Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கைக்குண்டு வீச்சில் மூவர் படுகாயம்
#1
கைக்குண்டு வீச்சில் இரு படையினர் உட்பட மூவர் படுகாயம்

திருகோணமலை நகரின் சீ வியுூ வீதியில் அமைந்திருந்த சிறீலங்கா படையினரின் சோதனைச் சாவடி மீது வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரு படையினன், ஒரு காவல்துறையினன் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த மூவரும் உடனடியாக திருமலை அரசினர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

கைக்குண்டுத் தாக்குதலையடுத்து குறிப்பிட்ட வீயுூடான போக்குவரத்து படையினரால் முற்றாகத் தடைசெய்யப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது எவரும் கைது செய்யப்பட்டார்களா என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)