Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விவாகரத்து குறைவு
#41
இங்கு வந்த பலரதும் கருத்துக்களில் பெண்கள் சொந்தக்காலில் இல்லாத படியால்தான் விவாகரத்துப் பெறத் தயங்குகின்றனர் என்று சொல்லப்படுகிறது...! அப்படியாயின் சொந்தக்காலில் நின்றால் விவாகரத்து வாங்கலாம் என்பதா உங்கள் வாதம்...! அப்படி விவாகரத்து வாங்கனும் என்றால் பிறகேன் சொந்தக்காலில் நிற்பவர்களுக்கு விவாகம்..! இந்த சொந்தக்கால் என்ற விவகாரமே பல சந்தர்ப்பங்களில் ஈகோவுக்கும் சுயநலத்துக்கும் தற்பெருமைக்கும் புரிந்துணர்வின்மைக்கும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது என்பதையும் கவனிக்கத்தவறாதீர்கள்..! மேற்குலகம் அதைத்தான் எதிர்கொண்டிருக்கிறது..! சொந்தக்கால் என்பதன் அர்த்தம் தவறாக கற்பிக்கப்படுவது அபாயகரமானதும் கூட...!

உதாரணத்துக்கு எங்களோடு ஒருவர் ஆண்டு 7 இல் படித்தவர்...! பெற்றோர் இங்கிலாந்தில் வசிக்க அவர் உறவினர்களோடு தங்கிப் படித்தவர்..! அவர் பெற்றோரிடம் பணம் பெற்று பாடசாலை வங்கியில் பணம் வைத்திருந்தார்...அதாவது உங்கள் பாசையில் சொந்தக்காலில் நின்றார்...! அவர் அந்தப் பணத்தை வைத்து உறவினருக்குத் தெரியாமல் பாடசாலைக்கு வெளியே புகைப்பிடிப்பது ஊர் சுத்திறது கூல் பாரில் காலம் கழிக்கிறது இப்படி டாம்பீகமாக வாழ்ந்து இறுதியில் பரீட்சைகள் எழுத சக மாணவர்களுக்கு காசு கொடுத்து காட்டச் சொல்லி வற்புறுத்தவும் வெளிக்கிட்டார்...!

சொந்தக்காலில் நிற்பது தனி மனிதருக்கு எவ்வளவு அவசியமோ...அந்த நிலையில் இருப்பவர்களுக்கு உள்ள சமூக குடும்பப் பொறுப்புக்கள் என்ன என்பதை தெளிவாக பொறுமையோடு உணரும் பக்குவமும் மற்றவர்களை புரிந்துகொண்டு அனுசரித்துப் போகவும் தெரிந்திருக்க வேண்டும்...! இன்று பெண்கள் பலருக்குள் ஒரு சிந்தனை தன்னிடம் வேலை காசு வசதி இருந்தால் தான் எப்படியும் வாழலாம் எவருடனும் போகலாம் எவருக்கும் கட்டுப்படத் தேவையில்லை என்று...ஊதாரிகளாக... சமூகச் சிந்தனை அற்றவர்களாக...சமூகவிரோதிகளாக தாந்தோன்றித்தனமாக வாழ விளைகின்றனர்...! இதுவல்ல சொந்தக்காலில் நிற்பதால் எதிர்பார்க்கப்படுவது...! சொந்தக்கால் கருத்தை வைப்பவர்கள் இவற்றையும் கவனித்து அதன் கருத்தாழத்தை புரிந்து கருத்துக்கள் வைத்தல் சிறப்பான எதிர்காலத்துக்கு உதவி புரியும் என்று எண்ணுகின்றோம்..! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
சமூகம் ஆண் மேல் நிலை கருத்தோட்டத்திலிருந்து மாற்றம் பெறும் போது தான் ஆரோக்கிய கொள்ளமுடியும் ஆண் எந்த விடயங்களையும் சுதந்திரமாக செய்ய மனரீதியன சுதந்திரம் இருப்பது போல் பெண்களுக்கும் மனரீதியன சுதந்திர உணர்வு வரும் நிலை தான் சொந்த காலில் நிறபது அதற்காக ஆணோ பெண்ணோ சமூக விரோத செயல்களை செய்ய அநுமதிப்பதுல்ல...
Reply
#43
stalin Wrote:சமூகம் ஆண் மேல் நிலை கருத்தோட்டத்திலிருந்து மாற்றம் பெறும் போது தான் ஆரோக்கிய கொள்ளமுடியும் ஆண் எந்த விடயங்களையும் சுதந்திரமாக செய்ய மனரீதியன சுதந்திரம் இருப்பது போல் பெண்களுக்கும் மனரீதியன சுதந்திர உணர்வு வரும் நிலை தான் சொந்த காலில் நிறபது அதற்காக ஆணோ பெண்ணோ சமூக விரோத செயல்களை செய்ய அநுமதிப்பதுல்ல...

ஸ்டாலின் நீங்கள் சொல்வது மனிசருக்குப் பொருந்தும்,ஆனா இது பறவை இனத்துக்கும் பொருந்துமோ?இவயின்ட உலகமே வித்தியாசமானது அல்லோ?
அதுகளுக்கு இதுகள் சரி வருமோ ?
Reply
#44
narathar Wrote:

அதுகளுக்கு இதுகள் விளங்குமோ?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#45
ஆண் மேல் நிலைச் சமூகச் சிந்தனை மேற்குலகைப் பொறுத்தவரை கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்கள் சொந்தக்காலில் நிற்கிறோம் என்பதுக்கு தப்பான அர்த்தம் வழங்கி வருவது பல இடங்களில் நிதர்சனமாகியே வருகிறது..! இதற்கு பெண்கள் மத்தியில் பெருகிவரும் புரிந்துணர்வுக்கு சந்தர்ப்பம் வழங்காத அவரசர முடிவு தேடல்..முக்கியமானதாகும்...! ஆண்கள் சிலர் தனிநபர், சமூகப் பாதிப்பு, குடும்பப் பாதிப்புக்கு அப்பால் இப்படியான தப்பபிப்பிராயங்களை திரையிட்டு மறைக்க முயல்வதும் அதைப் பெண்களின் நவகால முன்னேற்றம் என்று சித்தரிப்பதும் அவர்கள் இப்படியான பெண்களைத் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பாக அமைந்து விடுகிறது...!

மேற்கில் கூட கணிசமான அளவு பெண்கள் ஆண்களால் ஏதோ ஒரு வகையில் சித்திரவதைப்படுத்தப்படுகின்றனர்...! இதில் அவர்களின் கணவனைவிட காதலர்களே அதிகம் பங்கெடுப்பதும் கவனிக்கத்தக்க விடயம்...! அதுமட்டுமன்றி...பெண்கள் மீதான வன்முறைகள் இப்போ மிகவும் அதிகரித்திருப்பதற்கு பெண்கள் "சுதந்திரம்" என்று தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலுக்குள் இழுக்கப்பட்டு ஆண்களால் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய அம்சமாகும்...! (உதாரணமாக... பிரித்தானியாவில் அதிகம் வன்முறைக்கு இலக்காகும் பெண்களில் பப், கிளப் என்று போய் தள்ளாடி வரும் பெண்களே அதிகம்...! இறுதியாக வந்த பிரித்தானிய குற்றவியல் அறிக்கையைப் பார்த்தால் தெரியும்...!) Idea

<img src='http://img232.imageshack.us/img232/1151/image5ij.jpg' border='0' alt='user posted image'>

இங்கிலாந்தில் பெண்கள் மீதான பாலியல் குற்ற அதிகரிப்பின் போக்கு....

தகவல் ஆதாரம் - http://www.womankind.org.uk/news%20and%20e.../CTSR%206_3.pdf
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
குருவியாரே ஒருவர் மது அருந்துவதற்கும் அதனால் நிகழக் கூடிய குற்றவியல் சம்பவங்களுக்கும், மண ஒப்பந்த ,மீறலினால் எற்படும் ஒப்பந்த முறிவு எனும் விவாகரத்திற்கும் சம்பந்தமென்ன.பிருத்தானியாவில் மதுப் பழக்கம் எல்லை மீறிச் செல்வது விவாகரத்தான பெண்களினால் என்கின்ற உங்கள் கண்டு பிடிப்பு விகாரமானது.
எனது நினைவில் உள்ள வரை இங்கு மதுப் பழக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் ,இளயவர்களுக்கு மதுபானச் சாலைகளில் வழங்கப் படும் இலவச மது பானங்களே.இவை ஒன்று, இரன்டு இலவச மதுபானங்களைக் குடுத்து அவர்களை வெறி கொள்ளச் செய்து மொடாக் குடியராக்கி,மேலும் மேலும் குடிவகைகளை அவர்கள் வாங்குவதற்கான வியாபாரத் தந்திரம் என்றே கூறுகிறது.

உங்கள் கருத்தாடல்களும் சிந்தனையும் எவ்வாறு சம்பந்தா சம்பந்தமிலாத விடயங்களை சம்பந்தப் படுத்தி,உங்களின் பழமை வாத சிந்தனைகளை நியாயப் படுத்துபனவாக இருக்கின்றன என்பதற்கு மேலுள்ள கருத்து சான்றாகிறது.
Reply
#47
இவை அனைத்தும் பெண்கள் சுதந்திரம் என்பதால் கொண்ட தவறான அர்த்தங்களின் விளைவுகளுக்குள் அடக்கும்...! இதில் பழமை வாதம் என்பதுக்கே இடமில்லை..இது நடைமுறைச் சூழலை அவதானிப்பதால் வரும் தகவல்கள்..! முன்னரெல்லாம் பெண்களைத் தேடி ஆபத்துகள் வந்தன...அது குறைவானதாக இருந்தது..இப்போ பெண்களே ஆபத்தைத் தேடிப் போகின்றனர்...அதனால் விளைவுகள் பாதிப்புக்கள் அதிகமாகின்றன...!

பெண்களுக்கு உணர்த்தப்பட்டுள்ள சுதந்திரம் என்பதன் தப்பான வடிவமே...அவர்களுக்கு ஆபத்தைத் தேடித் தருகிறது...! பெண்களுக்கு சிந்தனைச் சுதந்திரம்.. சமூகச் சுதந்திரம் இருக்க வேண்டும்...அதற்காக பெண்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகளில் சுதந்திரம் என்ற போர்வையில் தளர்வுகள் செய்வது.. ஆண்கள் பெண்கள் மீது தப்புப் பண்ணவும்.. பெண்கள் தாங்களாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பாகிவிடும்...! இதை ஆண்கள் கச்சிதமாகப் பயன்படுத்தவும் இப்போ தாராளமாகக் கற்றுக்கொண்டுள்ளனர்..! அதனால் சிலர் பெண் சுதந்திரம் என்பதை தவறாக பெண்களுக்கு உணர்த்தவும் விளைகின்றனர்..!

பெண்களின் சுதந்திர நடமாட்டம் செயற்பாடுகள் என்பது அவர்களுக்கே ஆபத்தான நிகழ்வுகளே அதிகம்..! ஆண்களும் பெண்களும் என்னதான் நாகரிக உச்சியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் மனிதன் என்ற விலங்கு நிலைக்குள் தான் இன்னும் இருக்கிறார் என்பதையும் எங்கும் கவனித்தல் நன்று...! பெண்களின் பாதுகாப்புக்கு பெண்களே உத்தரவாதம் என்று எனியும் புதுமை வாதம் என்று சொல்லப்படுவது பேசிக்கொண்டிருந்தால்...பெண்கள் மீதான வன்முறைகள் எல்லை மீறிச் செல்வதை கண்ணால் தரிச்சத்தபடி இருக்க வேண்டித்தான் வரும்...!

விவாகரத்துக்கும் இப்படியான பெண்கள் மீதான குற்றங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் இடையே நேரடியான மறைமுகமான தொடர்புகள் உண்டு என்பதை யதார்த்ததை மறைக்க விரும்பும் சிலரைத் தவிர வேறு எவரும் மறுக்க வாய்ப்பில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
நாரதர் சொல்லுவது முற்றிலும் உண்மை... பழமை வாத அடித்தளத்தில் இருக்குவரை கருத்துகளில் ஆரோக்கியம் இருக்காது...
Reply
#49
எதுவுமே பரிமாற்ற வழி வந்தவைதான்...கருத்துக்களும் அதே வழி வந்தவைதான்...! இங்கு பழமைவாதம் பேசப்படவில்லை..தற்போது உச்சரிக்கப்படும் உங்கள் புதுமைவாததுக்குள் (எங்களுக்கு அது பழமைவாதம்) பரிமாற்றம் பேசப்படுகிறது...அது நாளைய புதிமைக்காகும்..!

எப்பவும் மாற்றங்கள் பேசப்படும் போது அதை தற்கால (அல்லது அக்கால) நடைமுறைகளால் சுகங்களை அனுபவிப்பவர்கள் ஏற்கத்தயாராக இருந்ததில்லை...! அதற்காக மாற்றங்கள் வராமல் இருந்ததும் இல்லை..! எங்களைப் பொறுத்தவரை நீங்கள் இருவரும் பேசுவது 20 ம் நூற்றாண்டின் பழமை வாதம்...நாம் பேசிக்கொண்டிருப்பது 21ம் நூற்றாண்டிற்கான உங்கள் பழமைவாதத்தில் மாற்றமே...! பெண் விடுதலை 19 இல் உச்சரிக்கப்பட்டாயிற்று...நீங்கள் 21 இலும் அதையே பேசி உலகத்தை எனியும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது...! அதில் ஏமாறிகளை ஏமாற்றிக் கொண்டும் இருக்க முடியாது...! எங்கும் தற்கால நடைமுறைகுள் உள்ள பிரச்சனைகளுக்கு நல்ல மாற்றங்களால் தீர்வுகள் தேடும் தேடலுக்கே தேவை உண்டு...! இன்னும் புதிமை என்று 19 இன் பழமையைப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை...! அதை இங்கு பேசுவதிலும் இந்தியாவில் பேசுதல் சிறந்தது...! உங்கள் கருத்துக்கு வரவேற்பிருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
பெண்களுக்கு எது நல்லது கெட்டது என்பதைச் சொல்வதற்கு உமக்கு இருக்கும் தகுதி என்ன ? .அவர்களுக்கு எது நல்லது கெட்டது என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்.அதற்கான அறிவும் ஆழுமையும் அவர்களிடம் உண்டு.அதை நானோ ஸ்டாலினோ கூறத் தேவயில்லை.
உமது கருத்துக்களில் இழயோடியிருக்கும் பிற்போக்குத் தனம் ,அவர்கள் தாங்களாகவே முடிவெடுப்பதற்கு ஆளுமை அற்றவர்கள் என்னும் உமது பிற்போக்குத் தனமான ஆள்மனச் சிந்தனையே.
அதே போல் அவர்கள் தாங்களாகவே ஏற்படுத்திய மண ஒப்பந்தத்ததை அவர்களாகவே முறிப்பதற்கான உரிமையை அளிப்பதே விவாகரத்து என்னும் சட்டவியல் உரிமை.இதனயே வழங்க முடியாது என்பது உமது வாதம் அதற்கு நீர் கூறும் காரணம் அவர்களுக்கு முடிவெடுப்பதற்கான அறிவோ ஆளுமயோ இல்லை என்பதாகும்.

அத்துடன் நில்லாது அந்த உரிமைக்காக வாதிடுவோரும் அவர்களைப் பாவிப் பதற்காகவே அவ்வாறு வாதிடுகின்றனர் என்னும் வாதம், மிகவும் கேவலமான குரூர சிந்தனையின் பாற்பட்டதாகும்.இதன் அடிப் படை பெண்கள் இலகுவில் ஏமற்றப் படக் கூடியவர்கள் என்கின்ற ஆண் மேலாதிக்கச் சிந்தனையில் இருந்தே ஊற்றெடுக்கிறது.
Reply
#51
kuruvikal Wrote:எதுவுமே பரிமாற்ற வழி வந்தவைதான்...கருத்துக்களும் அதே வழி வந்தவைதான்...! இங்கு பழமைவாதம் பேசப்படவில்லை..தற்போது உச்சரிக்கப்படும் உங்கள் புதுமைவாததுக்குள் (எங்களுக்கு அது பழமைவாதம்) பரிமாற்றம் பேசப்படுகிறது...அது நாளைய புதிமைக்காகும்..!

எப்பவும் மாற்றங்கள் பேசப்படும் போது அதை தற்கால (அல்லது அக்கால) நடைமுறைகளால் சுகங்களை அனுபவிப்பவர்கள் ஏற்கத்தயாராக இருந்ததில்லை...! அதற்காக மாற்றங்கள் வராமல் இருந்ததும் இல்லை..! எங்களைப் பொறுத்தவரை நீங்கள் இருவரும் பேசுவது 20 ம் நூற்றாண்டின் பழமை வாதம்...நாம் பேசிக்கொண்டிருப்பது 21ம் நூற்றாண்டிற்கான உங்கள் பழமைவாதத்தில் மாற்றமே...! பெண் விடுதலை 19 இல் உச்சரிக்கப்பட்டாயிற்று...நீங்கள் 21 இலும் அதையே பேசி உலகத்தை எனியும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது...! அதில் ஏமாறிகளை ஏமாற்றிக் கொண்டும் இருக்க முடியாது...! எங்கும் தற்கால நடைமுறைகுள் உள்ள பிரச்சனைகளுக்கு நல்ல மாற்றங்களால் தீர்வுகள் தேடும் தேடலுக்கே தேவை உண்டு...! இன்னும் புதிமை என்று 19 இன் பழமையைப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை...! அதை இங்கு பேசுவதிலும் இந்தியாவில் பேசுதல் சிறந்தது...! உங்கள் கருத்துக்கு வரவேற்பிருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நீர் எதனைப் புதுமை என்கிறீர் என்பதுதான் விளங்கவில்லை?
எதோ சம்மந்தா சம்பந்தமில்லாமல் உளறி விட்டு நீங்கள் சொல்வது பழமை நான் சொல்லுவது புதுமை என்றால் அது என்ன கருத்தாடல், வெறும் முத்துரை குத்தல் ஆகாதோ?
கருத்துக்களுக்கு பதில் கூறாமல் இப்படிச் செய்வது கருத்துக்களின் வறுமயே அன்றி வேறொன்றும் அல்ல.இத்துடன் இதனை முடித்துக் கொள்கிறேன் ஏனெனில் மேலும் உம்மோடு கருத்தாடுவது பிரயோசனம் இல்லை என்று புலன் ஆகிறது.புரிய வேன்டியவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன் , நன்றி, வணக்கம்.
Reply
#52
முதலில் எது பிற்போக்குத்தனம்...பெண்களை விசித்திரமாக நோக்குவதா... மனிதனாகக் கருதுவதா..??! பெண்கள் ஆண்கள் எல்லோரும் மனிதர்கள்...அங்கு உடலியல் தவிர வேறுபாகுபாட்டுக்கு இடமில்லை...! உங்கள் கருத்தின் அடிப்படையில் பார்த்தால் எங்கள் கருத்துக்களால் அதுவும் எங்கள் பிற்போக்கான கருத்துக்களால் பெண்கள் இயலாமைக்கு சென்றுவிடுவர் என்பது போலவும் நீங்கள் அவர்களுக்கு உங்கள் புதுமைகளால் இல்லாத இயல்பைப் பெற்றுக் கொடுப்பதாகவுமா கதை அளக்கிறீர்கள்...!

பெண்களுக்குள் ஆண்களுக்குள் இயற்கையானக உள்ளது வெளிப்படும்...அதை எவரும் தடுக்க முடியாது...! மனிதப் பரிணாம வளர்ச்சியில் ஆணும் பெண்ணும் சமனாகத்தான் நகர்ந்து வந்திருக்கிறார்கள்...தொடர்ந்து நகரத்தான் போகிறார்கள்..! இடையில் சமூக நடைமுறைகளால் வந்த சில மனித நாகரிகப் பண்புகள் பெண்களை அவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி இருந்தாலும் இன்று அந்த நாகரிகமும் தனது பரிமாண வளர்ச்சியில் பெண்களை உள்வாங்கிக் கொண்டுதான் செல்கிறது...அதைப் பெண்கள் ஆண்கள் நன்கே உணர்ந்துதான் உள்ளனர்..அதன்வழி செயற்படவும் செய்கின்றனர்..! உங்களைப் போல சிலர் அவர்களுக்கு புத்திமதி சொல்லி அவர்கள் கேட்கும் நிலையிலும் இல்லை..!

இப்போ உங்கள் கருத்துப்படி பார்த்தால்தான் பெண்கள் கருத்துக்களால் பிந்தள்ளப்பட்டு விடுவர் என்ற இயலாமை தொனிக்கிறது...! அப்படி அல்ல அவர்களுக்கு நல்லா சிந்திக்க செயலாற்ற ஆளுமை திறன் இருக்கிறது..அதை உங்கள் கருத்துக்களுக்கு அப்பால் இயற்கையே அளித்திருக்கிறது...! அதை அவர்கள் பயன்படித்துக் கொள்வார்கள்...ஆண்கள் எப்படிப் பயன்படுத்தினமோ...அதைப் போல இல்ல அதைவிட மேலதிகமாக பெண்கள் பயன்படுத்துவார்கள்..!

பிரச்சனை இப்போ அதுவல்ல.. தற்கால மனித நாகரிக்கத்துக்குள் பெண்கள் ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...அதாவது நாகரிக வளர்ச்சியால் மனித சமூக அலகுகளான பெண்களும் ஆண்களும் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் பற்றியே நாம் பேசுகின்றோம்...! இப்போதைய நடைமுறைகளில் இருந்து உலகம்... மாற்றங்கள் மூலம் அதைத்தான் தேடுகிறது...! அதுதான் நாளைய வளமான மனித சந்ததிக்கு அவசியம்...!

பெண்கள் ஆண்களுக்கு நிகரா குடிக்க விவாகரத்துப் பெறத் தூண்டுவதோ...அல்லது அப்படிச் செய்யாமல் விட்டால் அது இயலாமையின் வெளிப்பாடு என்றோ நாங்கள் சொல்லவில்லை...நீங்கள் தான் சொல்கிறீர்கள்..! ஆனால் மனிதர்கள் குடிப்பதால் சமூகச்சீரழிவை வளர்ப்பதால் எதிர்காலத்தில் எதிர்நோக்கப் போகும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதே இப்போதைய உலக தேவை தேடல்..! அதுக்கு உங்களாலான பணியைச் செய்யுங்கள்...அதைவிடுத்து பெண்களுக்கு ஆண்களுக்கு விவாகரத்துக்கு உரிமை பெற்றுக் கொடுக்க நீங்க பாடுபடுவது வீண்...அது தனி மனித ஆளுமை சம்பந்தப்பட்டது...அதில் நீங்கள் ஏன் வீணாகத் தலையை நுழைக்கிறீர்கள்...! அதை சம்பந்தப்பட்ட பெண்களும் ஆண்களும் தீர்த்துக் கொள்ளட்டும் அல்லது இருவரையும் பொது மனித இயற்றுகைச் சட்டம் கட்டுபப்டுத்தும்..! அது இருக்கத்தக்கதாக நீங்கள் ஏன் விவாகரத்துக்கு வக்காளத்து வாங்கிறியள் என்பதுதான் இப்போ கேள்வி...???! விவாகரத்து...பல தார திருமணம் செய்ய விருப்பமா...செய்யலாமே...அதுவும் தனி மனித ஆளுமையில் தான் தங்கி உள்ளது...! சட்டத்தையும் மிஞ்சி செய்யலாம்...செய்தும் இருக்கிறார்கள்...இன்றல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே...அப்போ உங்கள் வாதம் எதன் அடிப்படையில் என்று கருதுகிறீர்கள்...புதுமையின் அடிப்படையிலா...அப்படி என்றால் சரி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
narathar Wrote:
kuruvikal Wrote:எதுவுமே பரிமாற்ற வழி வந்தவைதான்...கருத்துக்களும் அதே வழி வந்தவைதான்...! இங்கு பழமைவாதம் பேசப்படவில்லை..தற்போது உச்சரிக்கப்படும் உங்கள் புதுமைவாததுக்குள் (எங்களுக்கு அது பழமைவாதம்) பரிமாற்றம் பேசப்படுகிறது...அது நாளைய புதிமைக்காகும்..!

எப்பவும் மாற்றங்கள் பேசப்படும் போது அதை தற்கால (அல்லது அக்கால) நடைமுறைகளால் சுகங்களை அனுபவிப்பவர்கள் ஏற்கத்தயாராக இருந்ததில்லை...! அதற்காக மாற்றங்கள் வராமல் இருந்ததும் இல்லை..! எங்களைப் பொறுத்தவரை நீங்கள் இருவரும் பேசுவது 20 ம் நூற்றாண்டின் பழமை வாதம்...நாம் பேசிக்கொண்டிருப்பது 21ம் நூற்றாண்டிற்கான உங்கள் பழமைவாதத்தில் மாற்றமே...! பெண் விடுதலை 19 இல் உச்சரிக்கப்பட்டாயிற்று...நீங்கள் 21 இலும் அதையே பேசி உலகத்தை எனியும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது...! அதில் ஏமாறிகளை ஏமாற்றிக் கொண்டும் இருக்க முடியாது...! எங்கும் தற்கால நடைமுறைகுள் உள்ள பிரச்சனைகளுக்கு நல்ல மாற்றங்களால் தீர்வுகள் தேடும் தேடலுக்கே தேவை உண்டு...! இன்னும் புதிமை என்று 19 இன் பழமையைப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை...! அதை இங்கு பேசுவதிலும் இந்தியாவில் பேசுதல் சிறந்தது...! உங்கள் கருத்துக்கு வரவேற்பிருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நீர் எதனைப் புதுமை என்கிறீர் என்பதுதான் விளங்கவில்லை?
எதோ சம்மந்தா சம்பந்தமில்லாமல் உளறி விட்டு நீங்கள் சொல்வது பழமை நான் சொல்லுவது புதுமை என்றால் அது என்ன கருத்தாடல், வெறும் முத்துரை குத்தல் ஆகாதோ?
கருத்துக்களுக்கு பதில் கூறாமல் இப்படிச் செய்வது கருத்துக்களின் வறுமயே அன்றி வேறொன்றும் அல்ல.இத்துடன் இதனை முடித்துக் கொள்கிறேன் ஏனெனில் மேலும் உம்மோடு கருத்தாடுவது பிரயோசனம் இல்லை என்று புலன் ஆகிறது.புரிய வேன்டியவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன் , நன்றி, வணக்கம்.

சிம்பிள்...உங்கள் பழமையால் எங்கள் புதுமைக்குள் இப்போதைக்கு நுழைய முடியாது...! எனவே அதைச் சொல்லிட்டு இருப்பதில் பயனில்லை...! ஒரு வரைபை உள்வாங்க முடியவில்லை...அப்புறம் எங்கள் புதுமைகளை விளக்கி என்ன பயன்..! உங்கள் பழமையோடு நீங்கள் இருப்பதே சிறப்பு...! காலம் வர உணருவீர்கள்... புதுமைகள் விரைந்து உணர வைக்கும்...உண்மைகளை...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
Quote:இலங்கையுல் விவாகரத்து குறைவுக்கு புரிந்துணர்வு அதிகக் என்பதை விட சமுக கட்டுப்பாடும் பெண்கள் தமது சொந்த காலில் நிற்க முடியாத நிலைமையுமே காரணம் என்று நினைக்கின்றேன். விவாகரத்து என்பது சமுகத்தில் ஒரு அங்கீகாரமில்லாத அதனை சட்டரீதியாக இலகுவாக பெறமுடியாத ஒன்றாக இருப்பதால் பலர் அது பற்றி சிந்திப்பதில்லை, அது தவிர சேர்ந்து வாழமுடியாமல் வேதனையில் துவளும் பல பெண்கள் அதுபற்றி ஒரு கணம் சிந்தித்தாலும் அதற்கு அவர்களுக்கு சொந்த காலில் நிற்க கூடிய தன்மையும் பொருளாதார பின்புலமும் இல்லாமையால் மேற்கொண்டு விவாகரத்து பற்றி சிந்திப்பதில்லை,
_________________
மதன் சொந்தக்காலில் நிற்றல் என்று எதைச்சொல்றீங்க. சுயசம்பாத்தியமா? ஆண்களைப்போல நமது பெண்கள் விவசாயம் செய்கிறார்கள். விவசாய
வேலைகளிற்கு செல்கிறார்கள். குடிசைக்கைத்தொழில் அது இது என்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். அண்மையில் தமிழீழ தேசியத்தொலைக்காட்சியில்
காட்டினார்கள் குடும்பத்தலைவர்கள் வீட்டுச்சாமன்களைக்கூட விற்றுக்குடிக்கிறார்கள் என்று. இத்தனைக்கும் பெண்கள் தான் உழைச்சு அவர்களிற்கும் சாப்பாடு போடுறார்கள். பல சமயங்களில்
குடிக்கவும் காசு கொடுக்கிறார்கள். இதை விட தமிழீலத்தில் விதவைகள் வாழ்ந்ததில்லையா தனியாக தங்கள் சுயசம்பாத்தியத்தில்? பலர் கணவன்மாரில் தங்கியிருக்கிறவர்கள்
இல்லை என்றில்லை இருக்கிறார்கள். ஆனால் அவர்களாலும் இப்படி செய்ய முடியாதா என்ன? நம்மட ஊர்களில விவாகாரத்திக்குறைவுக்கு காரணம்
அன்பு பாசம் தான் அதிகமாக இருக்கலாம். கணவனுடன் சண்டை போட்டு தாய் வீடு வாற பெண்கள். என்ன தான் தாய் தகப்பனவை போகவேணாம் என்றாலுமம்
புருசன் வந்து கூப்பிட சந்தோசமாக போறவை தான் அதிகம் இதை கண்கூடு கண்டிருக்கம். நம்மூர்களிலும் கணவன் மாரை பிரிஞ்சு வாழுற பெண்களும் இருக்காங்க இதில மறுமணம் செய்யிறவங்க குறைவு.
அவங்களில் சிலர் ஒரு சில சமூகப்பிரச்சனைகளையும் எதிர் கொள்றாங்க அவர்களது நடவடிக்கைகளால்.

அதெப்படி ஒருவரது அல்லது ஒருத்தியின் நடவடிக்கைகள் பிடிக்கல என்று பிரிஞ்சிட்டு. இன்னொருதரை அல்லது இன்னொருத்தியை மறுமணம் செய்திட்டு ஒருவேளை அவரது அல்லது அவாவின் நடவடிக்கைகள் பிடிக்கல என்று மனமுறிவு வந்தா
அவரையும் பிரியிறதா?? பிறகு இன்னொருதர். இதால பாதிக்கப்போறது என்னவோ இருவருக்கும் பிறந்த பிள்ளைகள்.

ஆனா இன்றைய சமூகத்தில் அதிகமான இடங்களில பிரிவிற்கு காரணம் ஈகோவாக இருக்கலாம். சரியான புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம்.
ஒருவரை ஒருவர் சரியா புரிஞ்சிருந்தா சில சில பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ளலாம். சக உறவு இருவரும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து வாழ் முனையக்கூடாதா?? தம்பதியினருக்கு அது அவசியம் தானே.

ஒரு வேளை இதுவே வேறைமாதிரியான காரணங்கள் என்றால் இன்னொருதருடன் தொடர்பு
அப்படி இப்படியான காரணங்கள் என்றால் பிரிந்து போறதில தவறில்லைத்தானே
எடுத்த உடனை விவாகரத்து எடுத்திட்டு பிரிஞ்சுவிட்டு பிறகு நினைத்து வருந்திறவங்க இல்லாமல் இருப்பாங்களா?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
சபாஷ் சரியான போட்டி...
எனக்கு தெரிந்த வரை புலம்பெயர் நாடுகளில் கனவனுடைய சொத்தை பிரித்து பணம் காசுக்காக விவாகரத்து செய்பவர்களும் அதிகம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#56
வேண்டாம் சுண்டல் திருப்பி திருப்பி எங்களுடைய விடயத்தில் தெரியமால் தலை குடுக்கிறீர்? நல்லாயில்லை சொல்லிப் போட்டேன் ஆமா...

Reply
#57
SUNDHAL Wrote:சபாஷ் சரியான போட்டி...
எனக்கு தெரிந்த வரை புலம்பெயர் நாடுகளில் கனவனுடைய சொத்தை பிரித்து பணம் காசுக்காக விவாகரத்து செய்பவர்களும் அதிகம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன சுண்டல் நீங்கள் எப்பதான் போட்டியில் கலந்து கொள்கின்ற ஐடியா. ஒரே சபஷ் என்று தான் சொல்கிறீர்கள்.

எனக்கு ஒரு கேள்வி உறவுகளே இதையே ஒரு பட்டிமன்றத்தலைப்பில் போட்டு வாதாடினால் என்ன? Idea :roll: :?
<b> .. .. !!</b>
Reply
#58
றொம்ப முக்கியம்..... அதான் இங்க பேசிட்டு இருக்காங்கல..சும்மா குழப்பிகிட்டு...நீங்க போட்டிய continue பன்னுங்க...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#59
நீங்கள் எல்லாம் விவாகரத்துப் பற்றி கதைக்கிறீங்கள் தெரியுது... ஆனா புலத்தைப் பற்றியா இல்லைத் தாயகத்தைப் பற்றியா??... இல்லை ஏனெண்டா இரண்டு இடத்துக்கும் காலாச்சார வித்தியாசம் வருடக்கணக்கில் இருக்கு.. தாயகம் புலத்தின் இன்றய நிலமைக்கு வர வருடங்கள் செல்லும்..... (புலத்தில் இருக்கும் உறவுகள் ஊருக்கு இடம் பெயராமல் விட்டால்)....
::
Reply
#60
தலா நீங்கள் கணகாலம் யாழ்ப்பாணம் போகவில்லை என்று நினைக்கின்றேன். போனால் தெரியும் தாயகத்தின் நிலமை. வருடங்களா மாதங்களா செல்லும் என்பது போனால் தான் தெரியும். ஆனால் நான் யாழ்ப்பாணத்தை மட்டும் தான் சொல்கின்றேன். அங்கு யாருடைய ஆட்சி என்று தெரியும் தானே

Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)