Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடாநாட்டை அச்சுறுத்தும் ஊர்ச்சண்டைகள்
#1
குடாநாட்டை அச்சுறுத்தும் ஊர்ச்சண்டைகள்
சில வாரங்களுக்கு முன்னர் இரு கிராம இளைஞர் குழுக்களிடையே நடந்த

குழு மோதல் பலரின் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் தணிக்கப்பட்ட

போதும் பழிவாங்கும் உணர்வு இரு தரப்பினரிடையேயும் நீறுபூத்த நெருப்பாகவே காணப்பட்டது

தமிழ் தேசிய போராட்டத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்ட "சாதிவெறி" மீண்டும் யாழ். குடாநாட்டில் தலைதூக்கும் அபாயத்தை தற்போது இங்கு நடந்தேறி வரும் வன்முறைச் சம்பவங்களும் ஊர்ச் சண்டைகளும் குழுச் சண்டைகளும் வெளிப்படுத்தி வருகின்றன.

தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தின் முதல் வெற்றியாக கருதப்படக் கூடிய சாதிவெறி ஒழிப்பையே மூலதனமாகக் கொண்டு குடாநாட்டில் குழப்ப நிலைகளை ஏற்படுத்தி குளிர்காய சில தரப்பினர் முயன்று வருகின்றனர்.

இதன் விளைவாகவே தற்போது குடாநாட்டில் சாதிச்சண்டைகளும் கோஷ்டி மோதல்களும் ஊர்ச்சண்டைகளும் வெகுவாகத் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. சிறு சிறு முரண்பாடுகள் கூடஇ பெரும் மோதலாக மாறி உயிர்ப்பலிகள் எடுக்குமளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.

தேசிய இனமான தமிழர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி உரிமைப் போராட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் தந்திரோபாயங்களில் தற்போது இலங்கையரசும் படைத் தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே சதி நடவடிக்கை மூலம் முரண்பாடுகளை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய படைத் தரப்பு அதில் வெற்றியும் கண்டது. முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான மோதல்கள் குறிப்பிட்ட சில காலப் பகுதிகளில் உக்கிரமடைந்தன.

ஆனால்இ நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் எடுத்த உடனடி நடவடிக்கைகளும் முஸ்லிம் மக்களுடனான சந்திப்புகளும் பேச்சுகளும் படைத்தரப்பின் சதியையும் உண்மை நிலையையும் அவர்களுக்கு நன்கு உணர்த்தின.

இதனால்இ படைத்தரப்பின் தந்திரோபாயங்கள் தொடர்ந்தும் வெற்றியளிக்கவில்லை. இதையடுத்துஇ மாற்றுத் திட்டமொன்றைத் தயாரித்த படைத்தரப்பு புலிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது. இதற்குஇ புலிகள் அமைப்பிலிருந்த கருணா என்ற துரோகி துணை போனார். ஆனால்இ படைத்தரப்பால் நினைத்ததை சாதிக்க முடியவில்லை.

புலிகளின் அதிரடி நடவடிக்கைகளும் திட்டமிட்ட வெற்றிகர நகர்வுகளும் புலிகளுக்கிருந்த மக்களின் பேராதரவும் படைத்தரப்பினதும் துரோகி கருணாவினதும் நடவடிக்கைகளை தவிடு பொடியாக்கின. இதையடுத்துஇ கருணா என்ற பெயரைப் பயன்படுத்தி கிழக்கில் படுகொலைகளை இராணுவம் நடத்தத் தொடங்கியது.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் கருணா குழு என்ற போர்வையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள படைத் தரப்புக்கு அவ்வாறானதொரு திட்டத்தை குடாநாட்டில் அரங்கேற்ற முடியவில்லை. இதையடுத்துஇ மாற்று வழி தேடிய அவர்களுக்கு இப்போது ஹசாதி' என்ற ஆயுதம் கிடைத்துள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் செத்தொழிந்த சாதி வெறியை மீண்டும் உயிர்ப்பித்து நடமாடவிடும் நடவடிக்கையில் இறங்கிய படைத்தரப்புக்கு வேலை வெட்டியின்றி வெளிநாட்டுப் பணச் செழிப்புடன் தெருச் சுற்றும் காவாலிக் கூட்டமான இளைஞர் குழுக்கள் ஏவுதல் கருவிகளாகக் கிடைத்துள்ளன.

இவ்வாறான நாசகாரக் கும்பல்களுடன் நட்புறவு பாராட்டும் படைத்தரப்பு இஇக்கும்பல்கள் புரியும் அட்டகாசங்கள்இ குற்றச் செயல்கள் தொடர்பில் எதுவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காது அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமான செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.

குடாநாட்டில் அண்மைக் காலமாக பல கோஷ்டி மோதல்கள்இ ஊர்ச் சண்டைகள் இடம் பெற்று உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட போது கூடஇ படைத்தரப்பு இது குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது வேடிக்கை பார்த்தது. அண்மையில் கொடிகாமத்தில் இடம்பெற்ற ஊர்ச் சண்டைகளில் துப்பாக்கிகள்இ கிரனைட்டுகள் பாவிக்கப்பட்டமை இக் குழுக்களின் பின்னணியில் படைத்தரப்பு இருப்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது.

படைத் தரப்புடன் சேர்ந்தியங்கும் சில தமிழ்க் குழுக்கள் கூடஇ தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமது சொந்த ஊர்களில் சாதி வெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இவ்வாறான சம்பவமொன்று அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியில் நடந்தேறியதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தின் இருப்புக்கு பலமான அத்திபாரமிட்ட சாதிவெறி ஒழிப்பை தகர்த்தெறிந்து மீண்டும் சாதிவெறியைத் தூண்டும் முயற்சியில் படைத் தரப்புடன் இவ்வாறான வன்முறைக் கும்பல்கள் கைகோர்த்துள்ளமை மிகவும் அபாயகரமானது. இதன் விளைவுகள் தமிழ்த் தேசிய போராட்டத்துக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறான நிலையில் யாழ். குடாநாட்டில் அதிகரித்து வரும் குழுச் சண்டைகள் அபாயகரமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. கத்திஇ வாள்இபொல்லுகளுடன் மோதியவர்கள் இன்று கட்டுத் துவக்குஇ இயந்திரத் துப்பாக்கிகள்இ கிரனைட்டுகளைக் கொண்டு மோதுமளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக வலிகாமத்தின் சில பகுதிகளிலும் தென்மராட்சியில் கொடிகாமம் பகுதியிலும் இடம்பெற்ற குழுச் சண்டைகள் நிலைமையின் விபரீதத்தை நன்குணர்த்தியுள்ளன.

கொடிகாமம்இ தவசிக்குளம் மற்றும் குடமியன் கிராமங்களுக்கிடையே சில நாட்களாக தொடர்ந்து நடந்த மோதலுக்கு பல பின்னணிகள் உண்டு. சில காலமாகவே இக்கிராமங்களிடையே குழுச் சண்டைகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் பலர் வாள் வெட்டுகளுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.

இவ்வாறு குழுக்களுக்கிடையே ஆரம்பித்த மோதல்இ பழிவாங்கும் உணர்வாக விஸ்வரூபமெடுத்து ஏட்டிக்குப் போட்டியாக தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன்இ இந்த மோதல் தற்போது கிராமங்களுக்கிடையிலான சாதிச் சண்டையாகவும் உருமாறியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் இரு கிராம இளைஞர் குழுக்களிடையே நடந்த குழு மோதல் பலரின் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் தணிக்கப்பட்ட போதும் பழிவாங்கும் உணர்வு இரு தரப்பினரிடையேயும் நீறு பூத்த நெருப்பாகவே காணப்பட்டது.

இந்நிலைமையில்இ அண்மையில் அப்பகுதியில் இடம்பெற்ற போட்டி நிகழ்வொன்றில் வெற்றியீட்டிய இளைஞனிடம் எதிர்க்கிராமத்தைச் சேர்ந்த அவரின் நண்பிகளான சில மாணவிகள் தமக்கு ஹபார்ட்டி' வைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதையடுத்துஇ குறிப்பிட்ட இளைஞன் அவர்களுக்கு ஐஸ்கிறீம் வேண்டிக் கொடுத்துள்ளார். இச்சமயத்தில் மாணவிகளில் ஒருவரின் சகோதரர் அங்கு நின்றதை இளைஞர் அவதானிக்கவில்லை. ஆனால்இ இதனை அவதானித்துவிட்ட மாணவிஇ இளைஞன் கொடுத்த ஐஸ்கிறீமை வேண்ட மறுத்துள்ளார். இதனால்இ குறிப்பிட்ட இளைஞர் ஐஸ்கிறீமை மாணவியின் சைக்கிள் கூடைக்குள் போட்டு விட்டுச் சென்றுள்ளார்.

தனது சகோதரிக்கு எதிர்க்கிராம இளைஞன் ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுத்ததால் ஆத்திரமுற்ற மாணவியின் சகோதரன் அந்த இளைஞனை துரத்திப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளார். இதையடுத்தேஇ பழி வாங்கும் உணர்வுடன் காத்திருந்த இரு கிராமங்களிடையேயும் மோதல் மூண்டது.

இம் மோதல்களினால் கொடிகாமம் இரு நாட்களாக முற்றாகச் செயலிழந்தது. கடைகள்இ வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அக்கிராமங்களினூடாக வாகனங்களில் சென்றவர்கள் வழி மறிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இக் கிராமங்களுக்கிடையிலான மோதல்கள் ஆங்கிலப் படப் பாணியிலேயே நடத்தப்பட்டதுடன் இயந்திரத் துப்பாக்கிகள்இ கிரனைட்டுகளும் பயன்படுத்தப்பட்டமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மறைந்திருந்து தாக்குதல்இ அதிரடியாகப் புகுந்து தாக்குதல்இ தனிமைப்படுத்தி தாக்குதல்இ இலக்கு வைத்துத் தாக்குதல்இ தாக்குதலின்போது சிறைப்பிடித்தல் போன்ற பல வியூகங்கள் இம் மோதல்களின்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதைவிட குறிப்பிட்ட ஒரு கிராமத்தவர் தமக்கு பலம் சேர்க்கும் முகமாக வடமராட்சி துன்னாலைப் பகுதியிலிருந்து அடியாட்களை இறக்குமதி செய்து எதிர்க் கிராமத்தவர் மீது பாரிய தாக்குதலொன்றை நடத்தினர். ஆனால்இ இதை எதிர்பார்த்து துப்பாக்கிகள் மற்றும் கிரனைட்டுகளுடன் காத்திருந்த எதிர்த்தரப்பு பதிலடி கொடுக்கவே தாக்க வந்தவர்கள் பலத்த காயங்களுடன் தப்பியோடியுள்ளனர்.

இவ்வாறு மோதல்கள் மிக மோசமாக நடந்த போதும் படையினரோஇ பொலிஸாரோ இது விடயத்தில் அதிகம் அக்கறை காட்டவில்லை. அதேவேளைஇ இளைஞர் குழுக்களின் கைகளில் துப்பாக்கிகள்இ கிரனைட்டுகள் போய்ச் சேர்ந்தமையும் இம் மோதல்களின் பின்னணி சக்திகள் குறித்த ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளைஇ பொது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வன்முறைகளைத் தூண்ட எதிரிகளும் எதிரிகளுக்குத் துணைபோகும் துரோகிகளும் முயற்சிப்பதாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

தம்மை தேசிய இனமாக அங்கீகரிக்கக் கோரி போராடும் ஒரு தேசிய இனத்தில் இவ்வாறான குழு மோதல்களை உருவாக்கி அதன் மூலம் அவ்வினத்தை நலிவடையச் செய்யவும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள சிறப்புப் பண்பியல்புகளை சிதறடிக்கவுமே இவ்வாறான குழு மோதல்களை சில தரப்பினர் திட்டமிட்டு அரங்கேற்றுகின்றனர்.

அண்மைக் காலமாக குடாநாட்டின் பல பகுதிகளிலும் குழுச் சண்டைகள்இ வெட்டுக் கொத்துகள்இ ஆட்கடத்தல்கள்இ பெண்களுடனான சேஷ்டைகளென குற்றச் செயல்கள் அதிரித்த போதும் இவற்றைக் கட்டுப்படுத்தும் எவ்விதமான செயற்பாடுகளிலும் பொலிஸாரோஇ படையினரோ ஈடுபடவில்லை. இன்னும் இவற்றை ஊதிப் பெருப்பிப்பவர்களாகவே செயற்பட்டனர்.

சந்திக்கு சந்தி மோட்டார் சைக்கிள்களுடன் குழுக்களாக நிற்கும் இளைஞர்களின் அட்டகாசங்கள்இ அடாவடித்தனங்களை கேட்பார் யாருமில்லை. வீதியில் சென்று வரும் மாணவிகளுடன் அவர்கள் தகாத முறையில் நடந்து கொள்கின்றார்கள். வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாகச் செயற்படுகின்றனர்.

யாரும் இதைத் தட்டிக் கேட்டால் அவர்களின் வீடு புகுந்து அடித்து நொருக்குகின்றார்கள். மாணவிகளைக் கடத்திச் செல்கின்றார்கள்.

இவை குறித்து பொலிஸ் நிலையங்களில் முறையிட்டால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டால் ஹமக்கள் முறையிடுவதில்லை. முறையிட்டால் தானே நடவடிக்கையெடுக்கலாம் என்கிறார்கள். மொத்தத்தில் இக் குழுக்களுக்கு இராணுவத்தினரும் பொலிஸாருமே பின்புலமாக செயற்படுகின்றார்கள்.

இதேவேளை இஇந்த வன்முறைக் கும்பல்கள் தம்மைத் தமிழின உணர்வாளர்களாக காட்டிக் கொள்வதற்காக படையினருக்கெதிரான வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர்.

உதாரணமாகஇ படையினருக்கெதிராக மக்கள் அமைதியாக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில் நுழையும் இந்த வன்முறைக் கும்பல்களே இராணுவத்தினர்இ பொலிஸார் மீதான கல்வீச்சுகள்இ ரயர் எரிப்புகள்இ தாக்குதல்களை மேற்கொண்டு மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் போக்கையே மாற்றி விடுகின்றன.

தாம் இவ்வாறு படையினருக்கெதிராக கலகம் செய்வதன் மூலம் புலிகள் தம்மை அரவணைத்துக் கொள்வார்கள். புலிகளால் தமக்கு எதுவித பிரச்சினையும் ஏற்படாதென இவர்கள் நினைத்தே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால்இ கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டு விடுமென பூனை நினைப்பது போல் இவர்களும் நினைக்கிறார்கள்.

இந்த இளைஞர் குழுக்களின் மோதல்களினால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவங்களுடன் எவ்விதத்திலும் தொடர்புபடாதவர்கள் கூட இவர்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோதல்கள் ஏற்படுவது இயல்பானதொன்று. திடீரென ஏற்படும் வாய்த் தர்க்கம் கூடஇ மோதலாக உருவெடுக்கும். ஆனால்இ இங்குஇ அடிஇதடிஇ மோதல்களுக்கென்றே குழுக்கள் இயங்குவதுதான் உற்று நோக்கப்பட வேண்டியது. தென்பகுதியில் இயங்கும் பாதாளக் குழுக்கள் போல்இ குடாநாட்டிலும் பாதாளக் குழுக்கள் தோன்றி விட்டனவா என்ற அச்ச உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஏனெனில்இ நடக்கும் சம்பவங்கள் அதனையே உறுதிப்படுத்துவதாகவுள்ளன.

பாட்ஷாஇ பத்ரிஇ தீனாஇ கில்லி போன்ற குழுப் பெயர்களில் செயற்படும் இவர்களினாலேயே குடாநாட்டில் கலாசாரத் தன்மை பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. ஆபாசப் படங்கள்இ மதுபாவனைகள்இ பெண் தொடர்புகள் போன்ற கலாசார சீரழிவுகள் இவ்வாறான குழுக்களினாலேயே ஊக்குவிக்கப்படுகின்றன.

குடாநாட்டில் தற்போது அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள்இ வழிப்பறிஇ கடையுடைப்புஇ வீடுடைப்பு போன்ற சம்பவங்களுடன் இந்தக் குழுக்களுக்கு நெருங்கிய தொடர்புகளுண்டு. அண்மையில் நல்லூர் திருவிழா நாட்களில் இடம்பெற்ற தாலி அறுப்புகள்இசங்கிலி அறுப்புகள் கூட இந்த வன்முறைக் குழுக்களினாலேயே மேற்கொள்ளப்பட்டன.

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் இவ்வாறான குழுக்களின் அடாவடித்தனங்கள்இ கலாசாரத்தைப் பேணும் குழுவினரால் இல்லாதொழிக்கப்பட்டிருந்தது. ஆனால்இ அது தற்போது மீண்டும் முளை விட்டு விருட்சமாகியுள்ளது.

வன்முறைச் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரிப்பதற்கு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து விடுதலைப்புலிகள் விலகிச் சென்றமையும் ஒரு காரணமாகவுள்ளது. புலிகள் விலகிச் சென்றதை வாய்ப்பாகப் பயன்படுத்தியே இந்தக் குழுக்கள் அடிதடிகள்இ வன்முறைகளில் ஈடுபடுகின்றன. இவ்வாறானவர்களை ஊக்குவிப்பதில் படைத் தரப்பினரும் முனைப்புடன் செயற்படுகின்றனர்.

ஆண்டாண்டு காலமாக இரத்தம் சிந்திஇ உயிர்கொடுத்து காத்து வந்த தமிழ் கலைஇ கலாசார பண்பாடுகளை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியில் இந்த வன்முறைக் கும்பல்களும் படைத் தரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளன.

எமது உயிரினும் மேலான கலைஇ கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் காக்க வேண்டியது விடுதலைப்புலிகளின் பொறுப்பு மட்டுமல்ல. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரினதும் தலையாய கடமை. எனவேஇ இவ்வாறான வன்முறைக் கும்பல்களைஇ அடிதடிக் கோஷ்டிகளை இல்லாதொழிக்க புலிகளுடன் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

இவ்வாறான வன்முறைக் கும்பல்களின் நடவடிக்கைகளை புலிகளும் மிகத் தீவிரமாக கண்காணித்து வருவதுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளனர். இதன் பின்னரும் வன்முறைக் கும்பல்களின் அட்டகாசங்கள் தொடருமானால்இ அதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

பயிர்கள் நன்றாக வளர வேண்டுமென்றால்இ அதனோடு இணைந்து வளரும் களைகள் களையப்பட வேண்டும். அவ்வாறானதொரு நிலையையே வன்முறைக் கும்பல்கள் குடாநாட்டில் உருவாக்கி வருகின்றன. தெரியாமல் செய்யும் தவறைவிட தெரிந்து கொண்டு செய்யும் தவறு மிகவும் ஆபத்தானது என்பதை இந்த வன்முறைக் கும்பல்கள் விரைவில் உணருவார்கள். அதற்கிடையில்இ திருந்தும் சந்தர்ப்பம் இவர்களுக்கு நிறையவே உண்டு.

நன்றி : தினக்குரல்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
என்ன யாழ்ப்பாணத்தில் இப்படி நடக்கிறதா Confusedhock: Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சற்றுமுன் யாழ்பாணத்தில் ஒருவருடன் பேசியபோது யாழ் நிலவரம் முன்பு போல் இல்லை என்றும் இளைஞர் குழுக்களிடயேயான மோதல்கள் இருப்பதாகவும் அதேசயம் பத்திரிகைகளில் வெளிவருபவை போல் மோசமாக இல்லை என்றும் அவை மிகைப்படுத்தப்பட்டவை என்றும் சொன்னார். :?
எது எப்படியோ யாழ்ப்பாணத்தில் உட்சண்டைகள் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும். அங்கே இருந்து படித்து தான் ஒரு மாணவன் அண்மையில் அகில இலங்கையில் முதலாவதாக வந்தார். அதே இடத்தில் இந்த வம்பு பண்ணுபவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரியது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
படையினருக்கு எதிராக வன்முறையில ஈடுபடுற இளைஞர்களை பொலிஸ்சும் இராணுவம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாக்கினமாமோ? ஆக்கிரமிப்புப்படைகளுக்கு அந்த இளைஞர்கள் தான் குழு மோதலில் ஈடுபடுகினம் எண்டும் தெரியுமாம் ஆன மக்களின் முறைப்பாடுக்கு (ஆணைக்காக) காத்திருக்கினமாமே நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க?

அதோடை இராணுவத்திற்கெதிராக வன்முறையில் ஈடுபடும் இளைங்கர்களை புலிகள் அரவணைத்துக் கொள்வார்கள் என நினைக்கீனமாமோ? அப்படியெண்டா குழு மோதலை தூண்டுறத்துக்கும் அரச புலநாய்வுப்பிரிவு கூலிப்படைகளுக்கும் சம்பந்தம் இருக்காது எண்டமாதிரி சொல்லவருகினமோ?

ஆக்கிரமிப்புப்படைகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி முத்தின பிறகுதான் குழு மோதல்கள் அதிகம் தூண்டப்பட்டுள்ளது போல இருக்கு. இப்ப குழு மோதல்கள் நடக்கோக்க ஆக்கிரமிப்பு படைகள் எந்தவித எதிர்ப்புமின்றி இருப்பதாகவேல்லே இருக்கிறது.

தினக்குரலில வாறதை வாசிச்சால் ஒரே குளப்பமாய் இருக்கு. யாருக்கும் கொஞ்சம் விளங்கினால் எழுதுங்கோ.
http://www.tamilnatham.com/articles/taraki...ari20041105.htm
Reply
#4
இல்லை குருக்....

ஆயுதப் போராட்டத்தை மழுங்கடிக்க.. சில வேலைகள் புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிடலாம்.. சும்மா சொன்னால் சிரிப்பீங்கள். எனக்குத் தெரியும்.. விளக்கமாகச் சொல்லுறன்..
:::::::::::::: :::::::::::::::
Reply
#5
இன சாதி மோதல்கள் தூண்டப் படுவது ஒரு பிரித்தாளுகையின் ஒரு தத்துவம்தான்.. விடுதலை பாதையில் இருந்து இளைஞர்களை இலகுவாக திசைதிருப்பி விடலாம்தான்.... மக்களைத் தட்டிக்கேக்கப் புலிகள் போவார்களாயின் சாதிகளின் கோபத்தை புலிகள் மேல் திருப்புவதுகூட சாத்தியம்... கவனமாய் கையாளப் படவேண்டும்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#6
பிரித்தாளும் யுக்தி விளங்குது அகிலன்.

எனக்கு விளங்காதது தினகுரலின் நிலைப்பாடு? அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கே.
Reply
#7
புலம் பெயர் நாடுகளில் ஊர்களின் பெயரில் சங்கங்கள் நடாத்துபவர்களுக்கும் இந்த செய்தி பொருந்தும்.
நாட்டில் நடப்பது போன்று இங்கும் இப்படி எல்லோரும் சங்கம் தொடங்கினால் இப்படியான கோஸ்டி மோதல்கள் வரலாம். தமிழ்தேசியம் என்று இருக்காமல் ஏன் இந்த வேறுபாடுகள்.?
vasan
Reply
#8
உதுவந்து புலத்தில இருக்கிறவை ஒருதரை ஒருதர் பொன்னாடை போர்த்தி கொளரவிச்சு மாறி மாறி இலவசப் பேப்பரில போட்டு தம்பட்டமடிக்க தொடங்கி இப்ப எங்கையே வந்து நிக்குது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)