Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நோர்வே செய்திகள்
#1
<img src='http://www.yarl.com/forum/weblogs/upload/15/1603007486431c2d06f0d7b.jpg' border='0' alt='user posted image'>நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் தமிழரான பாலசிங்கம் யோகராஜாவின் பெயர் இடம்பெற்றிருக்கின்றது.


கடந்த 2003 ஆம் ஆண்டு நோர்வே நகரசபைத் தேர்தலில், நோர்வே தமிழ் மக்களின் பிரதிநிதியாக தொழிற்கட்சி உறுப்பினரான பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) போட்டியிட்டு ஒஸ்லோ வாழ் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இம்மாதம் 12 ஆம் திகதி (செப்.12) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் பாலசிங்கம் யோகராஜாவின் பெயரும் இடம்பெற்றிருக்கின்றது.

இது நோர்வே தமிழர்களின் அரசியல் பிரவேசத்தின் படிநிலை வளர்ச்சியாகும்.

இவரது பெயர் தொழிற்கட்சி வேட்பாளர் பட்டியலில் 18 ஆவது இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. எனவே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவென்ற போதும், தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரின் பெயர் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றமை எதிர்காலத்தில் நோர்வே நாட்டில் தமிழர்கள் அரசியலில் தடம் பதிப்பதற்கான புடம் போடப்படுகின்றது என்பதையே வெளிப்படுத்துகின்றது.

நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாலசிங்கம் யோகராஜா தெரிவித்ததாவது:

இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள். தொலைநோக்கு அடிப்படையில் எமது இருப்பு இங்கேதான் அமையப்போகின்றது என்ற யதார்த்தப் புறநிலையில், நாமும் இந்த நாட்டின் அரசியலில் முக்கிய அங்கமாகின்றோம். இந்த ஆரம்ப முயற்சியை வழிகாட்டலாகக் கொண்டு நோர்வேயில் வாழும் இளைய தமிழர்கள் நோர்வே அரசியலிலும் சமூகத்திலும் ஈடுபாடு கொள்ளவேண்டும், செயல் முனைப்புக் கொள்ளவேண்டும்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களின் சார்பில் ஒரு பிரதிநிதியை நோர்வே நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான முனைப்போடு நாம் உழைக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் நாம் அரசியல் உட்பட பல தளங்களிலும் பலமாக வளரும் போதுதான் தாயக மக்களின் கெளரவமான வாழ்வுக்கும் பலம் சேர்ப்பவர்களாக நாம் கடமையாற்ற முடியும்.

இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் எமது வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கடந்த 2003 ஆம் ஆண்டு, நகரசபைத்தேர்தலில் 57 விழுக்காடுடைய தமிழ்மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பது நோர்வே அரசியல் தளத்தில் அவதானிக்கப்பட்ட முக்கிய விடயம்.

அதிலும் குறிப்பாக அதிகமான தமிழ்ப் பெண்கள் தேர்தலில் வாக்களித்தமை உயர்வாகப் பேசப்படுகின்றது.

ஆனபோதும் வாக்குரிமையுடைய 43 விழுக்காட்டினர் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவில்லை என்பது கவலையளிக்கின்ற விடயமேயாகும்.

எனவே இம்முறை தமிழ்மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தப்படுமேயானால் எமது வாக்குப்பலம் தேர்தலில் வெகுவாகப் பிரதிபலிக்கும் என்றார் பாலசிங்கம் யோகராஜா.


நன்றி புதினம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#2
புலத்தில் நமது எதிர்கால இளைஞ்ஞர்களின் ஈடுபாடு எவ்வாறு அமையும்?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
மேலதிக விபரங்கள்
http://www.tamilnation.org/diaspora/norway.htm
Reply
#4
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#5
யார் அப்பா அந்த ஆசாமிகள் பெயர்களை கொஞ்சம் கூறுங்களேன்...ஆ.சங்கரி
""
"" .....
Reply
#6
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#7
நோர்வேயின் புதிய அரசுக்கு தேசியத்தலைவர் வாழ்த்துச்செய்தி
றுசவைவநn டில நுடடயடயn ஆழனெயலஇ 19 ளுநிவநஅடிநச 2005

அண்மையில் நடைபெற்று முடிந்த நோர்வேயின் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எதிர்வரும் 15 ஆம் நாள் தலைமை அமைச்சராகப் பதவி யேற்கவிருக்கும் ஸ்டோல்டன் போர்க் அவர்களுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நோர்வேயின் புதிய அரசாங்கமானது அந்த நாட்டில் பொருளாதார, சமுக மேம்பாட்டிற்கு அதி சிறப்பான தமது பணிகளை ஆற்றும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அதேவேளை கடந்த காலங்களில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான அனுசரணைப் பணிகளில் நோர்வேயின் பங்களிப்பு மிகவும் சிறப்புற இருந்தது எனவும், தொடர்ந்தும் இந்தப் பணிகளில் நோர்வேயின் புதிய அரசாங்கமும் தமது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் எனத்தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தேசியத் தலைவர் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்டோல்டன் போர்க் பச்சை -சிவப்பு கூட்டணியின் முதன்மைக் கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் என்பது குறிப்பட்டத்தக்கதாகும்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#8
தகவலுக்கு நன்றிகள் வினித். நோர்வேயின் புதிய அரசிற்கும் அதன் புதிய தலைவருக்கும் எமது வாழ்துக்கள்.


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#9
வந்தவர் எப்படி தமிழர்பால் அனுதாபம் உடையவரா உண்மையின்பக்கம் நிற்பவரா? நோர்வே தமிழர் கூறுவீர்களா?
.

.
Reply
#10
வந்தவர் மனிதர்களை நேசிப்பவர். மனிதாபிமானம் உள்ளவர். ஈழத்தமிழரின் ஓலக்குரல் நிச்சயம் அவரும் கேட்டிருப்பார். தமிழரின்பால் அன்பு கொண்டவர் என பலர் சோல்லி கேள்வியுற்றிருக்கின்றேன்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#11
ஆகா..கட்டுக்கதைக்கு பேர் போன நிதர்சனம் புதிய கட்டுக்கதை அதை சங்கதிவேற ஆமொத்தது போல பிரதி செய்து போட்டிருக்கு... இங்கே நிதர்சனத்தின் அரசியலை யார் கணக்கில் எடுத்தார்கள்? நார்வேக்கு விடுதலைப்புலிகள் வாழ்த்துச் செய்தி சொல்லுவதன் மூலம் நிதர்சனம் இணையம் புலிகளுக்கும் நோர்வேக:கும் தனிப்பட்ட தொடர்புகள் இருக்கின்றது என்பதை காட்ட விளைகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு நாளை இலங்கை பத்திரிகைகளும் அமைச்சார்களும் அறிக்கை கூட விடலாம். இதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை. தம்மை தேசியத்துக்கு ஆதரவாய் காடட்டிக் கொண்டு நிதர்சனம் செய்யும் அரசியல் வேலையிது. இதை ஏன் தமிழர்கள் சிலர் உணர மறுக்கின்றனர்? நார்வே புலிகளுடன் பக்க சார்பாக நடக்கிறது என்ற குற்றச்சாட்டு இனவாதிகளால் வைக்கப்படும் இச் சந்தர்ப்பத்தில் இதற்க்கு வலுச் சோர்பது பொல இவ்வாறன அறிக்கைகளை நிதர்சனம் வீடுவது என்ன நோக்கத்திற்காக?

[size=18][b]" "
Reply
#12
மன்னிக்கவேண்டும் எழுத்துப்பிழைகளை திருத்துவதானால் இடை நிலை அங்கத்துவம் வேண்டும். அதனால் இதை திருத்த முடியவில்லை.
நிலவன்

[size=18][b]" "
Reply
#13
இலங்கை செய்திப்பத்திரிகைகளிலும் இச்செய்தி வந்திருக்கிறது.
.

.
Reply
#14
தற்போது வந்துள்ளவர் தனது தேர்தல் நோக்கோடு ஏற்கனவே நோர்வே சிவசுப்பிரமணியர்ஆலய தேர்த்திருவிழாவுக்கு வருகை தந்து அங்கே தமிழர்களைப் பற்றி புகழ்ந்து பேசியதை ரீ.ரீ.என். தொலைக்காட்சியினூடாக நீங்களும் பார்த்திருப்பீர்கள். இங்கு தனியொரு கட்சி ஆட்சிசெய்யுமளவுக்கு பெரும்பான்மையான முடிவுகள் அமைவதில்லை பெரும்பாலும கூட்டணிகட்சிகளின் ஆட்சிதான.
; இம்முறை சிவப்புகூட்டணி(தொழிற்கட்சிசார்பானது) பச்சைக்கூட்டணி (தற்போதுள்ளகூட்டரசு) என இருபிரிவுகளாக பெரும் போட்டி நடைபெற்றதால் தமழர்களின் பங்களிப்பும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டதால் தமிழரின் பெயரும் கட்சியில் சேர்க்கப்பட்டது.பாராளுமன்றத்திற்கு வாக்களிக்க தகுதியுள்ள தமிழரின் எண்ணிக்கையின் படி ஒரு தமிழ்உறுப்பினரை பாராளுமன்றம் அனுப்புவது கஷ்டமானது. மாநகரசபைக்கு வாக்களித்த அனைவரும் பாராளுமன்றதேர்தலுக்கு வாக்களிக்கமுடியாததும் ஒரு காரணம். பத்தொன்பது ஆசனம் தேர்வு செய்யப்படும் ஒஸ்லோ மாவட்டத்தில் ஆறு ஆசனங்கள் மட்டுமே தொழிற்கட்சிக்கும் அதன்தோழமைக்கட்சிக்கு இரண்டு ஆசனங்களுமே கிடைத்தது! ஆனால் நகரசபைத்தேர்தலில் தமிழர் நகரசபை உறுப்பினராவதற்கு சாத்தியம் உண்டு.

அடுத்து இங்குள்ள அரசியல்கட்சிகளும் சரி அரசியல்வாதிகளும் சரி வெளிநாட்டுக்கொள்கைகளில் முன்னைய அரசுகளைப் பின்பற்றி தொடர்ந்துபோவதுதான் வழமை.நாட்டின்நலனிலும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் மாற்றம்கொண்டுவருவதில்லை!
உதாரணம் இலங்கைப்பிரச்சினை தொடர்பானவிடயங்களில் ஏரிக் சொல்கைம் தொடர்வது, புதியகூட்டணியில் அங்கம் வகிக்கும் அவர் ஏற்கனவே மாற்றுக்கட்சியின் ஆட்சியின்போதும் சிறப்புத்தூதுவராக பணியாற்றினார். மாற்றுக்கட்சி உறுப்பினர் என்று பாகுபாடு காட்டாது வெளிநாட்டுக்கொள்கை கடைப்பிடிக்பட்டது!
!:lol::lol::lol:
Reply
#15
இலங்கையில் முடங்கிக் கிடக்கும் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்க சிறிலங்கா அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் 20 ஆம் திகதி 'பொங்கு தமிழ் தீப்பந்த எழுச்சிப் பேரணி' நடாத்தப்பட உள்ளது.


ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இந்தப் பேரணி நடைபெறும்.

இது தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தினை அனைத்துலக சமூகம் சிறிலங்காவிற்கு கொடுப்பதன் மூலம், இலங்கைத்தீவில் நீதியானதும், உண்மையானதுமான சமாதானம் உருவாக பங்காற்ற வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பயணங்கள் வரவேற்கப்படவில்லை என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடானது, தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாடுகளையும் உண்மை நிலைமைகளையும் அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துச்சொல்வதற்கான கதவுகளை மூடியுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்நிலைப்பாடு மீள்பரிசீலிக்கப்படுவதோடு, இலங்கைத்தீவின் இனப்பிணக்கில் தொடர்புள்ள இரண்டு தரப்புக்களும் சமத்துவத் தன்மையுடன் நடத்தப்படவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற யதார்த்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகிய வாழ்வுரிமைகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் இறைமைக்கான போராட்டத்தினை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா அரச படைகள் வெளியேற்றப்பட்டு, தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் நிழல் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு, நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் செழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் மேன்மை பேணப்பட வேண்டும்.

ஆழிப்பேரலைப் பொதுக்கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அழுத்தம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது செலுத்தப்பட வேண்டும். தமிழர் தாயகத்தில் நடைமுறையிலிருக்கும் தனியாட்சிக் கட்டமைப்பினை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிறுவர்கள், இளையவர்கள், பெரியவர்கள், முதியோர் என நோர்வேயின் திசைகளெங்கணும் வாழும் தமிழர்கள் யாவரும் அணிதிரண்டு, பதவியேற்கவுள்ள புதிய நோர்வே அரசாங்கத்திற்கு தமிழ்த்தேசியத்தின் உரிமைக்குரலை வெளிப்படுத்துவோம்! அணியணியாய் எழுந்து வாரீர்!

http://www.eelampage.com/?cn=20784
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#16
<b>New Norwegian ministers named

[TamilNet, October 17, 2005 15:11 GMT]
The new Norwegian Prime Minister Mr. Jens Stotenberg, presented Monday the ministerial portfolios in his new "Red-Green-alliance" Government to the Norwegian King Harald Monday. The New Norwegian Foreign Minister is Jonas Gahr Støre, 45, the Secretary General of the Norwegian Red Cross and a close confidante of the Labour Party president and the new Prime Minister. Mr. Erik Solheim, 50, the Special Envoy to Sri Lanka is the new Development Minister.
Mr. Solheim belongs to the Socialist Left Party (SV), the next largest party in the new coalition.

Ten ministers are from the Labour Party (AP), five from the SV and four from the Agrarian Party (SP), media reports in Norway said Monday.

Kristin Halvorsen, the leader of SV, is the new Finance Minister in the country. Mr. Erik Solheim served as the leader of SV between 1987-1997.

Jonas Gahr Støre has served under four Norwegian Prime Ministers Jan P. Syse, Gro Harlem Brundtland, Thorbjørn Jagland and Kjell Magne Bondevik, and served as Director of Staff under Prime Minister Jens Stoltenberg. He has also served as the Director of World Health Organisation (WHO) prior to his assignment in the Norwegian Red Cross in 2003.</b>

<img src='http://img51.imageshack.us/img51/707/newnorwministers5oz.jpg' border='0' alt='user posted image'>

www.tamilnet.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#17
நோர்வே அபிவிருத்தி அமைச்சரானார் எரிக்சொல்ஹெய்ம்!
[செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரொபர் 2005, 00:27 ஈழம்] [கொழும்பு நிருபர்]


நோர்வேயின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி அமைச்சராக இலங்கைக்கான விசேட தூதர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.



நோர்வே நாட்டின் புதிய பிரதமரான ஜ்கென்ஸ் ஸ்டோடென்பெர்க் திங்கட்கிழமை தமது அரசாங்கத்தின் அமைச்சரவைப் பட்டியலை நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டிடம் ஒப்படைத்தார்.

நோர்வே புதிய வெளிவிவகார அமைச்சராக ஜோனஸ் கர் ஸ்டோர் (வயது 45) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் உள்ளார்.

இலங்கைக்கான விசேட தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் (வயது 50) அந்நாட்டின் புதிய அபிவிருத்தி அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

நோர்வே தேர்தலில் எரிக் சொல்ஹெய்ம் சார்ந்துள்ள சோசலிஸ்ட் இடதுசாரி கட்சி இரண்டாவது பெரும்பான்மை பெற்ற கட்சியாக வென்றது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் 10 பேர் தொழிலாளர் கட்சி, 5 பேர் சோசலிஸ்ட் இடதுசாரி கட்சி, மற்றும் 4 பேர் அக்ரேரியன் கட்சியிலிருந்து இடம்பெற்றுள்ளனர்.

சோசலிஸ்ட் இடதுசாரிக் கட்சியின் தற்போதைய தலைவரான கிறிஸ்டின் ஹல்வோர்சென் நோர்வேயின் புதிய நிதி அமைச்சராகியுள்ளார்.

சோசலிஸ்ட் இடதுசாரிக் கட்சியின் தலைவராக 1987 ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் எரிக் சொல்ஹெய்ம் அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.eelampage.com/?cn=20920
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)