Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழத்தின் தபால்தலை
#1
இந்த தமிழீழத்தின் தபால்தலையை சூரியன் இணையத்திலிருந்து சுட்டேன் வேறு விபரங்கள் இல்லை

<img src='http://img70.imageshack.us/img70/9711/eelamstamp3xd.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
viyasan Wrote:இந்த தமிழீழத்தின் தபால்தலையை சூரியன் இணையத்திலிருந்து சுட்டேன் வேறு விபரங்கள் இல்லை

<img src='http://img70.imageshack.us/img70/9711/eelamstamp3xd.jpg' border='0' alt='user posted image'>

என்ன புத்தளத்தை கான இல்லை. :? :?
.

.
Reply
#3
வியாசன் அண்ணா இது 1983-85 க்கு இடையில் ஏதோ {உண்மையில் யாரால் என ஞாபகம் வரவில்லை}ஒரு இயக்கத்தல் வெளியிடப்பட்டது, 50 சதம் விலை போட்டிருக்கு.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
ஆனால் பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி வருகின்றதல்லவா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#5
தமிழீழ தபால் சேவையில்லாமல் முத்திரை அடிச்சால் உள்நாட்டு தேவைகளுக்கும் பாவிக்க முடியாதே? வெளிநாட்டு சேவைக்கு பயன்படுத்த அந்தந்த நாடுகள் அங்கீகரிக்க வேணுமல்லவா?

புத்தளம் இல்லாத தமிழீழ சின்னத்தோட வேறையிருக்கு.. :?
Reply
#6
kurukaalapoovan Wrote:தமிழீழ தபால் சேவையில்லாமல் முத்திரை அடிச்சால் உள்நாட்டு தேவைகளுக்கும் பாவிக்க முடியாதே? வெளிநாட்டு சேவைக்கு பயன்படுத்த அந்தந்த நாடுகள் அங்கீகரிக்க வேணுமல்லவா?

புத்தளம் இல்லாத தமிழீழ சின்னத்தோட வேறையிருக்கு.. :?

80களில் EPRLF என்ற அமைப்பு வெளியிட்ட தபால்தலை இது. அந்த நாட்களில் தமிழ் ஈழம் என்பதனை விடுதலைப்புலிகளும், மற்ற அமைப்புகளும் பயன்படுத்த ஈழம் என்ற பதத்தை இந்த அமைப்பும் ஈரோசும் பயன்படுத்தினர். ஈரோசின் ஈழத்தில், மலைநாடும் இணைந்திருந்தது. அப்போது நாங்கள் விடுதலைப்புலிகளிடம் "அவங்கள் மலைநாடும் சேர்த்தெல்லோ பிடிச்சு தரப்போறாங்களாம்" என்று கேட்டால் "அதெல்லாம் இராணுவ ரீதியில் கஷ்டம். இப்படியெல்லாம் படம்கீறி மக்களை குழப்பாமல் பிடிக்கேக்கிள்ள எல்லாத்தைம் அடிச்சு பிடிப்பம்." என்று சொல்லுவார்கள்.

இந்த ஈழம் தபால்தலையுடன் இலங்கையில் கடிதங்கள் அரசாங்க சேவைகளுக்கு கூட போய் வந்திருக்கின்றன. தமிழ் தபால் ஊழியர்கள் கண்டும் காணாதது போல விட, சிங்களவர்கள் விசயம் தெரியாமல் விட்டுவிட்டனர்.
Reply
#7
முத்திரையை முதலில் புளட் அமைப்பினர்தான் 1983 அல்லது 84ல் வெளியிட்டார்கள். ஆனால் மக்கள் சேவைக்கு விடவில்லை. ஆனால் பாடசாலைகளுக்கு கொண்டுவந்து தங்கள் அமைப்புக்கு ஆள் திரட்டும்போது விளம்பரம் செய்தார்கள். மேலே உள்ள தபால்தலை 1986ல் EPRLFவால் வெளியிட்டு யாழ்குடாநாட்டில் தபால் ஊழியரை கட்டாயப்படுத்தி சேவைக்கு விட்டார்கள்.
Reply
#8
kurukaalapoovan Wrote:தமிழீழ தபால் சேவையில்லாமல் முத்திரை அடிச்சால் உள்நாட்டு தேவைகளுக்கும் பாவிக்க முடியாதே? வெளிநாட்டு சேவைக்கு பயன்படுத்த அந்தந்த நாடுகள் அங்கீகரிக்க வேணுமல்லவா?

புத்தளம் இல்லாத தமிழீழ சின்னத்தோட வேறையிருக்கு.. :?

குறுக்ஸ் தாபால் இலங்கைக்கு அனுப்புறது தான் கஸ்ரம்.. விமானம் ஏத்திவிட்டா இங்கிலாந்தில இருந்து உலகமெல்லாம் வினியோகிக்க வசதி இருக்கு.. Royal mail ஓட ஒரு ஒப்பந்தம் போட்டாப் போதும்..

அவர்களே தபாலை சேகரித்து நாடு வாரியாகப் பிரித்து அனுப்பி வைப்பார்கள்.. பக்கத்து நாடான இந்தியாவுக்கு லண்டன் வந்து போக வேண்டிவரலாம்..

ஏன் அனேகமான அமெரிக்க மானிலங்கள் கனடாவுக்கான கடிதங்கலை இங்க அனுப்புகிறார்கள். Royal mail அதை பிரித்து திருப்பிக் கனடாக்கு அனுப்பிவக்கின்றது..

அதை விட TNT, DHL, போண்றன Royal mail லோடு ஒப்பந்தம் செய்துள்ளது அவர்களின் கடிதங்களின் ஒரு பங்கு Royal mail தான் கையாள்கிறது.. அதைப்போல் ஒரு தனியார் நிறுவனமாய் பதிவு செய்தால் போச்சு.
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)