Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருகோணமலையில் நேற்று கைக்குண்டுத் தாக்குதல்
#1
திருகோணமலையில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை 9.10 மணியளவில் கைகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. திரு;கோணமலை கண்டி வீதியில் அபயபுரம் சுற்று வளைவில் காவல் கடமையில் இருந்த பொலிசார்மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
.இதில் குணரெத்தின என்ற பொலிஸ் கான்டபிளும்ää அச்சமயம் அதன் வழியாக சென்ற ஏ.கே.உபாலி என்ற சிஙகளவரும் காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். திருக்கோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ள பொலிசார் மீதும் இராணுவத்தினர் மீதும் அண்மைக்காலமாக பல்வேறு கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இவற்றினை நடத்துபவர்கள் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் இளைஞர்கள சந்தேநத்தின் பேரில் கைது செய்யப்பட்டும் இருக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையும் இவ்விடத்திற்கு அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடந்து இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் நகர மத்தியில் பிரதான வீதியில் அமைந்துள்ள சமாதி பிள்ளையார் ஆலயத்தின் பூசகரும் அவரது உதவியாளரும் காயங்களுக:கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வருகின்றனர். இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் ஆரம்பத்தில் தெரிவித்தனர்.
<span style='font-size:14pt;line-height:100%'>Tamiloosai</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)