Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரோமானியத் தத்துவஞானி சிசரோ மனிதனுடைய தவறுகளாக அல்லது குறைகளாக ஆறு விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
1)மற்றவர்களை இருட்டடிப்புச் செய்தால் தங்களுடைய மதிப்பும் கௌரவமும் உயர்ந்து விடும் என்று எண்ணுவது.
2)மாற்ற முடியாத அல்லது திருத்த முடியாத விடயங்களுக்காக வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது.
3)தன்னால் செய்யமுடியவில்லை என்பதற்காக அந்தக் காரியத்தை எவரும் செய்ய முடியாது என்று சாதிப்பது.
4) அற்ப விடயங்களை ஒதுக்கித் தள்ள மனமில்லாமல் சஞ்சலப்படுவது.
5)படித்து,பயின்று,மனத்தைப் பண்படுத்திக் கொள்ளாமல் காலத்தை விரயாமாக்குவது.
6)தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.
சுட்டது
தினகரனிலிருந்து(செந்து}ரம்)
.
Posts: 20
Threads: 0
Joined: Oct 2005
Reputation:
0
¯ñ¨Á¾¡ý º¢Ä§À÷ þ¼õ «¾¢¸Á¡¸ þÕìÌ
Posts: 157
Threads: 9
Joined: Aug 2005
Reputation:
0
இடையிடையே நம்மை நாமே சோதனை செய்து பார்க்கவைக்கும் சக நண்பர்களுக்கு...
நன்றி அருமை 8)
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
6 ம் சரி தான் போல கிடக்கு (பாத்த அனுபவம் தான்). அது சரி வசந்தன் பரீட்சை செய்து பாத்தியளா.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரோமானியத் தத்துவஞானி சிசரோ மனிதனுடைய தவறுகளாக அல்லது குறைகளாக ஆறு விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
1)மற்றவர்களை இருட்டடிப்புச் செய்தால் தங்களுடைய மதிப்பும் கௌரவமும் உயர்ந்து விடும் என்று எண்ணுவது.
இது இக்காலத்துக்கு பொருத்தமில்லை..! எல்லோருக்கும் எல்லாம் என்று உலகம் ஒரு கிராமமான பின் இருட்டடிப்புக்கு இடமில்லையே...!
2)மாற்ற முடியாத அல்லது திருத்த முடியாத விடயங்களுக்காக வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது.
மாற்ற முடியாது என்ற ஒன்றில்லை... எதுக்கும் தன்னைத் தானே சுய ஆய்வு செய்து கொள்வது மாற்றத்துக்கு உதவும்..! கவலைப்படுத்துவதை எண்ணி தொடர்ந்து கவலைப்படுவது வீண் தான்..!
3)தன்னால் செய்யமுடியவில்லை என்பதற்காக அந்தக் காரியத்தை எவரும் செய்ய முடியாது என்று சாதிப்பது.
இதுவும் இப்போ சாத்தியமில்லை...எல்லாருக்கும் நியாயமான வளப்பயன்பாட்டுக்கும் முயற்சிக்கும் சந்தர்ப்பம் இருக்கும் போது.. சுதந்திரம் இருக்கும் போது.. அவரவர் அவர்களின் விருப்பபடி..முறைப்படி...காரியங்களை சாதிக்க முடியும்..எப்படி தடை போட முடியும்..! தடை போட்டால் எதிர்த்து போராட வேண்டியதுதானே..!
4) அற்ப விடயங்களை ஒதுக்கித் தள்ள மனமில்லாமல் சஞ்சலப்படுவது.
ஒருவருக்கு அற்பமானது மற்றவருக்கு அற்புதமாக இருக்கும்..உதாரணத்துக்கு.. வீதியில் ஒரு கஞ்சலை வீசிவிட்டு போவது சிலருக்கு அற்பம்... சிலருக்கு கவலை...எல்லோரும் அதையே அற்பம் என்று கருதினால்...??! இப்படித்தான் ஒழுக்கமும்... சிலருக்கு சிலது அற்பம்...பலருக்கு அதுவே அற்புதம்..எல்லாம் நம்பிக்கையின் பாலானது...! இது கூட ஒரு வகை இருட்டடிப்புத்தான் தத்துவ ஞானி அவர்களே..!
5)படித்து,பயின்று,மனத்தைப் பண்படுத்திக் கொள்ளாமல் காலத்தை விரயாமாக்குவது.
படிப்பு என்பது கல்விசார் மற்றும் சாராதது என்றிருந்தால் இது உண்மைதான்..!
6)தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.
இதில் தத்துவ ஞானிக்கே குழப்பம்..! இந்த ஆறையும் அவர் ஏன் வெளியில் சொன்னார்..மற்றவர்களுக்காகத்தானே..! குறிப்பாக அற்பம் தவிர் என்றவருக்கு அதை வரையறுக்க முடியுமா...??! அப்படி வரையறுத்திருந்தால்..அது தத்துவ ஞானி என்ற கட்டாயப்படுத்தல் குறியீட்டின் உதவியுடனான திணிப்புத்தான்..வரையறுக்காத ஒன்றை...அதுவும் நம்பிக்கையின் பால் எழுவதை வைத்து... கருத்துரைத்ததும் கூட தான் நம்புவைதை அடிப்படையாகக் கொண்டு தானே...! சுயமான சிந்தனைக்கு சுதந்திரம் உள்ள போது பொது நியதிக்குள் அடங்கி வாழ்பவரில் கட்டாயப்படுத்தல் இருக்க வாய்ப்பில்லை..!
சுட்டது
தினகரனிலிருந்து(செந்து}ரம்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=10](தவறுதலாக...பதிவுகள் மாறி மாறி இடப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டதால் கள விதியையும் மீறிய எண்ணிக்கையில் திருத்தம் அமைந்து விட்டது..அதற்கு வருந்துகின்றோம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
6)தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் .
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
களத்திலை கொஞ்சப் பேருக்கு பொருந்திற மாதிரிக் கிடக்கு
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
6)தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் .
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
களத்திலை கொஞ்சப் பேருக்கு பொருந்திற மாதிரிக் கிடக்கு<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்களோ தெரியாது.. ஆனால் தான் நம்புவதை வெளிப்படுத்துவதில் தவறில்லை...களத்தில் எவரும் எதையும் திணித்ததாக இல்லை..! அவரவர் தங்கள் பார்வைகளை கருத்துக்களை முன் வைப்பதையே பார்க்கிறீர்கள்..அதற்குள் முரண்பாடுகள் சகஜம்.. அதற்குள் தெளிவு பெறுவதும் தீர்மானிப்பதும் உங்கள் ஒவ்வொரு தனிப்பட்டவரினதும் பொறுப்பு...! இதில் திணிப்பு எங்கு...புரியவில்லையே...! அப்போ சொந்தப் பார்வையையே பொது நியதிக்குள் நின்று முன் வைப்பதே திணிப்பா...??! அதற்காக பொது நியதிக்கு அப்பாலானதை தவிர்க்கச் சொல்வதில் திணிப்பு இருப்பதாகத் தெரியவில்லை...பொது நன்மை கருதி அது எங்கும் செய்யப்படுத்தான் ஆக வேண்டும்..!
இப்போ.. இது கூட எங்கள் சொந்தப் பார்வைதான் ... நீங்கள் இதில் இருந்து முரண்படலாம் அல்லது உடன்படலாம்...அல்லது உங்களில் இது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணலாம்...அது திணிப்பல்ல...உங்களுக்குள் மாற்றங்களுக்கு வழி இருக்கிறது என்பதுவாகத்தான் அது இருக்கும்..! சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தல்...இருக்கா..இல்லையே...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
அந்த கொஞ்சப் பேர் சார்பில் நீங்கள் விளக்கம் தந்ததக்கு நன்றி சும்மா பாருங்கோ சில இடத்திலை தேவையில்லா தலைப்புகளைப் போட்டு சண்டை பிடிப்பதற்கெண்டே சிலபேர் இருப்பதைச் தான் சொன்னேன் நாங்கள் நட்பு முறையில் கருத்தாடும் போது சில வாதங்களை சிலர் ஏறறுக் கொள்வதேயில்லை அது பிழையென அவர்களுக்குத் தெரிந்தும் ஏன் தான் இப்பிடி எழுதுறார்களோ தெரியவில்லை அதைததான் சொன்னன் தவறிருந்தால் மன்னியுங்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐயோ...முகத்தார்..ஏன் மன்னிப்பு எல்லாம் கேட்கிறீங்கள்...கடவுளே...
உங்கள் பார்வைக்கு ஒரு பதிலாக தந்தோம்..நட்புரீதியாகத்தான்...! எனவே கவலை வேண்டாம்..! மன்னிப்பு அது பெரிய ஒரு விடயம்...நீங்க என்ன தப்பு செய்து மன்னிப்புக் கேட்கிறீங்கள்...! சிலர் தப்பு மேல தப்பு செய்து கொண்டும் அறிந்தும் அறியாதது போல..தேவைக்காக அதை தங்களளவில் நியாயப்படுத்துவார்கள்..அவர்கள் மன்னிப்பே அறியமாட்டார்கள்... தெரியுமா..??! நீங்கள் செய்யாத தவறுக்கு மன்னிப்பா...! சரி உங்கள் பார்வையில் அதில் ஏதோ தவறு என்று கருதி மன்னிப்புக் கேட்கிறீர்கள்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b>1) மற்றவர்களை இருட்டடிப்புச் செய்தால் தங்களுடைய மதிப்பும் கௌரவமும் உயர்ந்து விடும் என்று எண்ணுவது.</b>
இங்கே சாத்தியமா சாத்தியமில்லையா என்பது இரண்டாவது விடயமே. மற்றவர்களை இருட்டடிப்பு செய்வதன்மூலம் தங்களுடைய மதிப்பையும் கெளரவத்தையும் உயர்த்திக்கொள்ள முடியும் என்கிற எண்ணம் இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் பலரிடம் உள்ளது. சாதாரண மனிதரிலிருந்து கலைஞர்கள் வரை இந்த மனோநிலை வேரூன்றியுள்ளது. அன்றாகிலும் - இன்றாகிலும் - என்றாகிலும் யாரையும் யாரும் இருட்டடிப்பு செய்யமுடியாது என்கிற உண்மையை இவர்கள் உணர்ந்துகொள்வதாயில்லை. இன்று இவர்கள் அவர்களை இருட்டடிப்பு செய்தால் - நாளை ஒளிகொண்டு வெளித்தோன்றுவார்கள் - இது மானுட வரலாற்றில் பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று. மண்ணுள் மூடிவைத்தாலும் விதை - மண்ணைப் பிளந்து வெளித்தோன்றும் என்பது தெரியாதா என்ன?
<b>2) மாற்ற முடியாத அல்லது திருத்த முடியாத விடயங்களுக்காக வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது.</b>
மாற்றம் ஒன்றே மாறாதது - மற்றெல்லாம் மாறும். ஆனால் மாற்றமுடியவில்லையே, திருத்தமுடியவில்லையே - மாறுகிறார்களில்லையே, திருந்துகிறார்களில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைக் காட்டிலும் நமது பணியை நாம் முன்னெடுப்பது சிறந்தது.
<b>3) தன்னால் செய்யமுடியவில்லை என்பதற்காக அந்தக் காரியத்தை எவரும் செய்ய முடியாது என்று சாதிப்பது.</b>
உண்மைதான். தன்னால் செய்யமுடியவில்லை என்பதால் மற்றவர்களாலும் செய்யமுடியாது என்று எண்ணுவோர் பலர் உள்ளார்கள். இது மற்றவர்களை குறைவாக எடைபோடும் மனநிலையைத்தான் வெளிப்படுத்துகிறது. "என்னாலேயே முடியேல - இவரால எப்பிடி முடியும்?" என்பது போன்ற மனநிலை. இது மனிதருள் இருக்கும் ஒருவகையான "ஈகோ" குணம். ஆனால் இவர்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கு இவர்கள் எதை அவர்களால் சாதிக்க முடியாது என்று நினைத்தார்களோ - அதை அவர்கள் இலகுவாக சாதித்துக் காட்டுவார்கள் - இது யதார்த்தம்! (சாதாரண மனித வாழ்விலிருந்து - மாபெரும் போராட்டங்கள் வரை இதுதான் நிதர்சனம்.)
<b>4) அற்ப விடயங்களை ஒதுக்கித் தள்ள மனமில்லாமல் சஞ்சலப்படுவது. </b>
இது அறிவு சார்ந்தது. ஒரு விடயம் அற்பமாகத் தோன்றுவதும், அற்புதமாகத் தோன்றுவதும் மனிதரின் அறிவுநிலை சார்ந்த விடயமே. மனிதர்களின் சிந்தனை எவ்வளவுக்கு எவ்வளவு வளப்பட்டிருக்கிறதோ - பக்குவமடைந்திருக்கிறதோ - அதனைப் பொறுத்தே அவர்கள் ஒன்றை அற்பமாகவோ அற்புதமாகவோ நோக்குகின்ற அவர்களது பார்வை அமைந்திருக்கிறது. எனவே (அப்படியான) மனிதர்களுக்குள் அறிவுசார்/சிந்தனைசார் மாற்றங்கள் நிகழவேண்டும் - அதன்மூலம் அவர்கள் பண்படவேண்டும் - அதற்கு முக்கியமாக அந்த மனிதர்கள் வாழ்கின்ற அவர்களது சமூகத் தளங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும்.
<b>5) படித்து,பயின்று,மனத்தைப் பண்படுத்திக் கொள்ளாமல் காலத்தை விரயாமாக்குவது. </b>
படிப்பதும் பயில்வதும் உழைப்பதற்கே என்கிற மனப்பான்மை மாறி - நம் சிந்தனையைப் பண்படுத்துவதற்கும் நாம் படிக்கவும், பயிலவும் வேண்டும். அதற்கு முதலில் நம்மிடம் தேடல் உணர்வு நிறைய வேண்டும். தேடல் உணர்வு இருந்தால் - நிச்சயமாக நமது எதிரியிடமிருந்துகூட நிறைய விடயங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.
<b>6) தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.</b>
(இங்கு தத்துவஞானியைப் பொறுத்தவரை மனிதர்களிடத்தே உள்ள குறைகளாகத் தான் எண்ணுபவற்றை அல்லது தான் கண்டவற்றை தனது எண்ணங்களாக வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கே கட்டாயப்படுத்தல்களோ திணிப்போ எதுவும் இல்லை.) ஆனால் இந்த சமூகத்தில் பலர் தாம் எண்ணுவதைத்தான் மற்றவர்களும் எண்ணவேண்டும் என்கிற கட்டாயப்படுத்தல்களையும், திணிப்புகளையும் மேற்கொள்வதில் மிக ஆர்வமாக செயற்படுகிறார்கள். தான் நம்புகிறவற்றை மற்றவர்களும் நம்பவேண்டும் என்றும், தான் வாழ்வது போன்று மற்றவர்களும் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கும் குணம் மனிதர்களுள் இயல்பானதே. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக கருத்தியல் அடிப்படையில் பிறரைக் கட்டாயப்படுத்துவதும் - அதுவே வன்முறை வழியிலான கட்டாயப்படுத்தல்வரை வளர்வதும் அன்றாடம் நம் சமூகத்தில் நிகழ்கின்ற ஒன்றுதான். கருத்தியல் அடிப்படையிலான கட்டாயப்படுத்தல்கள் என்று நாம் நோக்குவோமாயின் - தாம் நம்புகிறவற்றை மற்றவர்கள் நம்பாதபோது அவர்களை ஒதுக்கிவைப்பதும், அவர்களின் கருத்துக்களையும், அவர்களையும் புறக்கணிப்பதும், நையாண்டி செய்வதுவும், கீழ்த்தரமாக விமர்சிப்பதுவும் - தாம் வாழ்வதுபோன்று மற்றவர்கள் வாழாதுவிட்டால் அவர்கள் வாழ்வதற்கே வக்கற்றவர்கள் போன்றதான கருது்துக்களை வெளிப்படுத்துவதும் ஆகும்.இவையெல்லாம் கட்டாயப்படுத்துதலின் வெளிப்பாடுகள் தான். ஆனால் தான் எப்படி வாழவேண்டுமென்கிற தீர்மானகரமான எண்ணத்தோடும் - அதன்மீது உண்மையான பற்றுதலோடும் - நம்பிக்கையோடும் எவனொருவன்/எவளொருவள் இருக்கிறானோ/ளோ - அவன்/அவள் எந்தக் கட்டாயப்படுத்தல்களுக்கும் அஞ்சுவதில்லை - எந்தக் கட்டாயப்படுத்தல்களாலும் மாறிவிடப்போவதில்லை.
நன்றி வசந்தன் - இதனை இங்கிணைத்ததன் மூலம் எனது எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைத் தந்தமைக்கு.
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
nirmala க்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். நான் இதனை இணைத்து கனகாலம்.
.
Posts: 20
Threads: 0
Joined: Oct 2005
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->