Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடைசியில்... அடப்பாவி.!
#1
<img src='http://img149.imageshack.us/img149/4921/brid5ji.jpg' border='0' alt='user posted image'>

<b>காகிதம் பேசிக் கொண்டது
கையில் சிக்கிய
பேனாவால்
கிறுக்கியவர் பலர்
கில்லாடிகள்...
சிலர் ஏமாளிகள்
கசங்கிய நானோ
கடைசியில்....
அடப்பாவி...!

சொல்லும் கூடவே
பேசிக் கொண்டது
உருக்கொடுத்தவனுக்கு
உணர்வு கொடுக்கத் தெரியல்ல
உணர்வு கொடுத்தவனுக்கு
உருக் கொடுக்கத் தெரியல்ல
இரண்டும் கொடுத்தவனுக்கு
தன்னையே உணர முடியல்ல...!
சொன்னதை மறந்திட்டு
சிலாகிப்பதும் எனைத்தான்
சிதைப்பதுவும் எனைத்தான்
புகழ் மட்டும்
அவன் சொத்தாம்
கடைசியில்
நல்லதும் கெட்டதும்
நான்...
அடப்பாவி...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
கரெக்டாச்சொன்னீங்க குருவி அண்ணா! கவிதை நன்று. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#3
வித்தியாசமான கற்பனை.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...
Reply
#4
ம்ம் நல்ல கற்ப்பனை வளம் குருவி உங்களுக்கு . வாழ்த்துக்கள்.
<b> .. .. !!</b>
Reply
#5
குருவியாரின் வித்தியாசமான கற்பனை நன்றாக உள்ளது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#6
நல்ல கவிதை நன்றிகுருவிஅண்ணா

Reply
#7
கள உறவுகளின் பதிவுகளுக்கு நன்றிகள்... இச் சொற் கிறுக்கல் தொடர்பில் உங்கள் கருத்தியல் பார்வைகளையும் வெளியிடுங்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
குருவிகள் நல்லாயிருக்கு உங்களுடைய கற்பனைக் கிறுக்கல்

Reply
#9
குருவிகள் -

ஓடமாக

ஏணியாக

இன்னும் எத்தனை எத்தனையோ வழிகளில் மக்களை மேலே ஏற்றி விட்டு அல்லது அக்கரையை அடைய வைத்து விட்டு தான் மட்டும் எங்கும் போகாது ஓரிடத்திலே கிடந்து போகும் பல தியாகப் பொருட்கள் தான் நினைவிற்கு வருகின்றன.

நன்றாக இருக்கிறது குருவிகள்...
-----------------


-----------------




-----------------
Reply
#10
இதேபோல் செருப்பைப் பற்றி ஏன் நீங்கள் எழுதக்கூடாது?
உங்களுக்குக் கவிதை நன்றாக வருகிறது.
அருமையான கற்பனை வளமுள்ளது.
Reply
#11
Nanban Wrote:குருவிகள் -

ஓடமாக

ஏணியாக

இன்னும் எத்தனை எத்தனையோ வழிகளில் மக்களை மேலே ஏற்றி விட்டு அல்லது அக்கரையை அடைய வைத்து விட்டு தான் மட்டும் எங்கும் போகாது ஓரிடத்திலே கிடந்து போகும் பல தியாகப் பொருட்கள் தான் நினைவிற்கு வருகின்றன.

நன்றாக இருக்கிறது குருவிகள்...

நல்லதொரு கருத்தியல் பார்வை... இத்தோடு உங்கள் பார்வையோடு ஒட்டிய எங்கள் பார்வையும் சேர்ப்பது இந்த இடத்துக்கு நல்லது...என்று தோன்றுகிறது..!

இப்படித்தான் பெறும் கல்வியையும் கூட பலர் பரீட்சை முடித்து சான்றிதழ் வாங்கியதும் பாவிக்க மறந்து விடுகின்றனர்..! கல்லூரி பாடசாலை என்பதும் வெறும் கல்வியை மட்டும் தருவதல்ல... ஒழுக்கம் வாழ்வியல் நெறிகளையும் போதிக்கிறது...அதையும் பலர் பாடசாலை வளவோடே மறந்து விடுகின்றனர்.... இன்று ஒழுக்கம் பண்பாடு என்பது சீரழிந்து கொண்டிருக்கிறது... ஒழுக்கயீனங்கள் புரட்சிகளாக சீர்திருத்தங்களாக சித்தரிக்கப்படுகின்றன... உதாரணத்துக்கு பல்கலைக்கழகம் புகும் ஒரு மாணவன் வீதியில் கூட சமூகத்துக்கு அவசியமில்லாத ஒரு வார்த்தையை துணிந்து பிரயோகிப்பான்..கேட்டால் நான் ஏன் பயப்பிடனும்..நான் பல்கலையில் படிக்கும் அனைத்தும் அறிந்தவன் என்று செருக்காகச் சொல்லிக் கொள்வான்...! உண்மை அதுவல்ல...இவர்கள் அதுவரை பாடசாலைச் சுவருக்குள் பேசிக்கொண்டவையும்...அதற்கு ஆசிரியர் வழங்கிய தண்டனைக்களுமே அவர்களை இப்படிப் பேசச் செய்கின்றன...! பேசி என்ன பயன்...???! அதைச் சிந்தப்பவர்களாக இல்லை...! பேசுகிறார் எழுதுகிறார்..அதுக்கு சொல்லும் எழுத்தும் அல்ல பொறுப்பு உச்சரிக்கும் எழுதும் மாணவனோ நபரோ தான் பொறுப்பு...! ஒரு விடயத்தை நாகரிகமாகச் சொல்ல வழி இருக்கும் போது ஏன் அநாகரிகமாக...சொல்ல வேண்டும்..! தாக்கத்துக்காக என்றால்... அது ஏற்றுக் கொள்ள முடியாது... காரணம் அநாகரிகம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட நாகரிகமே வலுவான தாக்கத்தை தந்து வருகிறது...! அநாகரிகம் என்றது என்ன... எல்லோரும் மனங்கோணாமல் ஒன்றை கேட்க ஏற்க பாவிக்க முடிந்தால் அது நாகரிக வடிவம்.. ஒருவன் மனம் கோணினும் அது அநாகரிகம் தான்... அவை அவசியமா... அவசியமற்றதுகளை சொல்லாக்கினும் பொருளாக்கினும் அவை சமூகத்தை முழுமையாக சென்றடையாது...! இப்போ... உதாரணத்துக்கு நாய் ஒன்று பழுதாகிய உணவை உண்ண முடிகிறது... மனித நீயும் உண்ணலாம் முடியாதென்றல்ல...உண்டால் என்னாகும்...???! அதே போல்தான் அநாவசிய அநாகரிகங்கள் சமூகத்துக்கு அவசியமில்லை... அதுவும் நாகரிக வடிவம் என்ற ஒன்று இருக்கும் போது..! அதைப் பாவிக்கத் தவறிவிட்டு வார்த்தைகளையும் கருத்துக்களையும் பழித்துப் பயனில்லை...! அது யார் குற்றம்...சிந்திப்பவனின் சிந்தனைக் குற்றமே அன்றி சமூகத்தினதல்ல...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
கோமதி Wrote:இதேபோல் செருப்பைப் பற்றி ஏன் நீங்கள் எழுதக்கூடாது?
உங்களுக்குக் கவிதை நன்றாக வருகிறது.
அருமையான கற்பனை வளமுள்ளது.

செருப்பை விட சொல்லின் பாவனையும் பயனும் அதிகம்...! பயன்படுத்தத் தெரியாதோரின் காலில் செருப்பு வெட்டுவது போல...சொல் அவர்களையே தண்டிக்கும்...அவர்கள் அதைத் தண்டிக்க முதலாய்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
ம்ம் கவி நல்லாயிருக்கு... எல்லாரும் சொன்ன மாதிரி நல்ல கற்பனைத்திறன் உங்களுக்கு.. வாழ்த்துக்கள் அண்ணா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#14
நன்றி அனிதா உங்கள் கருத்துக்கு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
kuruvikal Wrote:<img src='http://img149.imageshack.us/img149/4921/brid5ji.jpg' border='0' alt='user posted image'>

<b>காகிதம் பேசிக் கொண்டது
கையில் சிக்கிய
பேனாவால்
கிறுக்கியவர் பலர்
கில்லாடிகள்...
சிலர் ஏமாளிகள்
கசங்கிய நானோ
கடைசியில்....
அடப்பாவி...!

சொல்லும் கூடவே
பேசிக் கொண்டது
உருக்கொடுத்தவனுக்கு
உணர்வு கொடுக்கத் தெரியல்ல
உணர்வு கொடுத்தவனுக்கு
உருக் கொடுக்கத் தெரியல்ல
இரண்டும் கொடுத்தவனுக்கு
தன்னையே உணர முடியல்ல...!
சொன்னதை மறந்திட்டு
சிலாகிப்பதும் எனைத்தான்
சிதைப்பதுவும் எனைத்தான்
புகழ் மட்டும்
அவன் சொத்தாம்
கடைசியில்
நல்லதும் கெட்டதும்
நான்...
அடப்பாவி...!</b>

குருவிகாள் கருத்தியல் விமர்சனங்களையும் வரவேற்பதாக நீங்கள் கூறியதால்

அடப்பாவி என்ற வார்த்தைக்கும் அப்பாவி என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குச் சரியாகப் புரிபடவில்லை என நினைக்கிறேன்.

இல்லை நீங்கள் அடப்பாவி என்பதாகத் தான் குறிப்பிட விரும்பினால் கடைசியில் நான் அடப்பாவி என்பது பொருத்தமாக இல்லை.கடைசியில் நானே பாவியானேன் என்று வந்திருக்கலாம்.அடப்பாவி என்பது மற்றவர்கள் ஒருவனைத் திட்டுவது தன்னைத்தானே நொந்துகொள்வதல்ல

தெரியல்ல முடியல்ல என்ற வார்த்தைகளை முதன்முதலில் தமிழில் உங்களிடமிருந்துதான் கேள்விப்படுகிறேன்.கவிதை எழுதும் அவசரத்தில் இவற்றையும் கொஞ்சம் கவனிக்கலாமே
\" \"
Reply
#16
Eelavan Wrote:
kuruvikal Wrote:<img src='http://img149.imageshack.us/img149/4921/brid5ji.jpg' border='0' alt='user posted image'>

<b>காகிதம் பேசிக் கொண்டது
கையில் சிக்கிய
பேனாவால்
கிறுக்கியவர் பலர்
கில்லாடிகள்...
சிலர் ஏமாளிகள்
கசங்கிய நானோ
கடைசியில்....
அடப்பாவி...!

சொல்லும் கூடவே
பேசிக் கொண்டது
உருக்கொடுத்தவனுக்கு
உணர்வு கொடுக்கத் தெரியல்ல
உணர்வு கொடுத்தவனுக்கு
உருக் கொடுக்கத் தெரியல்ல
இரண்டும் கொடுத்தவனுக்கு
தன்னையே உணர முடியல்ல...!
சொன்னதை மறந்திட்டு
சிலாகிப்பதும் எனைத்தான்
சிதைப்பதுவும் எனைத்தான்
புகழ் மட்டும்
அவன் சொத்தாம்
கடைசியில்
நல்லதும் கெட்டதும்
நான்...
அடப்பாவி...!</b>

குருவிகாள் கருத்தியல் விமர்சனங்களையும் வரவேற்பதாக நீங்கள் கூறியதால்

அடப்பாவி என்ற வார்த்தைக்கும் அப்பாவி என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குச் சரியாகப் புரிபடவில்லை என நினைக்கிறேன்.

இல்லை நீங்கள் அடப்பாவி என்பதாகத் தான் குறிப்பிட விரும்பினால் கடைசியில் நான் அடப்பாவி என்பது பொருத்தமாக இல்லை.கடைசியில் நானே பாவியானேன் என்று வந்திருக்கலாம்.அடப்பாவி என்பது மற்றவர்கள் ஒருவனைத் திட்டுவது தன்னைத்தானே நொந்துகொள்வதல்ல

தெரியல்ல முடியல்ல என்ற வார்த்தைகளை முதன்முதலில் தமிழில் உங்களிடமிருந்துதான் கேள்விப்படுகிறேன்.கவிதை எழுதும் அவசரத்தில் இவற்றையும் கொஞ்சம் கவனிக்கலாமே

இரண்டு அடப்பாவிக்கும் அர்த்தமிருக்கு... இல்லாமல் ஒரு சொல்லப் போடுவமா...என்ன...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்பாவிகள் எவருமில்ல அங்க...! :wink:

ஏன் அ..ஏ...ஒ..ஓ.விகுதியாய் முடியாதா தமிழில்... வெல்க (க் + அ)... வருக (க் +அ ).. அதைத்தான் தெரியல்ல (ல் + அ) வில போட்டு முடிச்சம்.. தப்புன்னா மாத்திக்கிறமே... மன்னிக்கவும்... மாற்றிக்கிறமே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
அடடாடா
உலகம் பரந்து இருக்கு
நான் மட்டும் தனித்து
விடப்பட்ட மாதிரி இருந்தது
இந்த கவிதை படிக்கும்
வரைக்கும்

நல்லா இருக்கு அண்ணா

...!
Reply
#18
கவி அருமை குருவி அண்ணா..எல்லோரும் உங்களுக்கு நல்ல கற்பனைத்திறன் என்றாங்க..நானும் அதை ஆமோதிக்கிறேன்..கவிகள் எல்லாம் அப்பிடி இருக்கு..
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)