Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறுபடும் வேரும் அந்நியமாகும் உறவுகளும்...
#1
<img src='http://img327.imageshack.us/img327/8343/verkalinkarthikbabunov043my.jpg' border='0' alt='user posted image'>

[size=18]<b>அறுபடும் வேரும் அந்நியமாகும் உறவுகளும்</b>

புலம் பெயர்ந்தது வந்ததால் நெஞ்சில்
ஓயாமல் ஓலமிடும் சொல்லோன்னா ஏக்கங்கள்
உறவுளை விட்டுப் பிரிந்துவந்த துயர்கள்
அறுபட்டுப் போன வேராக அகதி வாழ்வில்
அடியெடுத்து வைத்த கதையின் ஆரம்பங்கள்

நிலா வெளிச்சத்தில் கூடி மகிழ்ந்த பொழுதுகள்
கோயில் குளம் என்று கூடி மகிழ்ந்த நினைவுகள்
உற்றார் உறவினருடன் கூடி மகிழ்ந்துண்ட பொழுதுகள்
ஆழம் விழுதாய் ஆறுதலாய் கூடி இருந்த உறவுகள்
அறுந்த உறவுகளாக புலத்தினில்

தமிழன் இல்லாத நாடும் இல்லை
தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லாமல்
எட்டுத்திசையெங்கும் சிதறி வாழும் எம் இனம்
அறுபட்ட வேறாய் அங்கும் இங்குமாய்
அந்நியமாகிப்போன உறவுகளாய் ஆகிவிட்ட நிலை

<b>அறுபட்ட வேர்கள் மீண்டும் படர்ந்திடும் உறவாய்
எப்போ எங்கே இணைந்த சமுதாயமாய் மலர்ந்திடுமா
அந்நியமாகிப்போன உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்த
தமிழீழத்தில் மீண்டும் துளிர்த்திடுமோ</b>
Reply
#2
கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
.

.
Reply
#3
நன்றி பிருந்தன்.
Reply
#4
Quote:தமிழன் இல்லாத நாடும் இல்லை
தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லாமல்
எட்டுத்திசையெங்கும் சிதறி வாழும் எம் இனம்
அறுபட்ட வேறாய் அங்கும் இங்குமாய்
அந்நியமாகிப்போன உறவுகளாய் ஆகிவிட்ட நிலை

வேறாய் ஓ இல்லை வேராயா? ம்ம்ம் யதார்த்தம் பேசி வந்த கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள் சண்முகி
<b> .. .. !!</b>
Reply
#5
சண்முகி அக்கா கவிதை அருமை, அதன் பேசு பொருள் ......நன்று
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
ரசிகை, குளக்காட்டான் தங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றிகள்
Reply
#7
வாழ்த்துக்கள் ஷண்முகி அருமையான பொருள் உறவுகள் அறுவது கொடுமை அதை கவிதையாய் தந்தமைக்கு நன்றிகள் மேலும் கவிதை புனையுங்கள்
inthirajith
Reply
#8
நண்றி..! நல்லதொரு கரு..
::
Reply
#9
ம்ம் சண்முகி மிகவும் அருமையாய் இருக்கு. முக்கியமாக உங்கள் கடைசி வரிகள் அருமை

Reply
#10
கவி நன்று சூரிய முகி. மேலே தொடர வாழ்த்துக்கள்: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#11
Quote:தமிழன் இல்லாத நாடும் இல்லை
தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லாமல்
எட்டுத்திசையெங்கும் சிதறி வாழும் எம் இனம்
அறுபட்ட வேறாய் அங்கும் இங்குமாய்
அந்நியமாகிப்போன உறவுகளாய் ஆகிவிட்ட நிலை



Cry Cry அழகாக சொல்லி இருக்கிறீங்க ஷண்முகியக்கா. நன்றியக்கா
----------
Reply
#12
Quote:அறுபட்ட வேர்கள் மீண்டும் படர்ந்திடும் உறவாய்
எப்போ எங்கே இணைந்த சமுதாயமாய் மலர்ந்திடுமா
அந்நியமாகிப்போன உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்த
தமிழீழத்தில் மீண்டும் துளிர்த்திடுமோ
அக்காவின் ஏக்கமோ கவிதையில் வந்தது. உறவுகள் ஒன்றிணையும் காலம் வராமலா போகும். காத்திருப்பம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
shanmuhi Wrote:நிலா வெளிச்சத்தில் கூடி மகிழ்ந்த பொழுதுகள்
கோயில் குளம் என்று கூடி மகிழ்ந்த நினைவுகள்
உற்றார் உறவினருடன் கூடி மகிழ்ந்துண்ட பொழுதுகள்
ஆழம் விழுதாய் ஆறுதலாய் கூடி இருந்த உறவுகள்
அறுந்த உறவுகளாக புலத்தினில்

தமிழர்களின் வாழ்க்கை அவலத்தை உணர்த்தும் கவிதை, நல்லா எழுதியிருக்கிறீங்க சண்முகி அக்கா. கவிதையை படிக்க பழைய நினைவுகள் மனதில் அலைமோதுகிறது. ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்ற நிலையில் எத்தனை வசதி இருந்தும் எத்தனையோ புது உறவுகள் இருந்தும், அந்த பழைய நினைவுகள் இடையிடையே மனதில் தோன்றி வருத்த தான் செய்கின்றது, அப்படி திக்கிற்கு ஒன்றால் பிரிந்த சொந்தங்கள், சிறுவயது நண்பர்களின் நினைவுகள் வரும்போதெல்லாம் தொலைபேசி ஒன்றுதான் அனைவரையும் இணைக்கும் பாலமாகின்றது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#14
கவிதை அருமை.. நல்லா எழுதியிருக்கிறீங்க அக்கா..
Reply
#15
அங்கென்றும் இங்கென்றும்
எங்கும் நிறைந்திருக்கும்
இறைவனுக்கடுத்து
இன்று தமிழினமே...

ஒரு குட்டித்தீவை மட்டுமே
துளைத்துக் கொண்டிருந்த வேர்கள்
இன்று பூமிப்பந்தின்
சகல எல்லைகளையும் குடைகிறது.

எங்குமே சிக்காமல் போவதில்லை
வியர்த்து நிற்கும் வேர்களுக்கு - நீர்.
எந்த ந்திக்கரையிலும் இளைப்பாறிடாது
இந்த வேர்கள் பயணிக்கட்டும்
மகா சமுத்திரங்கள் வழியே
குட்டித்தீவின் கரைகள் தொட்டு
கிளர்ந்தெழும் புது கிளை இலை கொண்டு
புதுப்புது வாசனை கொண்ட
பூக்களை காற்றிலாட வைக்கும் வரையிலும்
வேர்கள் வேர்க்கட்டும் ஓய்வின்றி...
-----------------


-----------------




-----------------
Reply
#16
சண்முகி அக்கா உங்கள் ஏக்கமும் சோகமும், நம்மில்
பலருக்கும் உண்டு.அதை கவி வரிகளில் வடித்தமைக்கு
மிக்க நன்றி. மேலும் தொடருங்கள்...

உடல் மட்டும் இங்கே
உயிரும் நினைவுகளும் அங்கேயே தங்கிவிட்டன..
இங்கே வர மறுக்கின்றன.......................


----- -----
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)