Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீதனம் வாங்கும் இழி நிலையை ஒழிப்போம்
#1
<img src='http://www.worldreligions.co.uk/photos/hinduism/HI115A4.jpg' border='0' alt='user posted image'>


இலங்கையில் இருந்து ஒரு வயதான தம்பதிகள் வந்திருந்தனர். இலங்கையில் சீதனம் வாங்கும் இழி நிலை இன்னும் தலைவிரித்தாடுவாதாக கூறி வருத்தப்பட்டார்கள். இந்த சீதனம் வாங்குவதை ஏன் எம்மால் ஒழிக்கமுடியாது. அதற்கு என்ன என்ன செய்ய வேண்டும்?.
Reply
#2
இலங்கையில் மட்டுமா சீதனக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. இந்தியாவிலும்தான்.
நல்ல தலைப்பைச் தொட்டுச் சென்று இருக்கிறீர்கள்.
புலம்பெயர் நாட்டிலும் இதன் தாக்கம் அதிகமாக இருந்தபோதும்.... சீதனம் வாங்காமல் திருமணம் செய்த இளைஞர்களும் நிறையவே இருக்கிறார்கள்.
இதை ஒழிப்பதா ? ? ?
ஆண் பெண் இருவரின் கையிலும்தான் இருக்கின்றது.
Reply
#3
aathipan Wrote:<img src='http://www.worldreligions.co.uk/photos/hinduism/HI115A4.jpg' border='0' alt='user posted image'>


இலங்கையில் இருந்து ஒரு வயதான தம்பதிகள் வந்திருந்தனர். இலங்கையில் சீதனம் வாங்கும் இழி நிலை இன்னும் தலைவிரித்தாடுவாதாக கூறி வருத்தப்பட்டார்கள். இந்த சீதனம் வாங்குவதை ஏன் எம்மால் ஒழிக்கமுடியாது. அதற்கு என்ன என்ன செய்ய வேண்டும்?.

வாங்குவோர் வாங்காமலும்,
கொடுப்போர் கொடுக்காமலும் இருக்க வேண்டும்.

சட்டத்தால் இவற்றை தடுக்க முடியாது.
லஞ்சத்தை ஒழிக்க லஞ்சம் கொடுப்பவர்கள் இவர்கள்............

கொஞ்சமாகக் கொடுத்தால் லஞ்சம்.
பெரிய தொகையானால், அது அன்பளிப்பு.
Reply
#4
ஒரு சமூகம் வளர்ச்சியடைவதற்குப் பல காரணிகள் தேவைப்படுகின்றன.

அதில் ஒரு காரணி தான் <b>சமூக நேசம்</b>.அந்த வகையில் தனக்காகவன்றி சமூகத்தினை நேசிக்கும் அனைவரும் போற்றத்தக்கவர்கள்.
அதே நேரம் எந்த ஒரு நாட்டையும் ஒரே சமூகமாகக் கொண்டு வருவதில் சிக்கல் இருக்கிறது.

<b>இந்தச் சிக்கல் இருக்கும் வரையில் பலவகை பழக்க வழக்க, பண்பாடுகளைக் கொண்ட, பல்லின மக்களையும் அவர்கள் நாகரிகங்களையும் ஒன்றிணைப்பது காலம் எதிர் நோக்கும் பெருஞ் சவால்களில் ஒன்று</b>.

அப்படிப்பட்ட நிலையை எட்டி நிற்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் கூட சீதனம் என்பதனை தமது கொரவமாக இருக்கிறது.

எனவே சீதனம் என்பது அன்பளிப்பாக,கொடுக்கப்படும் விலையாக,கொளரவமாக என்று பல கோணங்களில் கால்விரித்திருப்பதனால் சீதனம் என்பதை ஒழிக்க வேண்டும் என்கின்ற குரல்கள் வெறும் கூச்சலாக மாத்திரந் தான் இருக்கும்.

சீதன எதிர்ப்புப் போராட்டம் என்பதற்கு அடிப்படையில் களையப்பட வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றது.அவற்றைக் களைவதற்கு இன்னும் ஓரிரு நூற்றாண்டு தேவைப்படும் போலிருக்கிறது.

சந்தேகந்தான் :!: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->........
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#5
தகுதிகள் தராதரம் என்ற தேடலின் நோக்கம் பதவிகளும் சாதிகளுமாக இருக்குமட்டும் சீதனமும் இருந்துகொண்டுதானே இருக்கும். இல்லறத்துக்கு ஒரு ஆண் மாத்திரமே போதுமென புறப்பட்டால்.. சீதனம் ஏன் ஒழியாது?
.
Reply
#6
sOliyAn Wrote:தகுதிகள் தராதரம் என்ற தேடலின் நோக்கம் பதவிகளும் சாதிகளுமாக இருக்குமட்டும் சீதனமும் இருந்துகொண்டுதானே இருக்கும். இல்லறத்துக்கு ஒரு ஆண் மாத்திரமே போதுமென புறப்பட்டால்.. சீதனம் ஏன் ஒழியாது?

மணப்பெண் இல்லாமலா???????????
Reply
#7
லொள்ளா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#8
வரதட்சனை
------------

வரதட்சனை என்பது பெருகிவரும் ஒரு நோயாகிவிட்டது. ஏழைகளையும் அது விட்டுவைப்பதில்லை பணக்காரர்களையும் அது சும்மாவிடுவதில்லை. இது முன்பே தொற்றிக்கொண்டிருந்தாலும் திருமணம் என்று பேச்செடுக்கும் போதுதான் வெளியே வந்து தன் வேலையை ஆரம்பிக்கிறது. இதில் பெண்களைப்பெற்றவர்கள் தான் பாதிப்பும் வேதனையும் அடைகிறார்கள். அவர்களுக்கு தான் நோயின் வலி தெரிகிறது. ஆண்பிள்ளை மட்டும் பெற்றிருந்தால் அவர்கள் விதிவிலக்கு, நோயின் வலி இவர்களுக்கு தெரிவதே இல்லை.

இந்நோய் பலவகையில் பரவுகிறது ஒன்று பரம்பரைமுறையில். மாமாவிற்கு இவ்வளவு வாங்கினோம், சித்தப்பாவிற்கு இவ்வளவு வாங்கினோம், அதைவிடபலமடங்கு அண்ணாவிற்கு வாங்கினோம், எனவே உனக்கு கட்டாயம் அதைவிட அதிகம் வாங்க வேண்டும் என பரம்பரைபரம்பரையாக தொடர்ந்து வருகிறது. போகப்போக அதன் தாக்கமும் அதிகரிக்கிறது.

சில நேரங்களில் இது தொற்று நோயாக வேகமாக பரவி அதிகம் பேரை தாக்குகிறது. திருமணத்திற்கு செல்பவர்களில் பலர் பெண்ணைப்பெற்றவரிடம் மாப்பிள்ளை என்ன வேலை எனகேட்டு தெரிந்து கொள்கின்றனர். அடுத்து எவ்வளவு கொடுத்தீர்கள் என்று கேட்டு மனதில் வைத்துக்கொள்கின்றனர். பின் தமது குடும்ப ஆண்பிள்ளைகளுக்கு திருமணம் என்றதும் அதைவிட பெரிய அளவில் வேண்டிவிட வேண்டும் இல்லையேல் அவன் படித்த படிப்பிற்கு என்ன மரியாதை என்றும் எண்ணுகின்றனர். இந்த மாதிரியான நோய் திருமண சீசன்களில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம்.

சில பெண்ணைப்பெற்றவர்களே இந்த நோய்க்குக் காரணம் ஆகி விடுகின்றனர். அள்ளிக்கொடுத்தால் பொல்லாத மாப்பிள்ளையையும் நல்லவனாகிவிடுவான் என எண்ணுகின்றனர். அத்துடன் மாப்பிளளையை தங்கள் பிடியில் வைத்துக்கொள்ளலாம் என எண்ணுகின்றனர். இது தானேநோயின் கிருமிகளை உடலில் ஊசிமூலம் எற்றிக்கொள்வது போல.

ஆண்கள் நல்லகொள்கை உள்ளவர்களாக இருந்தால் படிப்படியாக இந்நோயை அழித்துவிடலாம். அவர்களின் பெற்றோர்கள் இந்நோயில் பாதிக்கப்பட்டு இருந்தால் திருமணத்தை தள்ளிவைப்பதன் மூலம் பெண்ணைப்பெற்றவர்களைக் காப்பாற்றி மானத்துடன் வாழலாம்.

நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்.
Reply
#9
பெண்ணைப்பெற்றவர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
Reply
#10
பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணின் தகுதிகளுக்கும் பார்க்க ஆண் மேலானவனாக இருக்கவேண்டும் எண்ணத்தில் செயற்படும்போது வரதட்சணையும் இருக்கும்தானே?
.
Reply
#11
சீதணம் வாங்கினவைதான் சீதனத்துக்கு எதிரா கதைக்கினம். நான் வாங்கேல்லை.. ஆனால் மனுசி எனக்குச் சொல்லிப் பேசிச்சுது. அண்ணன் எனக்குக்கேட்ட சீதனத்தை வேண்டாமெண்ட மொக்கு எண்டு. இப்ப நான் சீதனக்கட்சி. வாங்க ஏலுமான அளவு வாங்குங்கடா. அல்லாட்டால் பிறகு அதுக்கும் பேச்சு வேண்டவேண்டிவரும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#13
சீசீசீ....தனம்.....சீர்...தனம்....!

அது சரி எப்பவும் சீதனம் எண்டு தலைப்புப் போட்டா தலைப்பு நல்லா சூடுபிடிக்குது...என்ன விசயம்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
சீதனம் என்னும் பிசாசு உங்களில் எவரையும் தாக்கவில்லையெனில் சந்தோசம்.

நான் இக்கருத்தை இங்கே வைத்தது..
என் தாய்நாட்டில் சீதனம் என்னும் கொடுமையால் முதிர் கன்னிகளாகிக்கொண்டிருக்ககும்
என் சகோதரிகளை கருத்தில் கொண்டு தான்.

இருப்பர்கள் கொடுத்துவிடுவார்கள்.
யாருமே வெளிநாட்டில் இல்லாதவர்கள் அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்...
அவர்கள் நிலையை நினைத்துத்தான்..
Reply
#15
இளைஞர்கள்தான் முன் வரவேண்டும்.
Reply
#16
பொறுங்கப்பா !
நான் இன்னும் வேண்டவுமில்லை கொடுக்கவில்லை. கொடுத்து வேண்டிப்போட்டு சொல்றன் நல்லதோ கெட்டதோ என.........
[b] ?
Reply
#17
இதுக்கு மட்டும் இளைஞர்களைக் கூப்பிடுங்கோ...மற்றும்படி ஆணாதிக்கம்...அடக்குமுறை...பெண்கொடுமை....எல்லாம் எங்கள் தலையில போடுங்கோ....! நாங்கள் சொல்லுறதே விளங்குதில்ல...நாங்கள் செய்யிற சமூகமாற்றங்கள் மட்டும் மிளிரப்போகுதோ என்ன...ஊரோடு ஒட்டி வாழ்வோம்....தமக்கென்று திடமான கொள்கை உள்ளவன் எதிலும் திடமாய்த்தான் இருப்பான்...இருக்கிறான்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
:roll:
Reply
#19
சீதனம் கேட்டவனை வாசல்
விட்டுத் துரத்தியதற்காய்
கிடைத்த பெயர்...

'அடங்காப்பிடாரி , ஆண்மூச்சுப் பிடிச்ச பேய் ,
பெரிய புரட்சிக்காரியெண்ட நினைப்பு"

சீரொன்றும் வேண்டாமென்றவனின்
வயது ஈராறாய் மூத்து நிற்க
அவ்வாழ்வை எதிர்த்தற்காய்
கிடைத்த பெயர்....

'அழகியெண்ட பெரும் நினைப்பு
ஆள்கொஞ்சம் நிறத்தவுடனை
அதுக்குப் பெரும் எடுப்பு"
அத்தோடு நின்றிருந்தால்
அமைதியாயிருந்திடலாம்.

வசைசொல்லி , யாரோ வைத்துள்ளான் இவளை
வாய்கூசாச் சொல்லெல்லாம்
வாயிருந்து நளுவி தீயிட்டு நெஞ்சைச்
சுட்டவனின் முகம் காண
வாழ்ந்து காட்டென்றவன்
காதில் விழும்படியாய்....

'வன்னியானிட்டை என்ன வடிவைக்கண்டாளாம்
வாயுதிர்த்த வார்த்தைகளில் இருந்தது
விடமென்றால் பொய்யில்லை".

அனாமதேயத் தொலைபேசியழைப்பு
உச்சரித்த பெயர் எனதானதால்
வாய்களுக்குள்ளிருந்து வந்தவையெல்லாம்
சாவின் பின்னாலும் சாகத வடுக்கள்.

போகட்டும் விடு எல்லாம்
வாழ்வோம் , வாழ்ந்து காட்டுவோம்
என்ற இனியவன் விழிநனைத்து
நெஞ்சில் அணைதந்து நிமிர்த்திய து}யவன்
எனக்காய் அவன் அழுத இரவுகள் எத்தனையோ....
இந்நாளில் எழுதிவிட முடியாத நாளிகைகள்.

நன்றியென்ற ஒரு சொல்லில்
நம்முறவை இழித்துவிட
நமக்கு எண்ணமில்லை.
அதற்கும் மேலாய்....

சீதனமாய் பெரிய தொகை , சிறிதான சேமிப்பு ,
எதுவுமிங்கு இருக்கவில்லை.
எங்களின் உலகை நாமே தேர்ந்தெடுத்தோம்.

அழும்போது ஆழுக்கொரு மடியில்
விரல்கோதித் தலையணைக்க
அமைதியான து}க்கம்.....
ஆனந்தத்தில் துள்ளும் போது
இருவரும் பகிர்ந்து....
இனிக்கிறது வாழ்வு.....

சிரித்து மகிழச் செல்வங்களிரண்டு
ஆணுமாய் , பெண்ணுமாய்
அழகிய சித்திரங்கள்.
அவர் வாழ்வில் இனியெந்தச்
சில்லெடுப்பும் இருக்காது
வழியமைத்து வழிகாட்ட
எரிமலைகள் கடந்து வந்த
இருவர் நாம் இருக்கையிலே
அவர் வாழ்வும் இனிதாகும்.

சீதனம் என்றவனும் , சீர் வேண்டாம் என்றவனும்
கண்முன்னே எம் நல்வாழ்வு
இது கடவுளின் வரம் காலம் நமக்காய்
கண்திறந்து தந்த வரம்.
போதும் இது.

சீதனமும் தேவையில்லை - இனி
சீரழிவும் தேவையில்லை
பட்டவடு நினைவிருக்க பாதையினி தெளிவாமே.

09.11.03.
Reply
#20
அனுபவமே கவிதையானதோ
வரியோடு ஓசையல்ல
உணர்வு பரவுதே...?!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)