09-17-2005, 09:14 AM
யாழ் எங்கு போகிறது.???? நான் முன்பு செய்ததை இப்ப பலர் செய்யினம்போல கிடக்கு.
|
யாழ்
|
|
09-17-2005, 09:14 AM
யாழ் எங்கு போகிறது.???? நான் முன்பு செய்ததை இப்ப பலர் செய்யினம்போல கிடக்கு.
09-17-2005, 09:18 AM
ஹமலையாள மாந்திரீகம்' என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகள்?
கொக்குவில் பொற்பதி வீதியில் ஹமலையாள மாந்திரீகம் என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் வீடொன்று நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்டதுடன் அங்கிருந்த ஆட்டோக்கள்இ மோட்டார் சைக்கிள்களும் பெருமளவு உடைமைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. பொற்பதி வீதி உடையார் ஒழுங்கையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்குப் பின்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது: வவுனியா குருமன்காட்டைச் சேர்ந்த கே.எஸ்.குமாரசாமி (அப்பன்) என்பவர் கடந்த சில வாரங்களாக உடையார் ஒழுங்கையிலுள்ள மிகப் பெரிய ஆடம்பர வீடொன்றை வாடகைக்கமர்த்தி மலையாள மாந்திரீகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். உள்ளூர் பத்திரிகைகள் மூலம் செய்யப்படும் விளம்பரங்களால் அங்கு பலரும் வந்து சென்ற போதும் அங்கு இரவு நேரத்தில் வருவோர்இ போவோர் விடயத்தில் மர்மம் நிலவியதாகவும் அங்கு நடைபெறும் செயல்கள் மர்மமாயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி இந்த வீட்டின் மீது சிறு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றதுடன் மாந்திரீகருக்கு இளைஞர்கள் சிலர் கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். கலாசாரச் சீரழிவில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சமூக விரோதச் செயலில் ஈடுபட வேண்டாமெனவும் எச்சரிக்கப்பட்டபோதும் அதன் பின்பும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் இவர் தொடர்ந்தும் தனது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இரு ஆட்டோக்கள் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களிலும் வேறு வாகனங்களிலும் இங்கு பல பெண்கள் உட்படப்பலர் வந்துள்ளனர். இவ்வேளையில் மாந்திரீகரின் ஆடம்பர வீட்டினுள் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொல்லுகள் தடிகள் இரும்புக் கம்பிகளுடன் நுழைந்து வாசல் கேற் பெயர்ப்பலகைகளை அடித்து நொருக்கியவாறு வீட்டினுள் நுழைந்துள்ளனர். வீட்டு முன்புறக் கதவுகள் ஜன்னல்கள் அவற்றின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்படவே நிலைமையை உணர்ந்த மாந்திரீகர்இ பின்புறக் கதவால் தப்பியோடியுள்ளார். இந்த ஆடம்பர வீட்டினுள் பல அறைகள் இருந்துள்ளன. அவற்றினுள் பல நவீன கட்டில்கள்இ குஷன் மெத்தைகளுடனிருந்ததுடன் ஒவ்வொரு அறைகளினுள்ளும் பெறுமதி மிக்க அலங்காரப் பொருட்களும் ஆடம்பரப் பொருட்களும் தொலைக்காட்சிப் பெட்டிகளும்இ மின் விசிறிகளும் பெருமளவு தளபாடங்களும் பெருமளவு வெளிநாட்டு குடி வகைகளும் பெருமளவு மருந்து வகைகள் (குளிசைகள்) பெண்களின் பெருமளவு ஆடைகளும் பெறுமதிமிக்க நவீன அலங்காரப் பொருட்களும் இருந்துள்ளன. வீட்டினுள் நுழைந்த இளைஞர் கோஷ்டியொன்று இவை அனைத்தையும் ஒன்றுவிடாது அடித்து நொருக்கி சுக்கு நூறாக்கியதுடன் அனைத்தையும் இழுத்து தீவைத்துக் கொளுத்தியது. இதேநேரம்இ வீட்டின் வெளியே தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அங்கு நின்ற இரு ஆட்டோக்களையும் இரு மோட்டார் சைக்கிள்களையும்இ சைக்கிள்களையும் அடித்து நொருக்கி தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் வீட்டினுள்ளிருந்த பெறுமதியான பெருமளவு பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகின. ஆட்டோக்களும் மோட்டார் சைக்கிள்களும் சைக்கிள்களும் உருத்தெரியாது எரிந்து சாம்பலாகின. வீட்டின் ஒரு அறையினுள் ஒரே நேரத்தில் பெருமளவானோருக்கு உணவு வகைகளைத் தயாரிக்கக் கூடிய பெருமளவு பாரிய சமையல் பாத்திரங்களும் இருந்துள்ளன. அவையும் இந்த இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்டு முற்றாகச் சேதமாக்கப்பட்டன. அதே நேரம்இ அரிசி மூடைகள்இ மா மூடைகள்இ சீனி மூடைகள் பலவும் மரக்கறி வகைகள் உட்பட பெருமளவு உணவுப் பொருட்களும் இருந்துள்ளன. இவையும் பின்னர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டன. வீட்டுக் கூரை ஓடுகளும்இ சீற்களும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளன. மாந்திரீகர் பின்புறக் கதவால் தப்பியோடிய போதுஇ அவருடன் ஆண்கள்இ பெண்களும் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாந்திரீகமென்ற பெயரில் இங்கு சட்ட விரோத நடவடிக்கைகள் பல இடம்பெற்று வந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதேநேரம்இ இங்கிருந்து தப்பியோடிய மாந்திரீகர் தலைமறைவாகியுள்ளார். நன்றி தினக்குரல் பிரதான செய்தி.
09-17-2005, 09:20 AM
09-17-2005, 09:34 AM
இது யாரோ பப்புக்கு போறாக்களின்ட்ட வேலயாத்தான் இருக்கும்,ஒரு சமயச் சேவை செய்யிற பெரியவர் இப்படி எல்லாம் செய்வாரோ?சூடு பட்ட மற்றவரின்ட லீலா வினோதங்கள் எப்ப வரப் போகுது?இல்லாட்டி எங்கட சமயக் குரவர் மார் அந்த செய்தியையும் தணிக்கை செய்து போடிவினம்.இது மந்திரீகர் தானே அது பூசாரி அல்லோ?
09-17-2005, 09:37 AM
narathar Wrote:இது யாரோ பப்புக்கு போறாக்களின்ட்ட வேலயாத்தான் இருக்கும்,ஒரு சமயச் சேவை செய்யிற பெரியவர் இப்படி எல்லாம் செய்வாரோ?சூடு பட்ட மற்றவரின்ட லீலா வினோதங்கள் எப்ப வரப் போகுது?இல்லாட்டி எங்கட சமயக் குரவர் மார் அந்த செய்தியையும் தணிக்கை செய்து போடிவினம்.இது மந்திரீகர் தானே அது பூசாரி அல்லோ? நாரதா! உதுவும் சமயத்தொண்டுதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
09-17-2005, 09:43 AM
Quote:ஒரு சமயச் சேவை செய்யிற பெரியவர் இப்படி எல்லாம் செய்வாரோ?ஜயோ நாரதா இது சமய சேவையில்லை சமூக சேவை யாக்கும் இதுக்கு சாமியார்கள்தான் பிரபல்யம் (பிரேமானந்தாவும் இலங்கையைச் சேர்ந்தவர்தானே...)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
09-17-2005, 10:05 AM
சிலர் இதுதான் சாட்டு என்று ஆட்டுக்க மாட்டையும் மாட்டுக்க ஆட்டையும் கலந்து பிசினஸ் பேசிட்டு இருக்கினம்...!
அடிச்சவனுக்கு தெரியுது எங்க அடிக்க வேணும் என்று...அவனை பாராட்டினால் தகும்..! மாந்திரி வந்தானாம்...மலையாளத்தில இருந்து......எங்கட பத்திரிகையே விளம்பரமும் செய்திச்சாம்...நாங்க போனமாம்...இப்ப இப்படி என்ற உடன...ஐயோ மாந்திரி வந்திட்டான்...இப்படி செய்திட்டான்...எனி புரட்சி வெடிக்கனும் எண்டுங்கோ...??! எந்தனை காலம் தான் ஏமாத்தப் போறீங்களோ...இப்படித்தான் காலம் காலமா புரட்சி பேசிட்டு இருக்கினம் ஆக்களும்...சனம் கேட்டிட்டு கம்முண்டு தங்கபாட்டில செய்யிறது செய்திட்டு இருக்குதுகள்..! இங்க களத்தில் நின்று எழுதிப் பிரயோசனம் இல்ல...அங்க களத்தில நிறைய செயலில செய்ய வேண்டி இருக்கு...அதுக்குத்தான் ஆளில்லை....! ஏட்டுச் சுரைக்காய்கள் மலிவோ மலிவு...அதுவும் இணைய யுகத்தில...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-17-2005, 10:25 AM
:roll:
09-17-2005, 10:25 AM
சாய் பாபாவும் அதத்தானே செய்யிறார்? என்ன அவருக்கு அரசியற் செல்வாக்கு இருக்கு, இவை இப்ப தானே முழை விட்டாக்கள்.
ஓம் சாயி ஓம் சாயி....
09-17-2005, 10:39 AM
சும்மா சுட்டாக் காணுமே பிரச்சாரமும் செய்ய வேணும் அல்லோ எண்டுவினம் ...பிறகு ஏன் இங்க இந்தப் பரிசுகேடுகள எழுதுறியள் எண்டுவினம் ...சனத்துக்கு எங்க குறுக்கு வழி இருக்கு எண்டெல்லோ பாக்குது....விளக்கிச் சொன்னால் அல்லோ சனத்துக்கு விளங்கும்...அடியும் போட்டாத்தானே உண்மையும் வெளிக்கும்...உது உப்ப போட்ட எடுத்துப் போட்ட படியா வேற மாதிரியும் கதய திசை திருப் பேலாது..எல்லாத்துக்கும் அடிப் படை மத நம்பிக்கை தானே.சொந்த உழைப்பில் நம்பிக்கை இல்லாமல் வெளிச் சக்திகளில நம்பிக்கை வைக்கிறது தானே ,இப்படி எமாத்திறவை பயன் படுத்துகினம்.பிறகென்ன ஆடும் மாடும்,எல்லாம் எம்மாற்றுத் தந்திரங்கள் தானே...
வாழ்க சமயத் தொண்டர் .......
09-17-2005, 10:42 AM
யாருக்குத் தெரியும் :roll: :?: உந்த மலையாள மாந்தீரிகரும், தன்னை புரட்சிகரமாக மாற்றுக்கருத்தாளராக எண்டு அறிவிக்கிறாரோ தெரியாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!:
ஆடு/மாடு/நெல்லுமூட்டைப் புகழ் பரந்தன் ராசன் மாற்றுக்கருத்துக்கிங் :evil: சூளைமேட்டுப்புகழ் அத்தியடிக்குத்தி மாற்றுக்கருத்துக்கிங் :evil: தண்ணிக்குட்டி சித்தாத்தன் மாற்றுக்கருத்துக்கிங்மூதூர் எம்புளோய்மன்ற் ஏஜென்சி குமாரதுரை & குடும்பம் மாற்றுக்கருத்தாளர்கள் :evil: தூள்க்கடத்தல்கிங் ராமராஜ-முஸ்தப்பா மாற்றுக்கருத்தாளன் :evil: ஈழ்பதீஸ் உண்டியல் புகழ் இந்த ஜெயதேவனும் மாற்றுக்கருத்தாளனாம் :evil: ............. நாளை மாத்திரீகரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாரறிவார் ஈழ்பதீஸ்வரத்தானே :!: :!: :!:
09-17-2005, 11:44 AM
யாழ்ப்பாணத்தாருக்கு சொல்லிக் கொடுக்கிற அளவுக்கு சொல்லிக் கொடுத்தாச்சு...மண்டை கனத்தவை அவை...எனி கேட்டுக் கேள்வி இல்லாம மண்டைல போடுறதுதான் உதுக்கு முடிவு....!
சாத்திரம் பார்... மாந்திரீ நாடு... விபச்சாரம் செய் என்று எந்த மதமும் சொல்லேல்ல என்றதை...மதம் பிடிச்ச மனிசர் சிந்திங்கோ...தவறா வழிகாட்டாதேங்கோ...! உதாலதான் சனம் குழப்பி உங்கட கருத்தைக் கவனித்திலேயே எடுக்குதுகள் இல்ல...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-17-2005, 12:06 PM
கடவுளை வழிபட்டா எல்லாம் நடக்கும்..பிறகேன் கஸ்ட்டப் படுவான்.கடவுளுக்கு வழி காட்டிற வழி காட்டிகள் இருக்கினம் அவைக்கு வக்காலத்து வாங்கிற மதம் பிடிச்சவை இருக்கினம்.இது தானே எங்கட கலாச்சாரம் எண்டுறவை இதை மாத்ததையுங்கோ ஐயோ கேள்வி கேக்காதயிங்கோ , எண்டுறவை இருக்கினம்.சுடுறது எண்டா சனத்தை மதம் என்கின்ற போதயில தொடர்ந்து வைக்க விரும்பிற இவய அல்லோ முதலில போட வேணும்.....
09-17-2005, 12:28 PM
புரட்ச்சிகரமாக எழுதுற <b>ஒரு பேப்பர்</b> முதல் புலத்தில வாற அனேகமான பத்திரைகளை எடுத்துப்பாருங்கோ எத்தினை சாத்திரி சாமியாரின்ரை விளம்பரம் இருக்கெண்டு. தாயகத்தில மாத்திரம் இல்லை <b>புலத்தில நிலமை அதைவிட கேவலம்</b>. முதல் காசுக்கா கண்டதையும் மக்களுக்கு விளம்பரப்படுத்திற ஊடகங்களையைம் கொஞ்சம் கவனிக்கவேணும். :!:
கனக்க வேண்டாம் யாழ் களத்தை எடுங்கோ, சனீஸ்வரனுக்கு விரதம் இருக்க சுட்டி கொழுத்த குதிக்காலை வடிவாய் கழிவிட்டு போக என்று செயல்முறை விபரங்கள் சொல்லுற விழக்கெண்ணைகளும் இருக்கு. யாருக்கே நடுக்கடலுக்கை கொண்டு போய்விட்டாலும் என்னவே எண்டு சொல்லுவினம் எல்லே அப்படித்தான் இருக்கு எங்கள் பாடு. தாயகத்தில இருக்கிறவை திருத்தினாலும் புலத்தில இருக்கிற எருமையளை திருத்தேலாது. தாங்களாயும் திருந்தாதுகள் திருந்த உதவ வாறவைக்கும் ஜனநாயகம் படிப்பீக்க வெளிக்கிடுங்கள். உது பிள்ளையள் எடுத்ததுக்கெல்லாம் 911 அடிக்கபோறன் என்ற மாதிரி தான்.
09-17-2005, 12:38 PM
ஜெயதேவன் Wrote:யாருக்குத் தெரியும் :roll: :?: உந்த மலையாள மாந்தீரிகரும், தன்னை புரட்சிகரமாக மாற்றுக்கருத்தாளராக எண்டு அறிவிக்கிறாரோ தெரியாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!:
09-17-2005, 01:22 PM
narathar Wrote:கடவுளை வழிபட்டா எல்லாம் நடக்கும்..பிறகேன் கஸ்ட்டப் படுவான்.கடவுளுக்கு வழி காட்டிற வழி காட்டிகள் இருக்கினம் அவைக்கு வக்காலத்து வாங்கிற மதம் பிடிச்சவை இருக்கினம்.இது தானே எங்கட கலாச்சாரம் எண்டுறவை இதை மாத்ததையுங்கோ ஐயோ கேள்வி கேக்காதயிங்கோ , எண்டுறவை இருக்கினம்.சுடுறது எண்டா சனத்தை மதம் என்கின்ற போதயில தொடர்ந்து வைக்க விரும்பிற இவய அல்லோ முதலில போட வேணும்..... தயவுசெய்து செய்தியை திசை திருப்பாதீர்கள்... சாத்திரம் என்பதற்கு..மதச்சாயம் பூசாதீர்கள்...அதுமட்டுமன்றி..நீங்கள் எந்த மதத்தினதும் அடிப்படை புரியாமல்தான் கதை அளந்து கொண்டிருக்கிறீர்கள்..! ஏற்கனவே இன்னொரு பகுதியில் சோழியான் அண்ணா சுட்டிக்காட்டியது போல... இந்து மதத்தின் அடிப்படை என்பது வேதங்கள் சார்ந்து தான் இருக்கிறது... வேதங்களை ஆகமங்களை ஆராய்ந்து சொல்லும் நூல்களைப் படியுங்கள்...உலகெங்கும் மதம் ஒரு பள்ளிப்பாடமாக இருக்கிறது...! சாத்திரம்...மாந்தீரிகம் அப்படி அல்ல...! அது சிலரின் ஏமாற்று வித்தைகள்..அவர்கள் சாமி வேடம் போடுவது மதத்தின் அடிப்படை தெரிந்தல்ல...இப்போ நீங்கள் வாழும் சூழலுக்குள் உள்ள குழப்ப காலத்துக்கு ஏற்ப மக்களை ஏமாற்ற..உங்களை வித்தியாசமாகக் காட்ட... எடுப்பது போல போலி வேடங்கள் தான் அவர்களும் போடக் கற்றிருக்கிறார்கள்.! அதற்குள் மதத்தைப் புகுத்தி மதம் உண்மையில் கொண்டுள்ள ஆழமான மனித வாழ்வியலுக்கு அவசியமான விடயங்களை உங்கள் மேலோட்டமான கருத்து உள்வாங்கல் மூலம் தெளிவற்று உள்வாங்கி தனிப்பட்ட குரோத விசமப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள்..அதன் மூலம் உங்கள் கருத்துக்களை வெறுமை ஆக்காதீர்கள்...! சொல்வதைத் தெளிந்து பகுத்தாய்ந்து ஆதாரங்கள் சகிதம் மக்கள் ஏற்கத்தக்க வகையில் முன்வையுங்கள்... அதுதான் அவசியம்..! அதுவே மக்களை தெளிவு படுத்தி வளமான மாற்றத்துக்கு வழிகோலும்..!..!:wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-17-2005, 02:15 PM
சுடச் சொன்னது நீர் பிறகென்ன இப்ப வேற வேசம் போடுறீர் .சிந்திக்கச் சொல்லி கேள்வி எழுப்பினா,இவ பப்புக்குப் போறவை,பல கலியாணம் கட்டிறவை என்று தரங்குறைவா தனி நபர் தூற்றல் எழுதுறது நீர்,பிறகென்ன கதைக்கிறீர்.
நாங்கள் களத்திலும் இருப்போம்,புலத்திலும் இருப்போம்,எங்கும் எழுதுவோம் இங்கும் எழுதுவோம்,எங்கெங்கு எமது மக்கள் சீரழிகிறார்களோ எங்கெங்கு சீரழிவைப் பாதுகாக்கிறவர் இருக்கினோமோ அங்கங்கு வந்து எழுதுவோம். நீர் அதப் பற்றிக் கவலைப் பாடதையும்,புலமும் ,களமும் ,யாழ் களமும் ஒன்றெங்களுக்கு.
09-17-2005, 02:19 PM
'நான்தாண்டா ஆத்தாளு..." பேய்க்கு ஒன்றும் நடக்கவில்லை - நக்கீரன்
Monday, 02 May 2005 <span style='color:green'>முத்தர் என்ன இலேசுப்பட்டவரா என்ன? எத்தனையோ வருத்தக்காரரை ஒரு திருநூற்றுப் பார்வையால் மட்டுமே அவர் குணப்படுத்தி இருக்கிறார். புவனத்திடம் இருந்து விடைபெற்ற கலகலப்பு மீண்டும் வந்து சேர்ந்தது. வீட்டில் எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி கூத்தாடியது. ஆனால் சொல்லி வைத்ததுபோல சரியாக ஒரு கிழமை கழித்து ஒரு வெள்ளிக்கிழமை அன்று புவுனம் மீண்டும் மயக்கம் போட்டு விழுந்தார். இம்முறை கண் விழித்து எழுந்தபோது உருவந்தவர்கள் போல ஆவேசத்தோடு கத்திக் கொண்டு வீட்டைச் சுற்றி ஓடத் தொடங்கினார். பின்னா படலைக்கும் வீட்டுக்குமாக ஓடினார். இப்படி மாறி மாறி அங்கும் இங்கும் ஓடினார். நிலத்தில் கிடந்த தண்டு தடிகளை, கல்லு முள்ளுகளை, உரல் உலக்கைகளை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு பதினைந்து இருபது நிமிடத்துக்குப் பின்னர் ஐந்தாறு பேர் அவரை ஒருவாறு துரத்திப் பிடித்து வீட்டுத் திண்ணையில் அமர்த்தினார்கள். \"டேய் நான் யார் தெரியுமா? நான்தாண்டா ஆத்தாள்! ஆத்தாள் பலி கேட்கிது! அடுத்த வெள்ளிக் கிழமை மடை போடுங்கடா\" என்று தலையை ஆட்டியவாறு உரத்த குரலில் கத்தினார். திமிறிக் கொண்டு மீண்டும் எழுந்து ஓட முயற்சித்தார். புவனம் சொன்னதைச் செவிமடுத்த எல்லோரும் பயத்தால் உறைந்து போனார்கள். சிவராசா பதறிப் போனார். பிள்ளைகள் ஆளுக்கொரு மூலையில் பதுங்கிக் கொண்டார்கள். வீடுகளை இழந்தது. நிம்மதி விடைபெற்றது. இருள் குடி கொண்டது. வீட்டில் உள்ளவர்கள் ஏதோ கடமைக்குச் சமைத்துச் சாப்பிட்டார்கள். புவனம் பழைய நிலைக்குவர பத்து நாட்களுக்கு மேல் பிடித்தது. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது துன்பங்கள் ஒவ்வொன்றாக வருவதில்லை. அவை வரிசையாக வருகின்றன என்பது பழமொழி. சிவராசாவின் குடும்பத்தைப் பொறுத்தளவில் அது முற்றிலும் சரியாக இருந்தது. \"புவனம் பேய் பிடித்து ஆடுது\" என்பதே ஊரெல்லாம் பேச்சாக இருந்தது. வேலை வெட்டியில்லாத 'கிழங்கள்' அந்தச் செய்தியை ஊரெல்லாம் ஓடி ஓடி இருபத்து நான்கு மணித்தியாலங்களும் இன்றைய வானொலிகள் வானலைகள் ஊடாக ஒலிபரப்புவதுபோல வாயினால் ஒலிபரப்புச் செய்து கொண்டிருந்தன. அதன் பின்னர் சொல்லி வைத்தாற் போல் ஒவ்வொரு பவுர்ணமியை அடுத்து வரும் வெள்ளிக்கிழமைகளில் புவனம் ஆடத் தொடங்கினார். பேயை ஓட்ட அக்கம் பக்கத்தில் உள்ள 'புகழ்பெற்ற\" மாந்திரீகர்களையும் பூசாரிகளையும் கூட்டி வந்து, கழிப்பு, மடை, சாந்தி என்று செய்து பார்த்தார்கள். வீட்டில் மடைபோட்டால் போதாதென்று ஊரிலுள்ள ஐயனார், அம்மன் கோவில்களிலும் மடை போட்டார்கள். சில மந்திரவாதிகள் புவனம் ஆடும் போது பூண்போட்ட பிரம்பால் \"பேயை\" விளாசினார்கள். பேய்க்கு விழுந்த அடி புவனத்தின் தோலைத்தான் பதம் பார்த்தது. பேய்க்கு ஒன்றும் நடக்கவில்லை. இப்டியான இடுக்கண் நேரும்போது படித்தவர்கள் கூட பகுத்தறிவை ஒருபுறம் மூட்டை கட்டி வைத்து விட்டு, பூசாரி, மந்திரவாதி, பேயாடி, சோதிடர், காண்டம் வாசிப்பவர், மை பார்ப்பவர், நினைத்தகாரியம் சொல்பவர், குறி சொல்பவர், அருள்வாக்குச் சொல்பவர் எனப் பெரிய பட்டாளத்தைத் தேடி அலைய ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பூசாரி, மந்திரவாதிகள் கூட்டம் தங்களது மனதில் படுகிறதை, தங்கள் அறிவுக்கு எட்டியவாறு சிக்கலுக்கு தீர்வு சொல்லிவிடுகிறார்கள். [size=24]மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டு மக்களுக்கு இப்படியான மந்திர தந்திரங்களிலும், பேய் பிசாசுகளிலும், கடவுள் தெய்வங்களிலும் நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. மக்கள் தம்மைச் சுற்றியுள்ள இயற்கையைக் கண்டு அஞ்சினர். சூரிய -சந்திர கிரகணத்தின்போது பாம்பொன்று அவற்றைக் கவ்வுவதாக நினைத்துப் பயந்தார்கள். சிலர் மேளங்கள் அடித்து அந்தப் பாம்பை விரட்டினார்கள்! இயற்கையின் இயக்கத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளும் திறன் இல்லாது அவர்கள் குழம்பினார்கள். மக்கள் தாங்கள் புறச் சக்திகளுக்கு நடுவே பிறந்து அவற்றினால் இயக்கப்பட்டுச் செல்வதாக நினைத்தார்கள். மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு சக்தி காரணம் எனக் கருதினார்கள். பழந்தமிழர் அச் சக்தியை அணங்கு, சூர், பேய், கடவுள், தெய்வம் எனப் பெயர் சொல்லி அழைத்தனர். நன்மை செய்யும் சக்தியை கடவுள், தெய்வம் என்றும், தீமை செய்யும் சக்தியை அணங்கு, சூர், பேய், என்றும் கொண்டனர். மக்கள் இயற்கைக்கு அஞ்சி அதன் இயக்கத்தை நன்கு புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலையில், தங்கள் வாழ்க்கைக்கு வகுத்துக் கொண்ட வழியே மந்திரச் சடங்காகும் (Magical rites). பிறப்பு, இறப்பு, பூப்பெய்தல், திருமணம், மழை, வேட்டை, வளம், விதைப்பு, அறுவடை, போர் போன்ற நிகழ்வுகளின்போது மந்திரச் சடங்குள் இடம் பெற்றன. இந்தச் சடங்குகள் சங்க காலத்தில் இடம்பெற்றதை சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். இயற்கையை இத்தகைய மந்திரச் சடங்குகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பது அக்கால மக்களது நம்பிக்கை ஆகும். வணங்குதல், வேண்டுதல், பலியிடுதல், நோன்புதல் ஆகியவற்றால் ஒருவர் தாம் விரும்பிய காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும் என்ற மந்திரகால நம்பிக்கையே பின்னர் தொடக்க கால சமயம் ஆயிற்று. மந்திர யுகத்தில் மந்திரவாதி வகித்த இடத்தை, புராதன சமயகாலத்தில் மந்திரவாதிப் பூசாரி கைப்பற்றினான். அதன்பின் உருவான சமய காலத்தில் புரோகிதன் வந்தான். ஒரே சமூகத்தில் இந்த மூவரும் ஏக காலத்திலும் இருந்ததும் உண்டு. மந்திரச் சடங்குகளை முற்றிலும் வெறும் அறியாமை என்று கூறிவிட முடியாது. நோய் உளவியல் சம்பந்தமானது என்றால் இம்மாதிரியான சடங்குகள் அதற்குரிய மருந்தாக அமைய வாய்ப்பு இருந்தது. இனக்குழு மக்களிடம் சடங்குகள் அவ நம்பிக்கையைப் போக்கி நம்பிக்கையை உண்டாக்கியது. சோர்வைப் போக்கி ஆர்வத்தை விளைவித்தது. ஒரு நோயாளி மருந்தை உட்கொண்டதின் பின்னர் தன்னைப் பிடித்த நோய் குணமாகிவிடும் என்று நம்புகிறான். அந்த நம்பிக்கை அவனுக்கு மனதளவில் பிறக்கும்போது பாதி சுகம் வந்துவிடும். பருவமழை பொய்த்து விட்டால் மழையை வருவிக்க கொடும்பாவி கட்டி இழுப்பதும், சின்னமுத்து, பொக்கிளிப்பான் போன்ற நோய் வந்தால் அவற்றைப் போக்க அம்மன் கோவில்களில் குளிர்த்தி செய்வதும், நோய் நொடி வராமல் ஐயனார், வயிரவர், காளி, அம்மன் போன்ற காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழி பலியிடுதல் போன்ற சடங்குகளை செய்வதும் அண்மைக் காலம்வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்று வந்த நிகழ்சிகளாகும். ஆடு வெட்டுதல் இப்போதும் ஆங்காங்கே சில ஊர்களில் இடம்பெற்று வருகிறது. அன்பே சிவம் என்று சொல்லும் சைவ சமயத்திற்குரிய சைவ ஆகமங்கள் பலியிடுதலை அனுமதிக்கிறது என்பது ஒரு வியப்பான செய்தி. நாளடைவில், குறிப்பிட்ட இயற்கை விதிகளை அடக்கியாளக்கூடிய மாபெரும் சக்தியாக ஊழ் (fate) உணரப்பட்டது. பெரிய தெய்வங்கள்கூட இவ் ஊழுக்கு கட்டுப்பட்டது என்ற நம்பிக்கை குடிகொண்டது. ஊழே சட்டமாயிற்று. சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற புறப்பாடல் (192) மனித உயிர், கல்லை அலைத் தொலிக்கும் பேரியாற்றின் நீரின் வழியே போம் மிதவை போல, ஊழின் வழியே படும் என ஊழின் வலியை வலியுறுத்துகிறது. "புவனத்தின் சாதகத்தை சோதிடரிடம் காட்டிப் பலன் கேட்டால் நல்லது என்று வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் யோசனை சொல்ல அப்படியே செய்வது என்று முடிவாகியது. கொக்குவிலில் பிரபல சோதிடர் ஒருவர் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு அவரிடம் புவனத்தின் சாதகத்தைக் காட்ட அயல் வீட்டு மணியத்தாரைப் பிடித்து அனுப்பினார்கள். விடிகாலையில் சோதிடர் வீட்டுக்குப் போன மணியத்தார் தனக்கு முன்பே கியூ வரிசையில் சோதிடரைப் பார்க்க சாதகமும் கையுமாக பலர் நிற்பதைப் பார்த்து வியப்படைந்தார். தனது முறைக்குப் பொறுமையோடு காத்திருந்து பைக்குள் பத்திரமாகக் கொண்டுவந்திருந்த சாதகத்தை சோதிடரிடம் பயபக்தியோடு எடுத்துக் கொடுத்தார். ஓலையைப் பிரித்து சாதகத்தைப் படித்தவாறே சோதிடர் தான் வைத்திருந்த குறிப்புப் புத்தகத்தில் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்தார். திருநீறு அணிந்து பளிச்சென்று இருந்த சோதிடரின் முகத்தில் எந்தச் சலனத்தையும் மணியத்தாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரது தொழிலில் இப்படி நூற்றுக் கணக்கான சாதகங்களைப் படித்துப் பார்த்திருப்பார். புவனத்தின் சாதகம் அதில் நூற்றோடு நூற்றினொன்று. மணியத்தார் சோதிடரையும் சோதிடர் போடும் கணக்குகளையும் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். நேரம் போகப் போக அவரை இனந்தெரியாத பயம் பிடித்துக் கொண்டது. சோதிடர் நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்று தனக்குத் தெரிந்த தெய்வங்களை எல்லாவற்றையும் தனது மனதுக்குள் அவர் வேண்டிக் கொண்டார். அவரை அறியாமல் அவரது மனதுக்குள் "துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தசஷ்டி கவசந்தனை" என ஆரம்பித்து "காக்கக் காக்க கனக வேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்கத் தாக்க தடையறத் தாக்க..........." எனக் கந்தசஷ்டிக் கவசத்தை வேகமாக செபித்துக் கொண்டிருந்தார். பொதுவாக நன்மை தின்மை இந்த இரண்டு காரணங்களுக்காகவே மனிதர்கள் சோதிடரை அணுகுகிறார்கள். சோதிடம் பார்க்க வந்தவரின் நடை, உடை, பாவனையை வைத்தே சோதிடர்கள் வந்தவர் நன்மையான காரியமாக வந்தவரா அல்லது தின்மையான காரியமாக வந்தவரா என பெருமளவு ஊகித்து விடுவார்கள். சில சோதிடர்கள் சாதகம் கொண்டு வந்தவர் வேறு ஆள், சாதகக்காரர் வேறு ஆள் என்று தெரியாமல் குழம்புவதும் உண்டு. தொண்டையைக் கொஞ்சம் சரிசெய்து கொண்ட சோதிடர் இப்போது பலனைச் சொல்ல ஆரம்பித்தார். ""இந்தச் சாதககாரருக்கு இப்போது ஏழரைச் சனி திசை நடக்கிறது. சனிக்கு சூரியன், சந்திரன் சத்துருக்கள். குரு பார்வை எவ்வளவுக்கெவ்வளவு சிறந்தது என்று சொல்லுகிறோமோ, அதேபோல சனி பார்வை அவ்வளவுக்கவ்வளவு கொடிய பார்வையாகும். சனியின் கோளாறினால் நரம்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டுள்ளது. சாதககாரர் சனி விரதம் இருந்து, சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்ளெண்ணைச் சட்டி எரித்து வந்தால் நோய் மூன்று மாதத்தில் குணமாகிவிடும்."" சனிக்கிரகம் வாயுவினால் ஆனது. 75 விழுக்காடு நீரகமும் (hydrogen) 25 விழுக்காடு பரிதியம் (helium) இவற்றினால் ஆன கோள். எடைமானத்தில் மிகக் குறைந்த தனிமம் நீரகமாகும். தண்ணீரோடு ஒப்பிடும்போது அதன் வீத எடைமானம் ( 0.7) ஆகும். உட்புறம் பாறைகளினால் ஆனது. வியாழனுக்கு அடுத்த பெரிய கோள். பூமியில் இருந்து சுமார் 8,500,000 கிமீ (6,300,000 மைல்) தூரத்தில் உள்ளது. அதன் விட்டம் மத்திய கோட்டில் 120, 536 மிமீ. திண்மம் 5.68 கிலோகிராம். சூரியனை 1,429,400,000 கிமீ தூரத்தில் சுற்றி வருகிறது. சனிக்கோளை 30 உபகோள்கள் சுற்றி வருகின்றன. வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் இருந்தே சனிக் கோள் பற்றி மனிதர்களுக்குத் தெரிந்திருந்தது. ரோமரது புராணக் கதையில் சனி பயிர்த்தொழிலின் கடவுள். கிரேக்கத்தில் சனியை குறோனஸ் (Gronus) கடவுள் என அழைத்தார்கள். இந்தக் கடவுள் Zeus (வியாழன்) கடவுளின் தந்தை. சனிக் கோளை தொலைநோக்கி மூலம் பார்த்த (கிபி 1610) முதல் மனிதர் கலிலியோதான். அதனைக் காகம் போல கன்னங்கரிய கோளாகச் சோதிடம் சித்திரித்தாலும் அது உண்மையில் பார்ப்பதற்கு மிகவும் ஒளிமயமான கோள். பூமியில் இருந்து இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கோள் இங்குள்ள ஒருவரது வாழ்க்கையின் போக்கை, அவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில், எப்படிப் பாதிக்க முடியும் என்பதையிட்டு யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. சரி அப்படித்தான் பாதிக்கிறதாக வைத்துக் கொண்டாலும் அதற்கு விரதம் இருந்து எள்ளெண்ணைச் சட்டி எரித்தால் அந்தக் கிரகத்தைத் திருப்திப் படுத்திவிட முடியுமா? திருப்திப்படுத்தலாம் என நினைத்து நவக்கிரகங்களை சுற்றுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். மணியத்தார் இரண்டு வெற்றிலைக்குள் ஒரு ஐந்து ரூபா தாளை வைத்து சோதிடரிடம் கொடுத்தார். பின்னர் சாதகத்தை இரண்டு கையாலும் வாங்கி மடியில் பத்திரப்படுத்திக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். (தொடரும்) </span> http://sooriyan.com/index.php?option=conte...=1617&Itemid=34
09-17-2005, 04:18 PM
:roll:
|
|
« Next Oldest | Next Newest »
|