10-07-2005, 12:42 AM
கடவுள் பறவை வகைகளை முதல்முதலாகப் படைத்து பூமியில் விட்ட சமயம், எந்தப் பறவைக்குமெ பறக்கிறதுக்கு இறக்கை வைக்கவில்லையாம். நம்மைப் போலத்தான் அவைகளும் நடந்து திரிந்து கொண்டிருந்ததாம்.
தேவலோகத்திலிருந்து அப்போது பூமிக்கு அடிக்கடி யட்சர்கள் கின்னரர்கள் பறந்து வருவார்கள். அதைப் பார்த்த பறவைகளுக்கு தாங்களும் அப்படிப் பறக்க வேண்டும் என்று ஆசை வந்ததாம்.
பறவை வகை என்று பேர் இருந்து என்னத்துக்கு, பறக்க முடியாமல் என்று நினைத்தன. ஆனால் அந்த ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறது என்று தெரியவில்லை. கருடன் பறவை மட்டுந்தான் கடவுளிடம் தைரியமாகக் கேட்டது. பறப்பதுக்குத் தனக்கு இறக்கைகள் வேண்டும் என்று. கருடன் பேரில் கடவுளுக்கு ரொம்ப இஷ்டம்.
கடவுள் சிரித்த முகத்தோடு, ‘‘அப்படியா; சரி. இந்தா’’ என்று தன்னிடமிருந்த தைக்கும் ஊசியை எடுத்துத் தந்து, ‘‘உன் உடம்பிலிருக்கும் ரோமங்களையே பறித்து இறக்கை போலத் தைத்து ஒட்ட வைத்தால் ஒட்டிக்கொண்டு இறக்கைகள் ஆகிவிடும்; உடனே பறக்கலாம்’’ என்று சொல்லி, ‘‘ஊசி மட்டும் ரொம்ப பத்திரம்; நான் கேட்கும்போது தந்துறணும்’’ என்று சொல்லிக் கொடுத்தனுப்பினார்.
தைத்து முடித்து ஒட்டவைத்தவுடன் ஆச்சரியப்படும்படி அந்த இறக்கைகள் உடனே வளர்ந்து பெரிசாகி கருடன் பறக்கும்படி ஆனது. இப்படியாகக் கருடன் வானத்தில் பறந்து முதல் முதலில் வட்டமடித்து வந்து இறங்கியது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பறவைகள் ஒவ்வொன்றாக கருடனிடம் வந்து தாங்களும் பறக்க வேண்டும் என்று ஊசியைக் கேட்டு வாங்கி, தைத்து பறக்க ஆரம்பித்தன. கருடனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தனக்கு வேண்டிய பறவைகளுக்கெல்லாம் ஊசியைக் கொடுத்து வாங்கியது. கொடுக்கும் போதெல்லாம் ‘பத்திரம் ஞாபகம்’ என்று சொல்லியேதான் தரும்.
இப்படி எல்லாப் பறவைகளும் ஆகாசத்தில் பறந்து வட்டமடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த காக்காயிக்கு தானும் பறக்கணுமே என்று ஆசைப்பட்டு ஒருநாள் கருடனிடம் வந்து கருடனைப் புகழ்ந்து பேசி ‘காக்கா பிடித்து’ ‘‘கொஞ்சம் அந்த ஊசியைத் தந்து வாங்கினால் அடியேன் நானும் உங்க பேரைச் சொல்லி பறந்துக்கிடுவேனே’’ என்று கேட்டு வாங்கிவிட்டது.
காக்கா தனக்கு இறக்கை தைத்துக் கொண்டிருந்தபோது கோழி வந்து பக்கத்தில் நின்றுகொண்டு பார்த்தது. ‘‘என்ன செய்யிறெ?’’ என்று கேட்டது. ‘‘என்ன செய்யிறேனா ஓம் மூஞ்சி’’ என்று வலிச்ங்காட்டிச் சொன்னது. காக்காயிக்கு, தான் ரொம்....ப நிறம் அழகு என்கிற நினைப்பு.
‘‘அட என்ன செய்யிறன்னுதான் சொல்லேம்.’’
‘‘பாத்துக்கிட்டே இரு இப்பொ என்ன நடக்குன்னுட்டு...’’
காக்காயிக்கு வந்த ‘‘பகுத்து’’ல ஊசியைப் போட்டுவிட்டு மேலே பறக்க ஆரம்பித்ததும் பெருமை பிடிபடவில்லை. மேலே மேலே வட்டமடித்துக் கொண்டே இருந்தது.
அது கீழே இறங்கி வர்றதுக்குள் நாமும் அப்படிச் செய்து பறந்து பார்க்கணும் என்று கோழியும் வேகமாக அதேபோலச் செயல்பட்டது. தைத்து முடித்து ஒட்ட வைத்ததும் இறக்கைகள் வந்துவிட்டன. சரி ஊசியை அதனிடம் ஒப்படைக்கணுமே என்று தேடியபோது காணோம்! அதாம் சொல்லி இருக்கே ‘‘ஊசிக்குத் திருடன் உடனே வருவான்’’ என்று. இதெல்லாம் இந்தக் கோழிக்கு எங்கே தெரியப் போகுது. பறக்க வேண்டும் என்பதை மறந்து ஊசியைத் தேட ஆரம்பித்து விட்டது.
பரபரப்பாக ஊசியைத் தேடிக்கொண்டிருந்தபோதுதான் காக்காய் வந்து சேர்ந்தது. தன்னைப் பார்த்ததும் கோழி ‘‘மெய்மறந்து’’ நிற்பதைப் பார்த்து யூகித்து விட்டது.
‘‘என்ன ஆச்சி; எடு சீக்கிரம் ஊசியை’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கருடனும் ஊசியைப் பெற்றுக் கொள்ள வந்துவிட்டது. கோழி நடுநடுங்கிப் போய்விட்டது.
எப்படியாவது தேடி ஊசியை உன்னிடம் ஒப்படைத்துவிடுவேன் என்று வாக்குக் கொடுத்தது கோழி.
கருடனுக்கும் காக்காயிக்கும் கோவம் வந்துவிட்டது. அப்படி நீ ஒப்படைக்கலே உன் வம்சமே இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்று சபதம் கூறின.
சொன்னபடி கோழியால் இன்று வரைக்கும் ஊசியை ஒப்படைக்க முடியவில்லை. அதனால்தான் கருடனும் அதன் இனமான பருந்துகளும், காகங்களும், கோழிகளின் குஞ்சுகளையும் முட்டைகளையும் எடுத்துத் தின்றுகொண்டே இருக்கின்றனவாம். அதோடு மற்ற பறவைகளைப் போல வானத்தில் பறக்க முடியாமல் மனிதர்களுடைய காலடியே தஞ்சம் என்று கிடக்கிறது. குப்பை கூளங்களைக் கிளறிக் கிளறி அது இன்றும் தேடிக்கொண்டே இருக்கிறது.
ஊசி கிடைக்காத வரை கருடனுக்கும் காகத்துக்கும் லாபமாம்; கிடைத்துவிட்டால் மனிதர்களுக்கு நஷ்டமாம்!
Thanks:Kumudam...

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->