Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திராவிடக் கட்டிடக் கலை - தமிழரின் பாரிய பங்களிப்பு
#1
<b>நாங்கள், ஈழத்தமிழர்களும் இந்தக் கட்டிடக் கலையினதும், எங்களின் தமிழ் முன்னோர்களினதும் வாரிசுகள். நிகழ்காலம் நன்றாக இல்லை, அதற்காக கடந்த காலப் பெருமைகளை மறக்க வேண்டுமா? இவற்றைப் பாதுகாக்க வேண்டியதும், அவற்றைக் களங்கப் படுத்துவோருக்கெதிராகக் குரலெழுப்ப வேண்டியதும், தமிழ்ரென்ற முறையில் எங்களின் கடமையல்லவா?</b>



<b>திராவிடக் கட்டிடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அவ்வக்காலங்களில் முதன்மைபெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் பேர்சி பிறவுன் என்பார் பின்வருமாறு திராவிடக் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார்.

பல்லவர் காலம் - (கி.பி 600 - கி.பி 900), சோழர் காலம் - (கி.பி 900 - கி.பி 1150), பாண்டியர் காலம் - (கி.பி 1100 - கி.பி 1350]], விஜயநகரக் காலம் - (கி.பி 1350 - கி.பி 1565), நாயக்கர் காலம் - (கி.பி 1600 - )

<img src='http://upload.wikimedia.org/wikipedia/ta/2/23/Mahapali_rath_small.png' border='0' alt='user posted image'>
ஆரம்பத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரை கோயில்களை அமைத்தனர். அத்துடன் பாறைகளை வெளிப்புறத்தில் செதுக்கி ஒற்றைக்கல் கோயில்களையும் அமைத்தனர். பின்னர் கற்களைப் பயன்படுத்திக் கட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, திருக்கழுங்குன்றம், தளவானூர், பல்லாவரம், நாமக்கல் ஆகியவை உட்படப் பல இடங்களில் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் காணலாம். மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற "பஞ்ச பாண்டவர் ரதங்கள்" என அழைக்கப்படும் கோயில்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கியெடுக்கப்பட்டவையாகும். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்பனவும் புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் பல்லவர்களின் கட்டுமானக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன் அவை அளவிலும் சிறியவையாக உள்ளன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், நர்த்தாமலையில் உள்ள விஜயாலயன் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர கடம்பர்மலை, குளத்தூர், [கண்ணனூர்], கலியபட்டி, [[திருப்பூர்], பனங்குடி போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான சிறீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது.

இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் கோயில்கள் அனைத்தும் முமையாகக் கருங்கற்களினால் ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும், அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

<img src='http://www.tamilnation.org/images/religion/temple/thanjavur8.jpg' border='0' alt='user posted image'>
தஞ்சை பிருஹதீஸ்வரர் கோயில், சோழர் காலக்
கட்டிடக்கலையின் முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டு

பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இராஜராஜ சோழன் பட்டத்துக்கு வந்தபின்னர் சோழப் பேரரசின் வலிமை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் வெளிப்பாடாக இவன் காலத்திலும், இவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றுள் கி.பி 1003 ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும் பிருஹதீஸ்வரர் கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்படும் இக் கோயில் இந்தியாவில் கட்டப்பட்ட எந்தக் கோயிலிலும் அளவில் பெரியது எனக் கருதப்படுகின்றது. 90 அடி அகலம், 90 அடி நீளமுடைய கருவறைக்கு மேல் 190 அடியும், நிலத்திலிருந்து 210 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது இக் கோயில்.

<img src='http://www.cyberfocusindia.com/img2-2.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://photos1.blogger.com/blogger/1972/854/1600/Periakovil1.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://photos1.blogger.com/blogger/1972/854/400/peria%20%26%20nandhi.jpg' border='0' alt='user posted image'>
pictures to show the comparison of the size of the magnificent masterpiece of all times, the Brahadeeshwara Temple

There are 8 such nandhis atop the Cupola, just compare the size with the person sitting nearby. Each such nandhi is carved out of a single rock.

<img src='http://photos1.blogger.com/blogger/1972/854/400/PeriyaKoil-Base.jpg' border='0' alt='user posted image'>
[b]The base of the Periya Kovil, just compare the size of the Vimanam (Tower) with the people standing at the base. the view is from the behind of the Temple Vimana</b>



<b>Reasons for inscription on the World Heritage List and more info from Unesco </b>"

Criterion (i): The three Chola temples of Southern India represent an outstanding creative achievement in the architectural conception of the pure form of <b>the dravida type of temple.</b>

Criterion (ii): The Brihadisvara Temple at Thanjavur became the first great example of the Chola temples, followed by a development of which the other two properties also bear witness.

Criterion (iii): <b>The three Great Chola Temples are an exceptional and the most outstanding testimony to the development of the architecture of the Chola Empire and the Tamil civilisation in Southern India</b>.


<img src='http://img35.imageshack.us/img35/6554/gangaikonda0wv.th.jpg' border='0' alt='user posted image'>
<b>இராஜேந்திர சோழனுக்குச்
சிவபெருமான் முடிசூடும் காட்சி.
ரோமிலுள்ள மைக்கல் ஆஞ்சலோவின்,
கடவுள் ஆதாமைத் தொடும் ஓவியத்துக்கு
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு
முன்பே ஓரு தமிழ்ச் சிற்பியின் கனவு.</b>

<span style='font-size:17pt;line-height:100%'>படத்தினை சிறியதாக்கி போட்டுள்ளேன்..
பெரியதாக பார்க்க படத்தின் மேல் CLICK செய்யுங்கள்-இராவணன்</span>

<img src='http://img331.imageshack.us/img331/654/gcpuram14zj.th.gif' border='0' alt='user posted image'>

<b>கங்கை கொண்ட சோழபுரக் கோபுரம்</b>

இதைத் தொடர்ந்து பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இராந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்டதே கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள கோயில். இதன் விமானம் 150 அடி உயரமுள்ளது. தான் பெற்ற போர் வெற்றிகளுக்கான சின்னமாகத் தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பைப் பின்பற்றிக் கட்டப்பட்டது இக் கோயில். கம்பீரமும் ஆண்மைப் பொலிவும் கொண்ட தஞ்சைக் கோயிலுடன் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலை ஒப்பிடமுடியாதெனினும், இங்கே அமைந்துள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் சோழப்பேரரசின் உச்சகட்ட வலிமையை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தொடரும்.....................
Reply
#2
வாவ்...நல்ல நல்ல தகவல்கள் எல்லாம் தருகின்றீர்கள் ப்hPத்தி...தொடர்ந்து எழுதுங்கள்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#3
<b>ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவி நாச்சியரால் கட்டுவிக்கப் பட்ட தாராசுரம்</b>


<img src='http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/images/out5.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/images/gopuram/gop7.jpg' border='0' alt='user posted image'>

<b>Full view of Darasuram Airavatesvara Temple</b>


<img src='http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/images/gopuram/gop11.jpg' border='0' alt='user posted image'>

<b>Vimana (South east) and south entrance to the Karpagraham</b>



<img src='http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/images/gopuram/gop16.jpg' border='0' alt='user posted image'>

<b>Inner gopuram from the North side corridor of the temple</b>

<img src='http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/images/gopuram/gop17.jpg' border='0' alt='user posted image'>

<b>Vimana (North east) from the North east corner</b>

<img src='http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/images/gopuram/gop4.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)