Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரணிலும் விலகினார்!
#1
webulagam.com

அமைதி முயற்சியில் இருந்து ரணிலும் விலகினார்!

வெள்ளி, 14 நவம்பர் 2003
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டுவந்த அமைதி முயற்சியில் இருந்து விலகிக்கொள்வதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறிவிட்டார்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் காரணமாக தாங்கள் மேற்கொண்டுவரும் அனுசரணை முயற்சிகளில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதாக நார்வே அரசு அறிவித்த சில மணி நேரங்களில் ரணில் விக்ரமசிங்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் துவக்கிய அமைதி முயற்சிகளில் இருந்து விலகிக்கொள்வதாகவும், அம்முயற்சிகளைத் தொடரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

அமைதி முயற்சியில் இருந்து தான் விலகிக்கொண்டதை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையின் மறுசீரமைப்பிற்காக உதவிடும் நன்கொடை நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் நார்வே அமைதிக் குழுவின் வாயிலாக அவர் தெரிவித்துவிட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பேன் என்கின்ற வாக்குறுதியை அளித்து அதன் அடிப்படையில் மாபெரும் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கே, தான் முன்னெடுத்த அமைதி முயற்சிகளில் இருந்து விலகிக் கொண்டிருப்பதும், புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையே அனுசரணையாளராக பணியாற்றிவந்த நார்வே அரசு தற்காலிகமாக தனது முயற்சிகளில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிட்டதும் இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பத்திற்கும், நிச்சயமற்ற தன்மைக்கும் வழிகோலியுள்ளது.

இலங்கையில் தேசிய அரசை அமைக்க முயற்சிக்கும் அதிபர் சந்திரிகாவிற்கு தான் ஆதரவளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிய ரணில் விக்ரமசிங்கே, நாடாளுமன்றத்தில் தனது அரசிற்கு பெரும்பான்மை உள்ளது என்றும், அப்படிப்பட்ட நிலையில் அமைச்சரவையில் சில பதவிகளை பெறுவதற்காக பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியாது என்றும் கூறிவிட்டார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)