09-12-2005, 12:35 PM
கோடம்பாக்கமும் குத்துப்பாட்டும் இப்போதைய ட்ரெண்டுக்கு தங்கர்பச்சானும், திரைத் தகராறும் போல் இரண்டறக் கலந்துவிட்டன. "சரிகமபதநிச' சங்கீதம் தத்தளிக்கும் ஸ்டுடியோக்களில், சைதாப்பேட்டை "புனித' பாடல்கள் செம குத்தாக எப்படி உருவாகின்றன என்கிற தெய்வீகக் காட்சியை இப்போது உங்கள் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள் இசையமைப்பாளர் "இசை இம்சை' ரா.ரா.ராக்கப்ஸ், பாடலாசிரியர் "கவிக் குத்து' பேட்டைப்ரியன், "இயக்குநர் நரகம்' ஸீன் சிங்காரம், பாடகர் பாவ்பாவ்ஜி கபூர்.
தமிழ் இன்பம் பருக வா மாமூ!
டைரக்டர்: பாடகரு வந்துட்டாரு, மியூசிக் டைரக்டர் வந்துட்டாரு, எல்லாம் ரெடியா இருக்கு. கவிஞரே கலீஜா "கப்' "கப்' புன்னு நாலு வரியை எடுத்து விடுங்க. இன்னிக்கு இந்த சாங்கை தீர்த்துக் கட்டிடணும்.
கவி: அவ்ளோதானே...? அசத்திப்புடலாம். சிச்சுவேஷனைச் சொல்லுங்க...
டைரக்டர்: என்ன இப்படி "டப்'ன்னு கேட்டுப்புட்டீங்க..இன்னும் கதையையே யோசிக்கல; அதுக்குள்ள சிச்சுவேஷனுக்கு நான் எங்க போறது. எதையாவது எழுதுங்க. அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்.
இசை: சிச்சுவேஷன் தான, நான் சொல்லுறேன். ஹீரோ ரோட்டுல மிட்நைட்டுல போறான். அப்ப கீழக்கெடக்குற ஒரு காலி டின்னை உதைக்கிறான். அது பறந்து நிலாவைப் போயி தொட்டுட்டு கீழ ஒரு பொண்ணு உருவத்துல வந்து விழுது. அப்புறம் குரூப்பா ஒரு பஸ்ல இருந்து இளசுங்க கூட்டம் ஒண்ணு எறங்குது. எல்லாரும் சேர்ந்து குத்தாட்டம் போடுறாங்க...எப்படி!
பாடகர்: வாரே வாவ்! அச்சா சிச்சுவேஷன். நீங்க நல்லா எழுதுது! நான் பக்காவாப் பாடுது!
டைரக்டர்: கலக்கிப்புட்டீங்க! இதுல இருந்தே கதைய ஃபுல்லா டெவலப் பண்ணிருவேன். ம், வார்த்தைகளை மானாவாரியாப் போட்டுத் தாக்குங்க!
இசை: ஆமாமா, ஆரம்பிக்குற பல்லவியே பல்வலி ரேஞ்சுல தாக்கணும். பட்டையக் கௌப்புங்க!
கவி: (தன் மோவாயில் மொத்த விரல்களையும் வைத்துச் சிந்திக்கத் தொடங்குகிறார்.) ஆங்...வந்துடுச்சி...வந்துடுச்சி...(பாத்ரூமுக்குள் போய் விட்டு 10 நிமிடம் கழித்துத் திரும்ப வருகிறார்.)
டைரக்டர்: ஏதாவது வந்துச்சா?
கவி: அய்யோ...அய்யோ...என்னமா வந்திருக்கு தெரியுமா! நான் வார்த்தைகளைத்தான் சொல்லுறேன். எனக்கு புல்லரிச்சுக்கிட்டே இருக்கு. இந்தப் பாட்டுத்தான் இன்னும் ஆறேழு மாசத்துக்கு தமிழ்நாட்டோட தேசிய கீதமா தெருத்தெருவா அலறப் போகுது!
பாடகர்: அச்சா! சொல்லுங்கோ, என் காது அரிக்குது!
கவி: "வா வா வா பால்கோவா!
தா தா தா வாங்கித் தா!
டைரக்டர்: வாரே வா!
கவி: "மா மா மா உப்புமா!
தா தா தா கிண்டித் தா!
இசை: ஏவ்!
கவி: உன் வாய் கால்வாய்!
என் வாய் செவ்வாய்!
செவ்வாயில் கால்வாயை வெட்டப் போறேன்!
உன் கை உடுக்கை!
என் கை உலக்கை!
உலக்கையால் உடுக்கையத் தட்டப்போறேன்!'
டைரக்டர்: மேல போ வாத்யாரே!
கவி: ஆப்பம் தோசை அப்பள வடை!
கிடைக்குமிடம் ஆயாக் கடை!
இசை: சூப்பரு..இந்தப் பல்லவி முடியுற இடத்துல வாய்க்குள்ள நுழையாத வார்த்தை ரெண்டைப் போட்டா சாங் பத்திக்கும்.
கவி: அவ்ளோதான. இந்தா வெச்சிக்கோங்க!
"ஆப்பம் தோசை அப்பள வடை!
கிடைக்குமிடம் ஆயாக் கடை!
ப்புர்றாங்கோ...ப்புர்றாங்கோ!
கர்ச்சீப்பு த்தர்றாங்கோ!
டைரக்டர்: ஆஹா...கவித! கவித! அப்படியே அதே ஸ்பீடுல சரணத்தையும் சாகடிங்க!
பாடகர்: ஆமா...சென்டமில் வேர்ட்ஸ் நீங்க சர்னத்துல எழுதுது. நான் நல்லாப் பாடுது!
இசை: ஆமா, இந்தச் சரணத்துல ஆழமா ஒரு மெúஸஜ் வைக்கணும்.
கவி: அம்புட்டுத்தானே...பின்னிப் பெடலெடுத்துடுறேன்!
"விரலு அனுப்பும் எஸ்.எம்.எஸ்!
குரலு வந்தா வி.எம்.எஸ்!
நான் பாட்டுப் பாடுற டி.எம்.எஸ்!
நீ ரோட்டுல போற பிரேக் டவுன் பஸ்!
இசை: அப்படித்தான்..அப்படித்தான்..அப்படியே டாப் கியர்ல போட்டுத் தூக்குங்க!
கவி: "செந்தமிழு தேன் மொழி!
கண்ணம்மா பேட்டைக்கு இதுதான் வழி!
அப்பால வா!
ஆட்டம் க்ளோஸ்ன்னா
ஆட்டத்தோட வா!
டிஷ்யூம் குத்துச் சத்தம்!
வேர்க்கடலைத் தின்னாப் பித்தம்!
டைரக்டர்: காதெல்லாம் கதறுது! பேச முடியாம உதடெல்லாம் உதறுது! ஐயா...இதே வேகத்துல ரெண்டாவது சரணத்தையும் எடுத்து வுடுங்க! இதுல லவ் ஃபீலிங் கொஞ்சம் தூக்கலா இருக்கணும்!
கவி: லவ்வுதான, இந்தா ஜிவ்வுன்னு கேளுங்க!
மூக்கடைச்சா போடு விக்ஸ்!
பந்து கிடைச்சா அடி சிக்ஸ்!
ஃபிகரு போனா வுடு லுக்ஸ்!
நீயும் நானும் இன்ஸ்டண்ட் மிக்ஸ்!
பாடகர்: எனக்கு கண்ணுல தண்ணி வர்து! மேல சொல்லுங்கோ ஜி!
கவி: "உன் முழி திருட்டு முழி!
சென்ட்ரல்ல கிடைக்கும் கேப்பைக் களி!
தப்பாம வா!
தப்புப் பண்ணிட்டு வா!
தப்புத் தப்பாத்தான்
கம்பி எண்ண வா!
லப்பு டப்பு ஹார்ட்டு சத்தம்!
லிப்பும் லிப்பும் சேர்ந்தா முத்தம்!
இசை: சூப்பரு...எனக்கு அப்படியே செவத்துல முட்டி முட்டி சந்தோஷமா சிரிக்கணும் போல இருக்கு! என் நரம்புகுள்ள அப்படியே மெட்டு தாண்டவமாடுது.
டைரக்டர்: வுடாதீங்க! பிடிச்சு இழுங்க! நீங்க தட்டுற மெட்டுல அவனவன் காது பஞ்சராகி அலையணும்! ஆரம்பிங்க!
(அங்கே ஓர் இசைக் கூவம் ஓடத் தொடங்குகிறது!)
Thanks
inamani

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
:wink: <!--emo&