Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் ஒரு வாழ்க்கைப் பாடம்..!
#1
<img src='http://sooriyan.com/images/stories/AJ/heart.jpg' border='0' alt='user posted image'>

<b>சிறு வயது முதல் காதல் என்பது பற்றி பெற்ரோர் கருத்துக் கொள்வதில் இருந்து அது ஓர் கெட்ட செயல் என்றும், சிறுவயதில் இருந்து நான் காதலித்துவிடக் கூடாது என்ற முடிவுக்கும் வந்திருந்தேன். சிறு வயதில் இருந்து அதனால் தானோ என்னவோ எனக்கு பெண்களைப் பிடிப்பதில்லை. பெண்களைப் பிடித்துக் கொண்டால் காதலித்து விடுவேன் என்ற பயத்தினால் கூட இருந்திருக்கலாம்.</b>

<b>காதலைப்பற்றிய எழுத்தாளர்களின்...</b>
எண்ணகளில் "அது ஓமோன்களின் தூண்டுதலால் வந்தது" என்றோ "இது நிஐக்காதல் தானோ அல்லது Infatuation என்பதோ தெளிவில்லை" என்றோ கூறப்பட்டாலும், எனது அந்த அரும்பு மீசை காலத்து இனிய நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.

நிச்சயமாக அது காதல் தானா என்று இன்றுவரை என்னால் உறுதியாகக் கூறமுடியாமல் இருந்தாலும், அது எனது வாழ்வில் பாரிய திருப்பத்தை, பாரிய தாக்கத்தை, ஏற்படுத்தி விட்டது என்பது உண்மை.

சில உளவியல் நிபுணர்களை பொறுத்தவரை அவர்கள் காதலை காதலாக ஏற்றுக் கொள்கிறார்கள். உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி காதலின் முதல் படி பரீச்சயமே என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றார்கள். ஆனால் பலர் பரீச்சயத்தையே காதலாக கருதி விடுவதாகவும் இதனால் பல தோல்விகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்றும்; குறிப்பிடுகிறார்கள். அவர்கள் கருத்து படி ஒருவர் மீதான பரீச்சயம் அவருடைய அழகிலோ, அல்லது ஒருவரின் குறிப்பிட்ட திறமை காரணமாகவே ஏற்படலாமென்றும் இவ்வாறு ஏற்படுவது காதல் அல்ல என்றும் கூறிப்பிடுகிறார்கள். இவ்வகையான பரீச்சயத்தால் உண்டான நட்பால் அவர்களுக்கு இடையேயான புரிந்துணர்வு வளர்க்கப்படுகிறது என்றும், புரிந்துணர்வின் ஊடாக அவர்கள் தனது நண்பர் தனது வாழ்க்கை துணைக்கு ஏற்றவர் என்று முடிவு செய்கின்ற போது அளவுகடந்த புரிந்துணர்வால் காதல் பிறக்கிறது அங்கு தோல்விகளுக்கோ, இழப்புகளுக்கோ இடமில்லை. என்கிறார்கள். இதனால் நட்பை விட உயர்ந்தாக காதலை கருதுகிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கும் போது அவனும் அவளும் நீண்டநாட்களாக மனம் விட்டு பழகுகின்றபோது அவளுக்கு பிடிக்காதது என்பதற்காக அவனும், அவனுக்கு பிடிக்காதது என்பதற்காக அவளும் பலவற்றை தவிர்கிறார்கள், நீண்ட நாள் பழகியதால் அவர்களால் பிரிவைத் தாங்கமுடியவில்லை. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக உணர்கிறார்கள். ஆனால் காதலைச் சொல்லத் தயங்குகிறார்கள் அல்லது மற்றவர் காதலைச் வெளிப்படுத்தும் வரை காத்திருக்கிறார்கள் என்றும் அங்கேதான் நல்ல காதல் வெளிப்படுகிறது என்றும் கலாநிதி ருத்ரன் போன்ற உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள் அன்றியும் கண்டதும் காதல் சமாச்சாரங்கள் யதார்த்த வாழ்க்கைக்கு சரி வராது என்றும் அவை சமூகத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறதாகவும் உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேலும் புதிய இடத்தில் காணும் அழகான பெண்ணை கண்டு எந்த ஆணுக்கும் காதல் வயப்படுவதில்லை என்றும் கூறுகிறார்கள். மேலும் அவர்களின் கருத்துப் படி மனிதர்கள் அவர்களின் மனதில் ஏற்படுகின்ற சில மீள் பதிவுகளுடாகவே காதல் வயப்படுவதாகவும் கூறுவார்கள். ஆகவேதான் எப்பொழுது தொடங்கம் காதலிக்கிறீர்கள் என்று காதலர்களை கேட்டால், அவர்களால் சரியாக கூற முடியாததாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் முதல் காதலை மட்டுமே நிஜமான காதலாகவும் அதுவே புனிதம் மிக்கதாகவும் கருதுகிறார்கள். இதனால் எழுத்தாளர்களுக்கும் உளவியலாளர்களுக்கு இடையே பல கருத்து முரண்பாடுகள் இருப்பதைக் காண முடிகின்றது.

க.போ.த உயர்தரத்திற்காக சிறிய பாடசாலையிலிருந்து பக்கத்து ஊரிலுள்ள கல்லூரிக்கு சென்ற புதிதில் ஓர் கண்காட்சின் பொழுது ஓர் பெண்ணை சந்திக்க நேர்ந்தது அது 1999 ஐப்பசி 28. அந்த பள்ளிக்காலத்தில் காலத்தில் அவளை எனக்கு பிடித்ததால்தானோ என்னமோ மற்றறைய பெண்களையும் எனக்கு பிடிக்க தொடங்கியது. அத்துடன் அவர்களை மதிக்கவும் தொடங்கினேன். ஏன் அவளை எனக்கு பிடித்துக் கொண்டது? அவளது அந்த துருதுருத்த சின்னஞ்சிறு கரு விழி பார்வை என்னை மயங்கியதால் இருக்கலாம். அல்லது ஒற்றைப்பின்னல் கூந்தலுடன் அவள் அழகாக அங்கு வைக்கப்பட்டிருந்த நளதமயந்தி செய்யுள் கோவையை விபரித்த விதம் எனக்கு பிடித்திருக்கலாம். இதனை உளவியல் நிபுணர்கள் கருத்துப்படி பரீட்சையமாக கருதலாம். ஆனால் அதன் பின் நான் வெறுமை உணர்ந்தாகவே கருதுகிறேன். ஆனால் இதனையே நான் வைரமுத்து அவர்களின் "உனது வயிற்றுனுள் ஏதோ ஓர் உருட்டை உருளுவதாக உணர்வாய்" போன்ற காதல் பற்றிய எண்ணக்கருவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அதனை காதலாக கருதி விட இடமுண்டு.

அந்த புன்னகை பூத்த முகத்தை தினம் தினம் பார்ப்பதற்காக ஏங்கியிருக்கிறேன். அது சிலவேளைகளில் இரண்டு மூன்று நாட்களுக்;கு இயலாது போகவே எனது அண்ணனாக கருதும் ஆண்டவனிடமே வேண்டியிருக்கிறேன். தயவு செய்து நாளைக்காவது அவளை பார்க்க வழி செய் என்று. நான் அவனிடம் பொதுவாக இதனை கேட்க விருப்பாவிட்டாலும் சில சிறிய சந்தோசத்திற்காக கேட்டுத்தான் இருக்கிறேன். ஆவளைக்கண்டதும் எனது முகத்தில் ஓர் பிரகாசம் தெரிந்திருக்கும், நிஜத்தில் நான் அப்போதெல்லாம் சந்தோசப்பட்டிருக்கிறேன் அதற்காக. ஆப்போதெல்லாம் நாங்கள் கோயில்களுக்கு தொண்டர்களாக செல்வதுண்டு அங்கே அவளது எதிர்கால கல்விக்காக ஆண்டவனிடம் விண்ணப்பித்திருக்கிறேன். ஆனாலும் அது நடந்ததாக அறியவில்லை. துனிமையில் பித்துப்பிடித்தவன் போல் இருக்கையில் நண்பர்பளின் "கடி"களுக்கு இலக்காகியிருக்கிறேன். ஆதற்காக நான் அவளைக் காதலித்து விட்டதாகச் சொல்லிவிடவில்லை.

நான் காதலிக்காததால் காதல் தோல்வியின் பாதிப்பை முழுமையாக விளங்காவிட்டாலும் மனிதம், மனித உணர்வுகள் ஆகியவற்றை விளங்கி கொண்ட அடிப்படையில் சிறிதளவாகவேனும் புரிந்து கொள்ள முடியும். இம்முறை உயர்தர பரீட்சை வெளியான பிறகான ஓர் சம்பவம் எனது உள்ளத்தை நிஜமாகவே பாதித்து விட்டன என்றே கூறவேண்டும். அதனுடைய தாக்கம் தான் இக்கட்டுரை என்பதை ஒப்புக் கொள்ளவிருக்கிறது.

எனது வீட்டிற்கு அடுத்த தெருவில் வசித்து வந்த உயர்தரம் படித்து மூன்று பாடங்களில் அதி விசேட திறமை சித்திகளை பெற்ற அந்த சிறிய உள்ளம் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்து நொந்து போனேன். எங்களுடைய பார்வையில் அந்த துர் சம்பவம் தேவையற்றது என்று கருதினாலும் அந்த சிறிய உள்ளத்தை காதல் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதனை அதன் முடிவிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக இம்முடிவை நான் சரியென ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவள் தன் காதலை புனிதமாக கருதியதை நான் நினைத்து பெருமைப்படுகிறேன். இதனை தான் முதல் காதல், சிறு வயது காதல் நிஜமாகவும், புனிதமாகவும் இருப்பதாக எழுத்தாளர் சுஜாதா கருதுகிறார் எனவும் எண்ணத் தோன்றுகின்றது. எமது வாழ்க்கையில் எத்தனையோ காதல் வெற்றிகளை கண்டிருக்கிறோம். அக்காதல்களும் புனிதமாகவும் நிஜமாகவும், இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் சில இடங்களில் ஏற்படுகின்ற இழப்புகளினால் அவை பெருமை பெற்று விட்டதாகவும் கருதுகிறேன். இதனைத்தான் எனது நண்பன் கவிதையில் தாய், தந்தை தடுத்து பிரிந்தகாலம் நூறு வீதம் புனிதமான காதல் என்றானோ

காதல் ஆனாது சுஜாதா போன்ற எழுத்தாளர்களால் Infatuation என்றும் ஓமோன்களின் தூண்டுதல் என்று கருதப்பட்டாலும் ஆண்டவனால் இப் பூமியில் உயிரினங்களின் விருத்திக்காக படைக்கப்பட்டதான காதல் இன்று பல காதலார்களால் தவறாக பயன்பட்டாலும், உள்ளத் தூய்மைக்கு புனிதமான Infatuation க்கு மனிதத்தின் முழுமைக்கு காதல் தேவையானதாகவே கருதுகிறேன்.

நன்றி- சூரியன்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இக்கட்டுரை வரைந்த தமிழ்பித்தனின் உணர்வுகளை ஒத்த காதலிக்கக் கூடாது (அப்பா அம்மா சொல்லியல்ல...!) என்ற சிறுவயது எண்ணம்..எங்களுக்குள்ளும் அதிக காலம் இருந்திருக்கிறது...அதனால் அழகாய் இருந்தும் ரசிக்க மறக்கப்பட்ட பெண்களும் உள்ளனர்..! உண்மையில் அது பெண்களில் இருந்து விலகி இருக்க வைக்கும் என்பதும் உண்மை..! மனதால் தன்னை அறியாமலே காதல் கொண்ட பின் காதலி காட்டும் அன்பும் பண்பும் அவள் மீது நெருக்கத்தையும் மற்றப்பெண்கள் மீது மதிப்பையும் வளர்க்கும் என்பதும் உண்மை...! அத்தோடு உள்ள ஒரே காதலியையும் எப்போது இருந்து காதலிக்கிறீர்கள் என்பதற்கும் தெளிவான திகதி இல்லைத்தான்...எப்ப காதல் முளைச்சது...விடை சரியாக இல்லை...இருந்தாலும் முளைச்சது இப்ப விருட்சமானது என்னவோ உண்மைதான்..! காதலிக்காக கடவுளை வேண்டியது...இப்படி சில காதல் பைத்தியக்காரத்தனம் எல்லோருக்கும் பொது போல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

எங்கே... அந்தக் கட்டுரையாளன் போல...உங்கள் உள்ளத்தில் உள்ளதையும் ஒளிக்காமல் சொல்லுங்களேன்...! நாகரிகமாக காதலுக்கு மரியாதை செய்யவல்லதாக சொல்லுங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
அடா கிளம்பீட்டாங்க. பித்தர்களிற்கு வேலை என்ன. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. காதல் அல்ல infatuation. ஒன்றல்ல ஏராளம், அந்த சின்ன வயதில் அது என்னவென்று புரிவதில்லை, ஆனால் நன்றாக இருக்கும் மனதுக்கு, இவ்வளவுக்கும் வாயால்கூட பேசி இருக்கமாட்டோம், காற்றில் பறப்பது போன்று நீரில் மிதப்பது போன்று ஆனந்தமாக இருக்கும், கற்பனைகள் கொடிகட்டிப்பறக்கும், படிப்பதற்க்கு இது பெரும் இடையூறாய் அமைந்திருக்கும் என்பது உண்மை, அதனால்தான் கூறுகிறார்கள் அந்த வயதில் எந்த பெரிய முடிவுகளையும் எடுக்காதே என்று. இப்போது நினைத்துப்பார்தாலும் அன்நிகழ்வுகள் மனதுக்கு இதமாக இருக்கிறது, எதையோ இழந்து விட்டோமோ என்ற தவிப்பும் இருக்கிறது, அது சரியா? தவறா? என இப்பொதும் எதிர்வு கூற முடியவில்லை, "இழந்ததை நினைத்து வருந்துவதை விட இருப்பதை வைத்து மகிழ்வாக வாழலாம்",
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை அடைய முடியும் என்பது உலகநியதி, நான்மட்டும் விதிவிலக்கா?
.

.
Reply
#5
காதல் என்று மீள் பதிவினால் ஏற்படும் சுகவேதனையை மீண்டும் மீணடும் அலசி ... காதலை தெய்வீகமாகவும் புனிதமாக இருக்காதா என்ற ஏக்கத்தில் வார்த்தைகளை தேடுகிறார்..கட்டுரையாளர்..அவ்வளவு தான்
Reply
#6
stalin Wrote:காதல் என்று மீள் பதிவினால் ஏற்படும் சுகவேதனையை மீண்டும் மீணடும் அலசி ... காதலை தெய்வீகமாகவும் புனிதமாக இருக்காதா என்ற ஏக்கத்தில் வார்த்தைகளை தேடுகிறார்..கட்டுரையாளர்..அவ்வளவு தான்

நான் காதலிக்காததால் காதல் தோல்வியின் பாதிப்பை முழுமையாக விளங்காவிட்டாலும் மனிதம், மனித உணர்வுகள் ஆகியவற்றை விளங்கி கொண்ட அடிப்படையில் சிறிதளவாகவேனும் புரிந்து கொள்ள முடியும். இம்முறை உயர்தர பரீட்சை வெளியான பிறகான ஓர் சம்பவம் எனது உள்ளத்தை நிஜமாகவே பாதித்து விட்டன என்றே கூறவேண்டும். அதனுடைய தாக்கம் தான் இக்கட்டுரை என்பதை ஒப்புக் கொள்ளவிருக்கிறது.


கட்டுரையாளரின் மேலுள்ள கருத்துக்கள் அவரது வயதையும்,அந்த வயதில் ஏற்படும் குழப்பங்களையும் பிரதி பலிக்குறது.இன்னும் அனுபவம் வேணும் காதலைப் பற்றி முழுமயாப் புரிந்துகொள்ள.
Reply
#7
[quote]சிறு வயது முதல் காதல் என்பது பற்றி பெற்ரோர் கருத்துக் கொள்வதில் இருந்து அது ஓர் கெட்ட செயல் என்றும், சிறுவயதில் இருந்து நான் காதலித்துவிடக் கூடாது என்ற முடிவுக்கும் வந்திருந்தேன். சிறு வயதில் இருந்து அதனால் தானோ என்னவோ எனக்கு பெண்களைப் பிடிப்பதில்லை. பெண்களைப் பிடித்துக் கொண்டால் காதலித்து விடுவேன் என்ற பயத்தினால் கூட இருந்திருக்கலாம்



<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#8
tamilini Wrote:அடா கிளம்பீட்டாங்க. பித்தர்களிற்கு வேலை என்ன. :wink:
ஏங்க...அப்படி சொல்லிட்டீங்க மெடம்...காதல் உணர்வு உலக மொழி இல்லைங்களா...அந்த உணர்வுக்கு பொய்யான குஞ்சம்களான தூய்மையான புனிதமான தெய்வீகமான போன்ற இத்யாதிகளை கட்டி அழகு பார்க்கலாம். கவிதை எழுதலாம் தாடி வளர்க்கலாம்...அன்றிலிருந்து இன்று வரை யதார்தர்த்ததை புரியாமல் இருக்கும் வைக்கும் நோக்கில் காவியங்களை துணைக்கிழுத்து காதலின் மகத்துவத்தை சொல்லி வீர பிரதாபம் செய்யலாம்...என்ன உணர்வு என்று தெரியாத நிலையிலிருக்கும் இரண்டும்கெட்டான் வயதிலுள்ளவர்களின் உணர்வுகளுக்கு காதலின் தூய்மையை விளக்கலாம்.....ஏன் நீங்கள் கூட காதல் இல்லையேல்............என்று பல கவிதைகள் வடிக்கலாம்...

ஏன் அப்படி சொல்லிட்டீங்கள் மெடம்...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#9
ஒவ்வொருவருக்கும் அவர்ரவர்மனதை பொறுத்தது காதல் பெண்களுக்கு அது கல்யாணத்துடன் தன் குடும்பம் பிள்ளைகள் என்று மாறிவிடும் ஆண்களூக்கு வரும் பெருமூச்சுகளின் அர்த்தமே அதுதான் சாகும் வரை தொடரும்
inthirajith
Reply
#10
[quote=inthirajith]ஒவ்வொருவருக்கும் அவரவர் மனதை பொறுத்தது காதல்

மனம் தான் உடலையே ஆள்வது... காதலும் மனம் சார்ந்ததுதான்... அதன் புனிதம்.. உண்மை.. நம்பகத்தன்மை புரிந்துணர்வு.. என்பதெல்லாம் அன்பை எதிர்பார்ப்புக்களின் பூர்த்தியை முன்னுறுத்தி நின்று நிலைப்பவை...! ஒருவரின் எண்ணங்கள்.. அவரின் தேவைகள் நோக்கங்கள் கருதி மாறுபடும்...காதலில் அன்பை புரிந்துணர்வை விட்டுக்கொடுப்பை தியாகங்களை அதன் மூலம் வரும் மன மகிழ்ச்சியை தேடுவதே புனிதமானதாக இருக்கும்..! ஒரு போதும் தனி ஒரு மனதில் எழும் உணர்வல்ல காதல்...அது இரு மனம் ஒரே வகை அன்புணர்வுகளால் சங்கமிக்கும் போதே உண்மையாக உணரப்படும்...! உண்மைக் காதலின் முன் வேற எதுவும் மனதில் எழாது... காதலன் முன் காதலி குழந்தையாக அன்பின் உருவமாக.. ஏன் அவளே அவன் வாழ்வாகத் தெரிவாள்...! காதலிக்கும் அப்படித்தான்...காதலை விட காதலியே அதிகம் காதலனுக்காக தன்னை அர்ப்பணிக்கிறாள்...! ஆகவே பெண்களின் காதல் பிள்ளைகுட்டி வரை என்பது சரியல்ல...! அப்படி இருப்பின் அது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பால்... உண்மைக் காதலின் வெளிப்பாடு என்று கருத முடியாது...! அது தேவை கருதிய போலிக் காதலின் வெளிப்பாடாக இருக்கலாம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
Quote:அந்தக் கட்டுரையாளன் போல...உங்கள் உள்ளத்தில் உள்ளதையும் ஒளிக்காமல் சொல்லுங்களேன்
குருவியார் காதலுக்கு எதிரி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எதற்கு மற்றவர்கள் காதலை இங்கே பதியச்சொல்கிறாரென்று புரியவில்லை?
Reply
#12
குருவிகளை நிரந்தர காதல் எதிரி ஆக்கிட்டிங்களா... உண்மைதான் ஆதீபன்... காதல் எதிரியாய் இருந்தது உண்மைதான்...இப்ப அப்படி இல்ல...அதுதான் கேட்டம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
aathipan Wrote:
Quote:அந்தக் கட்டுரையாளன் போல...உங்கள் உள்ளத்தில் உள்ளதையும் ஒளிக்காமல் சொல்லுங்களேன்
குருவியார் காதலுக்கு எதிரி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எதற்கு மற்றவர்கள் காதலை இங்கே பதியச்சொல்கிறாரென்று புரியவில்லை?

ஆதிபன் அண்ணா பாத்தியளா இதைத்தான் காலம் எங்கிறது. அப்ப காதலை கண்றாவி என்டாக்கள் இப்ப விழுந்து விழுந்து துதி பாடீனம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
stalin Wrote:
tamilini Wrote:அடா கிளம்பீட்டாங்க. பித்தர்களிற்கு வேலை என்ன. :wink:
ஏங்க...அப்படி சொல்லிட்டீங்க மெடம்...காதல் உணர்வு உலக மொழி இல்லைங்களா...அந்த உணர்வுக்கு பொய்யான குஞ்சம்களான தூய்மையான புனிதமான தெய்வீகமான போன்ற இத்யாதிகளை கட்டி அழகு பார்க்கலாம். கவிதை எழுதலாம் தாடி வளர்க்கலாம்...அன்றிலிருந்து இன்று வரை யதார்தர்த்ததை புரியாமல் இருக்கும் வைக்கும் நோக்கில் காவியங்களை துணைக்கிழுத்து காதலின் மகத்துவத்தை சொல்லி வீர பிரதாபம் செய்யலாம்...என்ன உணர்வு என்று தெரியாத நிலையிலிருக்கும் இரண்டும்கெட்டான் வயதிலுள்ளவர்களின் உணர்வுகளுக்கு காதலின் தூய்மையை விளக்கலாம்.....ஏன் நீங்கள் கூட காதல் இல்லையேல்............என்று பல கவிதைகள் வடிக்கலாம்...

ஏன் அப்படி சொல்லிட்டீங்கள் மெடம்...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எல்லாம் அநுபவம் தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
அடடா குருவியார் கீரோ ஆகிட்டார் போல இருக்கே சந்தோசம் தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அவர் ரொம்பபேர் மனசை புண்படுத்தி இப்ப திருந்தி இருக்கார். புண்பட்டவங்க என்ன சொல்லுறாங்க தெரியல.
Reply
#16
aathipan Wrote:அடடா குருவியார் கீரோ ஆகிட்டார் போல இருக்கே சந்தோசம் தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அவர் ரொம்பபேர் மனசை புண்படுத்தி இப்ப திருந்தி இருக்கார். புண்பட்டவங்க என்ன சொல்லுறாங்க தெரியல.
அவங்க புண்பட்ட மனச புகைவிட்டு ஆத்துறாங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#17
aathipan Wrote:அடடா குருவியார் கீரோ ஆகிட்டார் போல இருக்கே சந்தோசம் தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அவர் ரொம்பபேர் மனசை புண்படுத்தி இப்ப திருந்தி இருக்கார். புண்பட்டவங்க என்ன சொல்லுறாங்க தெரியல.

குருவிகளா யார் மனத்தையும் புண்படுத்தி இருக்காதுகள்.... அவையா புண்படுத்திக் கொண்டதுக்கு குருவிகள் என்ன செய்ய முடியும்...சொல்லுங்கோ..!

குருவிகள் கீரோ இல்ல ஜீரோ...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
கீரோவோ ஜீரோவோ வாழ்த்துக்கள் குருவி உஙகள் காதல் ஜெயிக்கட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#19
Rasikai Wrote:கீரோவோ ஜீரோவோ வாழ்த்துக்கள் குருவி உஙகள் காதல் ஜெயிக்கட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நானும் வாழ்த்திறன்....வாங்கோ வாங்கோ...வாழ்த்திறவையலெல்லாம் வாழ்த்துங்கோ..தமிழ் உங்களுக்கும் தான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#20
குருவியின் காதல் ஜெயிக்க எனது வாழ்த்துக்கள்.
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)