Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
<b>"பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா எண்டு பாடி..... எதைச்சொன்னார் எண்டு இந்த வேற்றுமை காட்டும் தமிழனுக்கு விளங்கேல்ல...."..


"பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா எண்டு" பாடிய பின்பும் எதற்காக சாதி அடிப்படையில் ஒரு குழுவினருக்கு மட்டும் சலுகைகளும், மரியாதை, கொடுத்து அவ்ர்களின் குழந்தைகளைக் கூட மரியாதையுடன், அடிமைகள், சின்ன எசமானர்களை அழைத்தது போல் அழைக்கிறீர்கள். பாரதியார் எந்தச்சாதியும் இல்லையென்று தான் சொன்னார், 'பார்ப்பன சாதியை மட்டும் விட்டு விடு பாப்பா' என்று பாடவில்லை.


[b]பாரதியார் இன்றிருந்தால் , இதை, அதுவும் ஒரு மானமுள்ள ஓரு ஈழத்தமிழனிடமிருந்து கேட்டிருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்திருப்பார். ஏனென்றால் பாரதியார் தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர்கள் தமிழருக்குச் செய்த கொடுமைகளை எதிர்த்தார். சாதிகள் இல்லையடி பாப்பா, என்று பாரதியார் பார்ப்பன எதிர்ப்புக்காகப் பாடிய பாட்டை ஒரு ஈழத்தமிழன் அதே பார்ப்பான்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் பாவிக்கும் கொடுமையைப் பார்க்க பாரதியார் இன்றில்லையென்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். </b>

பாரதியாரின் பார்ப்பன எதிர்ப்பால் ஆத்திரமடந்த திருவல்லிக்கேணிப் பார்ப்பான்கள் அவரை ஏழையாக்கி, அக்கிரகாரத்திலிருந்து வெளியேற்றினார்கள், பாரதியார், பசியினாலும், வறுமையாலும் வாடினார். ஆனால் தமிழையும், தமிழரையும் இறுதி வரை நேசித்தார்.

இது என்னுடைய முதல் அனுபவம் ஒரு ஈழத்தமிழரின் இணையத்தளத்தில் ஈழத்தமிழர்களிடம் பேசுவது. நான் நினைத்தேன், எங்களை, ஈழத்தமிழரை யாரும் ஏமாற்ற முடியாது. நாங்கள் எங்கள் தலையில் யாரையும் மிளகாய் அரைக்க விடமாட்டோமென்று. ஆனால் எங்களில் பலருக்குத் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதோ, எந்தளவுக்குப் பிராமணர் தமிழெதிரிகள் என்பதும், ஈழத்தமிழர்களை வெறுக்கிறார்கள் என்பதும், ஈழத்துப் பிராமணர்கள் அடக்கி வாசித்தாலும், அவர்களும் தங்களுடைய தமிழ்நாட்டுச் சகோதரர் போன்றே தங்களைத் தமிழராக நினைப்பதில்லை, இலங்கையிலும் ஆரிய சமாஜம் வைத்துக் கொண்டு தங்களை ஆரியர் என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்பது விளங்காமல் இருப்பார்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.

குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை விடாமல், பிராமணரின் தளங்களத்துக்கும் போய் அவர்கள் எந்தளவுக்கு, தமிழெதிரிகள், எந்தளவுக்கு பிராபாகனையும், ஈழ்த்தமிழரையும் வெறுக்கிறார்கள் என்பதை அறியுங்கள்.. நானும் உங்களைப் போல் பிராமணரை எங்களில் ஒருவராக நினைத்த யாழ்ப்பாணச் சைவத் தமிழன் தான்.


<b>"சரியாய் சொன்னீர்கள் தலா. தமிழனுக்குள்ளே இவ்வளவு கருத்து வேறுபாடு என்றால் மற்றைய இனத்துக்கு எங்களை பற்றி எவ்வளவு கருத்து வேறுபாடு இருக்கும்."

பார்ப்பான்களே தங்களைத் தமிழராக நினைக்காத போது மதனா, ஏதோ நான் தமிழருக்கிடையில் கருத்து வேறுபாடு. கொண்டு வருவது மாதிரி கதை விடுகிறார். நான் சொல்வதெல்லாம், ஈழத்துப் பார்ப்பான்களும், இந்தியப் பார்ப்பான்களும் தங்களைத் தமிழராகக் கருதுவதில்லையென்பது தான்.

[b]யாராவது உங்களில் ஒருவர், எந்தவொரு பார்ப்பனத் தலவரும், இந்தியாவிலோ, இலங்கையிலோ, வெளிப்படையாகத் தாங்கள் தமிழர் அல்லது திராவிடரென்று சொன்னதை நிரூபித்தால், நான் என்னுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை இங்கு தெரிவிப்பதை நிறுத்துகிறேன்.</b>
Reply
சரி பிரீத்தி நீங்கள் சொல்பவை சரியெண்டால் ஏன் ஈழத்தில் சாதியத்தை ,பிராமணியத்தை அமுல் படுத்துபவர்கள் வேளாளர் என்பதை மறுக்கிறீர்கள்?
இந்து சமயத்தை சைவ மாக்கச் சொல்கிறீர்கள்,இரண்டுக்கும் என்ன வேறு பாடு?இதனால் தமிழருக்கு என்ன நன்மை?சைவ சமயம் சாதியம் இல்லை என்கின்றதா?பிராமனர் ,சூத்திரர் இல்லை என்கின்றதா?புராணக் கதைகள் பொய் என்கின்றதா? நாம் ஏன் கோவில் செல்ல வேண்டும்?இந்துக் கடவுளர்கள் என்ன சாதி?கடவுளருக்குள்ளும் சாதியம் இல்லயோ?சூரரும்,முனியும் சிவபிரானுக்கு உறவோ?எதை தமிழ் படுத்தச் சொல்கிறீர்கள்?

மூட நம்பிக்கை போக வேண்டும் என்றா உங்கள் விருப்பம் நிறை வேற ,இந்து சமயத்தை தமிழ் படுத்தி ,பிராமணரை இல்லாது ஒழித்தால் காணுமா?இந்து சமயத்தின் அடிப்படை எது?

நீங்கள் சொல்லும் தீர்வு தான் எனக்கு புரியவில்லை,ஆனால் நீங்கள் சொல்லும் பிரச்சனை உண்மயானது என்பதை ஏற்கிறேன்.
Reply
பிரீதி சொல்லுறது வேடிக்கயிலும் வேடிக்கயானது...... அதுவும் மற்றய சாதியை எல்லாம் விட்டுட்டம் பிராமணர் மட்டும் தான் வாழுகிறார்கள் எண்டு கவலைப் படுவது தெரியுது... பாரதி பாடினது சாதிகள் பாக்காதே எண்டு பிராமணனுக்கு மட்டும் தான் பிரீதிக்கு இல்லை என்பது போலிருக்கு.......

பிராமணனைப் பாத்து கூனிக் குறுகி வணங்குற தங்கள் திருந்த மாட்டினமாம்... பிராமணன் திருந்த வேணுமாம்... கேக்கவே கேவலமாய் இருக்கு. ஒரு தமிழனின் பண்பு இதுதானா???...
மற்றவரேயே குற்றம் சொல்லுற நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையா????

இப்ப ஈழப்பிரச்சினையில நீங்கள் சொல்லுறது... பௌத்த பேரினவாதம், சிங்கள பேரினவாதம்... எண்றுதானே.. அதிலும் <b>பௌத்த பேரினவாதம்</b> என்பது.. அடுத்த பெரும்பான்மை சமுகமான சைவர் களுக்கு எத்திரானது... இதில சைவ பிராமணருக்கு எதிரா ஒன்றும் நடக்கவில்லை... ஆனால் தமிழருக்கு எதிரானது மட்டும்தான் என்றா சொல்கிறீர்கள்.......

பூசகர் இல்லாத பிராமணன் 1983 கலவரத்தில பூனூல் போட்டிருந்தான் என்பதற்காக அடித்துக் கொல்லப் பட்டான்... தெரியுமா..... ????

கொல்லும் சிங்களவனே எங்களுக்குள்ளை பிரிவு பார்பதில்லை... ஆனா தமிழன் எண்டு சொல்லிக்கொள்ளும் நீங்கள்தான் நன்றாக பார்க்கிறீர்கள்......

இப்படியே மற்றயவரைத்தாக்கிப் பேசிக்கொண்டிருங்கள்.... உங்களுக்கு விடிவு கிட்டும்..... அதுக்கு மறைந்த நாட்டுப் பற்ராளர் வீரமணி ஐயர் போன்றோர் பாட்டு எழுதுவார்கள்... பாடிப் பரவசம் அடையுங்கள்......

இதுக்கு மேல எனது பொன்னான நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை..
::
Reply
[size=18][b]களப்பொறுப்பளருக்குத் தாழ்மையான வேண்டுகோள்


தயவுசெய்து இதனை மூடிவிடவும்

( எனது தனிப்பட்ட வேண்டுகோள் )


சாதி என்பது நாம் ஒவ்வொருவரும் தாமாய் அறிந்து களையப்பட வேண்டியது. இதில் ஒரு சாதியை மற்றவர்கள் தாக்கிக் கதைப்பது தாம் சார்ந்த சாதியைப் பற்றிய அவர்களின் பெருமிதத்தையே மறைப்பொருளாகக் காட்டுகிறது. இவ்விடயம் அறியாது தாம் சாதியை வெறுப்பவர்கள் என்று தம்மைப்பற்றி பெருமைகொள்கிறாார்கள் சிலர்.

கமுதாயத்தில் ஒருமாற்றத்தை நாம் விரும்பினால் அதற்கு முன்மாதிரியாக நாமே இருக்கவேண்டும். "படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்" என்னும்படி இருக்கிறது இவர்கள் வாதம்.

எப்பவும் தேசியத்திற்கு விரோதமாகக் கருத்தெழுதுபவர்களெல்லாம் ஏதோ அவல் கிடைத்ததுபோல் வெறுவாயை மெல்லுகிறார்கள். அவர்கள் எம் போராட்டத்தை அறிந்தும் அறியாமலிருக்க முற்படுகிறார்கள்.


இவர்கள் தரங்குறைத்து நினைப்பவர்களைச் சேர்ந்தவரைத் தளபதியாகக் கொண்டு ஓர் மாபெரும் படையணியே இருப்பது இவர்கள் அறியவில்லைப்போரும்.

எப்போது தான் அறியாமை நீங்கி முழுமை பெறுவார்களோ???????? :evil: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
நீங்கள் எல்லாரும் பிராமணப் பெண்களின் நிறத்தில் மயங்கி இப்படி தமிழுக்கு எதிராய் கதைக்கிறயள் எண்டது பட்டப்பகலில பரா வெளிச்சம் போட்டுக்காட்டின மாதிரி பளிச்சென்டு தெரியுது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
உங்களால் யாராலும் பிராமணர் தங்களைத் தமிழராகக் கருதுகிறார்கள் அல்லது எந்த ஒரு பிராமணத்தலைவராவது தங்களைத் தமிழராகவோ திராவிடராகவோ அடையாளப் படுத்தினார்கள் என்பதை நிரூபிக்க முடியவில்லை அதனால் பிராமணர்கள் தமிழர்களல்ல. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், ஏன் அவர்களின் தோற்றம் எங்களை விடச் சற்று வேறுபட்டிருப்பது எல்லாமே விவாதத்துக்குரிய விடயம். தமிழரல்லாதவர்களை, அல்லது தாங்கள் தமிழர் என்று சொல்லத் தயங்குபவர்களை நாம் எதற்காக தமிழராக ஏற்றுக் கொள்ள வேண்டும், தெல்லிப்பளைப் பிராமணனும், தில்லிப் பிராமணனும், நல்லூர்ப் பிராமணனும், நாமக்கல் பிராமணனும் கூட தேவையேற்பட்டால் பிராமணர் என்ற முறையில் இணைந்து கொள்வார்கள். நாளைக்கு தமிழீழத்தில் RAW வந்து இறங்கினால் இவர்கள் ஐந்தாம் படையாக இருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.



<b>"சரி பிரீத்தி நீங்கள் சொல்பவை சரியெண்டால் ஏன் ஈழத்தில் சாதியத்தை ,பிராமணியத்தை அமுல் படுத்துபவர்கள் வேளாளர் என்பதை மறுக்கிறீர்கள்?"


நீங்கள் எல்லோரும் நான் ஏதோ நான் சாதியை அழித்தொழிக்கப் புறப்பட்ட மாதிரி நினைத்து, நான் சொல்ல வந்ததைத் திசை திருப்பி விட்டீர்கள். என்னுடைய கருத்தெல்லாம், எங்களுடைய தனிப்பட்ட பிராமண நண்பர்களும், நண்பிகளும் எப்படியிருந்தாலும், ஒரு குழுவாக, ஒரு சமூகமாக அவர்கள் தமிழருக்கும், தமிழுக்கும், தமிழீழத்துக்கும் எதிர்ப்பு.


நான் இலங்கையிலுள்ள நாலைந்து பிராமணரைப் பற்றிக் கதைக்க வரவில்லை. நான் முழுத் தமிழெதிரிப் பார்ப்பான்களையும் ஒன்றாக, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத் தான் பார்க்கிறேன், அவர்கள் இந்தியாவிலிருந்தாலென்ன, இலங்கையிலிருந்தாலென்ன? கனடாவிலுள்ள ஈழத்துப் பார்ப்பான்கள் தமிழர்களைச் சுரண்டிக் கொள்ளையடித்த காசைக் கொண்டு முதலின் காஞ்சிக்குத் தானே போகிறார்கள், வன்னிக்கல்லவே.
பிராமணியம் என்றால் என்ன தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டி அப்பாவி மக்களைச் சுரண்டுவது. பொய்யான சாத்திரங்களைஆதாரம் காட்டி பார்ப்பான்களுக்கொரு நீதி, சூத்திரன்களுக்கொருக்கொரு நீதியை அமுல் படுத்துவது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் வேளாளர் சாதிவெறியைக் காட்டினார்கள் என்று சொல்லலாம். ஆனால் இன்று அப்படியல்ல, பெரும்பான்மையான் வேளாளத் த்மிழர்களின் முழு ஆதரவுமில்லாமல் தமிழீழப் போராட்ட்ம் இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. ஈழப் போராட்ட்த்தின் தலமை வேளாளரிடம் இல்லை, இன்று அவர்களால் எதையும் அமுல் படுத்த மு டியாது.




[b]"இந்து சமயத்தை சைவ மாக்கச் சொல்கிறீர்கள்,இரண்டுக்கும் என்ன வேறு பாடு?இதனால் தமிழருக்கு என்ன நன்மை?சைவ சமயம் சாதியம் இல்லை என்கின்றதா?பிராமனர் ,சூத்திரர் இல்லை என்கின்றதா?புராணக் கதைகள் பொய் என்கின்றதா? நாம் ஏன் கோவில் செல்ல வேண்டும்?இந்துக் கடவுளர்கள் என்ன சாதி?கடவுளருக்குள்ளும் சாதியம் இல்லயோ?சூரரும்,முனியும் சிவபிரானுக்கு உறவோ?எதை தமிழ் படுத்தச் சொல்கிறீர்கள்? மூட நம்பிக்கை போக வேண்டும் என்றா உங்கள் விருப்பம் நிறை வேற ,இந்து சமயத்தை தமிழ் படுத்தி ,பிராமணரை இல்லாது ஒழித்தால் காணுமா?இந்து சமயத்தின் அடிப்படை எது? நீங்கள் சொல்லும் தீர்வு தான் எனக்கு புரியவில்லை,ஆனால் நீங்கள் சொல்லும் பிரச்சனை உண்மயானது என்பதை ஏற்கிறேன்.



நான் ஒன்றும் இந்து சமயத்தைத் தமிழாக்கச் சொல்லவில்லை தமிழரின் சைவசமயத்தைத் தமிழாக்குங்கள் என்கிறேன். தமிழரின் சைவசமயத்தில், வேதங்களுக்கோ ஆதி சங்கரரின் அத்வைதத்துக்கோ இடம் கிடையாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் கட்டி வளர்த்த தமிழரின் சைவசமயத்தில் அத்வைத பிராமணியத்துக்கு இடம் கிடையாது.


தமிழரின் சைவசமயம் என்று சொல்லும்போது, பார்ப்பான்கள் அறிமுகப் படுத்திய சைவ, வைணவப் பிரிவை நினைத்து விடாதீர்கள். வேங்கடமும், தென்குமரியும் தமிழரின் நாட்டின் எல்லைகள், வேங்கடத்தானும், மாயோனும், சேயோனும், கொற்றவையும், குறிஞ்சிக் குமரனும், அரனும், தமிழரின் கடவுளர்.
ஈழத்தமிழரின் சைவசமயம் தேவாரப்பாரம்பரியத்தில் வந்தது.[b] "அங்கமெலாம் அழுகொழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக்கரந்தார்க்கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே"</b> என்று பாடிய திருநாவுக்கரசரின் வார்த்தைகளில் தான், தமிழரின் சமயத்தின் தாற்பரியம் தெரிகிறது.

இந்தச் சாதிப்பாகுபாடும், மனுதர்மமும் பிராமணரால் பலமாக அமுலாக்கப் ப்ட்டது. தமிழர்களின் சைவத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களிலும், சாதிபாகுபாடில்லாமல் அரசர், அந்தணர் தொடக்கம், புலையர், குயவர், வேடர், வரையுள்ளார்கள். இது தான் தமிழரின் சைவசமயத்தின் அடிப்படை.


கவுணிய குலத்தில் பிறந்த ஞானசம்பந்தர் தன்னைச் செந்தமிழ்;வல்ல தமிழ்ஞானசம்பந்தன் என்று சொல்வதோடு நில்லாமல் தமிழ்மொழியை சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ் என வாய்க்கு வாய் போற்றிப் பாடியதோடு <b>தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்"

[b]ஞானசம்பந்தர் பிராமணனராக இருந்தும் அவர் தமிழைப் போற்றினார் வடமொழியை பின்தள்ளினார் என்ற வெறுப்பினால் பிற்கால நந்தன் போல் அவர் உயிரோடு கொளுத்தப்பட்டார். அந்தக் கொலையை மறைக்கவே சோதியில் கலந்தார் என எழுதி வைத்தார்கள்.</b>

திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.


இன்று கூட ஞானசம்பந்தர் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை. ஞானசம்பந்தர் என்ற பெயரை ஆதியிற் சைவ வேளாளர்களாயிருந்து பிராமண ஆசாரங்களைக் கற்றொழுகிப் பிராமணர்களென்று தங்களைக் கூறிக்கொள்ளும் குருக்கள்மார்களுக்குள் மட்டும் ஞானசம்பந்தர் என்ற பெயர் வழங்கி வருகிறது.

திருஞானசம்பந்தரது பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை என்பது மட்டுமல்ல எஞ்சிய சமயகுரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களையும் பிராமணர்கள் வைப்பதில்லை! இன்றுகூட இந்த சமய குரவர் நால்வரும் நீச பாஷையான தமிழில் தேவார திருவாசகம் பாடி இறைவனை வழிபட்டார்கள் என்பதற்காகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.





<b>"பிரீதி சொல்லுறது வேடிக்கயிலும் வேடிக்கயானது...... அதுவும் மற்றய சாதியை எல்லாம் விட்டுட்டம் பிராமணர் மட்டும் தான் வாழுகிறார்கள் எண்டு கவலைப் படுவது தெரியுது... பாரதி பாடினது சாதிகள் பாக்காதே எண்டு பிராமணனுக்கு மட்டும் தான் பிரீதிக்கு இல்லை என்பது போலிருக்கு......."




மற்ற சாதிகள் எல்லாம் அடித்துக் கொண்டாலும், தாங்கள் தமிழர் என்பதில் அவர்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. தாங்கள் தமிழரல்ல, ஆரியர்கள் என்று பார்ப்பான்கள் வாதாடி தங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட www.iyerheritage.com இலே பெருமையுடன் பறை சாற்றும் போது எதற்காக நான் அவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டும். பாரதி "சாதிகள் பார்க்காதே என்று மட்டும் பாடவில்லை. பாரதியார்[b] "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே" </b> என்றும் பாடினார். தலாவுக்கு அது தெரியுமா?




<b>"பிராமணனைப் பாத்து கூனிக் குறுகி வணங்குற தங்கள் திருந்த மாட்டினமாம்... பிராமணன் திருந்த வேணுமாம்... கேக்கவே கேவலமாய் இருக்கு. ஒரு தமிழனின் பண்பு இதுதானா???... மற்றவரேயே குற்றம் சொல்லுற நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையா????



தலா முன்னுக்குப் பின் முரணாகப் பின்னுகிறார். அவர் முதலில் பார்ப்பான்களைச் சாதி பார்க்கக் கூடாதென்று பாரதியாரையும் துணைக்குக் கூட்டி வந்து கொண்டு சொன்ன போது, எதற்காக பார்ப்பான்களுக்கு சாதியடைப்படையில் நாங்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நான் கேட்ட கேள்வியை என்னிடமே திருப்பிப் போடுகிறார். [b]தலாவுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது.</b>




<b>["இப்ப ஈழப்பிரச்சினையில நீங்கள் சொல்லுறது... பௌத்த பேரினவாதம், சிங்கள பேரினவாதம்... எண்றுதானே.. அதிலும் பௌத்த பேரினவாதம் என்பது.. அடுத்த பெரும்பான்மை சமுகமான சைவர் களுக்கு எத்திரானது... இதில சைவ பிராமணருக்கு எதிரா ஒன்றும் நடக்கவில்லை... ஆனால் தமிழருக்கு எதிரானது மட்டும்தான் என்றா சொல்கிறீர்கள்....... பூசகர் இல்லாத பிராமணன் 1983 கலவரத்தில பூனூல் போட்டிருந்தான் என்பதற்காக அடித்துக் கொல்லப் பட்டான்... தெரியுமா..... ???? கொல்லும் சிங்களவனே எங்களுக்குள்ளை பிரிவு பார்பதில்லை... ஆனா தமிழன் எண்டு சொல்லிக்கொள்ளும் நீங்கள்தான் நன்றாக பார்க்கிறீர்கள்.."....



எனக்கும் பிரிவு பார்க்க விருப்பமில்லைத் தான், ஆனால் எந்தப் பார்ப்பான்களும் முன்வந்து நாங்கள் தமிழர் தான் அல்லது நாங்களும் திராவிடர்கள் தான் என்று சொல்ல மறுக்கிறார்களே. அதற்கு நான் என்ன செய்வது. 1983 கலவரத்தில் சிங்களவர், யாழ்ப்பாணத்து ஆடு நின்றாலும் வெட்டித் தானிருப்பார்கள். 9/11 ஐச் செய்தது அரேபியர் ஆனால், வெள்ளை இனவெறியர்களால் சீக்கியர்கள் கொல்லப்படவில்லையா. அது போலத் தான் இதுவும்.





[b]"இப்படியே மற்றயவரைத்தாக்கிப் பேசிக்கொண்டிருங்கள்.... உங்களுக்கு விடிவு கிட்டும்..... அதுக்கு மறைந்த நாட்டுப் பற்ராளர் வீரமணி ஐயர் போன்றோர் பாட்டு எழுதுவார்கள்... பாடிப் பரவசம் அடையுங்கள்."</b>



டொலரால் அடித்தீர்கள் என்றால் கனடாச் சின்னமணி ஐயர், உங்கட வீரமணி ஐயரை விழுங்கி விடுகிற மாதிரிப் பாட்டு எழுதித் தருவார், நீங்களும் பரவசமாக ஜால்ரா போடலாம்.
Reply
Aruvi Wrote:[size=18]<b>களப்பொறுப்பளருக்குத் தாழ்மையான வேண்டுகோள்


தயவுசெய்து இதனை மூடிவிடவும்

( எனது தனிப்பட்ட வேண்டுகோள் )


சாதி என்பது நாம் ஒவ்வொருவரும் தாமாய் அறிந்து களையப்பட வேண்டியது. இதில் ஒரு சாதியை மற்றவர்கள் தாக்கிக் கதைப்பது தாம் சார்ந்த சாதியைப் பற்றிய அவர்களின் பெருமிதத்தையே மறைப்பொருளாகக் காட்டுகிறது. இவ்விடயம் அறியாது தாம் சாதியை வெறுப்பவர்கள் என்று தம்மைப்பற்றி பெருமைகொள்கிறாார்கள் சிலர்.

கமுதாயத்தில் ஒருமாற்றத்தை நாம் விரும்பினால் அதற்கு முன்மாதிரியாக நாமே இருக்கவேண்டும். "படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்" என்னும்படி இருக்கிறது இவர்கள் வாதம்.

எப்பவும் தேசியத்திற்கு விரோதமாகக் கருத்தெழுதுபவர்களெல்லாம் ஏதோ அவல் கிடைத்ததுபோல் வெறுவாயை மெல்லுகிறார்கள். அவர்கள் எம் போராட்டத்தை அறிந்தும் அறியாமலிருக்க முற்படுகிறார்கள்.


இவர்கள் தரங்குறைத்து நினைப்பவர்களைச் சேர்ந்தவரைத் தளபதியாகக் கொண்டு ஓர் மாபெரும் படையணியே இருப்பது இவர்கள் அறியவில்லைப்போரும்.

எப்போது தான் அறியாமை நீங்கி முழுமை பெறுவார்களோ???????? :evil: :roll:


[b]இது தான் எனது கருத்தும்...</b> பேசாமல் மூடிவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது...

ஒரு இனத்தைத்(தொழில் செய்பவரை) தாள்த்தி தான் முன்னேற வேண்டும் எண்ட தேவை தமிழனுக்கு இல்லை.... தடைகள் களயப்பட்டு வாழ்வதுதான் வாழ்க்கை... அந்த வீரம் தமிழனுக்கு இருக்கு... மற்றயவரை தூற்றுவது எமக்கு இழுக்கு........
::
Reply
<b>"மடியில் கனமில்லாவிட்டால் வழியில் என்ன பயம்"</b> என்றொரு பழமொழியுண்டு. அதன் கருத்து எங்களிடம் மறைக்க ஒன்றுமில்லாவிட்டால் யாருக்கும் பயப்படத்தேவையில்லை என்பதாகும். இந்த தமிழ் இணையத் தளத்தில் தமிழருக்குச் சம்பந்தமான விடயத்தைத் தமிழருடன் கலந்துரையாடுவ்தில் என்ன பயம்.

தமிழருக்கிடயிலுள்ள களைகளை அகற்றுவதிலும், கூட இருந்து குழி பறிப்பவர்களை அடையாளம் காண்பதிலும், இன்று இத்தனை வீரவேங்கைகளின் இரத்தத்தை சிந்திய பின்பும் எங்களின் விடுதலைப் போராட்டம் அரைகுறையில் நிற்பதற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிப் பார்ப்பான்கள் தான், அவர்களைப் பற்றி ஈழத்தமிழர்களுக்கு எடுத்துரைக்க இந்த இணையத் தளம் உதவாது விட்டால் இருந்தென்ன பயன்.

சிலர் தங்களின் தமிழர் முதுகில் அவர்கள் குத்தும், குத்திய துரோகத்தனமும், வண்டவாளங்களும் வெளியே வந்து விடும் என்று பயப்படுகிறார்கலள் போலிருக்கிறது. ஈழத் தமிழர்களும் இளிச்ச வாயர்களாக, தமிழெதிரிகளும், பார்ப்பன ஆதரவு மூலகங்களும் இந்த ஈழத்தமிழர்களின் இணையத் தளத்தைக் தங்களுக்காதரவான் விடயங்களை மட்டும் விவாத்திகும் வண்ணம் கடத்திப் போக அனுமதிப்பார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்.
Reply
வருங்காலத்தில பிராமணருக்கு எதிராக உடல் ரீதியான தாக்குதல் நடைபெற்றால் அதுக்கு <b>பிள்ளையார்</b> சுளி போடப்பட்ட இடங்களில........... யாழ்களமும் இருக்கும்....

பெருமையா இருக்கு....
::
Reply
<b>"வருங்காலத்தில பிராமணருக்கு எதிராக உடல் ரீதியான தாக்குதல் நடைபெற்றால் அதுக்கு பிள்ளையார் சுளி போடப்பட்ட இடங்களில........... யாழ்களமும் இருக்கும்.... "

பார்ப்பான்களுக்காக இந்தளவு வக்காலத்து வாங்கும் 'தலா' இதுவரை நான் பார்ப்பான்களைப் பற்றிச் சொன்ன எதையும் மறுத்து தன்னுடைய பக்க நியாயங்களை முன் வைத்ததில்லை. நாம் தமிழர், தமிழையும், தமிழீழத்தையும் எதிர்க்கும், எங்களின் விடுதலைப் போராட்டத்தை இழிவு படுத்தும் பார்ப்பான்களைப் பற்றிக் கலந்துரையாடும் இந்தச் செய்தியை மூடி விட முயற்சி செய்யும் தலாவுக்கு ஜனநாயகத்திலோ அல்லது பேச்சுச் சுதந்திரத்திலோ நம்பிக்கையில்லை.

[b]ஈழத்மிழர்களின் வரலாற்றிலேயே, எங்களைத் தாக்காதவர்களை நாம் என்றுமே உடல் ரீதியாகவோ, உளரீதீயாகவோ தாக்கியதில்லை. ஈழத்தமிழன் என்றுமே வலியச் சண்டைக்குப் போனதுமில்லை, ஆனால் வந்த சண்டையை விடுவதுமில்லை.</b>

ஈழத்திலுள்ள நாலைந்து பார்ப்பான்களுக்கும் எங்களுக்கிடையிலான நல்லுறவைக் கருத்திற் கொண்டு ஒரு சமூகமாக பார்ப்பான்களும் அவர்களது தலைவர்களான சங்கராச்சாரி, சோ ராமசாமி, இந்து ராம் இன்னும் மற்றும் பல எண்ணற்ற பார்ப்பான்கள் ஈழத்தமிழருக்கும், தமிழீழ விடுதலைக்கும் செய்யும் துரோகத்தையும், தமிழீழ விடுதலை வீரர்களை அவர்களின் தியாகங்களைக் கொச்சைபடுத்தி இழிவு படுத்துவதையும், ஈழத் தமிழர்களுக்கு இப்படியான இணையத் தளங்களில் எடுத்துரைக்க முனையும் என்னைப் போன்றவர்களின் வாய்களை மூடி, செய்திகளை மூடி மறைக்க முயற்சி செய்பவர்களிடம் தான் ஈழத்தமிழர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். "இவையெல்லாம் உடன் பிறந்தே கொல்லும் நோய்"
Reply
சரி ப்ரீத்தி தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம், நீங்கள் கோட்பாட்டு ரீதியாகத் தர்க்கித்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.


[quote="preethi"]நான் ஒன்றும் இந்து சமயத்தைத் தமிழாக்கச் சொல்லவில்லை தமிழரின் சைவசமயத்தைத் தமிழாக்குங்கள் என்கிறேன்.

ஏன் எமக்கு சைவ சமயம் வேண்டும்? நீங்கள் கூறுவதுபோல் இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகள் முதல் சைவசமயம் தமிழரின் மதமாக இருந்திருக்கலாம்,எனது கேள்வி தமிழரின் மதங்களாக பொவுத்தம்,சமணமும் இருந்தது.ஏன் நாம் ஆயிரம் ஆண்டுகள் பின் நோக்கிச் செல்வான்


தமிழரின் சைவசமயத்தில், வேதங்களுக்கோ ஆதி சங்கரரின் அத்வைதத்துக்கோ இடம் கிடையாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் கட்டி வளர்த்த தமிழரின் சைவசமயத்தில் அத்வைத பிராமணியத்துக்கு இடம் கிடையாது.


தமிழரின் சைவசமயம் என்று சொல்லும்போது, பார்ப்பான்கள் அறிமுகப் படுத்திய சைவ, வைணவப் பிரிவை நினைத்து விடாதீர்கள்.

அப்படியாயின் நீங்கள் கூறும் சைவசமயத்திற்கும் ,சைவ,வைணவத்திற்கும் என்ன வேறு பாடு?வரலாற்று ரீதியாக எக் காலத்தில் நீங்கள் கூறும் சைவ மதம் இருந்தது?

வேங்கடமும், தென்குமரியும் தமிழரின் நாட்டின் எல்லைகள், வேங்கடத்தானும், மாயோனும், சேயோனும், கொற்றவையும், குறிஞ்சிக் குமரனும், அரனும், தமிழரின் கடவுளர்.

நீங்கள் கூறும் கடவுளர்கள் சங்க காலத்தில் அல்லவா இருந்தனர்,இவர்களைப் பற்றி சமயக் குரவர்கள் தேவாரம் பாடவில்லயே,அவர்கள் பாடியது தோடுடய செவியன் அல்லவா,இவர்கள் வாழ்ந்தகாலம் சங்க காலம் அல்லவே?
திரு ஞான சம்பந்தர் ஒரு பிராமணர் என்கின்றீர்கள் ,அப்ப அவர் வளர்த்த சமயம் என்ன சமயம்? இவர் சமணத்திற்கும்,பவுத்தத்திற்கும் எதிராக அல்லவா ,மதவெறியைய்க் கட்டவிழ்த்துவிட்டவர்?மணிமேகலை,சிலப்பதிகாரம் என்கின்ற பொவுத்த தமிழ் நூல்கள் இக் காலத்தில் அல்லவா அழித்து ஒழிக்கப்பட்டன?

இன்று எமக்கு ஏன் தேவைய் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய சமயம்,இது அக் காலத்தில் நிலவிய சமூக அமைப்பு முறைகளுக்கு பொருத்தமானதாக இருந்திருக்கலாம்,அதுவே இக் காலத்திற்கும் பொருந்தும் என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? நாங்கள் புலத்தில் கோவில்களைக் கட்டாமல்,தமிழ் பாடசாலைகளயும், நூல் நிலயங்களையும்,கலை பண்பாட்டு நிலயங்களயும் அமைக்கலாம் அல்லவா?எமது மதமாக, நல் வழியாக மனித நேயத்தையும்,சகோதரத்துவத்தயும்,சம தர்மத்தையும் பின் பற்றலாம் அல்லவா?அறிவியல் ரீதியாக எமது சமுதாயத்தை வழி நடாத்தலாம் அல்லவா?எவ்வளவு காலத்திற்கு பழங்கதை ,பழம் பெருமை பேசி இருக்கப் போகிறோம்?
Reply
preethi Wrote:<b>\"வருங்காலத்தில பிராமணருக்கு எதிராக உடல் ரீதியான தாக்குதல் நடைபெற்றால் அதுக்கு பிள்ளையார் சுளி போடப்பட்ட இடங்களில........... யாழ்களமும் இருக்கும்.... \"

பார்ப்பான்களுக்காக இந்தளவு வக்காலத்து வாங்கும் 'தலா' இதுவரை நான் பார்ப்பான்களைப் பற்றிச் சொன்ன எதையும் மறுத்து தன்னுடைய பக்க நியாயங்களை முன் வைத்ததில்லை. நாம் தமிழர், தமிழையும், தமிழீழத்தையும் எதிர்க்கும், எங்களின் விடுதலைப் போராட்டத்தை இழிவு படுத்தும் பார்ப்பான்களைப் பற்றிக் கலந்துரையாடும் இந்தச் செய்தியை மூடி விட முயற்சி செய்யும் தலாவுக்கு ஜனநாயகத்திலோ அல்லது பேச்சுச் சுதந்திரத்திலோ நம்பிக்கையில்லை.

[b]ஈழத்மிழர்களின் வரலாற்றிலேயே, எங்களைத் தாக்காதவர்களை நாம் என்றுமே உடல் ரீதியாகவோ, உளரீதீயாகவோ தாக்கியதில்லை. ஈழத்தமிழன் என்றுமே வலியச் சண்டைக்குப் போனதுமில்லை, ஆனால் வந்த சண்டையை விடுவதுமில்லை.</b>

ஈழத்திலுள்ள நாலைந்து பார்ப்பான்களுக்கும் எங்களுக்கிடையிலான நல்லுறவைக் கருத்திற் கொண்டு ஒரு சமூகமாக பார்ப்பான்களும் அவர்களது தலைவர்களான சங்கராச்சாரி, சோ ராமசாமி, இந்து ராம் இன்னும் மற்றும் பல எண்ணற்ற பார்ப்பான்கள் ஈழத்தமிழருக்கும், தமிழீழ விடுதலைக்கும் செய்யும் துரோகத்தையும், தமிழீழ விடுதலை வீரர்களை அவர்களின் தியாகங்களைக் கொச்சைபடுத்தி இழிவு படுத்துவதையும், ஈழத் தமிழர்களுக்கு இப்படியான இணையத் தளங்களில் எடுத்துரைக்க முனையும் என்னைப் போன்றவர்களின் வாய்களை மூடி, செய்திகளை மூடி மறைக்க முயற்சி செய்பவர்களிடம் தான் ஈழத்தமிழர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். "இவையெல்லாம் உடன் பிறந்தே கொல்லும் நோய்"

அவனை(எனது நண்பன்) விடும் எனக்குப் பதில் சொல்லும்... நான் பிராமணன் தான்... நான் திருமணமுடித்தவர் பிராமணத்தி அல்ல... ஆனாலும் நாங்கள் மகிழ்ச்சியாய்தான் இருக்கிறம்...

இப்ப சொல்லும் நான் உமக்கு என்ன செய்தனான் பிரீதி.... எனது மைத்துணி பிராமணத்தி வீரவேங்கை... (மாவீரர்) அவர்கள் உங்களுக்கு என்ன செய்தனர்...

எனது தந்தை 1983 கலவரத்தில சிங்களவனால் அடித்தும் பின் எரித்தும் கொல்லப் பட்டார்... அவர் தமிழனாதலால் தான் கொல்லப் பட்டார்...நீர் சொன்னது போல் எல்லாரும் கொல்லப்பட வில்லை..... தவிர ஒரு முஸ்லீமும் கொல்லப் படவில்லை... கொல்லப் பட்டவன் எல்லாம் தமிழன்..... ஐயன் எண்று வித்தியாசம் பார்க்கவில்லை.... அவர்களுக்கு தெரியாத வித்தியாசம் உமக்குதெரிகிறது...

ஈழத்தில எத்தினை வீதமான ஐயர் பூசாரி... தெரியுமா உமக்கு.... அது அவர்களின் தொழில் உமக்கு பிடிக்காட்டில்.. அந்தக்கடையில சாமான் வாங்காதீர்... எல்லாப் பிராமணனும் ஒண்டு எண்டு விதண்டாவாதத்தை விட்டுட்டு நாட்டுக்கு பிரியோசனமாய் ஏதவது செய்யும்...

நான் இதுவரை செய்தாச்சு... எனது உடலில 14 காயம் ஒரு கால் வளங்காது... கிட்டத்தட்ட 24 சண்டை .. எனது ஆட்டம் முடிஞ்சாச்சு... முடிஞ்சா நீரும் போய் செய்யும்...
தமிழனைக் கூறு போடுவதை நிப்பாட்டும்...
Reply
அண்ணை அவர் திறந்த மனத்தோடை கருத்தாட வந்தால் தான் மற்றவரின் கருத்துக்களையும் உள்வாங்கிற பக்குவம் இருக்கும்.

அவர் செய்யிறது விதண்டவாதம். ஏதே ஒரு முடிவேட வந்திருக்கிறார் ஆசை தீர ஏழுதட்டும். இது வரை எழுதினது அவருடைய சுயருhபத்தை காட்டிட்டுது.
Reply
<span style='color:red'><b>\"ஈழத்தில எத்தினை வீதமான ஐயர் பூசாரி... தெரியுமா உமக்கு.... அது அவர்களின் தொழில் உமக்கு பிடிக்காட்டில்.. அந்தக்கடையில சாமான் வாங்காதீர்... எல்லாப் பிராமணனும் ஒண்டு எண்டு விதண்டாவாதத்தை விட்டுட்டு நாட்டுக்கு பிரியோசனமாய் ஏதவது செய்யும்... நான் இதுவரை செய்தாச்சு... எனது உடலில 14 காயம் ஒரு கால் வளங்காது... கிட்டத்தட்ட 24 சண்டை .. எனது ஆட்டம் முடிஞ்சாச்சு... முடிஞ்சா நீரும் போய் செய்யும்... தமிழனைக் கூறு போடுவதை நிப்பாட்டும்...\"


நானும் இலங்கைத் தமிழன் தான் சும்மா இந்தப் பம்மாத்தெல்லாம் என்னிடம் விட வேண்டாம், பிராமணர்கள் அதிலும் தமிழ் நாட்டுப் பார்ப்பான்கள், தமிழுக்கும் தமிழருக்கும், புலிகளுக்கும் எதிரிகள் என்று நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. உம்முடைய மைத்துனி வீரவேங்கையின் பெயரைச் சொல்லும். உண்மையை அறியலாம். உம்முடைய மனவி பிராமணத்தியில்லை என்கிறீர், மைத்துனி பிராமணத்தி என்கிறீர். இலங்கையில் மனைவியின் தங்கையை மைத்துனி என்போம், மாமாவின் மகளை மச்சாள் என்போம். எங்கேயோ உதைக்கிறதே!!

நான் முன்பே சொன்னது போன்று இலங்கையிலுள் நாலைந்து நல்ல பார்ப்பான்களுக்கிடையில் எங்களுக்குள்ள நட்புக்காக, பார்ப்பான்கள் ஒரு சமூகமாக தமிழருக்கும், தமிழருக்கும் செய்த, செய்து கொண்டிருக்கின்ற துரோகங்களை மேல் நோக்காகப் பார்க்கக் கூடாது.
பிராமணர்கள் தமிழ்நாட்டிலும், எங்கள் மத்தியிலும் பல நூற்றாண்டுகளாக தமிழைப் பேசிக் கொண்டு தமிழரின் தயவிலும் நல்லெண்ணத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் தமிழரென்றோ, திராவிடரென்றோ ஏற்றுக் கொள்வதில்லை.

[b]என்னுடைய எதிர்ப்பெல்லாம் தமிழைப் பேசிக்கொண்டே தமிழினதும், தமிழனதும் முதுகில் குத்தும் பார்ப்பான்களுக்கே தவிர ஒரு சில உங்களைப் போன்றவர்களுக்காக அல்ல. நீங்கள் சொல்வதை முற்றாக நம்பாது விட்டாலும் கூட. ஈழத்தமிழன் என்ற முறையில், நீங்கள் சொன்னவற்றின் உண்மை, பொய்களை அறியும் பொறுப்பை நல்லூர்க்கந்தனின் காலடியில் காலடியில் போட்டு விட்டு ஒரு போராளியென்ற முறையில் உமக்குத் தலை வணங்குகிறேன்.</b>

எங்களில் பலருக்கும் நல்ல சிங்கள நண்பர்கள் உள்ளார்கள். 1983 கலவரத்தின் போது கூட எத்தனையோ சிங்களவர் தமிழர்களைப் பாதுகாத்தார்கள். அந்த ஒரு சில சிங்களவருக்காக நாங்கள், சிங்களவர்கள் இனவாதிகளல்ல என்று வாதாடுவதில்லை. இதைத் தான் கதிர்காமரும் செய்தார். தன்னுடைய தனிப்பட்ட சிங்கள் நட்புக்காக முழுத் தமிழினத்தையும் காட்டிக் கொடுத்தார். ஒரு சில சிங்கள நண்பர்களுக்காக, முழு பெளத்த சிங்கள இனவாதத்தையும் மூடி மறைத்து , சிங்களவரை மிகவும் சிறந்த ஜனநாயகவாதிகளாக உலகுக்குக் காட்டினார்.<b> இதே போன்று உங்களைப் போன்று ஒரு சிலருக்காக முழுப்பார்ப்பானர்களின் தமிழெதிர்ப்பையும், தமிழருக்குச் செய்யும் துரோகங்களையும், தட்டிக் கழிக்கவோ, மூடி மறைக்கவோ நான் தயாராக இல்லை.</b>

நானும் இந்தியாவின் பார்ப்பான்களிடம் பழகும் வரை எல்லாப் பிராமணர்களையும் தமிழர்களையும் எங்களில் ஒருவராகத் தான் நினைத்திருந்தேன். அவர்களின் எண்ணத்தை அறிந்த பின்பு தான் எனக்கு, ஈழத்துப் பார்ப்பான்களுக்குத் தமிழருக்கு மேலுள்ள எண்ணக்கருத்தை அறிய விளைந்தேன். இந்தியாவிலுள்ள பார்ப்பான்களும், இலங்கைப் பார்ப்பான்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்ற என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை.

வெள்ளைத்தோலில் ஆசையுள்ள(white skin craze) இங்கேயுள்ள பல இளம் ஈழத் தமிழர்கள்( எனக்குமொன்றும் வயதாகிவிடவில்லை), பிராமண நடிக, நடிகைகளில் உள்ள மோகத்ததால் நான் பிராமணரை எதிர்ப்பதையும், அவர்கள் தமிழர் என்று தங்களைக் கருதுவதில்லையென்பதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களின் சினிமா மோகம் கண்களை மறைக்கிறது.


என்னுடைய அனுபவத்தில் இணையத்தளங்கள் எல்லாம் தமிழெதிரி (anti Tamil) பார்ப்பான்களால் நிரம்பி வழிகிறது. அவர்கள் எல்லாத் தளங்களிலும் ஈழத்தமிழரைக் கேலி பண்ணித் தங்கள் தமிழ் வெறுப்பைக் காட்டத் தயங்குவதில்லை. அவர்கள் தங்களின் பார்ப்பன சமுதாயத்தில் மிகவும் அக்கறை, இங்கு நான் அவர்களின் முகமூடியைக் கிழிப்பதால் இங்கு வந்தும், இப்படியான செய்திகளை எழுதி, தங்களை நல்லவர்களாகக் காட்டி, என்னையும் மற்றத் தமிழர்களையும் பிரிப்பார்கள் அல்லது வெள்ளாள எதிர்ப்பைக் கிளப்பி ஈழத்தமிழர்கலைப் பிரிப்பார்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்ப்பான்கள் இதைச் செய்ததுண்டு. போர் முடிந்து விட்டது ஆனால் பிரச்சாரப் போர் இன்னும் இணையத் தளங்களிலெல்லாம் நடந்து கொண்டு தானிருக்கிறது. நீரும் அந்தப் பார்ப்பான்களில் ஒருவர் தான் என்பது என்னுடைய சந்தேகம். பிரித்தாள்வதில் பார்ப்பான்களை வெல்ல யராலும் முடியாது. RAW வை விடச் சிறந்தவர்கள்.


<b>\"அண்ணை அவர் திறந்த மனத்தோடை கருத்தாட வந்தால் தான் மற்றவரின் கருத்துக்களையும் உள்வாங்கிற பக்குவம் இருக்கும். அவர் செய்யிறது விதண்டவாதம். ஏதே ஒரு முடிவேட வந்திருக்கிறார் ஆசை தீர ஏழுதட்டும். இது வரை எழுதினது அவருடைய சுயருபத்தை காட்டிட்டுது.\"</b>

ஐயா குறுக்காலபோவான்.
நான் திறந்த மனத்தோடு, திடமான மனத்தோடும் இங்கு வந்திருக்கிறேன். எந்தக்கருத்தையும் கேட்டு அதற்கு என்னுடைய கருத்தைத் தெரிவிக்கும் மனப்பக்குவம் எனக்குண்டு. சும்மா அவசரப்பட்டு மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பெழுதுவது அறியாமையின் முதல் அறிகுறியென்பதை அறிந்து கொள்ளும்.
</span>
Reply
preethi Wrote:பிரித்தாள்வதில் பார்ப்பான்களை வெல்ல யராலும் முடியாது. RAW வை விடச் சிறந்தவர்கள்.
....
.....
சும்மா அவசரப்பட்டு மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பெழுதுவது அறியாமையின் முதல் அறிகுறியென்பதை அறிந்து கொள்ளும்.

:roll: :roll: :roll:
Reply
காசு கொடுத்து ஏமாந்துவிட்டு இங்கே வந்து புலம்புவதில் என்ன அர்த்தம்?

ஈழத்தில் பிராமணர் என்று வலுவான சாதியமைப்பு இல்லை. எனக்குத் தெரிந்து யாழ்ப்பாணத்தில் இல்லை. அவர்கள் இந்தியாவைப்போல் தமக்கென்று தனியான மொழிநடையைக் கூடக் கொண்டிருப்பதில்லை.
சமூகத்திலிருந்து தம்மை வித்தியாசமாகக் காட்டிக்கொள்வதுகூடக் குறைவு.
இந்த நிலையில் ஈழத்துப் பிராமணர்கள் ஈழப்போராட்டத்துக்கு எதிரானவர்கள் என்றும் தமிழுக்கு எதிரானவர்கள் என்றும் கதைவிடுவது விசமத்தனமானது.
அதிலும் ஒருவர் தன் வீரச்சாவடைந்த மைத்துனி பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவென்று சொன்னபோது அவரது பெரையும் ஆதாரத்தையும் தரச்சொல்லிக் கேட்பது சுத்த அயோக்கியத்தனம். குறிப்பாகப் போராளிகளையும் மாவீரர்களையும் இந்தச் சாதிச்சண்டைக்குள் இழுத்து அவர்களின் பெயர்விவரங்களைக் கொண்டு வாதிப்பது.
ஏன் ஈழத்தில் யாரும் பிராமணக்குடும்பத்திலிருந்து வந்து போராடவில்லையென்று சொல்கிறீர்களா?
எத்தனை நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஏன் மாவீரர் பட்டியலில் பார்த்தால் தெரியுமே, குறைந்தபட்சம் சர்மா என்ற ஒட்டுப்பெரோடு எத்தனை பெயர்களுண்டென்று.

அதுசரி, வெளிநாட்டில் தமிழில் ஏன் அர்ச்சனை செய்வதில்லையென்று கேட்கும் நீங்கள், தமிழ் மீட்பு, தமிழ் காப்பு, ஈழமீட்பு என்று கதைவிடும் வன்னியில், புலிகளின் கட்டுப்பாடான வன்னியில் எந்த மொழியில் பூசை நடக்கிறதென்று சொல்லமுடியுமா? அல்லது அங்கே தமிழில்தான் பூசை நடப்பதாக யாராவது வால்பிடிகள் சொல்லிக்கொண்டிருப்பதை நம்பிக்கொண்டிருக்கிறீர்களா?
ஆக மூன்றே மூன்று கோவில்களின்தான் வன்னியில் தமிழில் பூசை நடத்தப்பட்டது, அதுவும் பரீட்சாத்த முயற்சியாக. புலிகளாலேயே இன்னும் தமிழில் பூசை நடத்தும் முறையைக் கொண்டு வரமுடியவில்லை. இதற்குள் புலம்பெயர் நாட்டில் ஏன் மாற்றம் வரவில்லை என்று கேட்பது சுத்த அறிவிலித்தனம் அல்லது விதண்டாவாதம்.

பார்ப்பனியம் என்ற சொல்லை இலங்கையில் பிராமணருக்குப் பொருத்துவது வேடிக்கை.
அதுசரி, தமிழில் இன்றுவரை எமக்குக் கிடைக்கப்பெற்ற நூல்களுள் காலத்தால் முந்தியது எது தெரியுமா? இன்றுவரை அதைவைத்துத்தான் தமிழை வளர்க்கிறார்கள் தெரியுமா? அது தவறான நூல் என்று இன்றுவரை எந்தத் தமிழறிஞனும் மறுக்கவில்லை என்பதோடு அதை வைத்தே தமது வாதங்களையும் ஆராய்ச்சிகளையும் செய்கின்றனர். அதை எழுதியது ஓர் ஆரியப்பார்ப்பனன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
ஆக, தனியே பார்ப்பனியம் என்பதை ஈழத்தமிழருக்கும் தமிழுக்குமான எதிரி என்று சொல்வதை நான் மறுக்கவில்லை. எனது கருத்தும் அதுதான். ஆனால் அதை ஈழத்தில் பொருத்தி, அடிப்படையில் சக்தியற்ற ஒரு கூட்டத்தை இக்குற்றச்சாட்டுக்குள் கொண்டுவந்து சாடுவது கண்டிக்கப்படவேண்டிது.

மற்றச்சாதிகளாக தாம் நினைப்போரை (கவனிக்க நான் சாதி பிரிக்கவில்லை) மதிக்காத தன்மை, பிராமணரைவிடவும் மற்றவர்களிடம் ஏராளமுண்டு. வாள் தூக்கிச் சண்டை பிடித்ததும் வெட்டுக்கொத்து நடந்ததும் பிராமணர்களிடத்திலா? யாழ்ப்பாணச் சாதித்தடிப்பு பிராமணர்களிடத்தில்தான் இருக்கிறதா?

தமிழுக்காகச் சேவைசெய்து கொண்டிருக்கும் பத்மநாப ஐயரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
ஈழப்போராட்டத்துக்கும் சாதியமைப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை. எல்லாப்பிரிவிலும் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்.
இங்கே புலிகளின் வால்பிடிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு புலிகளின் தலைவர்களால் குறிப்பாக பேபி அண்ணை, தமிழேந்தி அப்பா ஆகியோரின் கூற்றுக்களை வைத்தே என்னால் வாதிட முடியும். அவர்களை நேரிலே அறிந்தவன், அவர்களின் இதுசம்பந்தமான கலந்துரையாடல்களில் இருந்தவனென்ற அடிப்படையில்.
Reply
யுனிகோட்டில் இன்னொரு பக்கத்தில் எழுதி அதை வெட்டி ஒட்டியிருந்தேன். அப்படி ஒட்டும்போது பெயர் என்று நானெழுதிய சொல் 3 இடத்திலும் தவாறாக வந்துள்ளது. இதைப் பரீட்சித்துப் பார்த்தபோதும் மீண்டும் தவறாகவே காட்டுகிறது. எனவே அப்பிழையைப் பொருட்படுத்த வேண்டாம். என் கணியில் யாழ்களத்துக்குரிய எழுத்துருமாற்றிப் பெட்டியில் தட்டச்சுவது கடினமாக உள்ளது. அதனாற்றான் வேறொரு செயலியில் தட்டச்சி வெட்டி ஒட்டினேன்.
Reply
//<i><b>ஈழத்திலுள்ள நாலைந்து பார்ப்பான்களுக்கும் எங்களுக்கிடையிலான நல்லுறவைக் கருத்திற் கொண்டு ஒரு சமூகமாக பார்ப்பான்களும் அவர்களது தலைவர்களான சங்கராச்சாரி, சோ ராமசாமி, இந்து ராம் இன்னும் மற்றும் பல எண்ணற்ற பார்ப்பான்கள் ஈழத்தமிழருக்கும், தமிழீழ விடுதலைக்கும் செய்யும் துரோகத்தையும், தமிழீழ விடுதலை வீரர்களை அவர்களின் தியாகங்களைக் கொச்சைபடுத்தி இழிவு படுத்துவதையும், ஈழத் தமிழர்களுக்கு இப்படியான இணையத் தளங்களில் எடுத்துரைக்க முனையும் என்னைப் போன்றவர்களின் வாய்களை மூடி, செய்திகளை மூடி மறைக்க முயற்சி செய்பவர்களிடம் தான் ஈழத்தமிழர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். "இவையெல்லாம் உடன் பிறந்தே கொல்லும் நோய்"//</b></i>

மேற்குறிப்பிட்டவர்களின் வஞ்சகப் பரப்புரையைக் கண்டித்துப் பதிவுகள் போடுங்கள். அவர்களின் கூற்றுக்களைக் காட்டி அவர்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுங்கள்.
அதைவிட்டுவிட்டு ஈழத்துப்பிராமணர்களையும் அந்த வகைக்குள் அடக்கி வாதிடுவது (அதுவும் மேம்போக்காக, எந்த ஆழந்த கருத்தோ ஆதாரமோ வாதமோ இல்லாமல்) சரியன்று.
இந்து ராம் போன்றவர்களைத் தோலுரித்துக் காட்டவென்று தனித்தளமே ஒருவரால் இயக்கப்டுகிறது. அதைப்போல அல்லது அதில் தவறவிடப்பட்டவற்றை நீங்களும் சொல்லி ஆவணப்படுத்தலாம்.
ஏதாவது பிரியோசினமாயிருக்கும்.
Reply
kurukaalapoovan Wrote:
preethi Wrote:பிரித்தாள்வதில் பார்ப்பான்களை வெல்ல யராலும் முடியாது. RAW வை விடச் சிறந்தவர்கள்.
....
சும்மா அவசரப்பட்டு மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பெழுதுவது அறியாமையின் முதல் அறிகுறியென்பதை அறிந்து கொள்ளும்.
:roll: :roll: :roll:

RAW இன் சூத்திரதாரிகளே பார்ப்பான்கள், சோ ராமசாமி, இந்து ராம், தமிழ்நாட்டில் பிராமணரின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாம், ஈழத்தமிழருக்கும், தமிழீழவிடுதலைக்கெதிராக எழுதுவதையும், கருணாவுக்கு அதிகாரம் இருப்பது போலவும். கிழக்கு மாகாணத்தமிழர்கள் எல்லோரும் தமிழீழத்தை வெறுப்பது போன்றும், யாழ்ப்பாணத்தார் எல்லோரும் மட்டக்களப்பு மக்களை அடிமைகளாக வைத்திருப்பது போன்றும் கட்டுககதைகளை இயற்றியும், ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்களை எதிர்க்கும் வில்லன்கள் போன்றும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் பார்ப்பனக் கூட்டத்தின் பிரித்தாளும் குணத்தை <b>நான் சொல்ல, அதைப் புரிந்து கொள்ள முடியாத குறுக்காலபோவான், பாவம், கண்ணைக், கண்ணைச் சிமிட்டுகிறார்.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
<b>நல்லவன்</b>said:


<b>"<<அதுசரி, தமிழில் இன்றுவரை எமக்குக் கிடைக்கப்பெற்ற நூல்களுள் காலத்தால் முந்தியது எது தெரியுமா? இன்றுவரை அதைவைத்துத்தான் தமிழை வளர்க்கிறார்கள் தெரியுமா? அது தவறான நூல் என்று இன்றுவரை எந்தத் தமிழறிஞனும் மறுக்கவில்லை என்பதோடு அதை வைத்தே தமது வாதங்களையும் ஆராய்ச்சிகளையும் செய்கின்றனர். அதை எழுதியது ஓர் ஆரியப்பார்ப்பனன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? >>"</b>


எந்தளவுக்குப் பார்ப்பான்கள் தமிழரைச் சிறுமைப்படுத்தி தொல்காப்பியம் தொடக்கம் பரதநாட்டியம் வரை தமிழருடைய நூல்கள் கலைகள் எல்லாவற்றையும் சமஸ்கிருத மயமாக்கித் தமிழர்கள் ஒன்றையும் இயற்றவில்லை, எல்லாவற்றையும் வடமொழியில் இருந்து தான் கடன் வாங்கினர் என்று செய்த கபடத் தனத்துக்கு இந்த "ஆரியப் பார்ப்பனர்" எழுதிய தொல்காப்பியக் கதை நல்ல உதாரணம்.

இதை இன்னும் நம்பும் <b>நல்லவன்</b> போன்றவர்கள் இருக்கும் வரை ANTI TAMIL பார்ப்பான்களின் பாடு கொண்டாடந்தான்.

இடைக்காலத்தில் இருவேறு கருத்துக்கள் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் பார்ப்பன குலத்தவனாக இருக்க வேண்டும். மற்றொன்று தமிழில் நூல் செய்தால், அது வடமொழியில் இருந்து மொழிபெயர்த்ததாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கவேண்டும்.

தொல்காப்பியம் எமக்கு இன்று கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முந்தியது என்பதை எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது தொல்காப்பியம் நீர்மையும் தண்மையும் வண்மையும் தொன்மையும் நிறைந்த தமிழ்மொழியின் எழுத்துச் சொல் இலக்கணத்தையும் தமிழ்மக்களின் வாழ்வியல் இலண்கணத்தையும் (பொருள்) விளக்கும் சிறந்த நூல் ஆகும். மொழி, வாழ்வு இரண்டையும் இணைத்து இலக்கணம் சொன்ன சிறப்பு தொல்காப்பியத்துக்கு மட்டுமே உண்டு.

எழுத்ததிகாரம் ஒலி அளவு, உயிர், மெய் என்ற பிரிவுகள், குறில், நெடில். வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மொழிமரபு, புணரியல் போன்றவற்றுக்கு இலக்கணம் சொல்கிறது.

சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லின் சிறப்பும் திணை பால் முதலிய உயிர்ப்புகுப்பு உயிரியல் பகுப்பு முறையும் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்துக் காரணத்தோடு அமைக்கப்பட்டுள்ளன என்பவற்றை விளக்கிக் கூறுகிறது.

பொருளதிகாரம் நிலம் பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பாவின் பண்பு, மெய்ப்பாடு, உவமயியல், மரபியல் பற்றிச் சொல்கிறது.

<b>இவ்வளவு சீரும் சிறப்பும் நிறைந்த நூலைத் தமிழ்ப் புலவர் ஒருவர் இயற்றி இருப்பாரா? ஒருக்காலும் இருக்காதே! இருக்க முடியாதே! பின் தொல்காப்பியர் எழுதாவிட்டால் யார் அதனை இயற்றி இருப்பார்?

தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் அன்று, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல்.! இது தான் ஐயா பார்ப்பனர்களின் ஆரியக் கூத்தின் உச்சக்கட்டம்(climax).


தொல்காப்பியர் வரலாறு போலவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் முதல் குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்தி திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தவராகவும் காட்டல் வேண்டிக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனர். </b>
<b>இப்படிப் பார்ப்பான்கள் தமிழுக்குச் செய்த பழி ஏராளம், ஏராளம்!!</b>



<b><<"ஆக, தனியே பார்ப்பனியம் என்பதை ஈழத்தமிழருக்கும் தமிழுக்குமான எதிரி என்று சொல்வதை நான் மறுக்கவில்லை. எனது கருத்தும் அதுதான். ஆனால் அதை ஈழத்தில் பொருத்தி, அடிப்படையில் சக்தியற்ற ஒரு கூட்டத்தை இக்குற்றச்சாட்டுக்குள் கொண்டுவந்து சாடுவது கண்டிக்கப்படவேண்டிது.>>"


பார்ப்பனீயம் தமிழருக்கெதிரானது என்பதை ஒத்துக் கொண்டமைக்கு நன்றி. பார்ப்பான்கள் எங்கிருந்தாலும் பார்ப்பனீயமும் அங்குண்டு. ஈழத்தில் அதன் வீரியம் குறைந்திருக்கலாம். பல்லுப் பிடுங்கிய பாம்பாக இருந்தாலும் பாம்பு, பாம்பு தான்.





[b]<<"ஏன் மாவீரர் பட்டியலில் பார்த்தால் தெரியுமே, குறைந்தபட்சம் சர்மா என்ற ஒட்டுப்பெரோடு எத்தனை பெயர்களுண்டென்று.>>"</b>


நீங்களே ஓட்டுப் பெயர் என்று சொன்னபின்பு நான் பெரிதாக விளக்கம் சொல்லத்தேவையில்லை. அவையெல்லாம் வெறும் ஒட்டுப் பெயர்கள். முஸ்லிம் புனை பெயர்கள் கொண்ட எல்லாப் போராளிகளும் முஸ்லிம்களல்ல. சர்மா என்ற ஒட்டுப் பெயருள்ள போராளிகளெல்லாம் பார்ப்பான்களல்ல.



<b>"<<<அதுசரி, வெளிநாட்டில் தமிழில் ஏன் அர்ச்சனை செய்வதில்லையென்று கேட்கும் நீங்கள், தமிழ் மீட்பு, தமிழ் காப்பு, ஈழமீட்பு என்று கதைவிடும் வன்னியில், புலிகளின் கட்டுப்பாடான வன்னியில் எந்த மொழியில் பூசை நடக்கிறதென்று சொல்லமுடியுமா? அல்லது அங்கே தமிழில்தான் பூசை நடப்பதாக யாராவது வால்பிடிகள் சொல்லிக்கொண்டிருப்பதை நம்பிக்கொண்டிருக்கிறீர்களா?
ஆக மூன்றே மூன்று கோவில்களின்தான் வன்னியில் தமிழில் பூசை நடத்தப்பட்டது, அதுவும் பரீட்சாத்த முயற்சியாக. புலிகளாலேயே இன்னும் தமிழில் பூசை நடத்தும் முறையைக் கொண்டு வரமுடியவில்லை. இதற்குள் புலம்பெயர் நாட்டில் ஏன் மாற்றம் வரவில்லை என்று கேட்பது சுத்த அறிவிலித்தனம் அல்லது விதண்டாவாதம்.>>></b>

இது விதண்டாவாதமோ, அறிவிலித்தனமோ இல்லை, ஆற்றாமை. தமிழர்களின் கையாலாகாத்தனமையை நினைத்துக் கவலயும், ஆதங்கமும்.

வன்னியில் அதுவும் தமிழீழ்த்தில் தமிழை நடைமுறைப் படுத்த முடியவில்லையென்றால் எந்தளவுக்கு பார்ப்பனத்தால் நாங்கள் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறோம் என்று தெரிகிறதா. பார்ப்பானகள் வடமொழி தேவபாசையென்று கோயில்களில் அறிமுகப் படுத்தினார்கள், ஆனால் ஓரு கடவுளின் பாசை எப்படிச் செத்த மொழியாகியது என்பது தான் விந்தையிலும், விந்தை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .

புலிகளால் நடத்த முடியவில்லை என்பதற்காக புலம்பெயர் நாட்டில் ஏன் நடைமுறைப் படுத்தக் கூடாது. நீங்கள் சொல்வது போல் ஈழத்துப் பார்ப்பான்கள், இந்தியப் பார்ப்பான்கள் போலல்ல, "அவையெல்லாம் போராளிகள் குடும்பம், நம்மட ஆக்கள்" <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்றால் அவர்களும் ஒத்துழைப்பார்கள், ஓத்துழைக்க வேண்டும். ஏன் தமிழில் பூசை நடத்தும் முறையை புலம்பெயர்ந்த நாடுகளில் கொண்டு வர முடியாது?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)