Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நோயற்ற எதிர்காலம்
#1
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இது ஏழை மக்களிடம் உள்ள குறைபாடு மட்டுமல்ல நன்றாக உணவு உண்ணும் நடுத்தர மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இளையவர்களிடம் இதய கோளாறுகள், கேன்சர், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்றவை அதிகரித்து வருவதை காண்கிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் உணவு பழக்கங்களே.

குழந்தைகளை நன்கு உண்ண சொல்லி தாய்மார்கள் கட்டாய்ப்படுத்துவது நாம் அன்றாடம் காண்கின்ற ஒன்று. குழந்தை பருவத்திலேயே இதனால் குண்டாகி விடும் இவர்கள், அப்படியே இள வயதையும் அடைகிறார்கள். இவ்வயதில் தன் உடலை நினைத்து கவலைப்படுவதும், அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் சாதாரணமாகி விடுகிறது. நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தில் உள்ள பத்து முதல் பதினெட்டு வயது வரை உள்ள குழந்தைகளிடம் ஊட்டச்சத்து பற்றாக்குறை இருப்பதாக ஆய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதேபோல இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுதல் ஆசிய மக்களிடையே அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளல்ல, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளே என்பது ஒரு அதிர்ச்சி தரும் சமீபத்திய கண்டுபிடிப்பு. "கொழுப்பற்ற உணவுகளை உட்கொள்வதால் மட்டும் ஆரோக்கியம் வந்து விடாது', என்கிறார்கள் மருத்துவ அறிவியல் நிபுணர்கள்.

இந்த பிரச்னைகள் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் பாஸ்ட்புட், சாக்லேட் போன்ற உணவு பொருள்களின் மேல் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அதீத ஆசையே என்கிறது லுõதியானாவில் டி.எம்.சி., இதய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு குறிப்புகள்.

நன்றாக சாப்பிடும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள இக்குழந்தைகளுக்காக இந்திய அரசு எதுவும் இதுவரை செய்யவில்லை. இக்குழந்தைகளின் உணவு பழக்கத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன. அதில் வரும் விளம்பரங்களுக்கேற்ப குழந்தைகளின் உணவு பழக்கங்களும் மாறுகின்றன. எனவே, நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் பன்னிரெண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கான எல்லா விளம்பரங்களும் தடை செய்யப்பட்டு விட்டன.வெகுசில பள்ளிகளிலேயே தங்களது மாணவர்களின் ஊட்டச்சத்து பற்றி அக்கறை எடுத்து கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமின்றி, பள்ளி காண்டீன்களிலேயே புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தி, குழந்தைகள் அதை உட்கொள்ள துõண்டுகின்றனர். வசதியான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சாக்லேட்கள், வற்றல், கோக் போன்றவற்றை கொடுப்பது அவர்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக டி.வி., கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்றவை அவர்களை சுறுசுறுப்பற்ற குழந்தைகளாக்கி அவர்களது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

""குழந்தைகளுக்கு காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி, உடல் உழைப்பையும், உடற்பயிற்சியையும் கட்டாயமாக்குவதன் மூலமே ஒரு நோயற்ற எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கி தர முடியும்'', என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply
#2
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)