங்கோ...பொடியனை வாழ்த்தின மாதியிருக்கும் உங்களுக்கு அரட்டை அடிச்ச மாதிரி யிருக்கும்..பொடியனுக்கு..................... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#5
"ஆடுகள் நனையுது என்று ஓநாய்கள் அழுகுதுகளாம்"`
-யாரோ-
.

.
Reply
#6
யாரப்பா கோதாரில போன அந்த கவிதை வல்லாளர்? கண்ட பாவனையில கொண்டை முடியிறவையோ?

இவேன் நீர் உந்த உருவம் இல்லை எண்டதுக்கு இது தான் சாட்டெண்டு உதாரணமா காதலை இழுத்து போட்டிருந்தீர் எண்டால் கியல வெடக்ன.

அப்படியே ஒரு வசீகரமான விலங்கின்ரை படத்தையும் போட்டிருந்தால் உப்படி ஓநாய் எண்டால் உளறமாட்டினம்.
Reply
#7
ஆலோசனைகளுக்கு நன்றி
Reply
#8
சோற்றுக்கு வேண்டும் உலை
சாப்பாட்டுக்கு வேண்டும் இலை

உணவுண்பது ஒரு கலை
காத்திருக்கிறது உனக்காக இலை

உலை, இலை, கலை, என்றே வடித்தவற்றை ரசித்தேன்.

உருவமற்ற
உணர்வின் தூண்டலால்
உருவமுள்ள
உணவையுண்டு
உலகத்தில்
உயிர் வாழ்வோழ்ம்

கையாண்ட வார்த்தைகள் அருமை.
மேலும் தொடருங்கள்...
Reply
#9
//இந்தக் கவிதைக்கு பாராட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழரின் பண்பாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்காத இந்தக் கவிதையை நீங்கள் தாராளமா உங்கடை மனிசிமார் பொம்பிளைப்பிள்ளையள் எல்லாருக்கும் காட்டலாம்.நடுவீட்டில போஸ்ரல் அடிச்சும் ஒட்டலாம்.//

இதையும் ஆரேன் கவிதையெண்டு நினைச்சுப் பாராட்டுறதுக்குள்ள இந்தப்பத்தி கவிதையில்லை எண்டு சொல்லிவிட்டியளெண்டா நல்லம்.
இல்லாட்டி நீங்கள் சொன்ன 3 கவிதையில இந்தப் பந்தியும் ஒண்டாக்குமெண்டு அதுக்கும் பாராட்டுக்கள் வந்திடும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)