09-24-2005, 07:42 PM
பொங்கு தமிழ் ஏற்பாடுகள் தீவிரம்
இடையூறு விளைவிக்க படையினர் முயற்சி
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு
யாழ். குடாநாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் நிகழ்விற்கு குடாநாட்டு சமூகம் தயாராகி வருகின்ற போது அதற்கு இடையூறு விளைவிக்க இராணுவ புலனாய்வுப் பிரிவு முற்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
வெள்ளியன்று முகமாலையில் வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவ பிரதிநிதியொருவர் படையினரால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்ட குற்றச்சாட்டை அது எழுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதும் யாழ். மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளதுமான பளைப் பிரதேசத்தில் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்விற்கான மக்களை அணி திரட்டும் பணியில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த விஞ்ஞான பீட மாணவர் ஒருவரே முகமாலையில் வைத்து படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தனது கைப் பையினுள் விடுதலைப் புலிகளது அங்கத்தவர்களது பாவனையிலுள்ளது போன்றதோர் அடையாள இலக்கத்தகடினை குடாநாட்டினுள் எடுத்து வர முற்பட்ட வேளையிலேயே குறித்த மாணவன் தம்மால் பிடிக்கப்பட்டதாக படைத்தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் படையினர் திட்டமிட்டு சோதனை நடவடிக்கையின்போது குறித்த மாணவனின் கைப்பையினுள் இலக்கத் தகடினை போட்டுவிட்டு பின்னர் அதனை கண்டெடுத்ததாக நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மாணவர் அமைப்பு சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தை குறித்த மாணவனை அச்சுறுத்தி ஒப்பம் பெற படையினர் மேற்கொண்ட முயற்சிகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.
http://www.virakesari.lk/VIRA/20050925/index.htm

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>