Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீராத் தேடலில் தீயினில் பிறப்பதுவோ விடுதலை...??!
#1
<img src='http://img357.imageshack.us/img357/1862/deltaswiftboeing3ns.jpg' border='0' alt='user posted image'>

<b>தீராத் தேடலில்
தீயில் பிறப்பதுவோ
விடுதலை...??!

தீண்டாக் கனிமமாய்
திட்டுக்களில் கிடந்த போதும்...
தீண்டித் தீட்டி
திடமாய் இலக்கு வைத்த போதும்...
தீயில் தவிழ்ந்து
உருப்பெற்ற போதும்..
தீராத வேட்கை
விடுதலைத் தாகம் எனக்குள்...
தீர்வுகள் தேடும்
அக்னிக் குஞ்சாய்
வானில் பறக்கிறேன்
அண்டம் திறந்து
தேடித் தருவேன்
இருளுக்குள் என்ன...??!
விடுதலை..!

மின்மினிக்குள்
மிணுங்குவதென்ன வைரமா..??!
வட்ட நிலவுக்குள்
வாழ்வதென்ன வாளைக் குமரியா..??!
செக்கச் சிவந்த செவ்வாய்க்குள்
சிவப்பு என்ன தோஷமா..??!
வளையங்கள் தாங்கும் சனிக்குள்
சூத்திரம் என்ன சாத்திரமா..??!
அருந்ததிக்குள்
வாழ்வதென்ன ஆகாய நங்கையா...??!
தேடப் போகிறேன்
எட்டாத் தீர்வுகள்..!

வானில் எப்படி சூரிய "தேவன்"
கையிலையின் வாசலில்
தட்டிக் கேட்கிறேன்...
குறை பிறை சூடிய மசூதிகள்
விட்ட குறை என்ன
இருளுக்குள் வாழும் அல்லாவிடம்
மண்டியிடாமல் கேட்கிறேன்...
தேவன் மகன் - மீண்டும்
இன்னும் வரவில்லை
சிலுவைக்குள் சிக்கியவன்
வானில் எங்கே
தேடிச் சொல்கிறேன்....

சீக்கிரமாய் சிந்தைகள்
விடுதலை வேண்டிட
தீர்வுகள் சுவைத்திட
சீறிப் பாய்கிறேன்
விஞ்ஞானப் பறவையின்
அக்னிக் குஞ்சாய்....

தீராத் தேடலில்
தீயில் பிறப்பதுவோ
விடுதலை...!</b>

<span style='font-size:17pt;line-height:100%'>விஞ்ஞானத்துறையில் (கணிதம் மற்றும் உயிரியல்) சாதனை படைத்திட்ட யாழ் இந்து உயர்தர மாணவர்களின் சாதனைக்கு.. எம் இனிய பரிசாக...</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நீண்ட நாட்களாகி விட்டது.. குருவியின் கவிதைகளைக் கண்டு.. நண்றிகள் குருவி..
::
Reply
#3
கவிதை அருமை. வாழ்த்துக்கள் அண்ணா. அம்மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

என்ன குருவியண்ணா நீண்ட நாட்களின் பின். நலமா? மலரண்ணி நலமா?
----------
Reply
#4
சூப்பர் குருவி அண்ணா.....கவிதை அருமை..வாழ்த்துக்கள்....அதேபோல் அம்மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
தீராத் தேடலில் மிதந்து வந்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
Reply
#6
வாவ் சூப்பர் கவிதை குருவி அண்ணா...
..
....
..!
Reply
#7
குருவிகளின் கிறுக்கல் உங்களுக்கானது...உங்கள் வாழ்த்து மாணவர்களுக்கானது..அதுவே அவர்களை மேலும் மேலும் சாதிக்கத் தூண்டும்...!

வாழ்த்துக்கள் பகிர்ந்த கள உறவுகளுக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<img src='http://img205.imageshack.us/img205/3724/hinduguys9ld.jpg' border='0' alt='user posted image'>

[b]சாதனை படைத்த மாணவர்களுக்கு தமிழீழ அரசும் தனது பரிசையும் பாராட்டையும் அளித்துள்ளது..!

(படம் - புதினம்)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
சாதனை படைத்த யாழ் இந்துவின் மைந்தர்களை பாராட்டி எழுதிய கவிதைக்கு நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
Quote:வட்ட நிலவுக்குள்
வாழ்வதென்ன வாளைக் குமரியா..??!
செக்கச் சிவந்த செவ்வாய்க்குள்
சிவப்பு என்ன தோஷமா..??!
வளையங்கள் தாங்கும் சனிக்குள்
சூத்திரம் என்ன சாத்திரமா..??!
அருந்ததிக்குள்
வாழ்வதென்ன ஆகாய நங்கையா...??!
தேடப் போகிறேன்
எட்டாத் தீர்வுகள்..!

நல்ல வரிகள்.

Quote:அக்னிக் குஞ்சாய்
வானில் பறக்கிறேன்
அண்டம் திறந்து
தேடித் தருவேன்
இருளுக்குள் என்ன...??!
விடுதலை..!

இதன் கடைசி மூன்று வரிகளும் பொருள் பொதிந்தவை.
தேடித் தருவேன்
இருளுக்குள் என்ன..?!

என்றும் கொள்ளலாம்,

இருளுக்குள் என்ன
விடுதலை

என்றும் கொள்ளலாம்.

தொடருங்கள்.


Reply
#11
கவிதை வரிகள் மிக நன்றாக உள்ளது குருவிகாள். தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்.
<b> .. .. !!</b>
Reply
#12
Quote:விஞ்ஞானத்துறையில் (கணிதம் மற்றும் உயிரியல்) சாதனை படைத்திட்ட யாழ் இந்து உயர்தர மாணவர்களின் சாதனைக்கு.. எம் இனிய பரிசாக...
_________________
பரிசு நன்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
tamilini Wrote:
Quote:விஞ்ஞானத்துறையில் (கணிதம் மற்றும் உயிரியல்) சாதனை படைத்திட்ட யாழ் இந்து உயர்தர மாணவர்களின் சாதனைக்கு.. எம் இனிய பரிசாக...
_________________
பரிசு நன்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தரமான பரிசு என்பதால் தானே அக்கா குருவியண்ணா கொடுத்திருக்கிறார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#14
kuruvikal Wrote:[



மிணுங்குவதென்ன வைரமா..??!

வாழ்வதென்ன வாளைக் குமரியா..??!
r

அவர்களுக்கான வாழ்த்து நன்றாக உள்ளது குருவிகளே.

மேலே காட்டியதை கவனியுங்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#15
நன்றி குளக்காட்டான்...சுட்டிக்காட்டியதற்கு...!

மிணுங்குவது - மின்னுவதாக அல்லது மினுங்குவதாக வர வேண்டும்...!

வாளைக் குமரி... சரிதானே... வாளை போல் ( வாளை மீன் - ஒரு வகை மீன் - நளவெண்பாவில் படித்திருப்பீகள்..!) இளமை உள்ள குமரி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
நன்றிகள் குருவிகள் உங்கள் கவிதைக்கு. அத்துடன் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)