Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒட்டகம்
#1
<img src='http://img143.imageshack.us/img143/883/camel20ride2037tb.jpg' border='0' alt='user posted image'>

ஒட்டகம் என்றாலே பாலைவனமும், அது தனக்குள் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரும் தான் நம் நினைவுக்கு வரும்.
ஒட்டகம் நீண்ட பயணத்திற்கு தயார்படுத்தப்படுவது சற்று வினோதமாக இருக்கும். பயணத்திற்கு முன், ஒட்டகத்தில் பயணம் செய்ய இருப்பவர் ஒட்டகத்திற்கு அதிகப்படியாக உப்பை கொடுப்பார்.

உப்பின் தன்மையால் அதிகமான நீரை ஒட்டகம் குடிக்கும். கிட்டத்தட்ட 80 லீட்டர் தண்ணீரை அது குடித்துவிடும். ஒட்டகத்திற்கு மூன்று வயிறு இருக்கிறது. முதல் வயிற்றில் தனக்கு தேவையான உணவை சேகரித்து வைத்து கொள்கிறது. தேவைப்படும் போது அந்த உணவை வாயில் அசை போட்டு உட்கொள்ளும். இரண்டாவது வயிறு உணவுகளை ஜீரணப்படுத்துவதற்கான திரவங்களை சுரக்கும் இடமாக இருக்கிறது.

மூன்றாவது வயிற்றில் அசை போட்ட பண்டங்கள் சேருகின்றன. அங்குதான் உணவு ஜீரணிக்கப்படுகிறது. இதில் மூன்றாவது வயிற்றை தவிர முதல் இரண்டு வயிறுகளின் பக்கவாட்டு சுவர்களில் நிறைய பை போன்ற அமைப்பு இருக்கும்.

இந்த பைகளில் தண்ணீரை ஒட்டகங்கள் சேர்த்து வைத்து கொள்கின்றன. பைகளில் தண்ணீர் நிரம்பியவுடன் தசைகள் மூடிவிடும். தண்ணீர் வெளியே வராது. எப்போது அதற்கு தண்ணீர் தேவைப்படுகிறதோ திறந்து சுரக்கும். நீரை எடுத்து கொள்ளும்.

ஒரு ஒட்டகத்தின் மீது அதிக பாரம் ஏற்றாமல், வேகமாக நடக்காமல், ஓரளவு சாதாரண வேகத்தில் நடந்து சென்றால் எந்த பாலை வனத்திலும் ஒட்டகம் பத்து நாட்கள் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கும்.தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் வாழ்வதற்காக கடவுள் அளித்தவரம் இந்த தண்ணீர் சேமிப்பு.

பாலைவனத்தில் நீண்டதூரம் பயணம் செய்யும் போது மனிதனுக்கு அடக்க முடியாத தண்ணீர் தாகம் எடுத்தால் அவன் ஒட்டகத்தை கொன்று இரைப்பையில் உள்ள தண்ணீரை குடிப்பான்.


நன்றி தினமலர்.
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)