10-02-2005, 02:32 PM
<b>சிங்களப் பேரினவாதக் கும்பலுடன் கைகோர்க்கும் 'மகேஸ்வரன்'</b>
[ஞாயிற்றுக்கிழமை, 2 ஒக்ரொபர் 2005, 19:40 ஈழம்] [ம.சேரமான்]
<b>சிங்களப் பேரினவாத கும்பல்களான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமயவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தி.மகேஸ்வரன் இரகசிய உறவு வைத்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது.</b>
யாழ். குடாநாட்டு மக்களால் 'மண்ணெண்ணெய் மகேஸ்வரன்' என்றழைக்கப்படும் இந்நபர் முன்னர் யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மகேஸ்வரன் செயற்பட்டவிதத்தைத் தொடர்ந்தே அவரது இரகசிய உறவுகள் வெளிப்பட்டு இருக்கின்றன.
அவசரகால சட்ட நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் தன்னையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மகேஸ்வரன் குரல் கொடுத்தார். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க முன்பிருந்த ஆவணங்களை கிழித்தெறிந்து ஆவசப்பட்டார்.
தொடர்ந்து தனது ஐக்கிய தேசியக் கட்சியையும் விமர்சனம் செய்த போது அவருக்கு ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கரிசனம் காட்டினார். தமது கட்சியின் ஐந்து நிமிடத்தை ஒதுக்குவதாக விமல் வீரவன்ச கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
மகேஸ்வரனை விடுதலைப் புலி என்று விமர்சனம் செய்த விமல் வீரவன்சவின் கரிசனை மகேஸ்வரனுக்கு எப்படிக் கிடைத்தது? என்ற கேள்விகள் எழவே மர்ம முடிச்சுக்கள் அவிழ்ந்துள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே விமல் வீரவன்சவுக்கும் மகேஸ்வரனுக்கும் இடையே இரகசிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டுக்கு ஒரு மூன்றாம் நபர் உதவியிருக்கிறார். சிறிலங்கா துடுப்பாட்ட வாரியத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவைப் போல் இருவருக்கும் பொதுவான ஒரு நபர் இந்தத் தரகுப் பணியில் செயல்பட்டிருக்கிறார்.
இதையடுத்து விமல் வீரவன்சவும் மகேஸ்வரனுக்கும் இடையே பலமுறை இரகசிய சந்திப்புக்கள் நடந்துள்ளன. அதேபோல் ஜாதிக ஹெல உறுமயவுடனும் மகேஸ்வரன் இரகசிய உறவை மேற்கொண்டிருக்கிறார்.
ஆறுமுகம் தொண்டமானை ஐக்கிய தேசியக் கட்சி அணியில் இணையவிடாமல் தடுப்பது என்பதுதான் சிங்களப் பேரினவாதிகளால் மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட கட்டளை.
இதற்கேற்பவே அண்மைக்காலமாக ஆறுமுகம் தொண்டமானை ஐக்கிய தேசியக் கட்சி அணியில் அனுமதிக்கக் கூடாது என்று மகேஸ்வரன் குரல் எழுப்பி வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியிடம் தொண்டமான் பண பேரம் பேசிவருவதாகவும் ஊடகவியலாளர்களிடம் மகேஸ்வரன் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆறுமுகம் தொண்டமான் அந்த அணியில் இணைந்துவிட்டால் கட்சியிலிருந்து வெளியேறுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுவிட்டதாக தோற்றத்தை உருவாக்குவது என்பதுதான் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய- மகேஸ்வரன் கூட்டணியின் நோக்கம்.
மகேஸ்வரனின் இந்த அதிரடி பேச்சுகளையடுத்து அவரது இரகசிய திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் கண்டுபிடித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்திட்டம் ஒன்றையும் சிங்களப் பேரினவாத கும்பலுடன் இணைந்து மகேஸ்வரன் செயற்படுத்தி வருவதாகவும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஈபிடியின் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது போல் உரிய பாதுகாப்பு மகேஸ்வரனுக்கு வழங்கவும் பேரினவாதிகள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.
www.puthinam.com

hock:
8)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :?