Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பி.பி.சி. செய்திச் சேவை இருட்டடிப்பு
#1
தமிழர் தாயகத்தின் நிகழ்வுகளை
பி.பி.சி. செய்திச் சேவை இருட்டடிப்பு!
யாழ். பொது அமைப்புகளின் ஒன்றியம் கவலை
தமிழர் தாயக நிகழ்வுகளை பி.பி.சி. செய்திச் சேவை இருட்டடிப்புச் செய்வ தாகவும்
இனிமேலாவது நடுநிலையுடன் செய்திகளை ஒலிபரப்புச் செய்யும்படி கோருவதாகவும்
யாழ்.மாவட்ட பொது அமைப்பு களின் ஒன்றியம் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:
தமது வாழ்வுரிமைக்காக போராடும் இனத்தின் பதிவுகளை சர்வதேச ஊட கங்கள் முக்கியத்துவப்படுத்தி செய்தி களை வெளியிட்டுவரும் வேளையில் பி.பி.சி. ஒலிபரப்பு நிறுவனம் தமிழர் தாயகத்தில் நடைபெறும் நிகழ்வு களை இருட்டடிப்புச் செய்தும் வெளி யிடாமலும் ஒரு பக்கச் சார்பாகவும் நடந்து வருகின்றது இது தமிழர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து யாழ்.மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின் றது.
இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகமாகும். இங்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் விடுதலைக்கான போராட்ட நிகழ்வுகள், தமிழர்களின் உரிமைக் குரலான பொங்குதமிழ் நிகழ்வுகள் என ஏராளமான நிகழ்வுகள் நாளாந் தம் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் பி.பி.சி. வெளியிடவில்லை என்பது தெட்டத்தெளிவாக எமக்குத் தெரிகின்றது.
தேமதுர தமிழோசை உலகமெல் லாம் பரவ வகை செய்தல் வேண்டும் என்ற குரல் முழக்கமிட்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பி.பி.சி. அந்த தார்மீகப் பொருளை மறந்து எமது மண்ணில் நடக்கும் நிகழ்சிகளை ஒலிபரப்பாமல் புறக்கணிக்கின்றது. அத்துடன், மெய் யான செய்திகளை மூடிமறைத்து பக்கச் சார்புடன் செய்திகளை வெளியிட்டு வருவது அண்மைக் காலமாக அதி கரித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் யுத் தத்தால் துன்பமான வாழ்வை சுமந்து நிற்கும் தமிழ் மக்களின் மெய்யான நிலைப்பாட்டை வெளியிட மறுத்து பக்கச்சார்புடைய செய்தி நிறுவனமாக பி.பி.சி. மாறிவிட்டதா என எம்மை சந்தேகம் கொள்ளவைக்கின்றது. இது தொடருமானால் பி.பி.சி. அதன் தனித்துவத்தை இழந்துபோக நேரி டும். இனிவரும் காலத்திலாவது நடு நிலையுடன் நடந்துகொண்டு தமிழர் தாயகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஒலிப்பரப்புச் செய்து உதவுமாறு அன்பு டன் கேட்டுக்கொள்கின்றோம். என்று அக்கடிதத்தில் உள்ளது.


http://www.uthayan.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
குறிப்பாக சுனாமி நேரத்தில் பல முன்ணணி செய்தி நிறுவனங்களும் வடக்கு கிழக்கின் உண்மையான நிலைமை மற்றும் புறக்கணிக்கப்படும் விதம் குறித்து தாமதமாக என்றாலும் செய்தி வெளியிட்டன. ஆனால் பிபிசி அந்த சமயம் நடந்து கொண்ட விதம் கவலையளித்தது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
Frances Harrison வதிவிட நிரூபரா இருக்கும் போது வடக்கு கிழக்கின் முக்கி விடயங்களை ஓரளவிற்கு BBC ஊடாக அறியக்கூடியாதாக இருந்தது. இலங்கைத் தீவின் செய்தி என்னும் போது தமிழர் தாயக நிகழ்வுகளிற்கும் உரிய பங்கை வழங்கி தனது சேவை நேர்த்தியாக செய்தார் என கூறலாம்.

BBC ஆழிப்பேரலை நடந்த முதல் 2-3 நாட்களிலும் தாயகப்பிரதேசங்களின் இழப்புவிபரங்கள் எதை வெளியிடவில்லை. தென்பகுதி இழப்புகளை நேரடியாக சென்று BBC இன் தற்போதைய வதிவிட நிரூபர் அவதானித்து வெளியிட்டார். வடக்கு கிழக்கு நிலமைகளை பொறுத்தவரை தென்பகுதியில் விசமிகளால் பரப்பப்பட்ட வெறும் வதந்திகளே ஆரம்பத்தில் இவரால் (களத்தில் இருந்து உடனுக்குடன் உண்மைச் செய்திகளை கொடுக்க வேண்டிய வதிவிட நிரூபரால்) செய்தியாக தரப்பட்டது.

Jeremy Bowen மற்றும் Frances Harrison விசேட நிரூபார்களாக வந்த பின்னர் வடக்குக் கிழக்கு மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நிலவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக BBC வெளியிட்டது எனக்கூறலாம்.

BBC நிர்வாகத்தின் ஒருமித்த திட்டமிட்ட இருட்டடிப்பா இல்லை தற்போதைய வதிவிட நிரூபரின் தனிப்பட்ட வஞ்சனையா? :? :roll:
Reply
#4
பெரும்பாலும் செய்திகள் நீங்கள் குறிப்பிட்ட வதிவிட நிருபரிலேயே தங்கி இருக்கின்றது, எனக்கென்னவோ திட்டமிட்ட இருட்டடிப்பு என்பதத விட வதிவிட நிருபரின் வஞ்சனை அல்லது தவறு என்றுதான் படுகின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
பி.பி.சியின் இந்த ஊடகத்தர்மத்திற்கு?? பிரதான காரணம், எம்மை எப்போ விழுங்குவோம் என்று விழிமேல் வழி வைத்துக் காத்திருக்கும் இந்தியாதான்!!!!!
" "
Reply
#6
BBC AFP பேன்றவற்றில் இந்தியர்களின் ஆதிக்கம் கூட. புலம் பெயர்ந்த மற்றும் இரண்டாம் தலைமுறை வட இந்திய பிராமணியர்களின் மேலாண்மைவாத மனேபாவத்தில் பெரிய மாற்றங்களை கவனித்துள்ளீர்களா?
அந்த வகையில் அவர்கள் prejudice இல்லாமல் தமது தொழிலை செய்வார்களா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)