Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இது இயற்கையின் நியதி. பூமி நிரந்தரமற்றது எல்லாம் சரிதான், ஆனால் இப்படியான பேரழிவுகள் தூரத்தில் நடக்காமல் சுனாமி அனர்த்தமாக அன்புக்குரியவர்களை அழிக்கும் போதோ அல்லது கண்முன்னே லண்டன் குண்டு வெடிப்பாக உருவெடுக்கும் போதோ இவை இயற்கையின் சமப்படுத்தல்கள் என்று நினைக்க முடியாமல் மனது மிகவும் வேதனைப்படுகின்றது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நியூ ஒர்லீன்ஸ் நகரத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை சூறாவளி தாக்கி ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்ட நியூ ஒர்லீன்ஸ் நகரிலிருந்து கடைசியில் ஒருவழியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுமார் நாற்பது விமானங்கள் இரவு பகலாக பறந்து பாதிக்கப்பட்ட மக்களை அண்டை மாநிலங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசென்றுள்ளன.
நியூ ஒர்லீன்ஸ் நகரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது; ஆனால் நீரில் மூழ்கியிருக்கும் கட்டிடங்கள் மற்றும் வீடுகளிலிருந்து எத்தனை சடலங்கள் மீட்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என உள்நாட்டுப் பாதுகாப்புக்கான அமைச்சர் மைக்கேல் ஷெர்டாஃப் கூறினார்.
அண்டை மாநிலமான மிஸ்ஸிசிப்பியிலும் சேத நிலவரம் தெளிவாகிவருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
BBC தமிழ்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Thala Wrote:மதன் அதுதான் இங்க முக்கியமா போய்க்கொண்டிருக்கு...
நியூ ஆர்லியான்ஸ் நகரில் 95% வீதமானவர் கறுப்பர்களாம்.. அதனால்தான் அரசு அக்கறை அற்று இருப்பதாக புரளியை கிளப்புகிறார்கள்.. அதைவிட நியூ ஆர்லியான்ஸ் வை அண்டி இருந்த மீட்புப்பணியாளர்கள் தங்களுக்கு எந்த விதமான முனறிவித்தலும் வளங்கப்படவில்லை எண்றும். தாங்கள் அழிவின் செய்திகள் பத்திரிகை தொலைக்காட்ச்சி வாயிலாகத்தான் அறிந்ததாகவும் சொல்கிறார்கள்..
இது கறுப்பர் பெருமளவில் வாழ்பவர்கள் என்பது தவிர அங்கே வாழ்ந்த வெள்ளையர்களும் வசதிபடைத்தவர்கள் என்பதால் வாகனங்கள் மூலம் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாயும் படித்தேன். இந்த அனர்த்தின் போது அமெரிக்க வல்லரசு நிர்வாகம் நடந்து கொண்ட முறை ஒரு வசதிகள் குறைவான மூன்றால் உலக நாட்டில் எப்படி மீட்பு பணி நடக்குமோ அது போல இருந்தது என்று பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியான பத்திரிகை ஒன்றின் தலைப்பு "Third World America". ஏன் முன்கூட்டியே சரியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இவ்வளவு அழிவை சந்திக்க நேர்ந்தது என்பதை அரசு தான் சொல்ல வேண்டும்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனா சூறாவளி
தேங்கியிருக்கும் வெள்ள நீர் இராட்சத இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைத் தாக்கியது சுனாமி அதன்பின்பு நடந்த இயற்கை அனர்த்தம், அமெரிக்காவின் தெற்குப் பகுதி வளைகுடா மாநிலங்களைத் தாக்கிய, குறிப்பாக நியூ ஆர்லியன்ஸ் நகரைத் தாக்கி அழித்த கத்ரீனா சூறாவளிதான்.
அழிவு என்பதை விட்டுவிட்டுப் பார்த்தால், சுனாமிக்கும், கத்ரீனா சூறாவளிக்கும் இடையில் வித்தியாசங்கள் நிறைய.
இந்துமாக்கடல் நாடுகளை சுனாமி தாக்கப்போவது பற்றி சரியான முன்னெச்சரிக்கை இல்லை, ஆனால் அமெரிக்காவின் வளைகுடாப் பகுதியின் பருவநிலை நன்கு கண்காணிக்கப்பட்டுவரும் ஓரிடம்; அதுவும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-செப்டம்பர் மாதக் காலத்தில் இங்கே சூறாவளிகள் தாக்குவது வழக்கம்.
மேற்கிந்தியத் தீவுகள், க்யூபா, க்ரெனடா ஆகிய நாடுகளை அடிக்கடி சூறாவளிகள் தாக்கியுள்ளன.
அமெரிக்காவின் புளோரிடா, அலபாமா போன்ற மாநிலங்களும் சூறாவளித் தாக்குதலுக்குத் தப்பியதில்லை.
ஆக, கத்ரீனா வருகிறது, தாக்கப்போகிறது என்று துல்லியமாகக் கணித்துச் சொல்லியும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர எடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.
இப்பகுதியில் ஆண்டுதோறும் சூறாவளிகள் வலுப்பெற்று வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் அதற்குக் காரணம் என்ன? உலகில் தொழில்வளமிக்க நாடுகள் அதிகம் வெளியிட்டு வரும் வெப்ப வாயுக்களால் ஏற்படும் க்ரீன்ஹவுஸ் விளைவு, பருவநிலை மாற்றம் அதாவது உலகம் வெப்பமடைந்து வருவதால்தான், கடல் மட்டத்தில் கொந்தளிப்புக்களை, பலமான சூறாவளிகள் தாக்குகின்றன என்பது ஒருவாதம். இந்த வாதத்தை ஏற்க முடியாது என்கிறார் ஐநா சுற்றுச்சூழல் திட்ட அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி ஜீன் பலூட்டிகாப்.
சூறாவளிகள் ஆண்டுதோறும் வலுப்பெற்று வருகின்றன என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால், பருவநிலை மாற்றத்துக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு உண்டு என்று கூறமுடியாது. கத்ரீனா சூறாவளியை பொறுத்தவரை, அது அடித்த பாதையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் தாழ்வான பகுதியில் உள்ள அந்த நகரம் சிக்கிகொண்டது, அதுதான் பிரச்னை. ஒருவேளை கத்ரீனா சூறாவளி கிழக்காக, அல்லது மேற்காக சென்றிருந்தால் நியூஆர்லியன்ஸ் நகரும் தப்பியிருக்கும் என்கிறார் விஞ்ஞானி ஜீன் பலூட்டிகாப்.
ஆனால் நியூ ஆர்லியன்ஸ் நகர் இத்தகைய பேரழிவை சந்திக்கும் என்று ஏற்கனவே கணித்திருந்தார் புவிவியல் விஞ்ஞானி பாப் மார்ட்டன்.
அதாவது, இந்த நகரை அடுத்த பகுதியில் கடல்நீர் பொங்கினால் அதைத் தாங்கவல்ல ஏரிகள், குளங்கள், காயல்கள் நிறைய இருந்தன, சதுப்பு நிலங்கள் இருந்தன, ஆனால் இவையெல்லாம் மாற்றி சாலைகள், காலனிகள், பேரங்காடிகளை அமைத்துவிட்டதால், நகருக்கு இயற்கையாக இருந்த பாதுகாப்பு போய்விட்டது என்கிறார் இவர்.
தவிர, நகரை அடுத்த கடற்படுகையில் எண்ணெய், இயற்கைவாயு தோண்டும் பணியும் நடந்துவருவதால், பிரச்னை என்கிறார் விஞ்ஞானி பாப் மார்ட்டன்.
எது எப்படியிருந்தாலும், கத்ரீனா சூறாவளி விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிய சவாலாகத் தெரிகிறது என்பது உண்மைதான்.
BBC தமிழ்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
கிழட்டு புஷ் இன்ரையை சேட்டையை பார்த்தியளே. சனம் வெள்ளத்திலை கஸ்டப்பட உந்த கிழடு அதுக்குளை மீன் பிடிச்சு விளையாடுது... :evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Malalai Wrote:சரியாக தான் சொல்லியிருக்கிறீர்கள்..ஆனால் இயற்கை அழிவுகள் இப்பொழுது கூடியிருப்பதாகத் தெரிகிறது..
அதே சமயம் பழைய வரலாற்று பேரழிவுகள் ஆவணப்படுத்தபடாமையால் அது குறித்து எமக்கு தெரியவரவில்லையோ என்னமோ? சுனாமி கூட முன்பு தென் இந்தியாவை தாக்கி பூம்புகார் போன்ற நகரங்களை கடல் கொண்டதாக சிலர் சொல்கிறார்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கத்ரீனா சூறாவளியில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நாள்
தேசிய அஞ்சலி நாள்
அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனாவில் பலியானவர்களுக்கான சிறப்பு நினைவுநாள் மற்றும் வழிபாட்டு நாளான இன்று வாஷிங்டன் தேசிய தேவாலயத்தில் அமெரிக்க அதிபர் புஷ் உரையாற்றுகிறார்.
ஆனால் பல நினைவு நிகழ்ச்சிகளையும் பிரார்த்தனைகளையும் ஏற்கனவே நடத்திவிட்டதால், இன்றைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என நாட்டின் தேவாலய தலைவர்கள் பலர் கூறியுள்ளனர்.
முன்னதாக நியூஓர்லீன்ஸில் புஷ் ஆற்றிய ஒரு நேரடி ஒலிபரப்பு தொலைகாட்சி உரையில், சூறாவளி நிவாரண நடவடிக்கைகளில் எல்லா மட்டத்திலும் அரசு மெதுவாக செயல்பட்டுள்ளது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
நாட்டின் அதிபர் என்ற முறையில் தன்மீதும் தப்பு இருக்கிறது என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்காக மிகப்பெரிய அளவிலான நிவாரண மற்றும் மீள்கட்டுமான நிதி உதவி திட்டம் ஒன்றை அவர் அறிவித்தார்.
இத்திட்டத்தில் பெரும்பான்மையான செலவினங்களுக்கு அமெரிக்க மத்திய அரசு நிதி வழங்குகிறது.
BBC Tamil
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நாரதர்,
இந்த புஷ் & அப்பா புஷ் மீன்பிடிக்கும் படம் எங்கே கிடைத்தது என்று சொல்ல முடியுமா?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.