Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனிதன், சிம்பன்சி மரபணுவில் 96 சதவீத ஒற்றுமை
#1
மனிதனுக்கும் சிம்பன்சி குரங்குக்கும் இடையே மரபணு அமைப்பில் 96 சதவீத ஒற்றுமை இருப்பதாக, இத்துறை ஆராய்ச்சி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இரு உயிரினங்களுக்கும் இடையே டி.என்.ஏ., மூலக் கூறுகளில் மிகச்சிறிய அளவு வித்தியாசமே காணப்படுகிறது என்றும், இனப்பெருக்கம், மூளை வளர்ச்சி, நோய் தடுப்பு தன்மை, நுகரும் தன்மை ஆகியவற்றில் மட்டுமே வித்தியாசம் உள்ளது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

சர்வதேச அறிவியல் சங்கம் ஒன்று சிம்பன்சி மரபணு பற்றி விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை "நேச்சர்' என்ற பத்திரிகையில் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு முன் சுண்டெலி, எலி, மனிதன் என மூன்று உயிர் இனங்களின் மரபணு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நான்காவதாக சிம்பன்சி குரங்கின் மரபணு ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனிதன் உருவானான் என்று அறிவியல் உலகம் கூறிவருகிறது. 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்த பரிணாம வளர்ச்சியின் துவக்கம் இருந்ததாகவும் அறிவியல் அறிஞர்கள் கூறி வருகின்றனர். பல லட்சம் ஆண்டுகள் சென்ற பிறகும் மனிதன் மற்றும் சிம்பன்சி இடையே மரபணு ஒற்றுமை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவேறு மனிதர்களின் மரபணுவுக்கு இருக்கும் வேற்றுமையை விட 10 மடங்கு அதிகமாகவே மனிதன்சிம்பன்சி மரபணு வேற்றுமை உள்ளதாம். எலி மற்றும் சுண்டெலி மரபணு வேற்றுமையை விட மனிதன்சிம்பன்சி மரபணு வேற்றுமை 10 மடங்கு குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனினும், மனிதன்சிம்பான்சி மரபணுவில் உள்ள சிறிதளவு வேற்றுமை குறித்து தீவிர ஆய்வு நடத்த அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலை.,யை சேர்ந்த சிமோன் பிஷர் கூறுகையில், ""மனிதன்சிம்பன்சி மரபணுவில் உள்ள சிறிதளவு வேற்றுமை குறித்து ஆராய்ச்சி நடத்துவதே எதிர்கால சவாலாக அமையும். மனிதனிடம் உள்ள பலதரப்பட்ட மொழியாற்றல், தோற்றத்தில் உள்ள தனித்தன்மை ஆகியவை குறித்தே எதிர்காலத்தில் விரிவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

மனிதனின் மூளை அமைப்பு அளவில் பெரியதாகவும், அதே நேரத்தில் மிக நுண்ணியதாகவும் அமைந்துள்ளது. கருவில் இருக்கும் போதும், சிசு பருவத்திலும் மூளை வளர்ச்சியடைவதால் மரபணு குறித்த ஆராய்ச்சி மிக கடினமாக உள்ளது. மனிதன் பிற மரபணுக்களை வழி நடத்தி செல்லும் முக்கிய மரபணு. அதாவது மனிதனிடம் உள்ள சிறப்புத் தன்மையை வளர்ச்சியடைய செய்யும் மரபணு சிம்பன்சியை விட மனிதர்களிடம் நன்கு வளர்ச்சியடைகின்றன.

அடுத்ததாக மரபணுவில் உள்ள நோய் தடுப்பு தன்மையில் மனிதனுக்கு உள்ள மூன்று முக்கிய மூலக் கூறுகள் சிம்பன்சி குரங்கிடம் இல்லை. இதற்கு மாறாக நினைவு திறனை பாதித்து மூளை மழுங்க செய்யும்

"அல்சீமர்' நோயை தடுக்கும் மரபணு மனிதனிடம் இல்லை. இந்த மரபணு விலங்குகளிடம் உள்ளது.

மனிதனின் மரபணுவில் உள்ள "வொய்' ஆண் பால் குரோமசோம்கள் தன்னுடைய வளர்ச்சியை நிலைநிறுத்தி 6 லட்சம் ஆண்டுகளில் 27 துடிப்பான மரபணு குடும்பங்களை உருவாக்கியுள்ளன. ஆனால், சிம்பன்சி மரபணுவில் இந்த "ஓய்' குரோமசோம்கள் சில மாறுதல் அடைந்தும், சில குரோமசோம்கள் செயலற்றும் போய்விட்டன.

இதற்கு முன் மனிதனின் மரபணுவில் உள்ள "ஒய்' குரோமசோம்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து செயல்படும். டி.என்.ஏ., மூலக் கூறுகளில் ஏற்படும் சிதைவுகளை இந்த செயல்பாடு தான் சரி செய்ய வேண்டும். இந்த செயல்பாடு "ஒய்' குரோமசோம்களில் இல்லை என ஆய்வுகள் தெரிவித்து வந்தன.

தற்போது வெளியான ஆய்வின் மூலம் இந்த செயல்பாடு மனிதனின் மரபணுவில் உண்டு. சிம்பன்சி மரபணுவில் இல்லை என தெரிய வந்துள்ளது.

ஒயிட்ஹெட் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டேவிட் பேஜ் என்பவர் கூறுகையில், ""மனிதன் மற்றும் சிம்பன்சிக்களிடையே இணையை தேடும் விஷயத்தில் உள்ள வேற்றுமையே பல விஷயங்களை தெளிவுபடுத்தும். ஆண் மற்றும் பெண் சிம்பன்சி குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையை தேடுவதில் ஆர்வம் கொண்டவை. பால் உணர்ச்சியை துõண்டும் மரபணுவில் ஏற்படும் நிர்பந்தமே இதற்கு காரணமாக அமைகிறது. இந்த விஷயம் மனிதனின் மரபணுவில் குறைவாக உள்ளது. இதனால் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது,'' என்றார்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
இது எனக்கு ஏப்பவோ தெரியுமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#3
ப்ரியசகி Wrote:இது எனக்கு ஏப்பவோ தெரியுமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்களுக்கு தெரிஞ்சால் மட்டும் போதுமா? அது இப்பதான் சுண்டலுக்கு தெரிஞ்சு இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#4
[quote=SUNDHAL]ஒயிட்ஹெட் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டேவிட் பேஜ் என்பவர் கூறுகையில், ""மனிதன் மற்றும் சிம்பன்சிக்களிடையே இணையை தேடும் விஷயத்தில் உள்ள வேற்றுமையே பல விஷயங்களை தெளிவுபடுத்தும். ஆண் மற்றும் பெண் சிம்பன்சி குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையை தேடுவதில் ஆர்வம் கொண்டவை. பால் உணர்ச்சியை துõண்டும் மரபணுவில் ஏற்படும் நிர்பந்தமே இதற்கு காரணமாக அமைகிறது. இந்த விஷயம் மனிதனின் மரபணுவில் குறைவாக உள்ளது. இதனால் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40749000/jpg/_40749908_gorillamugaruka203tx.jpg' border='0' alt='user posted image'>

இவர்களுக்கு அருகில் தான் நாம்...! இவை ஏப்புக்கள் என்றும் பழைய உலகுக் குரங்குகள் என்றும் அழைப்படுகின்றன..! சிம்பன்சியும் இதற்குள் தான் அடக்கம்...! விலங்கு இராச்சியத்தில் ஏப்புகளே மனிதரைப் போல மாதவிடாய்ச் சக்கரச் செயற்பாட்டைக் கொண்டவை என்றிருப்பினும்... ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக நடத்தை ஜீனின் தூண்டலில் அமைந்தது என்பதும் அது மனிதருக்குரிய சிறப்பியல்பாக இனங்காணப்பட்டிருப்பதும் இவ்வாய்வின் சிறப்பாகும்...!

இவ்வகையில் நோக்கின்...ஒருவனுக்கு ஒருத்தி நடத்தைக் கோலத்தைக் குலைக்க விரும்பும் மற்றும் இன்னும் என்னனென்னவோ உறவுகளை ஏற்படுத்தும் மனிதர்கள் இன்னும் கூர்ப்பில் பிந்தங்கியவர்கள் என்று குறிப்பிட்டாலும் தவறில்லைப் போலும்...! இக்களத்தில் மனிதரில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பால் துணிவு பற்றி எங்களால் பல தடவைகள் எடுத்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்..! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
நன்றி தகவலுக்கு. என்ன இதை கேள்வி பட்டா சிம்பன்சிகள் கூட்டமா தற்கொலை செய்தாலும் செய்திடும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
KULAKADDAN Wrote:நன்றி தகவலுக்கு. என்ன இதை கேள்வி பட்டா சிம்பன்சிகள் கூட்டமா தற்கொலை செய்தாலும் செதிடும்.

தகவலுக்கு நன்றி.
Reply
#7
AJeevan Wrote:
KULAKADDAN Wrote:நன்றி தகவலுக்கு. என்ன இதை கேள்வி பட்டா சிம்பன்சிகள் கூட்டமா தற்கொலை செய்தாலும் செய்திடும்.

தகவலுக்கு நன்றி.
:roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#9
தகவலுக்கு நன்றிகள்

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)