Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்கமுடியாது
#1
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக கட்டுப்படுத்திவிடலாம் என்பது நிகழுமென நம்பமுடியாதது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரெரசிட்டா ஸ்காஃபர் அம்மையார் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் வாசிங்டனில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஸ்காஃபெர் அம்மையார் பேசியதாவது:

இலங்கை அமைதிப் பேச்சுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளே தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றனர். விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசு நேரடிப் பேச்சுக்களை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக கட்டுப்படுத்தலாம் என்பது நிகழுமென நம்ப முடியாதது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை மாற்றிவிடுவதால் இனப்பிரச்சனையின் தன்மை மாறிவிடப் போவதில்லை. இலங்கை பிரச்சனைக்குத் தீர்வுகாண பாரிய அரசியல் மாற்றங்கள் உருவாக வேண்டும். தற்போதைய அரசுத் தலைவர் தேர்தல் பரப்புரைகள் மூலம் அமைதி முயற்சிக்கான வாய்ப்புகளை தூர எறிந்துவிடக் கூடாது என்றார் ரெரசிட்டா ஸ்காஃபர் அம்மையார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு சிறிலங்கா அரசுதான் பொறுப்பேற்று தீர்வுகாண வேண்டும் என்று கூறிய அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜோன் ரிச்சர்ட்சன், ரெரசிட்டா ஸ்காஃபர் அம்மையார் கூறிய கருத்துகளையே வழிமொழிந்து பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய சிறிலங்காவின் சமாதான செயலக பணிப்பாளர் ஜயந்த தனபால, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தற்போதைய அமைதி பேச்சு முறையை முற்றிலும் புதியதாக மாறியமைக்க வேண்டியது அவசியமாகிறது என்றார்.

அமெரிக்க காங்கிரசார் ஜெர்ரி வெல்லெர், டெனி டெவிஸ் மற்றும் அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பேர்னாட் குணதிலக்க ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

puthinam
Reply
#2
உது ஒண்டும் புதிய கண்டுபிடிப்பல்ல. மாமனிதர் சிவராம் இதைபற்றி முதலே எமுதியிருக்கிறார்.

http://www.tamilcanadian.com/pageview.php?...D=347&ID=1664.2
Reply
#3
அது ஏன் ஓய்வு பெற்ற பின்பு தான் இப்படி பேசுகிறார்கள்? அதற்கு முதல் பதவியின் நிர்பந்தமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
Mathan Wrote:அது ஏன் ஓய்வு பெற்ற பின்பு தான் இப்படி பேசுகிறார்கள்? அதற்கு முதல் பதவியின் நிர்பந்தமா?
இந்த கதையை எங்கடை இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள் உண்மைகள் எப்பவும் வெளிவரும் மறைக்கமுடியாது..........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
வெளிப்பார்வைக்குத்தான் ஓய்வு பெற்றிருப்பார்கள். இருந்தாலும் தத்தமது நாட்டு நலன்களிற்காக நேரடியாகவே மறைமுகமாகவோ இன்னும் உளைத்து கொண்டிருப்பார்கள். விளங்கினால் சரி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#6
கருணாவிற்கு ஊதிய உலகின் மாபெரும் ஜநனாயகத்தினால் பிரச்சாரத்திற்கு நடத்தப்படும் 2tier tabloid இக்கு Ex-Ambassador Teresita Schaffer அம்மையார் என்ன சொல்லுகிறார்.

http://www.tamiloosai.com/index.php?option...d=654&Itemid=26
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)