Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
#21
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

சாதி

7 July 2005

"‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்"

[see also Caste & the Tamil Nation - Brahmins, Non Brahmins & Dalits ]



--------------------------------------------------------------------------------


இன்றைய காலகட்டத்தில் ‘மதம்’ என்கின்ற சொல் ‘பிரச்சனைக்குரிய விடயங்களைச் சுட்டிக் காட்டுகின்ற’ சொல்லாக அர்த்தம் பெற்று வருகின்றதோ என்கின்ற ஐயமும், அச்சமும் எமக்கு உண்டு. ‘மதம்’ என்பது வேறு, ‘கடவுள் என்பது வேறு!’ ‘மத நம்பிக்கை என்பது வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு!’ என்பது போலத்தான் இப்போது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
எதைப் பற்றியும் தர்க்கிக்கலாம், ஆனால் மதம் குறித்தோ, கடவுள் குறித்தோ தர்க்கிக்கக் கூடாது என்கின்ற எழுதப்படாத விதி ஒன்று இருப்பதைப் பற்றி நாம் அறிவோம்.

ஆனால் பௌத்த பேரினவாதம் குறித்து நாம் வன்மையாகக் கண்டித்துக் கட்டுரை எழுதுவதற்குக் கைதட்டல் கிடைப்பது போல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதினால் ‘எது கிடைக்குமோ’ என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு. சிங்கள-பௌத்த பேரினவாதம் குறித்து கண்டித்துக் குரல் எழுப்புவதற்கு நான் ஒரு ஈழத் தமிழன் என்பது ஒரு தகுதியாக இருக்கின்றது.

அதுபோல், இந்துப் பேரினவாதம் குறித்து எழுதுவதற்கு, பிறக்கும்போது சைவனாகவும,; பின்னர் இந்துவாகவும் மதமாற்றம் செய்து கொண்ட எண்ணற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்ற தகுதியே போதும் என்ற தைரியமும் எனக்கு உண்டு.

ஒரு விடயத்தை மிக முக்கியமான விடயத்தை இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வலியுறுத்திச் சொல்லிவிட விரும்புகின்றோம். எவர் மனத்தையும் புண் படுத்தும் நோக்கமோ அல்லது எவரது நம்பிக்கையையும் விமர்சிக்கும் நோக்கமோ எமக்கு கிடையாது. எந்த மதத்தையோ, கடவுளையோ, உயர்த்தவோ, தாழ்த்தவோ நாம் முயலவில்லை. எமது எண்ணமும் அதுவல்ல!

நடந்ததை, நடப்பதை நாம் உங்களுக்குச் சொல்ல வருகின்றோம். அவ்வளவுதான்! அதனை உங்கள் சிந்தனையில் நிறுத்தி இனிமேல் நடக்க வேண்டியது என்ன என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். சிந்தனையில் சீர்திருத்த மாற்றம் வராமல் செயலில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை நாமும் நம்புகின்றோம்.

இன்றைய தினம், குறிப்பாக இந்தியாவில், இந்துக்களின் பேரினவாதத்தை ‘இந்துத்துவம்’ என்று தாழ்த்தப் பட்டவர்கள் சொல்கிறார்கள். ’அப்படியில்லை’ இந்து தர்மத்தின் உயரிய கோட்பாடுகளின் தொகுப்புத்தான் இந்துத்துவம்- என்று இந்துமதத் தீவிர சிந்தனையுள்ளவர்கள் வாதிடுகின்றார்கள். இந்து மதத்திலுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக இன்று சாதிப் பாகுபாடு இருப்பதைக் காண்கின்றோம். இதற்குக் காரணம், இந்த வருண சாதி வேறுபாடுகளை இந்துமத வேதங்களே அறுதியிட்டுக் கூறுவதாகச் சொல்கின்றார்கள்.

நான்கு வருண உருவாக்கம் குறித்துப் பேசுகின்ற ‘இருக்கு வேதத்தின்’ புருஷ சூக்தத்தில், புருஷன் என்கின்ற உடலை நான்காக வகுத்து நான்கு வருணங்கள் தோற்றுவிக்கப் பட்டதாகக் கதையாடல் அமைக்கப் பட்டுள்ளது. படைப்புக் கடவுள் பிரம்மாவின் வாயிலிருந்து பிராமணனும், நெஞ்சில் இருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து இவர்கள் மூவருக்கும் சேவை செய்யும் அடிமையாக சூத்திரன் என்பவனும் உருவாக்கப் பட்டார்கள். இந்த சூத்திர சாதியை சேர்ந்தவர்கள்தான் திராவிடர்கள் என்பது பின்னால் விளக்கப் படுகின்றது.

இந்த நான்கு வருணத்தையும் (நான்கு சாதி அமைப்புக்களையும்) தாண்டியவர்கள் மிகக் கேவலமாக சண்டாளர்கள்- தீண்டத் தகாதவர்கள் என அழைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, ஒதுக்கப்படுகின்றார்கள். இவர்கள் ‘தலித்துக்கள்’ என்று இப்போது குறிக்கப் படுகின்றார்கள். ‘தலித்’ என்ற சொல் எப்படி வந்தது என்பதை முதலில் பார்ப்போம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தீண்டத் தகாத சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க நினைத்து, ஒரு அட்டவணையைத் தயாரித்தார்கள். அந்த அட்டவணையில் வந்த சாதியினரை (ளுஉhநனரடநன ஊயளவந) (ஷெடியூல்ட் காஸ்ற்) அட்டவணைச் சாதியினர் என்று அழைத்தார்கள். பின்னர் மராட்டிய இலக்கியத்தில் அட்டவணைச் சாதியினரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்லாகிய ‘தலித்’ என்ற வார்த்தை உபயோகிக்கப் பட்டது. ‘தலித்’ என்பது ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, உழைக்கும் சாதிமக்களைக் குறிக்கின்ற மகாராஷ்டிர சொல் வழக்கிலிருந்து உருவாகியது.

மேற்கூறிய நான்கு வருணங்களிலிருந்தும் ஒதுக்கப்பட்ட தலித்துக்கள் ‘புருஷன்’ என்கின்ற உடலுக்கே அப்பாற் பட்டவர்களாகத் தள்ளி வைக்கப்பட்டனர். நடைமுறையில் ஊருக்கு வெளியே இவர்களுக்காகச் சேரிகள் உருவாக்கப் பட்டன. இவர்களைத் தொட்டாலும், பார்த்தாலும் தீட்டுக் கற்பிக்கப் பட்டது. மலம் அகற்றுதல், சவம் காவுதல், பறையடித்தல் முதலான தொழில்கள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டன.

கடும் உடலுழைப்பு இவர்களுக்கென்றானது. இவர்களின் கடும் உழைப்பிற்கு ஈடாக உயிர் வாழ்வதற்கு தேவையான மிகவும் குறைந்தபட்ச ஊதியமே இவர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டது. திருவிழா முதலிய சடங்குகளிலும் இவர்கள் மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டு, கடும் உடல் உழைப்பைச் செய்யும் பணிகள்; அங்கும் இவர்களுக்கு கொடுக்கப் பட்டன. மேலாடை அணியக் கூடாது. குடிசைகளுக்கு ஓடு வேயக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. சைக்கிளில் செல்லக் கூடாது பொதுச்சாலைகள், பொதுச் சுடுகாடுகள், பொது இடங்கள் போன்றவற்றை இந்த மக்கள் பயன்படுத்தக் கூடாது’ என்ற விதிகள் பிறப்பிக்கப் பட்டன.

பிறவி அடிப்படையில் தொழில் என்பது எல்லாச் சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் நடைமுறையில் இருந்ததுதான்! என்றாலும் தொழிலைப் பிறவி அடிப்படையில் ஒதுக்கி அதற்கு சடங்கு ஆசார அடிப்படையில் நியாயம் வழங்குகின்ற கோட்பாட்டை உருவாக்கி திருமண உறவுகளையும் சாதிக்குள்ளேயே முடக்கி அது மட்டுமல்லாமல் இவற்றை எந்த வகையிலும் மீறக்கூடாத விதமாக வழிகளையும் தடை செய்தது - எமது சமூகம் தான்! இதனை நியாயப்படுத்தும் வகையில் முற்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் சாதியும் வாழ்நிலையும் நிர்ணயிக்கப் படுகின்றன’ என்கின்ற கர்மவினைக் கோட்பாடும் இங்கு உருவாக்கப் பட்டது.

தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த மட்டில், சங்க காலத்தின்போது இப்போதுள்ளது போல இறுக்கமான சாதிப் பிரிவினைகளும், தீண்டாமையும் நிலவ வில்லையென்றாலும், சங்ககாலத்திலேயே ஒரு சாரார் ‘இழிசனர்’ என்று ஒதுக்கப்பட்டதற்கும், அவர்களது பேச்சுவழமையை ‘இழிசனர் மொழி’ என்றும், தமிழ் இலக்கியத்திற்கு ஒவ்வாதது என்றும் தள்ளி வைக்கப்பட்டதற்கும் தக்க சான்றுகள் உண்டு. தமிழ் மொழி தரப்படுத்தப்பட்ட காலத்தில், செந்தமிழ், கொடுந்தமிழ் என்று பிரிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் தமிழ் கொடுந்தமிழாக ஒதுக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சமூகத்திலும் வருண சாதிக் கோட்பாடுகளும், தீண்டாமையும் வேர் கொள்ள ஆரம்பித்தன. கிறிஸ்துவுக்கு பின் ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் இத்தீண்டாமை இறுக்கமாக மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றுகள் பல உண்டு. நந்தனார் கதையோடு, திருநாவுக்கரசரின் பதிகங்களையும் சான்றுகளாகக் காட்டலாம். என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் பிற இந்திய சமூகங்களைப் போல சத்திரிய வர்ணம் கிடையாது. சூத்திர வர்ணங்களில் ஒருவரான வேளாளர் இங்கே பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலான ஆதிக்க சக்திகளாக விளங்கினர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நிலவுடைமை ஆதிக்கம் இவ்விரு சாதியினிடமே குவிந்திருந்தன என்று (டீரசவழn ளுவநin) பேர்ட்டன் ஸ்டெய்ன் போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்கள் நிறுவுகின்றார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழரிடையே பார்ப்பனிய மேலாதிக்கம் இல்லாதிருந்த போதும் மேல் சாதியினரிடம் பார்ப்பனிய கொள்கைகள் ஊறிப்போய் ஆதிக்கம் செலுத்தின என்பதே உண்மையாகும்.

பிரபல சிந்தனையாளரான பேராசிரியர் காஞ்சா அய்லய்யா தனது ஆய்வு நூலில் கீழ் கண்டவாறு குறிப்பிடுகின்றார். இவர் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் இராமன்-இராவணன் போர் குறித்து அவர் குறிப்பிடுகின்றார். அது சைவத் தமிழனுக்கும், ஆரிய இந்துவுக்கும் நடந்த போரைக் காட்டுகின்றது. அவரது கூற்றின்;படி:

“ஆரிய இந்துத்துவ வர்ணாசிரம கோட்பாட்டின்படி வடஇந்தியாவில் எல்லாப் பிரிவினரும் நம்பிக்கையிழந்த நிலையில் அடிமைகள் ஆக்கப் பட்டார்கள். பார்ப்பனர்கள், திராவிடர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த தென்னிந்தியாவிலும், அதற்கு அப்பாலும் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப நினைத்தார்கள். தாடகை, சம்புகன், வாலி, இராவணன் ஆகியோர் தலித் பகுஜன்களின் தலைவர்களாக இருந்து வந்தார்கள்.

இப்போது சில பார்ப்பனர்கள் இராவணனும் ஒரு பார்ப்பனனே என்று சொல்ல முயல்கிறாhர்கள். இது முட்டாள்த் தனமானது. இராவணன் ஒரு பேராற்றல் மிக்க தலித் அரசன். அவன் ஒரு தீவிர சைவன்.

தீவிர சைவப் பற்றாளன். பார்ப்பனியத்திலிருந்து சைவத்தைப் பிரிக்கவும், தனித்துவமான தலித் சைவத்தை உருவாக்கவும், இராவணன் முயற்சித்தான். இலங்கையில் இராவணனின் ஆற்றல் மிக்க ஆட்சியைத் தோற்கடித்துப் பார்ப்பன ஆட்சியை உருவாக்க ஆரியர்கள் திட்டமிட்டார்கள். எனவே தென்னிந்தியாமீது படையெடுத்து தாக்குதல் நடத்த முனைந்தார்கள் இராமனுக்கு அந்த பொறுப்புக் கொடுக்கப் பட்டது.

தென்னிந்தியாவில் பார்ப்பனியத்தைப் பரப்புவதோடு பெண்களை அடிமையாக்குவதற்கும் இராமாயணக் கதை அடிப்படையாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் வாழ்ந்த தலித் சமூகத்தை பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பே இராமாயணமாகும்.

இராவணன் வீழ்ச்சியுற்றதோடு தெற்குப் பகுதிகள் முழுமையான பார்ப்பன ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டன. இராவணன் இறந்தபிறகு பல பார்ப்பன ரிஷிகள் வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்கள். சாதியற்ற சமூகமாக இருந்த தென்னிந்தியாவில் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சாதி அடிப்படையிலான சமூகமாக மாற்றி பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்தியலை புகுத்தி, தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தினார்கள். திராவிடப் பகுதியில் தாய்வழிச் சமூகம் நிலை பெற்றிருந்ததை மாற்றி ஆணாதிக்க தந்தைவழிச் சமூகமாக அதனை ஆரியர்கள் மாற்றினார்கள்.

சைவசமயத் தேவாரப் பதிகங்கள் இராவணனை உயர்த்திப் பாடுவதை நாமும் அறிவோம். ‘இராவணன் மேலது நீறு’ என்று தொடங்கி எத்தனையோ தேவாரங்கள் இராவணன் குறித்தும், இலங்கை அரசு குறித்தும் பாடப்பட்டுள்ளன. திருமுறைகளில் காணப்படும் சில வசனங்களை நேயர்களுக்கு இங்கு தருகின்றோம்.

‘வியரிலல்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்’

‘வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்’

‘கடற்படையுடைய அக்கடலிலங்கை மன்னன்’

‘இருசுடர் மீதோடா இலங்கையர் கோன்’

‘எண்ணின்றி முக்கோடி வாழ்நாளதுடையான்’

‘பகலவன் மீதியங்காமைக் காத்த பதியோன்’

‘சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்துடையான்’

இப்படியெல்லாம் பாடிப் புகழ்ந்தவர்கள் மேலும் சில விடயங்களை வலியுறுத்துகின்றார்கள். தமிழின் அவசியம் குறித்தும் தமிழின் மேன்மை குறித்தும் நாயன்மார்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

‘தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’
(ஆனால் இன்றோ இசைப்பாடல் என்றால் தெலுங்கில் இருப்பதே மரியாதை!)

‘திருநெறிய தமிழ்’ என்றும், ‘ஞானத்தமிழ்’ என்றும் ‘பேசும் தமிழ்’ என்றும், ‘உன்னைத் தமிழில் பாடுவதற்கென்றே என்னை நலம் செய்தாய்’
என்றும் பாடிவிட்டுப் போனார்கள்.
(ஆனால் இன்று கோவில்களில் தமிழ் எங்கே?)

இன்றைய தினம் இந்தியாவைப் பொறுத்த வரையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் படுகின்ற இன்னல்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரமாக உள்ளன. அதைவிடக் கொடூரம் என்னவென்றால் இவர்களது துன்பங்களும், துயரங்களும் வெளிஉலகிற்கு தெரியாதவாறு மறைக்கப்பட்டு வருவதுதான்.

இந்தியாவில் ‘கட்டாய மத மாற்றத் தடைச்சட்டம்’ ஒரிஸா மாநிலம் உட்பட இரண்டு மாநிலங்களில் சட்டரீதியாக அமுலாக்கப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கொண்டு வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அவரது கட்சி தோல்வியடைந்த பின்னர் இக்கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை செல்வி ஜெயலலிதா இரத்து செய்தார்.

தேர்தல் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை அவர் கருதியதனால்தான் மிகுந்த மனவருத்தத்துடன் இந்த சட்டத்தை செல்வி ஜெயலலிதா இரத்து செய்தார். பார்ப்பனியப் பெண்மணியும் இந்துத்துவ ஆதரவாளருமான செல்வி ஜெயலலிதா கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமுலாக்க விரும்பியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆயினும் இதற்குரிய அடிப்படைக் காரணங்களைச் சற்று தர்க்கிக்க விழைகின்றோம்.

இந்துத்துவ தீவிரவாதம் காரணமாக, அன்று அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டுப் பின்னர் அங்கே இராமர் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதற்காக வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்தும் இது ஒரு பாரிய பிரச்சனையாகவே இருந்து வருகின்றது. இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நாம் எமது நேயர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். நீண்ட நெடுங்காலத்திற்கு பின்னர் மீண்டும் ஒருமுறை இராமன் ஒரு போர்த் தலைவனாகச் சித்தரிக்கப் படுகின்றான்.

அழிக்கும் கடவுளான சிவனை இந்த இந்துத்துவ வாதிகள் முன்னிறுத்த வில்லை. மாறாக முன்னர் திராவிடர்களையும், சைவ மக்களையும் அழித்த இராமன் இப்போது முன்னிறுத்தப் படுகின்றான். மிக மோசமான மதவாதக் கோஷங்களும், வன்முறைகளும் முன் வைக்கப்பட்டன. இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்தும் சீர்குலைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு கிறிஸ்துவ மதம் மீதும் கடுமையான எதிர்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த மூன்று மதங்களையும் சார்ந்தவர்களிடையே உள்ள முறுகல் நிலை அதிகரித்து வருகின்றது. இதைவிட இன்னுமொரு விடயமும் பூதாகரமாக உருவெடுத்து வருகின்றது.

அதுதான் தலித் மக்களின் மதமாற்றம்!

இந்துத்துவத்தின் கொடுமையால் மிகக் கொடூரமான அடக்குமுறையைத் தொடர்ந்தும், அனுபவித்து வருகின்ற கோடிக்கணக்கான தலித் மக்களில் கணிசமானோர் மதம் மாறத் தொடங்கியிருப்பதனை நாம் காணக் கூடியதாக உள்ளது. இவர்கள் இப்படி மதம் மாறுவதற்குரிய காரணம் என்ன? மற்ற மதங்களில், அதன் கோட்பாடுகளில், வழிகாட்டுதலில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையா? அல்லது தாம் இறந்த பின்னர் சொர்க்கத்தை அடைவதற்கு இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ துணை செய்யும் என்பதா?

இல்லை! இல்லவே இல்லை!!

தாங்கள் வாழ்ந்து வருகின்ற இந்த தற்போதைய நரக வாழ்க்கையிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய வேட்கை! செத்த பின்பு சொர்க்கத்திற்கு போவது அல்ல! அவர்களால் சாதி மாற முடியவில்லை. அதனால் சமயம் மாறுகிறார்கள்.!!

இந்த மதமாற்றத்தைத் தடுக்கா விட்டால் இந்துத்துவம் ஆட்டம் காணத் தொடங்கி விடும். இதன் காரணமாகத்தான் இந்தக் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டமும் இந்துத்துவ பேரினவாதக் கோஷங்களும்!

இந்தியாவில் வாழுகின்ற கோடிக்கணக்கான மக்களை வர்ணாசிரமத்தின் - சாதியின்- அடிப்படையின் கீழ் வைத்து ஒடுக்குகின்ற நிலைமை மாற வேண்டும். அதற்கு பிரிந்து கிடக்கின்ற சகல தலித் பிரிவுகளும், தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புக்களும் ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேரவேண்டும் என்பதே எமது அவா! சாதி என்பது பார்;ப்பனியம் கொண்டு வந்த ஒரு சதியாகும். சாதிப் பிரிவுக்கும், சாதி அடக்கு முறைக்கும் எதிராக மக்கள் சக்தி ஒன்றிணைய வேண்டும். இனவாதத்திற்கு எதிராக நடைபெற்ற உலக மகாநாடு ஒன்றில் பல தீர்மானங்கள் எடுக்கப் பட்டன. அவற்றுள் ஒன்று இந்தச் சாதி பாகுபாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சொல்வது என்பதாகும்!

‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்.

அன்புக்குரிய நேயர்களே!

இந்தியாவின் இந்துத்துவ வாதம் குறித்தும், சாதிவெறி குறித்தும் தர்க்கித்த நாம், தமிழீழம் கண்ட சாதிக் கொடுமைகளை ஈழத் தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கே இழைத்த அநாகரிகத் தீமைகளையும் மறந்து விடவில்லை! இன்னொரு இனத்தின் அடக்கு முறைக்குப் போராடுகின்ற மக்கள் தமது முன்னோர்கள், தம்மின மக்களுக்கே செய்திட்ட வரலாற்றுக் கொடுமைகளை மறக்கக் கூடாது!

இவை குறித்த விரிவான ஆய்வினை எதிர்வரும் காலத்தில் வழங்குவதற்கு விரும்புகின்றோம்.! இவை குறித்து இன்னும் ஆழமாக பரவலாக ஆய்வினைச் செய்வதே எமது எண்ணமுமாகும். இன்றைய தினம் நாம் கூறியவற்றை கருத்துக்கள் என்று சொல்வதைவிட நடந்த, நடக்கின்ற சம்பவங்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். வழமைபோல் சீர் தூக்கி பார்க்கின்ற பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகின்றோம்.!!

இன்றைய இந்தக்கட்டுரையை எழுதப் பல ஆய்வு நூல்கள் உதவின. முக்கியமாக ‘ஆட்சியல் இந்துத்துவம்’இ ‘இந்துத்துவம்-ஒரு பன்முக ஆய்வு’இ ‘நான் ஏன் இந்து அல்ல’இ ‘உலகமயம் எதிர்ப்பு-அரசியல் தலித்துக்கள்’, ‘Making India Hindu’, ‘Indian Middle Class’ ‘Why go for conversion’ போன்ற நூல்களுடன் சில விவரண ஒளிநாடாக்களும் உதவியுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

http://www.tamilnation.org/forum/sabesan/0...050707sathi.htm
Reply
#22
Sriramanan Wrote:
kuruvikal Wrote:பிராமணியர் தான் கலாசாரம் நாகரிகம் கல்வி பொருளியல் என்று பல விடயங்களில் முன்னேறிச் சென்று சமூகங்களை சீர்ப்படுத்திய ஒரு பகுத்தறிவுக் கூட்டமாக முன்னர் விளங்கினர்..!
.....................
பிராமணியத்தின் தேவை சேவை இன்று அவசியமற்று இருப்பினும் முன்னர் அவர்களே ஒரு காலத்தின் சமூக வழிகாட்டிகளாகத் திகழ்ந்திருந்தனர் என்பது மறுப்பதற்கில்லை...!
குருவிகளே நீங்கள் கூறியவாறு பிரமாணர்கள் பல்வேறு துறைகளில் முன்னோறியிருக்கிறார்கள். அதை மறுப்பதற்கில்லை ஆனால்....!
இவர்கள் முன்னர் ஆனாலும் சரி இப்பவானாலும் சரி தாங்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என்றே செயற்படுகிறார். ஆட்சி அதிகாரங்களைத் தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு தாங்கள் தவிர்ந்த மற்றைய சமூகங்கள் கல்வி கற்பதையோ அல்லது வேறு எந்த வழிகளிலோ முன்னேறுவதை இவர்கள் தடுத்தே வந்துள்ளார்கள் என்பது இவர்களின் உருவாக்கங்களான புராணங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.கல்வி கற்றோருக்கு காதில் ஈயம் காச்சி ஊற்றியும், வில்வித்தை கற்றான் என்பதற்காக கைவிரலையும் வெட்டி இவர்கள் மற்றைய சமூகங்களை வழிநடாத்தியுள்ளார்கள்.

அந்த வழிகாட்டிகளுக்கு சேவகம் செய்வகம் செய்யுங்கள் உங்களிற்கு பலகோடி புண்ணியங்கள் கிடைக்கும்

வணக்கம் சிறீரமணன்... நீண்ட காலத்தின் பின் வந்திருக்கிறீர்கள்..! காண்பதில் மகிழ்ச்சி..! என்ன உங்கள் பெயரிலையே பிராமணிய வாசனை அடிக்கிறதே... பாருங்கள்... நவகால புத்திசாலிகளின் அமெரிக்க ஜனநாயக சித்தாந்தத்தை உலகமே மந்தைகள் போல கடைப்பிடிக்கும் போது... பிராமணிய புத்திசாலித்தனத்தின் வெளிப்பாட்டில் வேண்டும் என்றே விதைக்கப்பட்டவற்றை ஏன் கடைப்பிடித்தீர்கள்...அது பிராமணியத்தின் குற்றமா...உங்களின் குற்றமா...! இப்போ அடக்குமுறைக்கு எதிராக சிங்களவன் சொல்லியா போராடுகிறீர்கள்...அல்லது நீங்களாகப் போராட ஆரம்பித்தீர்களா...??! பிராமணியம் விதைப்பது அடிமைத்தனத்தை என்றால்...அதையேன் அடிமைத் தனத்தில் இருந்தோர் எதிர்க்க மறுத்தீர்கள்...காரணம் உங்களுக்கு பிராமணியத்தால்தான் வாழ்வு என்ற இயலாமை எண்ணம் குடிகொண்டிருந்ததால்....! அதற்கு பிராமணியத்தை ஏன் திட்டுகிறீர்கள்...! உங்களை நீங்களல்லவா திட்டி இருக்க வேண்டும்...விழித்தெழச் செய்திருக்க வேண்டும்..! அது யார் தவறு...! நிச்சயமாக பிராமணியத்தின் தவறல்ல...! உங்களின் தவறு...! பிராமணியம் பிழைக்கத் தெரிந்தது பிழைத்துக் கொண்டது...இன்று உலகில் அமெரிக்கர்கள் போல அது அவர்களின் அன்றைய திறமையின் வெளிப்பாடு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
காலங்காலமாக பிராமணியம் எவ்வாறு மற்றைய சமூகங்களை அடக்கியாண்டு வருகின்றது என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். தற்போது பிராமணியம் என்பது ஒரு சமூகத்தை மட்டும் சார்ந்ததல்ல. வேறு சாதியினரும் பிராமணக் கொள்கைகளைக் கையாண்டு உழைக்கும் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்.

ஈழத்தில் பிராமணர்கள் என்ற சாதியினர் இவ்வாறு செய்யமுடியாமல் போயிற்று. எனினும் தமிழ் மேட்டுக்குடியினர் பிராமணியக் கொள்கைகளை தம் கையில் எடுத்து மற்றையோரை அடக்கியாண்டனர். 70களின் இறுதிவரை இந்த ஆதிக்கம் இருந்துதான் வந்தது. அவை முற்றிலும் அழிந்து போகாமல் தற்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கின்றன. எனவே பிராமணியத்தை தூக்கிப் பிடிப்பது சிலருக்குத் தேவையாக இருக்கலாம்.
<b> . .</b>
Reply
#24
இந்தத் தலைப்பு "பிராமணியம் தமிழர்களை எதிர்க்கின்றதா?" என்பதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் தமிழீழத்திலும் பிராமணியக் கொள்கைகளோடு பலர் உள்ளனர். அவர்கள் தமிழீழ தனியரசு வருவதை முற்றாக மறுதலிப்பவர்கள்.
<b> . .</b>
Reply
#25
kirubans Wrote:சாதி, மதம், கடவுள், பார்ப்பனர், புரோகிதர், புராணம், மூடநம்பிக்கைகள் ஆகியன் இந்தியப் பொருளாதாரத்தை அழிப்பவை. அதன்மீது ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்துபவை. சாமி, பூசை, உற்சவம், புண்ணியம், யாத்திரை, பிறப்பு முதல் இறப்புவரை செய்யப்படும் பல்வேறு சடங்குகள் ஆகியன தனிமனிதர்களின் வருவாயையும் செல்வத்தையும் பொதுச்செல்வத்தையும் விரயமாக்குகின்றன.

தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள், உற்பத்திச் சக்திகள் ஆகியவற்றை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படவேண்டிய நிதியாதாரங்களும் மனித உழைப்பும் இவ்வாறு வீணாகிவிடுகின்றன. கோயில்களிலும் மடங்களிலும் மதநிறுவனங்களிலும் முடக்கப்படும் செல்வங்கள், பொருளுற்பத்டியில் பயனுள்ள முறையில் முதலீடு செய்யப்படாமல் போகின்றன.

மதம், சடங்கு, சம்பிரதாயம் என்கின்ற பெயரால் உடலுழைப்பில்லாமல், பாடுபடாமல் வயிறு வளர்க்கின்ற, பொருளீட்டுகின்ற, செல்வம் திரட்டுகின்ற புல்லுருவிக் கூட்டம் வளர்கின்றது. குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தியும் அதிக வருமானமும் ஈட்டுகின்ற வகையில் சரீரத்தால் பாடுபடுகின்றவர்களின் உழைப்பு நேரத்தைக் குறைப்பது பற்றிய அக்கறை முடக்கப்படுகின்றது.

"பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக்கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்ம கர்மத்தின் பலன் என்னும் எண்ணங்கள் புகுத்தப்பட்டு தங்கள் கஷ்டங்களையும் தரித்திரங்களையும் உணராமல்" செய்யப்பட்டு விடுகின்றது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் ஏழை அதைத் தன் 'தலையெழுத்து' என்று சொல்கிறான்; பாடுபடாமல் பணக்காரனாகிறவன் அதை 'லட்சுமி கடாட்சம்' என்கிறான்.

பெரியார் : சுயமரியாதை சமதர்மம் என்ற நூலிலிருந்து.

மேற்குலகம் கூட ஒரு கட்டத்தில் கிறிஸ்தவப் பாதிரியார்களின் கொள்கைகளினூடுதான் வளர்ந்தது வலுத்தது...! உலகப் புகழ்பெற்ற கணித மேதைகள் ஞானிகள் என்று பிராமணியம் அறிவியலின் பால் ஆழச் சென்று சமூகங்களைக் கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருந்தது...அது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு..! நீங்கள் அவர்களின் அறிவியலைத் தேடாமல்...அவர்களின் சிந்தனைகளை வெல்லக்கூடிய மாற்று வழிகளைத் தேடாமல்..அவர்களின் ஏமாற்று வழிமுறைகளுக்குள் மண்டியிட்டுக் கிடந்துவிட்டு இப்போ...அவர்களை திட்டித்தீர்ப்பதில் பயனில்லை...! இது இன்று அமெரிக்காவை திட்டித் தீர்ப்பதுக்கு சமானம்...! இயலுமென்றால் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஜனநாயகத்துக்கு எதிராக நாடுகளை மக்களை அணிதிரட்டி அதை முறியடியுங்கள் பார்க்கலாம்...இதே நிலையில் தான் நீங்கள் அன்று பிராமணியத்தோடு இருந்தீர்கள் புரிந்து கொள்ளுங்கள்...! நீங்கள் பெரியாரை கூப்பிட்டால் என்ன பகுத்தறிவு வாதம் என்று குப்பைகளைக் கொண்ட்டினால் என்ன..கொள்கையில் உறுதியில்லா தெளிவில்லாத கடைப்பிடிக்கும் சாதிக்கும் தன்மைகள் அற்ற இயலாமை என்பது உள்ளத்தில் உள்ளவரை உங்களால் எதையும் வெற்றி கொள்ள முடியாது...! ஆயிரம் பெரியார் வந்தும் எதுவும் செய்ய முடியாது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
பிராமணர்கள்,
இந்தியாவில் இருந்த களச்சூழ்நிலை வேறு,இலங்கையில் உள்ள களச்சூழ்நிலை வேறு. இந்தியாவில் பிராமணர்களுக்கு எதிரான இயக்கம் போல் செயற்படவேண்டிய நிலையில் ஈழத்தில் இல்லை. ஈழத்தில் பெரும் பாலும் போராட்டத்துக்கு ஆதரவாகவே அவர்கள் இருக்கிறனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிராமணரை பிரித்து அவர்களை தாக்கி எழுதி அவர்களை எம்மில் இருந்து அன்னியப்படுத்தும் வகையில் செயற்படுவது எமது நாட்டிற்கு நல்லதா என யோசிக்க வேண்டும். போராளியான பிராமணர்களும் இருக்கிறர்கள்.

இந்தியாஎதிர்பியக்க கோசத்தை இரவல் வாங்கி கோசம் போட்டு ஆவது ஏதும் இல்லை.
எம்மிடம் இருக்கும் சாதீயத்தை நீக்கவேண்டுமா? அதை பற்றி கதையுங்கள். எமது பிரதெசத்தில் சாதியத்தை தூக்கிபிடிப்பொரை விமர்சியுங்கள்.
நாம் எம்மை திருத்திகொள்வோம்.
பிரமணார்கள் என்று எழுதி ஈழத்தில் எதிராக இல்லமல் இருப்பவர்களை எதிரான் மன உணர்விற்கு கொண்டு வரதீர்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#27
இணையத்தில் படித்த ஒரு ஜென் கதை.
----------------------------------


ஒருவனை ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் கிண்டலடித்துக்கொண்டே இருந்தார்கள். அவன் எதைச் சொன்னாலும் செய்தாலும் அது குறித்து கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதனால் மனம் வருந்திய அவன் ஒரு ஜென் குருவை சந்தித்து இதில் இருந்து தப்பிக்க வழி கேட்டான். அவர் மக்கள் இயல்பாகவே மதம் ஏற்படுத்திய நுட்பமான குற்ற உணர்வால் இரகசியாமாக, தம்மை அறியாமலே அவதிப்படுபவர்கள், எனவே அதைப்போக்கிக்கொள்ள மற்றவர்களை குற்றம் கண்டுபிடித்தும் கேலி செய்யவும் முனைகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தம்மை நியாயப்படுத்திக்கொள்ள முடிகிறது. எனவே நீ செய்யவேண்டியதெல்லாம், அவர்கள் எதைச்சொன்னாலும், செய்தாலும் அவர்கள் உன்னை கேலி செய்யும் முன்பே அவர்களை கேலி செய்ய ஆரம்பித்துவிடுவதுதான். நீ அவர்கள் எதைச் சொன்னாலும் கேலி செய். நாளடைவில் நீ பெரிய அறிஞனாகக் கருதப்படுவாய் என்ற அந்த இரசியத்தை சொல்லியனுப்பினார். Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> . .</b>
Reply
#28
நான் ஒன்றும் இங்கே பெரியாருக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. தமிழையும் சைவத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் எங்களுடைய சைவத்தமிழ்க் கோயில்களில் தமிழின் நிலை என்ன எனபதை யாராவது சிந்த்திதுப் பார்த்தீர்களா. தமிழ் வெறுப்பில் இந்தியாவின் பிராமணருக்கு ஈழத்துப் பிராமணர்கள் ஓன்றும் சளைத்தவர்களல்ல. நீங்கள் யாராவது சனடாவிலுள்ள ஈழத்துச் கோயில்களுக்குப் போனால் தெரியும், இலங்கைப் பிராமணர்கள் எந்தளவுக்குக் காசில் குறியாக இருப்பதும், அவர்கள் எப்போதாவது வரும் இந்தியர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், எப்படி மரியாதையில்லாமல் இலங்கைத் தமிழர்களிடம் நடந்து கொள்கிறார்களென்பதும்.

எதற்காக நாங்கள் இன்னும் கனடாவில் தமிழில் அர்ச்சனையை நடைமுறைப்படுத்தவில்ல? அப்படியென்றால் பிராமணர் சொல்வது போல தமிழ் என்ன நீச பாசையா. திருமறைக்கட்டில் வேதங்களாள் பூட்டப்பட்ட கதவுகளைத் தமிழ்த்தேவாரம் திறந்து வைத்ததென்றால், சிவபெருமான தமிழ்ப்பிரியன், தமிழ்த் தேவாரத்தைப் பாடியதும் காட்சியளித்தாகச் சைவக் கதைகள் கூறுகின்றன. அப்படியாயின் அந்தத் தெய்வத் தமிழை நீச பாசையென்று சொல்லும் பார்ப்பான்களைப் பராமரிக்கும் ஈழத்தமிழருக்குச் செருப்பால் அடிக்க வேண்டாமா?

ஐயா/அம்மா குருவியாருக்கு, ஒன்றில் பிராமணரின் நச்சுத்தன்மை தெரியாது அல்லது அவரும் ஒரு பச்சோந்திப் பார்ப்பானாகக் கூட இருக்கலாம். நானும் ஒரு ஈழத் தமிழன் பிராமணியம் தமிழருக்கிணைத்த கொடூரங்களையும் அவர்களின் தமிழெதிர்ப்பையும் அறியாமல், நானும் அண்மைக் காலம் வரை, ஐயரின் தட்டில், கஷ்ரப்பட்டுழைத்த காசைக் கொட்டும் ஈழத் தமிழர் தானையா.

தமிழ்நாட்டில் கரூரில் தமிழில் குடமுழுக்குச் செய்ததால் கோயிலுக்குத் தீட்டுப் பட்டு விட்டது என்று நீதிமன்றம் போனவர்கள் தான் இந்தப் பரதேசிப் பார்ப்பான்கள். அவர்கள் தங்களைத் தமிழர்களாகக் கருதுவதில்லை. சிதம்பரம் கோயிலுக்குள் தமிழில் தேவாரம் பாட இந்தப் பார்ப்பான்கள் அனுமதிப்பதில்லை. மீறிப்பாடிய ஒரு தமிழ் ஓதுவாரை அடித்து நொருக்கி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியவர்கள் இந்தப் பார்ப்பான்கள்.

காஞ்சி சங்கராச்சாரி தமிழெதிரி, தமிழை நீசபாசையென்று கூறி தமிழில் பேசவேண்டி ஏற்பட்டால் குளித்து விடுவாராம், அப்படியான காஞ்சி காமகேடியைத் தான் தங்களுடைய தலவராக கனடாவிலும், இலங்கையிலுமுள்ள பிராமணர்கள் நினைக்கிறார்கள், "தலைவன் எவ்வழி, மக்கள் அவ்வழி".

ஈழத்தமிழரின் கலாச்சாரம் தேவாரக் கலாச்சாரம், சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை. நாங்கள் எங்களுடைய சைவ சமயத்தைத் தமிழ்ப்படுத்த வேண்டும், இதை நாங்கள் கனடாவில் ஆரம்பிக்கலாம். எங்களுடைய பண்பாட்டிலும், மொழியிலும் பற்றில்லாத, எங்களுடைய டொலரில் குறியாக இருக்கும் பார்ப்பான், ஏதாவது எங்களுக்கு விளங்காத மொழியில் முணுமுணுத்தால் தான், எங்களுடைய தமிழ் முருகன் கேட்பாரா? தமிழில், ஒரு தமிழன் சொன்னால் அவர் காது கொடுத்துக் கேட்க மாட்டாரா? எதற்காக நாங்கள் , எங்களின் முதுகில் குத்தும் பரதேசிப் பார்ப்பான்களை இங்கு இழுத்து வந்து பராமரிக்க வேண்டும்.

அருளை அள்ளி வழங்குவதில் கதிர்காமத்து முருகன் யாருக்கும் சளைத்தவரா? கதிர்காமத்து முருகனுக்குப் பிராமணரா பூசை பண்ணுகிறார்கள். கருவாட்டையும், மாமிசத்தையுமுண்ணும் வேடுவ குலத்து மக்கள் தானே வாயைக்கட்டிக் கொண்டு பூசை பண்ணுகிறார்கள். கதிர்காமக் கந்தனுக்குப் பிராமணன் தேவையில்லை, ஏன் கனடாக் கந்தனுக்கு மட்டும் பிராமணர் தேவை?


Reply
#29
kirubans Wrote:காலங்காலமாக பிராமணியம் எவ்வாறு மற்றைய சமூகங்களை அடக்கியாண்டு வருகின்றது என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். தற்போது பிராமணியம் என்பது ஒரு சமூகத்தை மட்டும் சார்ந்ததல்ல. வேறு சாதியினரும் பிராமணக் கொள்கைகளைக் கையாண்டு உழைக்கும் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்.

ஈழத்தில் பிராமணர்கள் என்ற சாதியினர் இவ்வாறு செய்யமுடியாமல் போயிற்று. எனினும் தமிழ் மேட்டுக்குடியினர் பிராமணியக் கொள்கைகளை தம் கையில் எடுத்து மற்றையோரை அடக்கியாண்டனர். 70களின் இறுதிவரை இந்த ஆதிக்கம் இருந்துதான் வந்தது. அவை முற்றிலும் அழிந்து போகாமல் தற்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கின்றன. எனவே பிராமணியத்தை தூக்கிப் பிடிப்பது சிலருக்குத் தேவையாக இருக்கலாம்.

உங்கள் பார்வை சரியோ தவறோ...பிராமணியத்தையோ...அதன் கொள்கைகளால் பயன் பெறுபவர்களையோ வெல்ல வேண்டின்...உங்களை அவர்களுக்கு நிகராக அவர்களின் கொள்கைகளுக்கு வலுவாக எடுத்து வாருங்கள்..! அதைவிடுத்து அவர்களைத் திட்டித்தீர்ப்பதால்..அவர்கள் பலவீனமாகப் போவதும் இல்லை நீங்கள் பலமடையப்போவதும் இல்லை..! அதனால்தான் சாதியம் என்பது போன்ற பிராமணிய விளைவுகள் இன்னும் தப்பிப்பிழைக்க முடிகிறது...! அதன் ஆணி வேர் பிராமணியம் இட்டதாக இருந்தால் அதை ஆதிக்கம் செய்யவல்ல இன்னோர் மரத்தை நீங்கள் நாட்டுங்கள்...அதுதான் தேவை...அவர்களின் ஆணிவேரை நீங்கள் அறுக்க முயல்வது உங்களின் பலவீனத்தை அவர்களுக்கு அடையாளப்படுத்தும்...அதுமட்டுமன்றி அவர்கள் தங்கள் இருப்பை இழக்க இலகுவில் சம்மதிக்கவும் போவதில்லை...! அவர்களை ஆணிவேரறுக்க முனைந்து தங்கள் சிந்தனைகளை தங்களோடே சமாதியாக்கிக் கொண்டனர் சிலர்...அவர்களில் பெரியாரும் அடக்கம்...! எனவே தேவை எதுவோ அதைச் செய்யுங்கள் பகை வளர்ப்பதை விடுங்கள்...அறிவுபூர்வமாக சிந்தனைகளினூடு தேவையான மாற்றங்களை வலியுறுத்துங்கள்...! வரவேற்கலாம்...! பிருத்தி உங்களுக்கும் தான்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
அப்ப எதுவும் செய்யமுடியாது என்று உம்மைப் போல் சரணகதி ஆகச் சொல்லுகிறீரா,இது பேடிகளின் வாதம் ஆகாதோ.அடக்குமறைக்கும்,அனியாயத்திற்கும் எதிராகப் பொங்கி எழுத்ததால் தான் நாம் இன்று புலியாகினோம்.உமது வாதத்தின் படி அடக்கப் படுபவர் அடங்கி இருக்க வேண்டு மெனில் எமது போராட்டம் எதற்கு.அதற்கு ஏன் நீர் ஆதரவு குடுக்கிறீர்,சிங்களவன்க்கு அல்லவா நீர் சாமரம் வீச வேண்டும்,அவன் அல்லவா எமை அடக்கி ஆன்டு வந்தான்,அவன் தானே வல்லவன்.
மனித சரித்திரத்தில் நிலயாக அடக்கி ஆன்டவரும் கிடயாது,அஸ்தமிக்காத பேரரசுகளும் கிடயாது.
சரித்திரத்தை இலவசமாகக் கிடைப்பதை மட்டுமே வைத்து இணயத்தில் வாசித்ததால் தானோ உமது அறிவுத் திறன் இப்படிப் பிரகாசிக்கிறது.
Reply
#31
KULAKADDAN Wrote:பிராமணர்கள்,
இந்தியாவில் இருந்த களச்சூழ்நிலை வேறு,இலங்கையில் உள்ள களச்சூழ்நிலை வேறு. இந்தியாவில் பிராமணர்களுக்கு எதிரான இயக்கம் போல் செயற்படவேண்டிய நிலையில் ஈழத்தில் இல்லை. ஈழத்தில் பெரும் பாலும் போராட்டத்துக்கு ஆதரவாகவே அவர்கள் இருக்கிறனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிராமணரை பிரித்து அவர்களை தாக்கி எழுதி அவர்களை எம்மில் இருந்து அன்னியப்படுத்தும் வகையில் செயற்படுவது எமது நாட்டிற்கு நல்லதா என யோசிக்க வேண்டும். போராளியான பிராமணர்களும் இருக்கிறர்கள்.

இந்தியாஎதிர்பியக்க கோசத்தை இரவல் வாங்கி கோசம் போட்டு ஆவது ஏதும் இல்லை.
எம்மிடம் இருக்கும் சாதீயத்தை நீக்கவேண்டுமா? அதை பற்றி கதையுங்கள். எமது பிரதெசத்தில் சாதியத்தை தூக்கிபிடிப்பொரை விமர்சியுங்கள்.
நாம் எம்மை திருத்திகொள்வோம்.
பிரமணார்கள் என்று எழுதி ஈழத்தில் எதிராக இல்லமல் இருப்பவர்களை எதிரான் மன உணர்விற்கு கொண்டு வரதீர்கள்.


ஈழத்தில் அவர்கள் எதிர்ப்பைக் காட்டாத காரணம், அங்கு பல்லைபிடுங்கிய பாம்பாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களும், தாங்கள் தமிழரல்ல, தமிழரை விட உயர்ந்தவர்கள் என்று தான் நினைக்கிறார்கள். தமிழை யாராவது இழிவு செய்தால், இந்தியாவில் செய்தாலென்ன, இலங்கையில் செய்தாலென்ன. தமிழரெல்லாரையும், தமிழ் ஒன்று சேர்ப்பதில்லையா? First of all we have to get rid of this Indian Tamil/ Eelam Tamil mentality.
Reply
#32
preethi Wrote:?

அருளை அள்ளி வழங்குவதில் கதிர்காமத்து முருகன் யாருக்கும் சளைத்தவரா? கதிர்காமத்து முருகனுக்குப் பிராமணரா பூசை பண்ணுகிறார்கள். கருவாட்டையும், மாமிசத்தையுமுண்ணும் வேடுவ குலத்து மக்கள் தானே வாயைக்கட்டிக் கொண்டு பூசை பண்ணுகிறார்கள். கதிர்காமக் கந்தனுக்குப் பிராமணன் தேவையில்லை, ஏன் கனடாக் கந்தனுக்கு மட்டும் பிராமணர் தேவை?



ஒன்றை கவனியுங்கள் பிரீத்தி கனடா கோயில்கள் யாருடைய கட்டுபாட்டில் இருக்கிறன, பிராமணர்களதா?
இல்லையே?
நம்மவர்களது கட்டுபாட்டில்.
பிராமணர்களை கூப்பிட்டது யார் தப்பு, நம்மவரது தானே?
எம்மில் தப்பைவைத்துகொண்டு ஏன் அவர்களில் பாய்கிறீர்கள்.
நீங்கள் கூப்பிடாவிட்டல் அவர்கள் வேறு தொழில் செய்து பிழைக்க யோசிப்பர்கள். அதைவிடுத்து பிராமணர்க்ளை பேசி ஏதுமில்லை.
எம்மவர் திருந்தட்டும் முதல்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#33
preethi Wrote:[.
First of all we have to get rid of this Indian Tamil/ Eelam Tamil mentality

இதையும் தமிழில் எழுதுங்க புரியலை.


ஏன் தமிழர்கள்,
மட்டும் இன்று வரை என்ன செய்கிறீர்கள்,
எல்லரும் எல்லர்வீட்டிலும் போய் உண்டு உறவா கொண்டடுகிறீர்கள்.
முதல் உங்களை திருத்துங்கள், பின்னர் அவர்கள் திருந்துவார்கள், அல்லது திருந்துவோம் எல்லரும் சேர்ந்து
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#34
narathar Wrote:அப்ப எதுவும் செய்யமுடியாது என்று உம்மைப் போல் சரணகதி ஆகச் சொல்லுகிறீரா,இது பேடிகளின் வாதம் ஆகாதோ.அடக்குமறைக்கும்,அனியாயத்திற்கும் எதிராகப் பொங்கி எழுத்ததால் தான் நாம் இன்று புலியாகினோம்.உமது வாதத்தின் படி அடக்கப் படுபவர் அடங்கி இருக்க வேண்டு மெனில் எமது போராட்டம் எதற்கு.அதற்கு ஏன் நீர் ஆதரவு குடுக்கிறீர்,சிங்களவன்க்கு அல்லவா நீர் சாமரம் வீச வேண்டும்,அவன் அல்லவா எமை அடக்கி ஆன்டு வந்தான்,அவன் தானே வல்லவன்.
மனித சரித்திரத்தில் நிலயாக அடக்கி ஆன்டவரும் கிடயாது,அஸ்தமிக்காத பேரரசுகளும் கிடயாது.
சரித்திரத்தை இலவசமாகக் கிடைப்பதை மட்டுமே வைத்து இணயத்தில் வாசித்ததால் தானோ உமது அறிவுத் திறன் இப்படிப் பிரகாசிக்கிறது.

ஈழத்தில் தமிழர்கள் சிங்களவர்களை வேரறுக்க முயலவில்லை...தங்களின் உரிமையை தாங்களாக போராடிப் பெற விளைகின்றனர்...! பிராமணியத்தை சிங்களப் பேரினவாதத்திற்கு ஒப்பிடத் தெரிந்த உங்களுக்கு தமிழர்களின் போராட்டத் தன்மை புரியவில்லையே...! இப்படிதான் கண்மூடித்தனமாக பிராமணியத்தையும் எதிர்க்கிறீர்கள்...தவறுகளும் இயலாமையும் உங்கள் பக்கமே அதிகம்..புரிந்து கொண்டு அறிவுபூர்வமாக செயற்படுங்கள்..பிராமணியரைப் போல...! மற்றவர்களைப் போல ஆவேசப்பட்டு அடிமையாய் தொடர்ந்தும் வாழாதீர்கள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
KULAKADDAN Wrote:பிராமணர்கள்,
இந்தியாவில் இருந்த களச்சூழ்நிலை வேறு,இலங்கையில் உள்ள களச்சூழ்நிலை வேறு. இந்தியாவில் பிராமணர்களுக்கு எதிரான இயக்கம் போல் செயற்படவேண்டிய நிலையில் ஈழத்தில் இல்லை. ஈழத்தில் பெரும் பாலும் போராட்டத்துக்கு ஆதரவாகவே அவர்கள் இருக்கிறனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிராமணரை பிரித்து அவர்களை தாக்கி எழுதி அவர்களை எம்மில் இருந்து அன்னியப்படுத்தும் வகையில் செயற்படுவது எமது நாட்டிற்கு நல்லதா என யோசிக்க வேண்டும். போராளியான பிராமணர்களும் இருக்கிறர்கள்.

இந்தியாஎதிர்பியக்க கோசத்தை இரவல் வாங்கி கோசம் போட்டு ஆவது ஏதும் இல்லை.
எம்மிடம் இருக்கும் சாதீயத்தை நீக்கவேண்டுமா? அதை பற்றி கதையுங்கள். எமது பிரதெசத்தில் சாதியத்தை தூக்கிபிடிப்பொரை விமர்சியுங்கள்.
நாம் எம்மை திருத்திகொள்வோம்.
பிரமணார்கள் என்று எழுதி ஈழத்தில் எதிராக இல்லமல் இருப்பவர்களை எதிரான் மன உணர்விற்கு கொண்டு வரதீர்கள்.



குளக் காடான் இங்கு எவரும் பிராமணரைப் பற்றிக் கதைக்க வில்லை,அவர்களும் மனிதர்களே,ஈழத்தவரே. நாங்கள் இங்கு சாடுவது பிராமணியத்தையும்,தமிழ் நாட்டில் இருந்து கொண்டு எமக்கு எதிராகச் செயற்படும் பிராமணியத்தைப் பின் புலமாகக் கொண்டவர்களைப் பற்றியே. நாங்கள் இவற்றைக் கதைக்காமல் எங்கள் எதிரிகளை அடயாளம் காட்ட முடியாது,இவர்கள் இன்று இணயத்தில் தமிழில் எமக்கு எதிராக பல நச்சு விதைகளை விதைத்து வருகிறார்கள்,வரலாறு அறியாதவர் இவற்றை இலவசமாக வாசித்து புத்தி பேதலித்துள்ளனர்.இவற்றுக்கு நாம் இங்கு பதில் அழிக்காது விடின்,இணயத்தில் எமது கருத்தியல்களை நாம் ஏற்ற முடியாது.
Reply
#36
ப்ரீதி,

கனக்க டொலர் கொடுத்திட்டீங்க போலிருக்கே. போனது போகட்டும். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்று படித்திருப்பீர்கள். அதன்படி கோயிலுக்குப் போகாமலேயே விடலாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.

கோயிலுக்குப் போய்த்தான் தீரவேணுமென்றால், அர்ச்சனைக்குக் காசு கொடுக்காதீர்கள். மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு வாருங்கள் (யாரும் ஏமாந்தவன் உபயம் செய்திருப்பான்). :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#37
narathar Wrote:[
குளக் காடான் இங்கு எவரும் பிராமணரைப் பற்றிக் கதைக்க வில்லை,அவர்களும் மனிதர்களே,ஈழத்தவரே. நாங்கள் இங்கு சாடுவது பிராமணியத்தையும்,தமிழ் நாட்டில் இருந்து கொண்டு எமக்கு எதிராகச் செயற்படும் பிராமணியத்தைப் பின் புலமாகக் கொண்டவர்களைப் பற்றியே. நாங்கள் இவற்றைக் கதைக்காமல் எங்கள் எதிரிகளை அடயாளம் காட்ட முடியாது,இவர்கள் இன்று இணயத்தில் தமிழில் எமக்கு எதிராக பல நச்சு விதைகளை விதைத்து வருகிறார்கள்,வரலாறு அறியாதவர் இவற்றை இலவசமாக வாசித்து புத்தி பேதலித்துள்ளனர்.இவற்றுக்கு நாம் இங்கு பதில் அழிக்காது விடின்,இணயத்தில் எமது கருத்தியல்களை நாம் ஏற்ற முடியாது.

அதை நாமும் புரிந்து வாசித்து தான் வருகிறொம், ஆனால் தலைப்பு பிராமணர்கள் என்று தான் விழிக்கிறது. அதைக் கவனியுங்கள்.
அவ்வாறெனின் இந்திய பிராமணியம் என்று தலைப்பை மாற்ற சொல்லுங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#38
KULAKADDAN Wrote:ஒன்றை கவனியுங்கள் பிரீத்தி கனடா கோயில்கள் யாருடைய கட்டுபாட்டில் இருக்கிறன, பிராமணர்களதா?
இல்லையே?
நம்மவர்களது கட்டுபாட்டில்.
பிராமணர்களை கூப்பிட்டது யார் தப்பு, நம்மவரது தானே?
எம்மில் தப்பைவைத்துகொண்டு ஏன் அவர்களில் பாய்கிறீர்கள்.
நீங்கள் கூப்பிடாவிட்டல் அவர்கள் வேறு தொழில் செய்து பிழைக்க யோசிப்பர்கள். அதைவிடுத்து பிராமணர்க்ளை பேசி ஏதுமில்லை.
எம்மவர் திருந்தட்டும் முதல்.

நீங்கள் ஐரோப்பாவில் இருக்கின்றீர்கள். கனடாவில் ஐயர்தான் கோயில் தர்மகர்த்தா என்று கேள்விப்பட்டேன்.
<b> . .</b>
Reply
#39
kirubans Wrote:[
நீங்கள் ஐரோப்பாவில் இருக்கின்றீர்கள். கனடாவில் ஐயர்தான் கோயில் தர்மகர்த்தா என்று கேள்விப்பட்டேன்.
ஒன்றிரண்டு இருக்கலாம். எல்லம் அவ்வாறா இருக்கிறது. ?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#40
எல்லாம் இருக்கட்டும் வெறும் 5 கருத்தெழுதிய பிருத்தி எப்படி களத்துக்கு நடுவில் வந்தார்...! அவனவன் உள்ள வரை படாதபாடுபடுறான்...பிருத்தி மட்டும் எப்படி நுழைந்தார்...??! பிராமணியம் கொடுத்த பாடம் போல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)