Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்வதேச அங்கீகாரத்தின் முக்கியம்
#1
எமது போராட்டத்தின் நியாயத்தன்மையின் அடிப்படையில் சர்வதேச அங்கீகாரத்தை கோரி தாயகத்திலும் புலத்தி பல மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்றுரைத்த உன்னத அகிம்சைவாதியின் நினைவுநாட்களில் எமக்கு சர்வதேச அங்கீகாரம் எவ்வளவு முக்கியம் என்றதை கொஞ்சம் விவாதித்தால் எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் அல்லவா கள உறவுகளே.

இன்று உலகில் எந்தெந்த வகையில் யாரால் அங்கீகரிக்கப்பட் நாடுகள், குடியரசுகள், தேசங்கள், அரசியல் நிர்வாக கட்டமைப்புகள் உள்ளன என்று வலையில் அறிந்தவற்றை சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன். தவறுகளை திருத்தி உங்களுக்கு தெரிந்தவற்றையும் இணையுங்கள்.

ஜநாவினால் அங்கத்தவராக தீர்க்கப்படாதா அரசியல் மற்றும் அங்கீகார சிக்கல்கள் எதுவுமின்றி 191 நாடுகள் உள்ளன.

வத்திக்கான் இற்கு எந்த அங்கீகாரச்சிக்கல்கள் இல்லாவிட்டாலும் தன்னை ஜநாவில் இணைக்கவில்லை.
வத்திக்கான் மதரீதியிலான தேவைகளுக்காக ஒரு நாடகா உள்ளபோதும் மற்றய அன்றாட வாழ்வுக்குரிய நடைமுறை விடயங்களில் இத்தாலின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது எனலாம்.

ஆகவே வத்திக்கானோடு சேர்த்து 192 அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் தீர்க்கப்படாதா அங்கீகார சிக்கல்கள் எதுவுமின்றி உள்ளன.

193 வதாக தமது நலன்களிற்காக சர்வதேசம் அங்கீகரித்து பின்னர் ஒரு பலமிக்க அரசியல் இராணுவ சக்தியின் எதிர்பினால் அதை ஓரளவு இழந்த நாடாக தாய்வான் உள்ளது. தாய்வான் ஒரு காலத்தில் ஜநாவில் அங்கத்தவராக அங்கீகரிக்கப்பட்டு இருந்த குடியரசு. அமெரிக்க இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கா 1971 இல் சீனா விதித்த நிபந்தனைக்கு அடிபணிந்து சீனாவின் ஒரு அங்கமாக தாய்வானை ஏற்றுக் கொண்டது.

இந்தவகையில் ஜநா அங்கீகாரமும் சீனா (பாதுகாப்புச்சபையின் நிரந்தர அங்கத்தவர்) அங்கீகாரமும் அற்ற ஓரு நாடக ஆனால் இராஜதந்திரரீதியில் மற்றய நாடுகளால் நேரடி உறவுகளை தொடர்ந்து பேணியவண்ணம், அரசியல் பொருளாதார நிர்வாக கட்டமைப்புக்களையும் முப்படைகளோடு நடமுறையில் ஒரு தனி நாடாக தொடர்கிறது. அமெரிக்கவின் ஆதாரவும் அரசியல் இராணுவ பொருளாதாரரீதியல் தொடர்கிறது. தாய்வானை சீனாமீது அழுத்தம் பிரயோகிக்க பயன்படுத்தம் ஒரு கருவியாக அமெரிக்கா ஆரம்பத்திலிருந்து பயன்படுத்துகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

194 வதாக சர்ச்சைக்குரியரீதியில் இருப்பதாக பாலஸ்தீனத்தை கொள்ளலாம். பாலஸ்தீனத்திற்கு ஜநாவில் விசேட அவதானிப்பாளர் உரிமை வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இருந்தும் இங்கே முழு அங்கீகாரத்திற்கு முன்னர் தீர்க்கப்படவேண்டி விடயம் என்ன வென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேலின் தலைநகரான ஜெரூசலத்திற்கு தான் பாலஸ்தீனமும் உரிமை கோருகிறது.

ஒரு அங்கீகரிக்கப்பட வேண்டிய நாட்டிற்குரிய அடிப்படை தகமைகளாக

1 வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு கூடிய முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம்

2 அங்கு சாதாரண அன்றாட வாழ்வில் ஈடுபடும் மக்கள்

3 அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக கட்டமைப்புகள்

4 பொருளாதார நடவடிக்கைகளை உள்ளேயும் வெளிநாடுகளோடும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கக்கூடிய தகமை. சொந்த நாணயத்தை உருவாக்கி அதை முகாமைப்படுத்துவது.

5 வேறொரு நாட்டினால் அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தி ஆளமுடியாமை

6 இன்னெரு நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச (ஜநா) அங்கீகாரத்திற்கும் அங்கத்துவத்திற்கும் முன்மொழியப்பட வேண்டும்.


அங்கீகாரமின்றி இன்று பல பிரதேசங்கள் உள்ளன. இவை மேற்கூறிய அடிப்படைத் தகமைகளை பூர்திசெய்யாததினாலே அல்லது பாரபச்சமான முறையில் இவை சர்வதேச சமூகத்தினால் பின்பற்றப்படுவதினாலோ இந்நிலையில் இருக்கின்றன.


http://en.wikipedia.org/wiki/List_of_unrec...their_territory

இவர்களோடு எமது போராட்டமும் இணைக்கப்பட்டிருப்பது சர்வதேச அங்கீகாரத்தின் முக்கியத்தை கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது சுதந்திரப்பிரகடனம் செய்துவிட்டு அங்கீகாரம் இல்லாது இருப்பதை தவிர்கவேண்டியதன் முக்கியத்துவம் எம்மால் உணரப்பட்டு அதற்கான பங்களிப்புகளை நாம் துரிதப்படுத்த வேண்டும்.

ஆழிப்பேரலை அனர்த்ததோடு வந்திறங்கிய வெளிநாட்டு ஊடகங்கள் அரசச்சார்பற்ற நிறுவனங்களும் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் தமது பிரதேச குடிமக்களின் தேவைகளிற்கு எவ்வாறு சேவைகளை வழங்குகிறது என்பதை தொளிவாக அறிந்து கொண்டதோடு உலகிற்கும் அறிவிக்க தவறவில்லை. அதேவேளை இனவாத இலங்கை அரசின் உண்மை முகத்தையும் கண்டு கொண்டது. இவை வரலாறாக சுயாதீனமாக ஆதாரங்களோடு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது எமது போராட்டத்திற்கு கிடைத்த ஓரு பெரு வெற்றி.

நிலமையை உணர்ந்தும் இராஜதந்திர சம்பிரதாயங்களிற்காக வெளிப்படையாக கருத்துக்கூற முடியாது இருக்கிறது சர்வதேசசமூகம். அத்தோடு சர்வதேசசமூகத்தின் முக்கிய அங்கத்துவ நாடுகளின் தனிப்பட்ட சுயநல அரசியல் பூகோள இராஜதந்திர நலன்களிற்கு பங்கம் விழைவிக்கும் நிலையை தவிர்ப்பதே அவர்களின் நோக்கம். தமது நலன்களிற்கு பயன் இல்லாவிட்டால் எந்தவெரு நியாமான போராட்டாத்தையும் அங்கீகாரிப்பார்களா? வரலாற்றில் அவ்வாறு நடந்துள்ளதா? எமது போராட்டத்தை அங்கீகரிப்பதால் சர்வதேசத்திற்கு கிடைக்கும் பயன் என்ன? இதை நாம் எமது போராட்டத்தின் நியாயத்தன்மைக்கு அப்பால் எவ்வாறு சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கலாம்?
Reply
#2
நல்ல தலைப்புடன் கூடிய முயற்சி குறுக்ஸ்..

சர்வதேச அங்கீகாரம் என்பது இப்போதய சூழ்நிலையில இன்றியமையாது. காரணமாய் பல காரணங்களைச் சொல்லலாம்.. இப்போ ஐநா என்கின்ர ஒரு குடையின் கீழான அங்கீகாரத்தின் கீழ் உலகவர்த்தகம் சந்தைப் படுத்தல்கள் நடக்கின்றது அதைப் பற்றி மட்டும் நான் சொல்லலாம் எண்டு நினைக்கிரன்.. தமிழர்களைப் பொறுத்த வரை உலகமெலாம் பரந்து வாழ்பவர்கள்.. அவர்களால் பெறப்படும் அன்னியச்செலவாணி என்பது எமது தேசமான தமிழீழத்துக்கு தேவை.. அதைக் கொண்டு வருவதிலான பலசிக்கல்களை அங்கீகாரமற்ர தமிழீழம் சந்திக்க வேண்டி வரலாம்.. உள்ளூர் உற்பத்திக்கள் பல ஏற்றுமதி செய்ய சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும்.. ஆனாலும் நாங்கள் வாளாதிருக்க முடியாது..

தாய்வான் எப்படி பொருளாதார ரீதியில் சீனாவின் எதிரி அமெரிக்கரின் வளங்களைப் பயன் படுத்துகிறதோ.. அதேபோல் தான் தமிழீழமும் பொருளாதார ரீதியாய இந்திய எதிரிகளின் தேவை எங்களிடம் உள்ளது.. <b>நாங்கள் பலமானவர்களாக இருந்தால்</b>.. பொருளாதாரத்தை வளர்க்க அமெரிக்காவினதோ, சீனாவினதோ,அல்லது இந்தியாவினதோ ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை அவர்களுக்குத்தான் எங்களின் ஆதரவு தேவை.. காரணம் எமது நாட்டின் அமைவிடம்..
என்பது என்னுடைய கருத்து..
::
Reply
#3
எனக்கு இருக்கும் இன்னொரு கேள்வி ,இன்று இருக்கும் பல் தேசிய நிறுவனங்கள் அங்கிகாரம் இல்லாத ஒரு தேசத்தை எவ்வாறு நோக்கு கின்றன என்பது.இன்னும் கொன்ச்சம் விரிவாக கேட்டால்,லாபம் இட்டலே இவற்றிற்கான நோக்கமாக இருக்கும் போது இவை ,ஒரு நாட்டை ஐனா அங்கிகரித்ததா இல்லயா என்பதைப் பார்க்குமா அல்லது தமது இலாபத்தைப் பார்க்குமா என்பதுவே.உதாரணத்திற்கு விடுதலைப் புலிகள் நடாத்தும் தொலை செய்மதிக் காட்சிக்கான வசதிகள் இவ்வாறான தனியார் நிறுவனக்களினுடாகவே பெறப் படுகின்றன.ஆகவே இவ்வாறான நடை முறைகளுக்கூடாகவும் மற்றய தேவைகளை நிறை வேற்ற முடியுமா,அதாவது ஒரு துறை முகத்தை அமைப்பதுவோ அல்லது சர்வேதேச ரீதியாக வர்த்தகத்தை நடத்துவதற்கோஅல்லது தனியான ஒரு செய்மதித் தொலைத் தொடர்பு சேவயையோ நிறுவுவதற்கு தனி நாடு என்கின்ற நிலை அவசியமா?மேலும் பலஸ்தீனத்தாரின் நிலை என்ன? அது ஒரு தனி நாடு அல்லவே?
ஒரு தனி நாடு என்பதை நிறுவுவதற்கு எமக்கு முதல் ஒரு நாட்டுக்கான கட்டுமானங்கள் அவசியம் அல்லவா?எமக்கு ஒரு பாதுகாப்பான துறை முகம்,விமான நிலயம்,தொலைத் தொடர்பு என்பன அவசியம் அல்லவா.அங்கீகரிப்பு என்பது அதன் பின் அந்த அந்த தேசங்கள்,அமைப்புக்கள், நிறுவனங்கள் என்பவற்றின் தேவைகள் கருதி வருவது அல்லவா?


எனது அனுமானம் திருகோணமலைத் துறைமுகமும்,பலாலி விமானத் தளமும் எமது கட்டுப் பாட்டுக்குள் வந்தால் சர்வதேச அங்கிகாரம் தானாக வரும் என்பதே.
Reply
#4
எனது அனுமானம் திருகோணமலைத் துறைமுகமும்இபலாலி விமானத் தளமும் எமது கட்டுப் பாட்டுக்குள் வந்தால் சர்வதேச அங்கிகாரம் தானாக வரும் என்பதே.
_________________

இது தான் இக்கால யதார்த்தம்
.
Reply
#5
மன்னிக்கவும் நேரமின்மையால் துண்டு துண்டாக எழுதியுள்ளேன். இப்பே எல்லாவற்றை ஒன்றாக இணைச்சாச்சு.
Reply
#6
BBC World Doha Debate இல் பரிமாறப்பட்ட கருத்து, அரேபிய நாடுகளால் தமது எரிபொருள் வளத்தை ஒரு அரசியல் இரஜதந்திர சக்தியாக பலஸ்தீனப் பிரச்சனைக்கு தீர்வுகாண பயன் படுத்தப்பட்டதா என்று. அமெரிக்காவிலுள்ள äதர்கள் அதன் அராங்கத்தின் மீது கொண்டு வரக்கூடிய அழுத்தங்களை அரபுநாடுகளும் அதன் எண்ணை வளங்களாலும் கொண்டுவரமுடியவில்லை.
;
எமது போராட்டமும் எவ்வளவு நியாயமானது என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் அரசியல் இராஜதந்திர அழுத்தங்களின்றி பொருளாதார இலாபங்களின்றி அங்கீகரிக்கப்படுமா?
Reply
#7
குருக்ஸ் அதற்கு முக்கிய காரணம் அரபுலகின் அரசுகள் மேற்குலகால் நுகத் தடியில் வைத்து இயக்கப் படுகின்றன.
எல்லவற்றையும் இறுதியில் தீர்மானிப்பது இராணுவ வல்லாண்மை.
அரபு உலகில் அரசியல் நிர்ணயம் அந்த மக்களிடம் இல்லை.ஆகவே தான் மக்கள் விருப்பமும் அரபு அரசுகளினால் முன் நிறுத்தப் படுவத்தில்லை.அவ்வாறு மக்கள் அரசுகளாக வரக் கூடிய அரசுகளே மேற்குலகினால் வெகு சூட்சுமமாகாக் கவுக்கப் படுகின்றன, இராக்,இரான்,லிபியா இன்னும் பல.ஈற்றில் இரானுவ வல்லாதிக்கமே இராஜதந்திரத்தை நிர்ணயிக்கிறது.
Reply
#8
குறுக்ஸ்... எரித்திரியா சுதந்திரம் அடையும் போது எரித்திரியப் போராளிகள் எப்படியானதந்திரத்தைக் கையாண்டார்கள் எண்ட சரியான விபரம் தெரியுமா??? தெரிந்தால் யாராவது இணையுங்களேன்...

எனக்குத் தெரிந்தவர் 1991ல் எதியோப்பியாவில் ஐரோப்பா போவதற்காகக் காத்திருந்த போதுதான் எரித்திரியப் போராளிகளின் தாக்குதல் தீவிரமாகி.... எதியோப்பியா முழுவதையும் கைப்பற்றினார்கள் என்கிறார் பின்னர் ஐநா வுடன் 1 மாதம் அளவில் பேசி எரித்திரியாவிற்கான ஐநா அங்கீகாரத்தை வாங்கியபின் எதியோப்பியாவில் இருந்து வெளியேறியதாய்ச் சொல்கின்றார்......... ஆனால் என்னால் அச்செய்தி சரியானதா எண்டு உறுதிப் படுத்த முடியவில்லை
::
Reply
#9
இந்த இணைப்பு கொஞ்சம் நடுநிலையா சொல்லுது போல கிடக்கு:
http://www.globalissues.org/Geopolitics/Af...opiaEritrea.asp

UN view:
http://www.un.org/NewLinks/eebcarbitration/
http://www.un.org/Docs/sc/committees/Ethio...piaTemplate.htm


இது எரித்திரியர்களின் இணையம் போலுள்ளது:
http://www.dehai.org/conflict/
http://home.planet.nl/~hans.mebrat/eritrea...ea-ethiopia.htm
Reply
#10
மன்னிக்க வேண்டும். நான் எழுதுவது வழக்கமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு உணர்வுபுூர்வமாக ஒன்றிப்போனவர்களை, ஆத்திரமடைய வைப்பது வழக்கம். இந்த முறையும் இதற்கு விதிவிலக்காக அமையப்போவதில்லை.

மற்றவர்கள் பார்க்காத நோக்கில் பிரச்சினைகளை பார்க்கவும், தீர்வுகளை தேடவும் வேண்டும், என்ற நோக்கிலேயே எனது கருத்துகள் அமைகின்றன.

kurukaalapoovan Wrote:ஒரு அங்கீகரிக்கப்பட வேண்டிய நாட்டிற்குரிய அடிப்படை தகமைகளாக
<ul>
<li> வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு கூடிய முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம்
<li>அங்கு சாதாரண அன்றாட வாழ்வில் ஈடுபடும் மக்கள்
<li> அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக கட்டமைப்புகள்
<li> பொருளாதார நடவடிக்கைகளை உள்ளேயும் வெளிநாடுகளோடும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கக்கூடிய தகமை. சொந்த நாணயத்தை உருவாக்கி அதை முகாமைப்படுத்துவது.
<li> வேறொரு நாட்டினால் அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தி ஆளமுடியாமை
<li> இன்னெரு நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச (ஜநா) அங்கீகாரத்திற்கும் அங்கத்துவத்திற்கும் முன்மொழியப்பட வேண்டும். <ul>
மேற்படி தகைமைகளை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
<ul>
<li> வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு கூடிய முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம்

தமிழீழத்தின் வரையறுக்குப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள பிரதேசம் இன்று தமிழீழ அரசின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இல்லை. வன்னிப்பிரதேசம் மட்டுமே முழுக்கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் வன்னிப்பிரதேசத்தின் எல்லைகள் தமிழீழ நாட்டின்; வரையறுக்கப்பட்ட எல்லைகள் அல்ல.

<li> அங்கு சாதாரண அன்றாட வாழ்வில் ஈடுபடும் மக்கள்

இந்த தகைமை சமாதான காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

<li> அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக கட்டமைப்புகள்

இந்த தகைமையும் வன்னிப்பிரதேசத்தில் மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளது.

<li> பொருளாதார நடவடிக்கைகளை உள்ளேயும் வெளிநாடுகளோடும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கக்கூடிய தகமை. சொந்த நாணயத்தை உருவாக்கி அதை முகாமைப்படுத்துவது.

உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் வன்னி பிரதேசத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டு நிருவகிக்கப்பட்டாலும், ஏற்றுமதி, இறக்குமதி (சிறிலங்கா தவிர்ந்த) வெளிநாடுகளுடன் (தமிழ் வணிகர்களுடன் தானும்), இடம் பெறுவதில்லை. சொந்த நாணயமும் வெளியிடப்படவில்லை. சிறிலங்காவின் நாணயமாற்று கொள்கையிலேயே தமிழீழம் தங்கியுள்ளது.

<li> வேறொரு நாட்டினால் அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தி ஆளமுடியாமை

வன்னிப்பகுதி மட்டுமே இந்த தகைமையை சமாதான காலத்தில்பெற்றுள்ளது.

<li> இன்னெரு நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச (ஜநா) அங்கீகாரத்திற்கும் அங்கத்துவத்திற்கும் முன்மொழியப்பட வேண்டும்.

191 நாடுகளில் ஒன்றைத்தானும் சம்மதிக்க வைக்க முடியும். மற்ற தகைமைகளை பெற்றுக் கொண்டால் இது சாதிக்கப்படக் கூடிய ஒன்று. நம்மில் பலரும் இந்த ஒரு தகைமையிலேயே பெருமளவு கவனத்தை செலுத்துகிறோம். குறிப்பாக பலமான நாடுகள் இதை எமக்கு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். இது மற்ற தகைமைகளுடன் ஒப்பிடும் போது முக்கியமானதல்ல. பலமான நாடுகளை சம்மதிக்க வைப்பதும் கடினம்.
இந்த நிலையில் மேற்படி ஏனைய தகைமைகளை நிறைவு செய்ய என்ன செய்யலாம்?
<ul>
<li> வன்னிப்பகுதியே முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. ஆயினும் அதற்கு கூட, ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு தொடர்புகளுக்கு தேவையான ஒரு துறைமுகமோ, விமானநிலையமோ பாதுகாப்பாக இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் பெரும் நிலப்பரப்பில் அகல கால்வைத்து, தமது பலத்தை எல்லா இடத்திலும் குறைக்காமல், வன்னியை உறுதிப்படுத்த வேண்டும். முல்லைத்தீவு துறைமுகத்தை, எதிரி சாதாரண துறைமுக நடவடிக்கைகளை குழப்பாத அளவுக்கு, சர்வதேச கடற்பரப்பு வரைக்கும், பாதுகாப்பாக கொண்டுவர வேண்டும். இந்த நோக்கங்களுக்கு அமைவாக, தகைமை 1 யை நிறைவு செய்யத்தக்கதாக, தமிழீழ எல்லைகளை மீள வரையறை செய்ய வேண்டும். அதாவது நிச்சயமாக எதிரி கால் வைக்க முடியாத அளவு, முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேசத்தை மட்டுமே, தமிழீழம் என்று வரையறுக்க வேண்டும். இசுரேல் இவ்வாறுதான் யாழ் குடாநாட்டு அளவிலான பிரதேசத்தை, வரையறுத்து ஐ.நா.வின் தகைமை (1) யை நிறைவு செய்தது.

<li> பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ் வணிகர்கள், தமிழீழ உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து விற்கவும், தமிழீழத்துக்கு நேரடியாக, தேவையான பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்யவும், முன்வர வேண்டும். இதை விடுதலைப்புலிகள் ஊக்குவித்து, ஆதரித்து, அதற்கு தேவையாக வசதிகளை, துறைமுக வசதிகள் உட்பட, செய்து தர வேண்டும்.

<li> நாணயமொன்றை தமிழீழத்தில் அறிமுகம் செய்து, சர்வதேச நாணயங்களுடன் அதன் மாற்றத்தை, சந்தைவாய்ப்பின் அடிப்படையில், மிதக்க விடவேண்டும். இவ்வாறு நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், வன்னிப்பகுதியில் இயங்கும் சர்வதேச நிறுவனங்கள், ஐ.நா. உட்பட, இந்த நாணயத்தை, சாதாரண தேவைகளுக்கு தானும், அங்கு பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.சிறிலங்காவின் மதிப்பற்ற நாணயத்தில், தமிழீழம் இனியும் தங்கியிருக்க கூடாது.

<li> 191 ஐ.நா. நாடுகளையும் பற்றி ஆராய்ந்து, அவர்களுக்கு என்ன தேவை, யார் நண்பர், யார் எதிரி, எப்படி அவர்கள் தேவைகளை எமது தேவைகளுடன் ஒப்பிட்டு, எமது தேவைகளை அவர்கள் நிறைவு செய்தால், அவர்கள் தேவைகளை நாம் எப்படி நிறைவு செய்யலாம், என்று ஆராய, சர்வதேச மட்டத்தில் குழுவொன்றை அமைக்க வேண்டும். மேற்படி குழு, இந்த 191 நாடுகளின் மாறிவரும் தேவைகளை தொடர்ச்சியாக ஆராய்ந்து, தக்க சந்தர்ப்பங்களை நழுவ விடாது விரைவாக கைப்பற்றி, எமக்கு சாதகமாக பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.<ul>
Reply
#11
ஜூட் மேலே கூறியவற்றில் எனக்கு 2 ஆவது விடயம் ஏன் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்று விளங்கவில்லை.இதை இலகுவாக புலத்தில செய்யலாம்.அதாவது தமிழீழத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஒரு முத்திரை வைத்து,புலத்தில் உள்ளோர் அந்த முத்திரை உள்ள பொருட்களை மட்டுமே வாங்கும் படி செய்யலாம்.குறிப்பாக எமது மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களை சந்தைப் படுத்தலாம்.இன்று நாம் இந்திய மீனவர்களால் மன்னார் வளை குடாவில் பிடிக்கப் பட்ட மீன்களயே தமிழ் கடைகளில் வாங்குகிறோம்.இதை ஏன் நாம் மாற்றக் கூடாது?
Reply
#12
narathar Wrote:ஜூட் மேலே கூறியவற்றில் எனக்கு 2 ஆவது விடயம் ஏன் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்று விளங்கவில்லை.இதை இலகுவாக புலத்தில செய்யலாம்.அதாவது தமிழீழத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஒரு முத்திரை வைத்து,புலத்தில் உள்ளோர் அந்த முத்திரை உள்ள பொருட்களை மட்டுமே வாங்கும் படி செய்யலாம்.குறிப்பாக எமது மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களை சந்தைப் படுத்தலாம்.இன்று நாம் இந்திய மீனவர்களால் மன்னார் வளை குடாவில் பிடிக்கப் பட்ட மீன்களயே தமிழ் கடைகளில் வாங்குகிறோம்.இதை ஏன் நாம் மாற்றக் கூடாது?

எனக்கு தெரி;ந்த அளவில் தமிழீழ பிரதேசத்திலிருந்து ஏற்றுமதிகள் இன்னும் ஆரம்பமாகவே இல்லை. கனடாவில் விற்கும் மீன்கள் மெக்சிகோ கரிபியன் தீவுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டு விற்கப்படுபவை.

பனம் பொருட்கள் கருப்பனீர் கூட இலங்கையின் தென்பகுதியிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த பனம்பொருட்கள் சிறிலங்கா பனம்பொருள் அபிவிருத்தி சபையால் தென்பகுதியில் வளரும் பனைகளில் இருந்தும் பெறப்படுகின்றன.
Reply
#13
எங்கோ படித்த ஞாபகம் ,இதற்கென ராஜன்(?) கடலுணவு ஏற்றுமதி நிறுவனம் என்று ஒன்று அண்மையில் ஆரம்பிக்கப் பட்டதாக,ஆனால் அதன் செயற்பாடுகள் புலத்தில் தெரியவில்லை.
இங்கே மீன் இறக்குமது மொத்தமாகச் செய்வது நம்மவ்ர்கள் ஆனால் நாம் இந்தியாவிற்கே அன்னியச் செலவாணியை வழங்குகின்றோம்.
Reply
#14
Jude Wrote:
narathar Wrote:ஜூட் மேலே கூறியவற்றில் எனக்கு 2 ஆவது விடயம் ஏன் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்று விளங்கவில்லை.இதை இலகுவாக புலத்தில செய்யலாம்.அதாவது தமிழீழத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஒரு முத்திரை வைத்து,புலத்தில் உள்ளோர் அந்த முத்திரை உள்ள பொருட்களை மட்டுமே வாங்கும் படி செய்யலாம்.குறிப்பாக எமது மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களை சந்தைப் படுத்தலாம்.இன்று நாம் இந்திய மீனவர்களால் மன்னார் வளை குடாவில் பிடிக்கப் பட்ட மீன்களயே தமிழ் கடைகளில் வாங்குகிறோம்.இதை ஏன் நாம் மாற்றக் கூடாது?

எனக்கு தெரி;ந்த அளவில் தமிழீழ பிரதேசத்திலிருந்து ஏற்றுமதிகள் இன்னும் ஆரம்பமாகவே இல்லை. கனடாவில் விற்கும் மீன்கள் மெக்சிகோ கரிபியன் தீவுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டு விற்கப்படுபவை.

பனம் பொருட்கள் கருப்பனீர் கூட இலங்கையின் தென்பகுதியிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த பனம்பொருட்கள் சிறிலங்கா பனம்பொருள் அபிவிருத்தி சபையால் தென்பகுதியில் வளரும் பனைகளில் இருந்தும் பெறப்படுகின்றன.

எனக்கு தெரிந்த அளவில் போனவாரங்களில் தெரிந்த நபர் ஒருவர்.. சங்குப்பிட்டிப்(யாழ்), புத்தளம் பகுதிகளில் இறால் பிடிப்பும் ஏற்றுமதி சம்பந்தமாய் வியாபார ரீதியான தரவுகளுக்காக இலங்கை செண்றார்... அவரை அழைத்த பொருண்மிய மேன்பாட்டு நிறுவனத்தினர்... அவ்வேற்றுமதி சம்பந்தமான எல்லா தரவுகளையும் வழங்கி அவரை தமிழீழப் பகுதியில் தொழில் முதலீட்டுக்கான எப்படியான வசதிகள் செய்து கொடுக்கப்படும் எண்ட விளக்கமும் வழங்கி உள்ளார்கள்...

இப்போ அவருக்குள்ள முக்கிய பிரச்சனை சுண்டிக்குளம், அரியாலை, கௌதாரிமுனை, சங்குபிட்டி, பகுதிகளில் இறால் பிடிப்பவரிடம் இருந்து வாங்கிப் பதப்படுத்துவதற்கான ஒரு இடத்தேர்வும் அதற்கான அரச அனுமதி வாங்கலும் தான்...

இந்த வகையில தமிழீழ பொருண்மியம் தனது செயற்பாட்டை ஆரம்பித்து விட்டதாயே தெரிகிறது.....
::
Reply
#15
äட் மன்னிக்கவும், நான் மொழி பெயர்ப்பின்போது தகமைகளில் 2வது விடயமாக "சாதாரண வாழ்கை" என்று எழுதியது தவறு போலுள்ளது. உண்மையில் அதன் அர்த்தம் ஒரு பகுதியை இராணுவரீதியில் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அங்கே குடியேற்றங்களை மேற்கொண்டுவிட்டு உரிமை கோரமுடியாது என்பதுதான். அந்தவகையில் 2வது தகமை வடக்குக் கிழக்கு தமிழர் தாயக பிரதேசம் என்றரீதியில் நிறைவு செய்யப்பட்டிருக்கு.

3 வது தகமை 1 உம் 5 வதும் பூர்த்தியடையும் போது நிறைவேற்றப்படும். அதற்கு உதாரணம் புலிகளின் கட்டுப்பாடுகளிலுள்ள தென் தமிழீழ பிரதேசங்கள். வன்னியளவிற்கு இன்னும் முழுமையாக நடமுறைப்படுத்தபடவில்லை என்பது உண்மை ஆனால் முன்னேற்றம் நடந்து கொண்டிருக்கு.

நாணயத்தை ஒரு தனிநாட்டிற்கான தகமையாக தற்காலத்தில் பார்ப்பது சரியா? அதுவும் Euro காலத்தில்?

பொருளாதாரரீதில் முதலீடுகள் சந்தைப்படுத்தலிற்கான சந்தர்பங்கள் ஏற்கனேவே முயற்சி செய்யப்படும் ஒன்று. இதற்கு புலம்பெயாந்த மக்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார்கள் (உதாரணமாக TEEDOR, SEDOT). நீங்கள் கூறியது போல் சர்வதேசத்தின் அங்கீகாரம் (எரித்திரியா உதாரணமாக) மாத்திரம் காணாது. ஒரு பிறநாட்டின் அங்கீகாரமும் காணாது (துருக்கியினால் அங்கீகரிக்கப்பட்ட சைப்பிரஸ் தீவின் பகுதி உதாரணமாக). பொருளாதார அரசியல் இராஜதந்திரரீதியல் பலப்படுத்துவதற் சொந்த உழைப்புத்தான் ஒரோவழி.

ஒவ்வொரு அங்கீகாரத்தையும் அந்தந்த நிலை elite club membership ஆகத்தான் பார்க்க வேண்டும். ஒருவரும் அங்கீகாரத்தை தூக்கித்தரமாட்டார்கள். வடகொரியா மாதிரி வெருட்டிப் பெற்றுக்கொள்ள முடியாது. சீனா இந்தியா மாதிரி பரந்தளவில் நகர்வுகளை மேற்கொண்டு தன்னிறைவை ஓரளவிற்கு நிரூப்பிக்கும் போதுதான் உலகம் எம்மை திரும்பிப்பார்க்கும்.
Reply
#16
kurukaalapoovan Wrote:äட் மன்னிக்கவும், நான் மொழி பெயர்ப்பின்போது தகமைகளில் 2வது விடயமாக "சாதாரண வாழ்கை" என்று எழுதியது தவறு போலுள்ளது. உண்மையில் அதன் அர்த்தம் ஒரு பகுதியை இராணுவரீதியில் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அங்கே குடியேற்றங்களை மேற்கொண்டுவிட்டு உரிமை கோரமுடியாது என்பதுதான். அந்தவகையில் 2வது தகமை வடக்குக் கிழக்கு தமிழர் தாயக பிரதேசம் என்றரீதியில் நிறைவு செய்யப்பட்டிருக்கு.

எல்லாத்தகைமைகளும் முதலாவது தகைமையை நிறைவு செய்வதில் தங்கியிருக்கின்றன. முதலாவது தகைமை, வரையறுக்கப்பட்ட எல்லைகளுடன் கூடிய <b> முழுக்கட்டுப்பாட்டில் உள்ள</b> பிரதேசம். இரண்டாது தகைமை <b>அங்கு, அந்த பிரதேசத்தில்</b> சாதாரண வாழ்க்கை வாழும் மக்கள். மாற்றானின் ஊடுருவலில் உள்ள பிரதேசத்தில், மக்கள் சாதாரண வாழ்வு வாழ்வது தற்காலிகமானது. மேலும் ஒரு நாடாக அங்கீகாரம் கோரும் அரசு, மாற்றான் ஊருவலை தடுக்க முடியாத பிரதேசத்தை, முழுக்கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமாக தமது எல்லைக்குள் கோருதல் அங்கீகாரத்தை கடினமாக்கும்.

Thala Wrote:இப்போ அவருக்குள்ள முக்கிய பிரச்சனை சுண்டிக்குளம், அரியாலை, கௌதாரிமுனை, சங்குபிட்டி, பகுதிகளில் இறால் பிடிப்பவரிடம் இருந்து வாங்கிப் பதப்படுத்துவதற்கான ஒரு இடத்தேர்வும் <b> அதற்கான அரச அனுமதி வாங்கலும்</b> தான்...

இந்த வகையில தமிழீழ பொருண்மியம் தனது செயற்பாட்டை ஆரம்பித்து விட்டதாயே தெரிகிறது.....
தமிழீழ இறால் ஏற்றுமதிக்கு சிறிலங்கா அரசின் அனுமதி தேவை என்றால், தமிழீழ அரசின் ஆட்சி வன்மையை நினைத்து பாருங்கள். இந்த நிலை மாற வேண்டும். தமிழீழ அரசு தான் விரும்பியபடி முல்லைத்தீவிலிருந்து ஏற்றுமதி செய்யும் ஆற்றல் பெற்றால்தான், அது தனிஅரசாக செயற்பட முடியும். அவ்வாறான அங்கீகாரத்தையும் பெற முடியும்.

தமிழீழ பிரதேசத்தில் தொழிற்சாலைகளை அமைக்க, சிறிலங்கா அரசு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே அனுமதி வழங்குவதில்லை. இதனால் தான், தமிழர் பலர், தமது தொழிற்சாலைகளை கொழும்பில் அமைக்க வேண்டி ஏற்பட்டது. அப்படி வடகிழக்கில் அமைக்க அனுமதித்தாலும், இயந்திரங்களை வடகிழக்குக்கு கொண்டு செல்ல இருப்பதாக அறிந்து, சுங்கப்பிரிவிலேயே தடுத்து நிறுத்தி விடுவார்கள்.

சிறிலங்கா அரசின் நாணய கொள்கையால் தமிழீழத்தின் பொருளாதாரம் கட்டுப்படுத்தப்படும் நிலையில், தமிழீழம் தன்னாட்சியுள்ள ஒரு தனிநாடாக இயங்க முடியாது. சிறிலங்கா அரசு நாணயத்தின் பெறுமதியை இறக்கினால் தமிழீழ வணிகம் பாதிக்கப்படும். தமிழீழம் வேண்டுமானல் யுூரோவை, அல்லது அமெரிக்க டொலரை தனது நாணயமாக சுயவிருப்பின் படி, தெரிவு செய்யலாம்.

ஆகவே தமிழீழ அரசு நடைமுறைக்கு சாத்தியமாக, தம்மால் முழுமையாக அந்நிய ஊடுருவலில் இருந்து பாதுகாக்கப்படக்கூடிய பிரதேசத்தை தனிநாடாக்கி, அதன் துறைமுகத்தை வலுப்படுத்தி, பிறநாடுகளுடன் சுதந்திரமாக போக்குவரத்தை ஆரம்பித்து, தனது நாணய கொள்கையை தானே கட்டுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இப்படி தனது முழுமையான கட்டுப்பாட்டில், முற்றிலும் சுதந்திரமாக இயங்கி, துரித பொருளாதார வளர்ச்சி காணும் அரசும், நாடும், அங்கிகரிக்கப்படும் சாத்தியம் அதிகம்.

இதற்கு மாறாக, என்றும் போர்க்களமாக, இராணுவங்கள் மாறிமாறி கைப்பற்றும் பிரதேசங்களை கொண்ட நாட்டின் பகுதிகள், முன்னேறவும் முடியாது, மற்ற நாடுகள் அதனை அங்கீகரிக்கவும் போவதில்லை. விடுதiலைப்புலிகளும் தடைசெய்யபட்ட அமைப்பாகவே பார்க்கப்படுவர்.

நாடு சிறியதாக இருந்தால், மின்சார உற்பத்தி, எரிபொருள், வீதிகளை அமைத்து பராமரித்தல், எதிரி ஊடுருவாமல் இராணுவத்தை குவித்து பாதுகாத்தல், போன்றவை சிறப்பாக செய்யப்படலாம். மாணவர்களுக்கு சிறந்த கல்வி வசதி, மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதி என்பவற்றை கூட, ஒரு சிறிய நாடு, பெரிய நாட்டிலும் பார்க்க இலகுவாக செய்து கொடுக்க முடியும். பெரிய நாட்டுக்கு பெருமளவு பணமும் வசதிகளும் தேவை.

சிறிய பிரதேசத்தை பாதுகாப்பதும் இலகுவானது. பொருளாதார வளர்ச்சி காண வைப்பதும் இலகுவானது. மற்ற பிரதேசங்களை இந்த நிலையான பகுதி சிறப்பான வளர்ச்சி கண்ட பிறகு, கவனத்தில் எடுக்கலாம். இப்படியான அணுகுமுறை, மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் நடைமுறையில் வெற்றிதரத்தக்கது.
Reply
#17
நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது "ஜூட்" ஆனால் எதுவானாலும் நாங்கள் தான் செய்ய வேண்டும் எண்ட உங்கட கருத்து ஏற்றுக் கொள்கிறன்....இப்போ எல்லாத்துக்கும் காரணமாய் இருப்பது அமரர் தாரகி அவர்கள் சொன்னது போல சமாதானப் பேச்சு எண்டது தமிழர் முன்னேற்றத்துக்கு தடைக்கல்தான்........... ஆனாலும் அந்த சமாதான காலங்களில் நாங்கள் நிறைய வல்லமைகளை வளர்த்திருக்கிறோம்.... எண்டதையும் ஏற்றுக் கொள்ள வேணும்..... இன்னும் எந்த முன்னேற்றச் செயற்பாடுகலையும் முன்னெடுக்க இன்னுமுன் காலம் கடக்கவில்லை ...

சிங்களவனாகவோ இல்லை சர்வதேசமாகவோ எதையும் எங்களுக்கு தரப்போவதில்லை நாங்கள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்...

ஒரு நாட்டின் முக்கிய அம்சங்களாய் 5 விடயங்கள் சொல்கிறார்கள்.. அதில்

1... சிறப்பான தலைமை
2....அரசியல்/சட்டம்
3.....ராணுவம்/பாதுகாப்பு
4.....புலனாய்வு /
5......நிதி/ முதலீடுகள்/ வருவாய்

அனேகமாக எங்களுக்குப் பிரச்சினயாய் இருப்பது 5 வதாய்ச் சொன்ன நிதி/வருவாய்/முதலீடுகள்... தீர்ப்பது கடினம் தான் ஆனால் எல்லாருமாய் உழைத்தால் முடியாதது அல்ல...
::
Reply
#18
நீங்கள் மேற்குறிப்பிட்ட ஐந்தும் ஒரு நாட்டுக்கு முக்கியமானது என்பது உண்மைதான். ஆனால் இவற்றில் எவை எம்மிடம் நிறைவாக உள்ளன, என்பதில் தான் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது.

1... சிறப்பான தலைமை

நிச்சயமாக சிறப்பான தலைமை உள்ளது. இந்த தலைவரின் வாழ்நாட்களுக்குள் தனிநாடு உருவாகாவிட்டால் பிறகு அது சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கருணாவும், மாத்தையாவும் இதனை விளக்க போதுமான காரணங்கள்.

2....அரசியல்/சட்டம்

பேச்சுவார்த்தை, போர்நிறுத்தம் என்று வந்தபிறகு விடுதலைப்புலிகள் காட்டிய அரசியல் முதிர்ச்சியும், சட்ட அறிவும், தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சட்ட அமுலாக்கலும், ஒரு முதலாம் உலக நாட்டுக்கு நிகரானவை.

3.....ராணுவம்/பாதுகாப்பு

விடுதலைப்புலிகள் சிறந்த அர்ப்பணிப்புள்ள இராணுவம். ஆயினும், இன்றும் ஒரு துறைமுகத்தையாவது முழுமையான கட்டுப்பாட்டுக்குள், சர்வதேச கடற்பரப்பிலிருந்து, வைத்திருக்கும் ஆற்றலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும், முழுமையான எல்லைப்பாதுகாப்பை கொண்டிருக்கும் ஆற்றலையும் அவர்கள் காட்டவில்லை. ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும் பார்க்க, அவர்களுக்கு தொழில்நுட்ப பலம் இதற்கு நிறைய தேவை.

4.....புலனாய்வு

விடுதலைப்புலிகளின் புலனாய்வு சிறந்தது என்ற பெயர் இருக்கிறது. ஆனால், ஒரு மாத்தையாவும், ஒரு கருணாவும், தலைமைக்கு மிகவும் நெருக்கமாக உருவான நிலையும், நிலைகொண்ட காலமும், ஊடுருவித்தாக்குதல் செய்தவர்கள், தளபதிகள் பலரை பலி கொண்ட சம்பவங்களும், புலனாய்வு துறையையே தமிழீழத்தில் இன்று மிகவும் பலவீனமான துறையாக காட்டுகின்றன. இந்த துறை உறுதியாகவும், வேகமும், விவேகமும் உள்ளதாகவும், இருப்பது அத்தியாவசியமானது.

5......நிதி/ முதலீடுகள்/ வருவாய்

சர்வதேச கடன்வசதிகளும், நிதிகளும், அன்பளிப்புகளும், நாட்டின் முழுமையான பொருளாதாரமும், அள்ளி வழங்கிய பணத்தில் யுத்தம் புரிந்த இராணுவத்துக்கு சமமாக ஆயுதங்களும், ஆள்பலமும் கொண்டு, ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்து கொண்டு மோதிய விடுதலைப்புலிகளுக்கு தெரியாத பொருளாதாரமா? இந்த நிலையிலேயே, இவ்வளவுக்கு நிதியும் சேர்த்து, முதலீடுகளும் செய்ய அவர்களால் முடிகிறது என்றால், ஒரு நாடாக இயங்க ஆரம்பித்தவுடன் பொருளாதாரத்துறையில் அவர்கள் மேலும் சிறப்புடன் செயற்படுவார்கள்.

ஆகவே இராணுவ தொழில்நுட்பத்திலும், புலனாய்வில் எல்லாவகையிலும் நிறைய முன்னேற வேண்டும் என்பதே, எனது கருத்து.
Reply
#19
எமது போராட்டத்தை சில வழிகளில் ஒப்பிட்ட முயற்சி
http://www.sangam.org/articles/view2/?uid=1234

google இல வடிவாத் தேடிப்போட்டு மிச்சம் எழுத வாறன். 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#20
ஜூட் Wrote:3.....ராணுவம்/பாதுகாப்பு

விடுதலைப்புலிகள் சிறந்த அர்ப்பணிப்புள்ள இராணுவம். ஆயினும், இன்றும் ஒரு துறைமுகத்தையாவது முழுமையான கட்டுப்பாட்டுக்குள், சர்வதேச கடற்பரப்பிலிருந்து, வைத்திருக்கும் ஆற்றலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும், முழுமையான எல்லைப்பாதுகாப்பை கொண்டிருக்கும் ஆற்றலையும் அவர்கள் காட்டவில்லை. ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும் பார்க்க, அவர்களுக்கு தொழில்நுட்ப பலம் இதற்கு நிறைய தேவை.


ம்ம்... நீங்கள் சொல்வதில் உண்மை ஓரளவு இருந்தாலும்.. ராணுவம்/பாதுகாப்பு விடயத்தில் துறைமுகம் என்பது கட்டுக்குள் வைக்கக் கூடியது அதைக் கைப்பற்றக் கூடிய காலங்களில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பித்தன் என்பதுதான் உண்மை...... ஆனையிரவுச்சமர் முடித்தவர்களால் எதுவும் சாத்தியம்.... முன்னேறித் தாக்குபவர்களுக்கு(வலிந்த தாக்குதல்) எந்த விதமான சாதகமும் இல்லாத வெறும் உப்பு வெளி பதுங்குளி அமைத்து இருப்பவனுக்கு சதகமான ஒரு வெளி.... அதைவிட வெத்திலைக்கேணி, கட்டைக்காடு, கொம்படி, சங்கத்தார்வயல்,பகுதி வெறும் மணலும் சிறு பற்ரைகளும் கொண்ட பிரதேசம் எறிகணைகள் கூட விழும்போது மண்ணில புதைந்து வெடிப்பதால் பெரியதாக்கத்தை கொடுக்காது.. அதில் யக்கச்சிசந்திப் பிரதேசம்தான் பாதுகாப்பான சண்டைக்கு சிறப்பானதாய் விளங்கினது.. அப்படியான பிரதேசத்தையே முழுப்பலம் வாய்ந்த கஜபா 52 படப்பிரிவின் பாதுகாப்பில் இருந்த தளத்தைக் கைப்பற்றியவர்களால் எதுவும் சாத்தியம்...
இதில் மாங்குளம் முதலாய் ஓமந்தை வரை இராணுவத்தை துரத்தியதை சொல்ல வரவில்லை அது புலிகளின் (120மீமீ)எறிகணை வீச்சின் பலம் காட்டப்பட்ட இடம்..(மக்கள் செறிந்து வாழாத பிரதேசம்)
இப்பிடி நிறைய உதாரணம் சொல்லலாம்...

ஆனால் நீங்கள் சொல்வது போல் தொழில்நுட்பம் தேவையானதுதான் ஆனால் அவர்களிடம் இருப்பது வெளியில் தெரிவதில்லை அவர்கள் அதைப் பயன் படுத்தும் வரை... அதுதான் உண்மை..
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)