10-07-2005, 03:37 AM
""நான் ஜனாதிபதியானால், அமைக்கப்படும் அமைச்சரவையில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துக்கு பதவி வழங்கப்படும்.'' ஐக்கிய இலங்கை பொதுமக்கள் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும் "சித்தாலேப' நிறுவன அதிபருமான மருத்துவர் விக்ரர் ஹெட்டி கொட சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது: கடந்த 20 ஆண்டுகளாக யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டிருந்த இந் நாட்டில் யுத்தத்தை இல்லாதொழித்து சௌபாக்கியம்மிக்க நாடொன்றாக ஸ்ரீலக்காவை உருவாக்கும் நோக்கை முன்வைத்தே நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளேன். வெளிநாடொன்றின் தலையீடு இன்றியே எமது பிரச்சினையை நாமே பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ளமுடியும். நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் உருவாக்கப்படும் அமைச்சரவையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத்துக்கு பதவி வழங்கப்படும். அது மட்டு மன்றி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகளினதும் தலைமைத்துவங்களுக்கும் பதவிகள் வழங்கப்படும். மேலும் ஆறு ஆண்டு காலங்களுக்குள் நாட்டைச் சீர்படுத்தி அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதே எனது நோக்கமாகும் என்று அவர் தெரிவித் தார்.
nithrsanam
nithrsanam


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&