Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>இந்தோனேசியாவில் விமான விபத்து.</b>
<img src='http://img270.imageshack.us/img270/1453/crashindonesia7by.jpg' border='0' alt='user posted image'>
இந்தோனேசியவில் இன்று பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விட்டது.
இதில் பயணம் செய்த 130 பேரும் இரந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்ரது.
இவ் விமானம் மக்கள் குடியிருப்பில் மேல் விழுந்து எரிந்ததால் பல வாகனங்கள் தீயுக்கு இரையாகி உள்ளன.
<b> .. .. !!</b>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:22pt;line-height:100%'>
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/asia_pac_enl_1125914614/img/1.jpg' border='0' alt='user posted image'>
ஜகார்தா, செப்.5:
<b>இந்தோனேசிய விமானம் ஒன்று திங்கள்கிழமை நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 117 பேர் இறந்தனர்.</b>
இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா மாகாணத்தைச் சேர்ந்த ஆளுநரும் இதில் இறந்தார்.
மெடான் நகரில் இருந்து ஜகார்த்தாவுக்குப் புறப்பட்ட போயிங் விமானம், விண்ணில் சென்ற ஒரு நிமிஷத்துக்குள் தீப்பிடித்து எரிந்தது என்று போக்குவரத்து அமைச்சர் ஹட்டா ரட்ஜஸô தெரிவித்தார்.
விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 117 பேர் இருந்ததாக விமான நிறுவனத்தின் தாற்காலிகத் தலைவர் மேஜர் ஜெனரல் ஹஸ்ரில் ஹம்ஜா டன்ஜுங் கூறினார்.
விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி விமானம் எரிந்து தரையில் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்த இடத்தில் இருந்த சிலரும் உயிரிழந்துள்ளனர். அதில் எவ்வளவு பேர் இறந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.
அந்தப் பகுதியில் இருந்த சில வீடுகளும், அங்கு நிறுத்தியிருந்த 10-க்கும் மேற்பட்ட கார்களும் தீப்பிடித்து எரிந்தன. விமானம் விழுந்த இடத்தில் இருந்து கரும்புகை எழும்பியதால், மீட்புப் பணிகளுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.
வடக்கு சுமத்ரா மாகாண ஆளுநர், அந் நாட்டு அதிபரைச் சந்திக்க இந்த விமானத்தில் சென்றார். அவரும் தீயில் சிக்கி இறந்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக டன்ஜுங் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய விமானம் கடந்த 25 ஆண்டுகளாக, போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளது. போக்குவரத்தில் ஈடுபடும் தகுதியில் இந்த விமானம் இருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் இதற்கு சான்றிதழ் தரப்பட்டது. விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால், 2016-ம் ஆண்டு வரை இதை உபயோகித்திருக்க முடியும்.
நன்றி தினமணி
</span>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
தகவலுக்கு நன்றிகள் அஜீவன் அண்ணா.
<b> .. .. !!</b>