Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வழிபாடு
-நக்கீரன் (கனடா)-


திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வழிபாடு நடைபெற வேண்டும் என்று குரல் இன்று தமிழகத்திலும் கனடாவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இங்குள்ள கீதவாணி வானொலியில் திருக்கோயில் வழிபாடு செந்தமிழில் நடைபெற வேண்டுமா இல்லையா? என்ற வாதம் நடைபெறுவதாக அறிகிறேன்.

திருக்கோயில் வழிபாட்டில் தமிழில் அர்ச்சனை என்பது வாதத்துக்கு அப்பால்பட்டது. அது மனிதவுரிமை பற்றியது ஆகும். தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பது மனிதவுரிமை மீறலாகும்!

திருக்கோயில்களில் தமிழில் அருச்சனை செய்வதற்கு இறைவனுக்குச் சிக்கல் இல்லை. இடையில் உள்ளவர்களுக்குத்தான் சிக்கல். சிவபெருமானே தமிழை அகத்தியருக்குக் கற்பித்தார் என்பது ஐதீகம். எனவே தமிழ் கடவுள் மொழிதான். அது அர்ச்சனைக்கு உகந்த மொழிதான்.

தமிழில் அர்ச்சனை, தமிழ்முறைப்படி குடமுழுக்கு, வேதம் படித்த அனைத்துச் சாதியினரும் புூசகர்களாக ஆகலாம் என்ற கோட்பாடுகளை அர்ச்சகர்கள் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள். அர்ச்சனை செய்வது அர்ச்சகர்களின் பிறப்புரிமை என்று கூறி அவர்கள் நீதிமன்றம் சென்று வாதாடினார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இப்படி இவர்கள் தமிழ்மொழிப் பயன்பாட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பதற்காகவே அர்ச்சகர்களில் ஒரு சாரார் தமிழ் அர்ச்சனையை எதிர்க்கிறார்கள்.

இந்து மதத்தில் மட்டுமே ஒரு குறிப்பிட்ட சாதியினர் வேதாகமம் படிக்கும் உரிமையையும், திருக்கோயில்களில் அர்ச்சனை செய்யும் உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்படுகிறது. ஒரு பிராமணன் எவ்வளவு ஒழுக்கக் கேடனாக இருந்தாலும், கல்வி கேள்வியில் எவ்வளவு தாழ்ந்தவனாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக வேதாகமம் படிக்கும் உரிமையையும், அர்ச்சனை செய்யும் உரிமையையும் பிறப்பின் அடிப்படையில் பெற்றுவிடுகிறான்.

கனடாவில் உள்ள எந்த சைவாலயமும் சிற்ப, சாத்திர, ஆகம விதிகளுக்கு அமையக் கட்டப்படவில்லை! கோவிலின் அமைப்பு மனித உடம்பை ஒத்ததாக அமைக்கப்பட வேண்டும். இங்குள்ள பல கோயில்கள் முன்னைய பண்டகசாலைகள். அங்கு கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நாந மண்டபம், அலங்கார மண்டபம், சபாமண்டபம், கொடிமரம். பலிபீடம், நந்தி எதுவுமே இல்லை. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றில் தீர்த்தம் இல்லை.

மேலும் பிராமணர்கள் கடல் கடக்கப்படாது என்பது விதி. அந்த விதியும் மீறப்பட்டுள்ளது.

கோயில்களில் தெய்வத்தின் பெயரால் நடைபெற்ற உயிர்ப் பலிகள், தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், தலித் ஆலயப் பிரவேசம் வேதாகம விதிகளுக்கு ஒப்ப இருந்தபோதிலும் கூட இன்று சட்ட புூர்வமாக அவை தடைசெய்யப்பட்டு விட்டன.

இவ்வாறு சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் மீறப்படும்போது ஆலயங்களில் தமிழில் போற்றி செய்தால் அது சைவாகம விரோதம் எனக் கூச்சல் இடுவதில் பொருள் இல்லை.

மேலும் சமஸ்கிருத மொழியில் செய்யப்படும் வேதாகம சம்மேளனக் கிரிகைகளுக்கு மட்டுமே மந்திர சக்தி உண்டென்றும் காஞ்சி காமகோடிபீட ஜெயேந்திர சங்கராச்சாரியார் வாதிடுவதிலும் பொருள் இல்லை. அது தமிழ் மீது அவர்களுக்கு ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வெறுப்பையும் காழ்ப்பையும் வெளிப்படுத்துகிறதேயொழிய மெய்யறிவை வெளிப்படுத்தவில்லை.

தி.மு.க ஆட்சியின்போது தமிழக அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் 1998 ஆம் ஆண்டு தமிழகக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற அரசாணை ஒன்றை வெளியிட்டார். அப்போது அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தமிழகம் முழுக்கக் குரல்கள் கிளம்பின.

'தாய்மொழி தமிழைப் புறக்கணிக்கச் சொல்பவர்கள் மீண்டும் புதுவேகம் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். இது வேதனைக்குரிய விடயம். உலகம் முழுக்க உள்ள பசுக்கள் அந்தந்த மொழிகளில் பேசுவதில்லை. ~அம்மா| என்றுதான் தமிழில் கத்துகின்றன. பெருமைவாய்ந்த தமிழ் மொழியைப் புறக்கணிக்கச் சொல்வது, தாயைப் புறந்தள்ளி விட்டு வேறொருத்தியைத் தாய் என்று சொல்வது போன்றது" என மதுரை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சொல்லி இருக்கிறார்.

அர்ச்சனை மட்டுமல்ல குடமுழுக்கும் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வரும் பேரூராதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் 'ஆகம விதிகள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஆகமம் எந்த சாதிக்கும் சொந்தமானதல்ல. எல்லா இனத்துக்கும் பொதுவானது.

ஒரு குறுகிய எல்லைக்குள் இருந்துகொண்டு, எல்லாமே நாங்கள்தான் என்று சிலர் சொல்வதை ஏற்க முடியாது. தமிழைத் தீண்டத்தகாத மொழி என்று சொல்லும் அளவுக்கு சிலருக்கு உள்ளத்துணிவு வந்திருப்பதே இந்த நாட்டுக்கு கேவலம். தமிழா, வடமொழியா என்பதல்ல இப்போதைய சிக்கல். எங்கள் மொழியில் எங்களை வழிபட விடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

கடவுளை நேருக்கு நேர் காண வழிவகுத்த மொழி தமிழ், முதலை விழுங்கிய பாலகனை மீட்க உதவிய மொழி தமிழ். இம்மொழியில் குடமுழுக்கு நடத்துவதைத் தவறு என்று சொல்கிற சிக்கலான இன்றைய சூழ்நிலையை ஒன்றுபட்டு நின்று சமாளித்தாக வேண்டும். இனி நடக்கும் எந்தக் குடமுழுக்கும் தமிழில்தான் நடக்க வேண்டும். நடந்தே தீரும். சம்ஸ்கிருதம் வேண்டுவோர் அந்த மொழியில் செய்துகொள்ளட்டும். தமிழில் செய்வதை அவர்கள் தடுக்கக்கூடாது" என்று எச்சரிக்கும் தொனியில் தெரிவித்திருந்தார்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்திலேயே தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து ஆராயக் குழு அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று தமிழில் அர்ச்சனை செய்ய உத்தரவும் வந்துவிட்டது. அப்போதும் சிலர் அதை எதிர்த்தார்கள் என்பது வேறு விடயம்.

இன்றைய முதல்வர் ஜெயலலிதா தமிழுக்கு எதிரியல்ல. எல்லா இனத்தவரும் அர்ச்சகராகலாம் எனச் சொல்லி அவர்களுக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்க வேத பாடசாலை நிறுவியவர். அவர் நாத்திகர் அல்ல. மாறாக நல்ல ஆத்தீகர். அடிப்படைவாத இந்து.

'தமிழை வலியுறுத்துவது கோயில் அர்ச்சகர்களுக்கு எதிரானது அல்ல. எனவே, யாருடைய து}ண்டுதலுக்கும் ஆளாகி அர்ச்சகர்கள் தமிழை எதிர்க்க வேண்டாம். ஜெயேந்திரர் ஏன் இதை எதிர்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. தமிழைத் தடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்தவர் முன்னாள் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.

'பொதுமக்கள் மனது வைத்தால், அவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் எந்தத் தடைகளையும், சட்டங்களையும் தூள் தூளாக்கலாம். தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று மக்கள் அர்ச்சகர்களிடம் வலியுறுத்தி கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் அர்ச்சனை தெரியாதே என்று எந்த அர்ச்சகரும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், நான் அமைச்சராக இருந்தபோது இதற்காகவே போற்றி நு}ல்களைத் தயாரித்துத் தந்துள்ளோம்.

எல்லா சாமிகளுக்கும் நவக்கிரகங்களுக்கும் போற்றி நு}ல்கள் உள்ளன. அதிலும் தற்போது அம்மன் வழிபாடு அதிகம் என்பதால் காளி, துர்க்கை மற்றும் மாரியம்மன்களுக்கும் கூடப் போற்றிப் பாடல்களைத் தமிழில் வழங்கியுள்ளோம். ஆகம விதிகளைச் சொல்லி நீண்ட நாள் ஏமாற்ற முடியாது. ஏழாம் நு}ற்றாண்டுக்கு முன்பு எந்த ஆகம விதி இருந்தது? தமிழைத் தடுப்பவர்களிடம் இருந்து தமிழைக் காக்க, விழிப்புடன் இருக்க வேண்டியது உங்கள் கடமை." இப்படிச் சொன்னவர் முன்னாள் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்க் குடிமகன்.

முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் காலத்திலேயே தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1971ம் ஆண்டு அதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இப்போது சைவ, வைணவ அறிஞர்களால் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்த நு}ல்களிலிருந்து போற்றி வரிகள் தொகுக்கப்பட்டு, தமிழ் நாடெங்கிலும் உள்ள ஆதீனகர்த்தர்களின் பார்வைக்கு அனுப்பி அவர்களது ஒப்புதலின் பின் அர்ச்சனை நூல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

இதுவரை (1997) தமிழில் அர்ச்சனை நடைமுறைப்படுதப்படும் கோவில்கள் 3127. தமிழில் லட்சார்ச்சனை நடத்தப்பட்ட கோயில்கள் 1082. தமிழில் கோடி அர்ச்சனை நடத்தப்பட்ட கோயில்கள் 11. ஒலிபெருக்கி மூலம் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்படும் கோயில்கள் 1068.

ஆனால் தமிழ் அர்ச்சனையை எதிர்த்து அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 'தேவநாகரி மொழி" (வடமொழி) மட்டுமே இறைவனுக்கு உகந்தது என்பது அவர்களது வாதமாகும்.

தமிழில் அர்ச்சனை செய்யத் தொடங்கினால் இதுவரை காலமும் தாங்கள் அனுபவித்து வந்த ஏகபோக தொழில் உரிமைக்கு (ஆழnழிழடல) எங்கே ஆபத்து வந்து விடுமோ என்ற சுயநலம் காரணமாகவே ஒரு சில அர்ச்சகர்கள் அப்படி நினைக்கிறார்கள். எல்லோரும் அல்ல. எடுத்துக்காட்டாக கனடா சிறீ துர்க்கையம்மன் கோயில் பிரதம குருக்கள் தமிழ் அர்ச்சனையை ஆதரிக்கிறார். ஏற்கனவே தமிழில் அர்ச்சனை வழிபாடு செய்கிறார். அண்மையில் தமிழில் அர்ச்சனை வழிபாடுபற்றி அவரிடம் நான் கேட்ட போது வடமொழி அர்ச்சனை மந்திரம் ஒன்றை எனக்குச் சொல்லிக் காட்டி அதன்; பொருளைத் தமிழில் சொல்லி, அவ்வாறு அந்த மந்திரத்தை தமிழில் சொல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றார்.

அர்ச்சனை செய்வதற்கு தமிழுக்குத் தகுதி இல்லை என்று கூறுவது உலகிலுள்ள ஏழு கோடி தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும். வடமொழிதான் கடவுளுக்குப் புரியும் என்பது கடவுளையும் அவன் சக்தியையும் குறைத்து மதிப்பிடுவதாகும். உலகில் உள்ள மொழிகள் எல்லாமே இறைவன் தந்த மொழிகள்தான். அதை பேதப்படுத்திப் பார்க்கவேண்டிய அவசியமில்லை.

தமிழில் போற்றி (அர்ச்சனை) மற்றும் குடமுழுக்குச் செய்வதை சாதாரண அர்ச்சகர்கள் தொடங்கி காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் வரை எதிர்க்கிறார்கள். அவை சமஸ்கிருதத்தில்தான் செய்யப்பட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் எவை?

(அ) கடவுளுக்கு தமிழ் உகந்த மொழி அல்ல. பாரம்பரியமாக சமஸ்கிருதத்திலேயே மந்திரங்கள் சொல்லி அபிசேகம், ஆராதனையெல்லாம் நடத்தப்பட்டு வருகின்றன.

(ஆ) ஆகம விதிகளின்படி சமஸ்கிருதத்திலே மட்டும்தான் குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நடத்தலாம். தமிழில் செய்ய ஆகம விதிகளில் இடமில்லை.

(இ) மீறித்தமிழில் நடத்தினால் அது கடவுளின் கோபத்திற்கு உள்ளாக்கும் செயலாகிவிடும். அதனால் நாட்டில் இயற்கை உற்பாதங்கள் நேரிடும், நாட்டு மக்களுக்கு பெரும் தீங்குகள் விளையும்.

தமிழ் அர்ச்சனையை எதிர்ப்பவர்கள் தங்கள் நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்க சைவாகமத்தைக் கேடயமாகத் து}க்கிப் பிடிக்கிறார்கள்.

'ஆகம விதிப்படி கட்டிய கோயிலில் ஆகம விதிப்படிதான் கும்பாவிஷேகம் (குடமுழுக்கு) நடத்த வேண்டும். யாகசாலைகளில் வேத மந்திரங்கள்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆகமவிதி. தமிழில் மந்திரங்களுக்குரிய பதங்கள் கிடையாது. மந்திரங்களை விட்டு திருமுறைகளை ஓதலாம். ஆனால் அதனால் பலன் கிட்டாது. தமிழ்த் தோத்திரங்களுக்கு மரியாதை இருந்தாலும் அவற்றுக்கு மந்திர சக்தி கிடையாது. ஆன்மீக பலனும் கிடைக்காது" என வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலையில் முதல் எதிரியாக குற்றம் சாட்டப்பட்டருவம் இப்போது சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துவிட்ட காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் கூறுகிறார்.

இதன் பொருள் என்னவென்றால் இந்துக் கடவுளர்க்குத் சமஸ்கிருதம் மட்டுமே புரியும். இந்துக் கடவுளர்க்குத் தமிழ் புரியாது. சமஸ்கிருதம் மட்டுமே மந்திர சக்தி உள்ள மொழி. சமஸ்கிருதமொழிக்கு உள்ள மந்திரசக்தி தமிழுக்குக் கிடையாது என்பதாகும்.

ஆகம விதிகளின்படி இன்று கோயில் வழிபாடு புூசை இடம்பெறுவது குறைந்து வருகிறது. மேலே கூறியவாறு ஆகமம் தமிழர்களில் ஒரு சாராரை தீண்டப்படாதவர் என முத்திரை குத்தி அவர்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வதைத் தடை செய்;கிறது. வழிபட்டால் சாமிக்கு தீட்டுப்பட்டுவிடும் என்று சொல்கிறது. ஆனால் இன்று தீண்டாமை அனுட்டிப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இரண்டிலும் இதற்கான தடைச் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

ஆகமத்தில் அய்யப்பன்சாமி என்ற ஒரு சாமியே இல்லை. ஆனால் இன்று ஆகமத்துக்கு விரோதமாக அய்யயப்பன் வழிபாடு நடக்கிறது. எனவே ஆகமத்தைக் காரணம் காட்டி தமிழ் அர்ச்சனையையோ தமிழ்முறை குடமுழுக்கையோ எதிர்க்க முடியாது!

ஆகமத்தில் இடமில்லை அல்லது ஆகம விரோதம் என்று சொல்லி ஆகமத்தை ஒரு ஆயுதமாக தமிழுக்கு எதிராக எப்போதும் தூக்குகிறார்களே? ஆகமம் என்றால் என்ன? ஆகமம் தமிழ்மொழி வழிபாடு பற்றி என்ன சொல்கிறது?

நீதிபதி டாக்டர் எஸ்;. மகராசன் தலைமையில் கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யலாமா என ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது. நீதிபதி மகராசன் குழு அதையிட்டுப் படித்து ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுத்தது.

கோயில்களில் யார் அர்ச்சகர் ஆகலாம் என ஆகமங்களில் வரையறை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த ஆகமங்கள் பற்றியும் அதில் காலத்துக்குக் காலம் இடம் பெற்றுள்ள இடைச்செருகல் பற்றியும் நீதிபதி மகராசன் குழு விளக்குகிறது.
Reply
பிராமணர்கள் தமிழர்கள எதிர்க்கினமா எண்டு எனக்கு தெரியாது :roll: ஏனெண்டா கோயிலுக்கு போய்க் கனகாலம். உதுக்குத் தான் சொல்றது அடிக்கடி கேகாயிலுக்கு போனா உதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.

மரபு தெரியாமல் மரப உடைக்கேலாது தானே?இலக்கணமுஇ தெரியாமல் இலக்கணத்த மீறேலாது தானே? ஆதான் எல்லாத்தயும் தெரிஞ்சு வச்சிருக்கோணும். பிராமணரை எதிர்க்கிறத விட்டிட்டு பிராமணியத்த எங்கட மக்களிட்ட இருந்து வெளியேத்துறது நல்லம் எண்டு எனக்கு படுது. பிராமணரை வெளியேத்தாமல் பிராமணியத்த எப்பிடி வெளியேத்துறது எண்டு நீங்கள் கேக்குறீங்களா? வெளியேத்தலாம் . மக்களின்ர மனநிலைய அதுக்கு மாத்தோணும்.
Reply
preethi Wrote:இங்கு என்னுடைய நோக்கம் யாரின் மனதையும் நோகடிப்பதல்ல. எனக்கு எது சரியாகப் படுகிறதோ அதை சொல்லுகிறேன். எல்லோரும் என்னுடைய கருத்தையுடையவர்களாக இருப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் குறைந்த பட்சம் ஈழத்தமிழர்கள், பிராமணருக்கும், தமிழருக்குமிடையிலான, இந்த ஒட்டுண்ணிக்கும், கிருமிகாவிக்குமுள்ள உறவை கொஞ்சம் கூர்ந்து பார்க்க மாட்டார்களா என்பது தான்.....................


இதுக்கு மேல கதை ஓண்டு வேற சொன்னீங்கள்.. சுவையாய் இருந்தது..(கிழவிக்கதை தான்) அது சரி ஈழத்தில இருந்து எந்தப் பாப்பணன் கனடாவந்து கோயில் கட்டினான்.... கட்டினது பார்ப்பணன் இல்லதவை... அதுசரி 5$ க்கு அரிச்சனைச் சிட்டை காசு ஐயருக்கு போகுதெண்டு யார் சொன்னவை உங்களுக்கு... அந்தக் காசுக்காகத்தான் கோயில் கட்டிவைச்சிருக்கினம் தமிழர்... இதில எங்கை அய்யா வந்தான் பார்ப்பணன்... தமிழரை அண்டிப்பிளைப்பவர்தான் அவர்கள் அதுக்காக இப்பிடியா????...


இப்பெல்லாம் வேதப்பாடசாலைகள பிராமணர் இல்லதவருக்கும் வேதங்கள் சொல்லிக் கொடுக்குது... வேண்டுமானால் சொல்லுங்கோ விலாசம் இந்தியா ஈழம் எங்கு வேணுமெண்டாலும் தாறன்.. நீங்களே பூசையும் செய்யலாம் உங்கட கோயில்தானே.... :wink:
கிழவியை ஏசியது தவறுதான் அது தனிமனிதனின் தவறு அதுகாக ஒரு இனத்தை துவேசிக்கிறதும் தவறுதான்...

அது தவிர கோயிகளில இங்கிலண்டில இல்ல கனடாவில இருக்கிற ஐயர்களில 90% வீதமானவர் இந்தியர்.. நீங்கள் குடுக்கிற 600$ சம்பளத்தை நம்பி இருக்கிற தேவை ஈழத்து ஐயனுக்கு இல்லை.. காரணம் மேற்கு நாடுகளின் மதவுரிமைச்சட்டம்.. மதத்தலைவர் அல்லது பூசகர்களுக்கு வளங்குகிறது... இங்குவந்து தஞ்சம் கோரினால் ஐயர் அல்லது பூசகர் என்பதற்காக வதிவுரிமை சலுகைகள்.. வதிவிடம் என்பதெல்லாம் வளங்கி வாழ வைக்கிறார்கள்..

குழப்பமாயிருந்தால் இங்கு சட்டத்தரணிகள்.. குருவிகள், நித்திலா விடம் கேழுங்கோ....

[b]கள உறவுகள் மன்னிக்கவும்

ஐயர் மாரிற்கு தாயகத்தில பற்றில்ல எண்டு எந்த ஆதாரத்தில சொல்லுறீங்கள்...... தேசியத்தலைவரை மதிக்கவில்லையா???? பிற்போக்குத்தனமாய் வருடப்பிறப்பன்று தலைவரின் குறிப்பை எடுத்துப் பார்த்து தமிழரின் எதிர்காலம் பற்றி பந்தி பந்தியாய் எழுதுவினமே அதுவா ???

அதை விட நிறைய மாவீரரை என்னால் சொல்ல முடியும்... அதில் கரும்புலிகளும் அடங்கும் (உங்களின் விதண்டா வாதத்துக்கு அவர்கள் வேண்டாம்) இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா??? இல்லை நாட்டில் பற்றில்லாமலா இருக்கிறார்கள்... முடிந்தால் ஒரு ஐயரின் பெயர் சொல்லுங்கள் துரோகியாய் இருக்கிறார் அல்லது காட்டிக்குடுத்தார் எண்டு...
::
Reply
தலாவின் தலையில் யாரோ பார்ப்பான்கள் நன்றாக அரைத்து விட்டார்கள். கனடாவிலுள்ள பெரும் பான்மையான கோயில்கள் ஈழத்துப் பார்ப்பான்களுக்குச் சொந்தமானவை தான். ஒரு கோயல்களைத் திறந்து இந்து மடாதிபதிகள் என்று அவர்கள் கனடாவிலுள்ள இலாபமற்ற பொது நலசேவைத்தாபனங்களுக்கான வரிவிலக்குச் சட்டங்களைப் பாவித்து கொள்ளையடிக்கிறார்கள். இதில் எந்தளவு பங்கு ஈழவிடுதலைக்குப் போகிறது?

ஐயருக்கு என்று சிறப்பான ஒரு சட்டமும் கிடையாது. எல்லா அகதிகளும் தன்னுடைய உயிருக்கும், தனி மனித சுதந்திரத்துக்கும் ஆபத்து என்று நிரூபிக்க வேண்டும். ஈழத்துப் பிராமண்ர்களும் இந்தியப் பிராமணர் மாதிரித் தான் எந்த ஈழப்பிராமணனாவது இந்தியப் பிராமணர்களின் ஈழ, தமிழ் எதிர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து தெரிவித்திருக்கிறார்களா. சங்கராச்சாரி தமிழை நீச பாசை என்று கூறியது தவறு என்று அறிக்கை விட்டார்களா?

****
~தொடரும்~

[size=9]*** நீக்கப்பட்டுள்ளது
Reply
தயவு செய்து இந்தச் சாதிய சண்டைகளை நிப்பாட்டவும்,களத்தில் இவை இல்லை,புலத்திலேயே இவை தொடர்கின்றன. நான் முன்னர் கூறியதைப் போல தனி மனிதர்கள் அல்ல பிரச்சனை.பிராமணியத்தை எதிர்க்கும் பிராமணரும்,வேளாளரும் உண்டு களத்திலும்,புலத்திலும் இங்கும்.மனித குல நாகரீகத்துக்கு எதிரான கோட்பாடுகளுக்கு எதிராகக் கருத்துக்களை முன் வையுங்கள்,மனிதர்களுக்கு எதிராக அல்ல.பிறப்பாலெயே ஒருவர் ஒரு மதத்தயோ சாதியயொ சாருகிறார்.பின் அவர் இந்தக் கோட்பாடுகளை எதிர்கக் கூடும்.


தல தனி மடலைப் பார்க்கவும்.
Reply
நாரதர் தனிமடல் என்று திசை திருபாதேங்கோ... உங்களுக்கும் யாரோ பார்ப்பான்கள் நல்லா அரைத்து விட்டார்கள் போல கிடக்கு... :oops:
Reply
quote="kurukaalapoovan"]நாரதர் தனிமடல் என்று திசை திருபாதேங்கோ... உங்களுக்கும் யாரோ பார்ப்பான்கள் நல்லா அரைத்து விட்டார்கள் போல கிடக்கு... :oops:[/quote]


நான் என்னத்தயப்பா திசை திருப்பி இருக்கிறன்,தனி மடலில் நான் தலைக்கு எழுதியது சில தனி நபர்கள் சார்ந்த பிழயான விடயங்களை தலை எழுதி உள்ளதால்,அதை களத்தில் இட விரும்பவில்லை என்பதால். :wink:
Reply
சா சாh அதெல்லாம் நம்பத்தயாரா இல்லை.. உதெல்லாத்துக்கும் என்ன ஆதாரம். இது ஒரு திட்டமிட்ட சதி Idea

எதுக்கும் உங்களை ஒரு தமிழ் எதிர்பாளராய்தான் பாக்கா வேணும் :wink:
Reply
kurukaalapoovan Wrote:சா சாh அதெல்லாம் நம்பத்தயாரா இல்லை.. உதெல்லாத்துக்கும் என்ன ஆதாரம். இது ஒரு திட்டமிட்ட சதி Idea

எதுக்கும் உங்களை ஒரு தமிழ் எதிர்பாளராய்தான் பாக்கா வேணும் :wink:


ஆதாரம் தல வந்து சொல்லட்டும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
பார்ப்பான்கள் எல்லோரும் சேர்ந்து 'தலா'வின் காதில் தலா ஒரு பூச்சுத்தி விட்டு விட்டார்கள் போலிருக்கிறது அல்லது தலா பார்ப்பான்களில் சார்பில் இங்குள்ள தமிழர்களுக்குக் காதில் பூச்சுற்ற முயல்கிறாரோ எனக்குத் தெரியாது
Reply
Londonமுருகனே Torontoவினாயகரே Kingstonபிள்ளையாரே Montrealஜய்யப்பனே இதற்கு முடிவே இல்லையா? 32 பிராமணர் வைச்சு உனக்கு யாகம் செய்கிறேன் கடவுளே இதற்கு ஒரு முடிவை கொண்டுவா. Bonus ஆக 32 பிராமணரக்கும் Audi-A4 தானம் பண்றேன் ஆண்டவா. :roll:
Reply
preethi Wrote:பார்ப்பான்கள் எல்லோரும் சேர்ந்து 'தலா'வின் காதில் தலா ஒரு பூச்சுத்தி விட்டு விட்டார்கள் போலிருக்கிறது அல்லது தலா பார்ப்பான்களில் சார்பில் இங்குள்ள தமிழர்களுக்குக் காதில் பூச்சுற்ற முயல்கிறாரோ எனக்குத் தெரியாது

பிரீத்தி உங்களுக்கு ஒன்று தான் தெளிவாக சொல்லமுடியும்
கீறல் விழுந்த இறுவட்டு மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிகொண்டிருக்கதங்கோ.

என்னுடன் படித்த நண்பனின் (பிராமண) அண்ணா, ஒரு விடுதலை போராளி, எமது வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு முகாமில் ஒரு பெண் போராளி அக்காவும் இருந்தார்.
அவர்களும் நாட்டு பற்றோடு தான் இருக்கிறார்கள். நீங்கள் புலத்தில் இருந்து அங்கிருப்பவர்களை பற்றி கதைக்க ஏதுமில்லை என நினைக்கிறேன்.
சங்கராச்சரியார் தமிழை நீச மொழி என்றதற்கு ஏதும் செய்யவில்லை எனும் நீங்கள் அதாவது புலத்திலும் சரி தாயகத்திலும் சரி இருக்கும் தமிழர்கள் ஏதும் செய்தீர்களா?

தமிழர் என பிராமணர் என இவ்வளவு கூச்சல் போடும் நீங்கள், உங்கள் சொந்த மொழி தமிழில் களத்தில் எழுதமுடியாது என சொல்லுவது என்ன மாதிரி.

ஒன்று தெளிவாக விளங்கி கொள்ளுங்கள் நம்மவரில் இருக்கும் தப்புக்கள், பலவீனங்களை , மறைக்க பிராமணருக்கு எதிராக கூச்சல் போட்டு ஆவது ஏதுமில்லை.

முதலில் எம்மவர் திருந்தட்டும் , பிராமணரை அழைப்பதை நிறுத்தி, தமிழில் ஆலய வழிபாடு நடத்த முயலட்டும், அதாவது எம்மவர் கட்டுபாட்டில் உள்ள கோயில்களில்.
எம்ம்வர் தமக்கிடையான் உயர்வு தாழ்வு, பெரிய சாதி, கீழ் சாதி எனுமெண்ணத்தை விட்டொழிக்கட்டும். அதன்
பின்னர் அவர்களை வசைபாடுவதை வைத்துகொள்ளுங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
preethi Wrote:பார்ப்பான்கள் எல்லோரும் சேர்ந்து 'தலா'வின் காதில் தலா ஒரு பூச்சுத்தி விட்டு விட்டார்கள் போலிருக்கிறது அல்லது தலா பார்ப்பான்களில் சார்பில் இங்குள்ள தமிழர்களுக்குக் காதில் பூச்சுற்ற முயல்கிறாரோ எனக்குத் தெரியாது

உங்களுக்கு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து.. மற்றவரின் உணர்வைச் சீண்டாதேங்கோ.. எங்களுக்கும் இதைவிட இறங்கிப்பேச வரும்.. சந்தேகம் வேண்டாம்.... தமிழன் யார் எண்டு பேசுற நீங்கள் தமிழ் வளர்த்த புத்தகங்களின் பெரும்பாலானவை தமிழனால் அதுவும்.... பார்பணனால் எழுத்ப்பட்டது...

அது சரி மதவுரிமைச்சட்டம் எண்டு ஒன்று இல்லையா... நீரும் உம்மட பொது அறிவும்.. இங்கவந்து விசத்தை தூவுவதை விட்டுட்டு உலக அறிவு பெற நாலு பேரோட கதையும்.. அதயும் விட நல்ல மனநல வைத்தியரை பாரும்..
::
Reply
Thala Wrote:
preethi Wrote:பார்ப்பான்கள் எல்லோரும் சேர்ந்து 'தலா'வின் காதில் தலா ஒரு பூச்சுத்தி விட்டு விட்டார்கள் போலிருக்கிறது அல்லது தலா பார்ப்பான்களில் சார்பில் இங்குள்ள தமிழர்களுக்குக் காதில் பூச்சுற்ற முயல்கிறாரோ எனக்குத் தெரியாது

உங்களுக்கு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து.. மற்றவரின் உணர்வைச் சீண்டாதேங்கோ.. எங்களுக்கும் இதைவிட இறங்கிப்பேச வரும்.. சந்தேகம் வேண்டாம்.... தமிழன் யார் எண்டு பேசுற நீங்கள் தமிழ் வளர்த்த புத்தகங்களின் பெரும்பாலானவை தமிழனால் அதுவும்.... பார்பணனால் எழுத்ப்பட்டது...

அது சரி மதவுரிமைச்சட்டம் எண்டு ஒன்று இல்லையா... நீரும் உம்மட பொது அறிவும்.. இங்கவந்து விசத்தை தூவுவதை விட்டுட்டு உலக அறிவு பெற நாலு பேரோட கதையும்.. அதயும் விட நல்ல மனநல வைத்தியரை பாரும்..
என்ன மோனை தல இருந்தாப்போல குருவி மாதிரி கதைக்கிறாய்.. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
Reply
sinnakuddy Wrote:என்ன மோனை தல இருந்தாப்போல குருவி மாதிரி கதைக்கிறாய்.. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->

குருவிமாதிரி இல்லை தமிழன் மாதிரிக் கதைக்கிறன் .... ஊரில ஆயிரத்தெட்டு பிரச்சின இருக்கு இதில அய்யரின்ர குடும்பீக்க பேன் இருக்கெண்டா........ இருக்கிற தமிழரே 35 லச்சம்தான் அதில நீங்கள் எல்லம் சேந்து... நீ ஐயர் நான் <b>வெளாளன் தமிழன்</b> எண்டு பிரிவினை காட்டுவன் எண்டால்... பாத்தா கடுப்பாகமல்... :evil: இப்பவே ஒற்றுமை இல்லை........ பிறகு....

ஐயன்மார் தமிழன் வீடு தேடிவந்து வெத்தில வச்சு கூப்பிட்டவையே... வாங்கோ கோயிலுக்கு வந்தா கடவுளுட்ட அருள் வங்கித்தாறம் எண்டு????........... கோயில் அது அவர்களின் தொழில்..... பின்னால போறவைக்கு அறிவு வேண்டாம்.....

இப்ப முடி வெட்டப் சலூனுக்குப் போறியள்..... நாவிதன் சொல்லுறதை கவனமாய்க் கேட்டு தலையை வச்சிருப்பியள் வாயத்துறக்க மாட்டியள்...... ஏனெண்டா அவர் கத்தி வைச்சிருப்பார் பாருங்கோ...... ஆனா ஐயர் கையில மணிதானே வச்சிருப்பார் நீங்கள் வாய்க்கு வந்ததை பேசலாம்.......

வேலில போறத வேட்டிக்க விட்டுட்டு இப்ப குத்துது குடையுது எண்டா...??? இது எல்லாம் யாரின்ர பிழை......
::
Reply
<b>"தமிழர் என பிராமணர் என இவ்வளவு கூச்சல் போடும் நீங்கள், உங்கள் சொந்த மொழி தமிழில் களத்தில் எழுதமுடியாது என சொல்லுவது என்ன மாதிரி."



தமிழில் பதிவு செய்வதற்கு எனக்கு அதிகம் நேரம் எடுக்கிறது என்று தான் சொன்னேனே தவிர, தமிழில் எழுதமுடியாது என்று சொல்லவில்லை.


[b]"ஒன்று தெளிவாக விளங்கி கொள்ளுங்கள் நம்மவரில் இருக்கும் தப்புக்கள், பலவீனங்களை , மறைக்க பிராமணருக்கு எதிராக கூச்சல் போட்டு ஆவது ஏதுமில்லை. முதலில் எம்மவர் திருந்தட்டும் , பிராமணரை அழைப்பதை நிறுத்தி, தமிழில் ஆலய வழிபாடு நடத்த முயலட்டும், அதாவது எம்மவர் கட்டுபாட்டில் உள்ள கோயில்களில். எம்ம்வர் தமக்கிடையான் உயர்வு தாழ்வு, பெரிய சாதி, கீழ் சாதி எனுமெண்ணத்தை விட்டொழிக்கட்டும். அதன் பின்னர் அவர்களை வசைபாடுவதை வைத்துகொள்ளுங்கள்."


நாங்களே ஓரு குறிப்பிட்ட சாதியினரை எங்களை விட உயர்ந்தவர்களாகிக் கருதிக் கொண்டு, படித்த, வயதில் முதிர்ந்த தமிழர்களே பத்து வயதுப் பார்ப்பானையும் ஐயா! என்று அழைத்துக் கொண்டு, ஒருவர் பார்ப்பானச் சாதியில் பிறந்து விட்ட ஒரே ஓரு காரணத்துக்காக சலுகைகளையும், மரியாதையும் கொடுத்துக் கொண்டு, எங்களுடைய கோயில்களிலேயே பார்ப்பான்களை மட்டும், உள்ளே நுழைய அனுமதித்து விட்டு, நாம் தமிழர் தீண்டத்தகாதவர்களாக, கை கட்டி, வாய் புதைத்து, ஒரு ஓரமாக நிற்கும் பழக்கததை எங்களுடைய இளம் சமுதாயத்துக்குக் கூட, இளம் பருவத்தில் கற்பித்துக் கொடுத்துக் கொண்டு, எப்படி ஐயா சாதி ஒழிப்பைப் பற்றிக் கதைக்க முடியும்.

பார்ப்பான்கள் தான் சாதி முறையைத் த்மிழருக்கிடையில் அறிமுகப் படுத்தியவர்கள். சாதி ஒழிப்பை ஆலயங்களில் இருந்து தான் தொடங்க வேண்டும். சாதி ஒழிப்பைப் பற்றி மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும், எங்கள் தமிழ் முன்னோர்களின் ஆலயங்கள், தமிழையெதிர்க்கும், பிராமணரின் கைகளிலிருந்து விடுவிக்கப் படவேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள ஆலயங்கள் இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல. அவை உலகத் தமிழர்களுக்காக தமிழ் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தமிழர்கள் சிதம்பரம், திருமறைக்காடு, ராமேஸ்வரம் போன்ற கோயில்களுக்கு சொத்துக்களைக் கொடுத்தும், பல திருப்பணிகளைச் செய்ததாகவும், எங்கள் வீட்டில் சொன்னார்கள்.

தமிழ் கற்பிக்க முதன் முதலில் சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியாலயத்தை அமைத்தவர்கள் ஈழத் தமிழர்கள். அப்படியான பாரம்பரியத்தில் வந்த ஈழத்தமிழராகிய நாங்கள், எங்கள் தமிழ் அரசர்களால் கட்டப்பட்ட கோயில்களில் பார்ப்பனரின் தமிழ் வெறுப்பால், தமிழுக்குத், தமிழ் நாட்டிலேயே இடமில்லாமல் கோயிலுக்கு வெளியில் நிற்கும் போது, நாங்கள் ஈழத் தமிழர்கள் பார்ப்பான்கள், ஐயா, ஐயா என்று தலையில் வைத்துக் கொண்டு ஆலவட்டம் பிடிப்பது, தமிழுக்காக உயிரை நீத்த பல தமிழர்களை அவமதிப்பது போன்றதாகும்.

இன்னும் பல இலங்கைத் தமிழர்கள், உலகத் தமிழர்களைத் தங்களிடமிருந்து பிரித்து நினைப்பதும், எங்களுக்கென்ன எங்கட ஐயர்மார் திறம், தமிழ்நாட்டுப் பிராமணர் தமிழையும், தமிழையும் வெறுக்கிறார்கள், அதற்கு எங்களுக்கென்ன என்று வாதாடுவது மிகவும் வருந்தத் தக்கது. [b]எங்கிருந்தாலும் தமிழின் வாழ்வு தான், தமிழரின் வாழ்வு. </b>


<b>"சங்கராச்சரியார் தமிழை நீச மொழி என்றதற்கு ஏதும் செய்யவில்லை எனும் நீங்கள் அதாவது புலத்திலும் சரி தாயகத்திலும் சரி இருக்கும் தமிழர்கள் ஏதும் செய்தீர்களா,"</b>



புலத்திலிருந்தோ அல்லது தாயகத்திலிருந்தோ தமிழர் யாராவது சங்கராச்சாரியாரைத் தரிசிக்கப் போகிறார்களா இல்லையே,அப்படிப் போனாலும், சங்கராச்சாரி சூத்திரர்களான ஈழத்தமிழர்களை மடத்தில் அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் சங்கராச்சாரியின் கண்ணில் நாங்கள் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமா?

ஆனால் தமிழை நீச பாசையென்று கூறித் தமிழைப் பேச வேண்டி ஏற்ப்ட்டால், தீட்டுப் போக உடனடியாகக் குளித்து விடும் சங்கராச்சாரியைத் தரிசித்து, ஆசீர்வாதம் பெற்று, தமிழை எப்படிஎதிர்ப்பது, சூத்திரர்களுடன் எந்தளவுக்குப் பழகினால் தீட்டில்லை, தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்ற அறிவுரையைப் பெற எல்லா ஈழத்துப் பார்ப்பான்களுக்கும், நாங்கள் கொடுத்த காசில் இந்தியா போய், புகைப்படமும் எடுத்து வந்து, எங்கள் மூஞ்சையில் மாட்டி விடுமளவுக்கு அவர்களுக்குத் திமிரும், சங்கராச்சாரியில் பற்றும் உண்டென்பது உமக்குத் தெரியுமா?



<b>"தமிழன் யார் எண்டு பேசுற நீங்கள் தமிழ் வளர்த்த புத்தகங்களின் பெரும்பாலானவை தமிழனால் அதுவும்.... பார்பணனால் எழுத்ப்பட்டது... "



இது தான் எங்கள் முன்னோர்கள் விட்ட பிழை. பிராமணரால் சாதிமுறை அறிமுகப் படுத்தப்ப்ட்ட பின்னர், தமிழ் மன்னர்கள், பிராமணப் பெண்களின் நிறத்தில் மயங்கி, ஒவ்வொரு கிராமத்தையும், வயல்களையும் மங்கலம் என்ற பெயரில் பிராமணருக்குக் கொடுத்து விட, மற்ற தமிழர்களுக்கு சாதியடிப்படையில் கல்வி மறுக்கப் பட்டது.

கல்வி பிராமணரின் முழுவுரிமையாக வந்தவுடன், தமிழர்களின் புராதன நூல்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாக்கப் பட்டது. தமிழரின் சரித்திரம் அழிக்கப்பட்டது. பிராமணரால் தான் தமிழரின் எந்தச் சரித்திரமும் எழுத்து வடிவில் இல்லை. ஊர்ப்பெயர்கள் கூட சமஸ்கிருதமாக்கப் பட்டது.

பாரதியார் போன்ற ஓரு சில பிராமணர்களைத் தவிர எந்தப் பிராமணரும் தாங்கள் தமிழரென்று நினைப்பதில்லை, தமிழில் பெரிய அன்புமில்லை. பணமும், புகழும் கிடைக்குமென்றால் அவ்ர்கள் தமிழில் மட்டுமல்ல ஜம் ஜம் நாட்டுக்குப் போய் 'ஜம் ஜம்' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மொழியில் புத்தகங்கள் எழுதுவார்கள், அதன் கருத்து அவர்களுக்கு ஜம்ஜம் மொழியில் பற்றென்று ஜம்ஜம் மக்கள் நினத்தால் அவர்களைப் போல் முட்டாள்கள் வேறு யாருமில்லை.

பாரதியார் பார்ப்பனர்களின் கபடத் தனத்தை வெறுத்தார், அதனால் தான் [b]" சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின், அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்" </b>என்ற பாரதியார் தன்னுடைய பூணூலை அறுத்தெறிந்து நான் பார்ப்பான் இல்லை தமிழன் என்றார்.

சுவாமிநாதையருக்கு முன்பே யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும், யாழ்ப்பாணம் தாமோதரம் பிள்ளையும் சங்ககாலத் தமிழ் நூல்களுக்கு உரையெழுதி, பதிப்பிக்கத் தொடங்கி விட்டார்கள், ஆறுமுக நாவலர் விட்ட பணியை சுவாமிநாதையர் தொடர்ந்தார், அவரே அதை ஒப்புக் கொண்டுள்ளார், அப்படியிருந்தும் தமிழ்நாட்டுப் பார்ப்பன பத்திரிகைகள் ஈழத்து ஆறுமுக நாவலரையும், தாமோதரம்பிள்ளையையும் இருட்டடிப்புச் செய்து விட்டு பார்ப்பனர்கள் மட்டும் தான் சங்கநூல்களைக் காத்தார்கள் என்று கதை பரப்பி விட்டார்கள். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் கூட அதைத் திருப்பிச் சொல்கிறோம்.


ஈழத்துப் பிராமணர்கள் தங்களுடைய விசுவாசத்தை தமிழ்நாட்டுப் பிராமணருக்கும், சோ ராமசாமி, இந்து ராம்,சங்கராச்சாரி போன்ற பல தமிழீழ எதிரிப் பார்ப்பான்களுக்குத் தெரிவிக்கும் வரை நாம் அவர்களை நம்பக் கூடாது. தமிழீழத்தினதும், தமிழ்நாட்டினதும், தமிழ்பேசும் நல்லுலகிலுள்ள ஒவ்வொரு ஆலயமும் தமிழரின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் பாரம்பரியமாக எங்களுடைய ஆலயங்கள் தான், தமிழையும், தமிழரின் கலாச்சாரத்தியும் பேணிப்பாதுகாத்து வந்துள்ளன.
Reply
[b]"வேலில போறத வேட்டிக்க விட்டுட்டு இப்ப குத்துது குடையுது எண்டா...??? இது எல்லாம் யாரின்ர பிழை......"

எங்கட பிழை தான் யார் இல்லையெண்டது, வேட்டிக்க போனதை இப்பவாவது வெளிய எடுத்தெறிவமெண்டா, நீங்கள் விடுறியள் இல்லை, அப்பிடியே விடு கிடக்கட்டும் எண்டுறியள்.
Reply
preethi Wrote:எங்கட பிழை தான் யார் இல்லையெண்டது, வேட்டிக்க போனதை இப்பவாவது வெளிய எடுத்தெறிவமெண்டா, நீங்கள் விடுறியள் இல்லை, அப்பிடியே விடு கிடக்கட்டும் எண்டுறியள்.

நாங்கள் விடுவம் ஆனா அதவிட முக்கியமான தேவை இருக்கு....... இப்ப என்ர கேள்வி நீங்கள் சைவத்துகு எதிரியா இல்லை பிராமணனுக்கா???

சைவத்துக்கானால் தலப்பை மாத்துங்கோ............! ஐயருக்கெண்டால் நீங்கள் திருந்துங்கோ அவர்கள் தானாகத் திருந்துவார்கள்......

இது வரை அவர்கள் தங்களது கடமையைத்தான் செய்கிறார்கள்... அது அவர்களின் தொழில்.... நீங்கள் உங்கள் வளியை மாத்துங்கோ அவர்கள் தங்கள் தொழிலை மாத்துவார்கள்.... அதுகாக அவர்கள் மேல் அரிச்சனை செய்வதுதான் வளி அல்ல...... வேண்டுமானால் மூட நம்பிக்கை பற்றிச்சொல்லுங்கோ மக்களைத் திருத்துங்கள்.......வேண்டாம் எண்டு யார் சொன்னவை..... அதுக்காக தமிழர்களை.. அதுவும் தமிழர்களை அண்டிப் பிளைப்பவரை தூற்றுவது........ நல்ல தமிழனுக்கு அழகல்ல...
::
Reply
[quote]
பாரதியார் போன்ற ஓரு சில பிராமணர்களைத் தவிர எந்தப் பிராமணரும் தாங்கள் தமிழரென்று நினைப்பதில்லை,

பாரதியார் பார்ப்பனர்களின் கபடத் தனத்தை வெறுத்தார், அதனால் தான் " சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின், அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்" என்ற பாரதியார் தன்னுடைய பூணூலை அறுத்தெறிந்து நான் பார்ப்பான் இல்லை தமிழன் என்றார்.

பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா எண்டு பாடி..... எதைச்சொன்னார் எண்டு இந்த வேற்றுமை காட்டும் தமிழனுக்கு விளங்கேல்ல.......
::
Reply
சரியாய் சொன்னீர்கள் தலா. தமிழனுக்குள்ளே இவ்வளவு கருத்து வேறுபாடு என்றால் மற்றைய இனத்துக்கு எங்களை பற்றி எவ்வளவு கருத்து வேறுபாடு இருக்கும்

Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)