Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னிப்புக் கேட்ட தங்கர்பச்சான்
#1
<b> நடிகர் சங்கத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்டார் தங்கர்பச்சான்;
நடிகைகள் எதிர்ப்பு</b>


சென்னை ஆகஸ்ட் 30

<span style='color:red'>நடிகைகளை தரக்குறைவாக விமர்சனம் செய்த விவகாரத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்டார். ஆனால் அவரது மன்னிப்பை நடிகைகள் ஏற்க மறுத்துவிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குனர் தங்கர்பச்சான் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் ''பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபசாரிகளுக்கு ஒப்பானவர்கள்'' என்று விமர்சித்திரு-ந்தார். இந்த விவகாரம் நடிகர், நடிகைகள் மத்தியில் பெரும் புயலையே கிளப்பியது. நடிகைகளை கேவலமாக விமர்சித்த தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக நடிகர் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து தங்கர்பச்சான், தொலைக்காட்சிகள் வாயிலாக பகிரங்க மன்னிப்புக் கேட்டார். எனினும், அவர் நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று நடிகர் சங்கம் வற்புறுத்தியது. இதனால் நேற்று காலை 11 மணிக்கு தங்கர்பச்சான் நடிகர் சங்கத்துக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டது.

<b>நேரில் வந்த தங்கர்பச்சான்</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/aug/30tangar1.jpg' border='0' alt='user posted image'>
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், செயலாளர் சரத்குமார், நடிகர்கள் நெப்போலியன், பிரபு, ராதாரவி, ஜெயம் ரவி, சூர்யா, அப்பாஸ், தியாகராஜன், விக்னேஷ், வடிவேல், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், செந்தில், சார்லி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வந்தனர்.

நடிகைகளில் மனோரமா, குஷ்பு, ஸ்ரீப்ரியா, விந்தியா, சங்கவி, தேஜாஸ்ரீ ஆகியோர் வந்திருந்தனர். தங்கர்பச்சானின் வருகைக்காக நடிகர், நடிகைகள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர்.

மதியம் 1 மணியளவில் தங்கர்பச்சான், இயக்குனர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், இயக்குனர்கள் சீமான், சேரன் ஆகியோருடன் நடிகர் சங்கத்துக்கு வந்தார். ஆனால் வெளியே பத்திரிக்கை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் பெருமளவில் கூடியிருந்ததால், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று கூறி காரிலேயே உட்கார்ந்துவிட்டார். சுமார் அரை மணி நேரம் கழித்து நடிகர் சங்கத்திலுள்ள திரையரங்குக்குள் வந்தார்.

உள்ளே வந்தவுடன், நேராக நடிகை மனோரமாவிடம் சென்று அவர் காலில் விழுந்து கும்பிட்டார். ''நான் அப்படி சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா?'' என்று மனோரமாவிடம் அவர் கேட்டதற்கு மனோரமா பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.

உடனே நடிகர் வடிவேல் எழுந்து ''அவர்களைத்தான் தகாத வார்த்தைகளைக் கூறி திட்டியிருக்கிறீர்களே, பின்பு எப்படி அவர்கள் பேசுவார்கள்'' என்று தங்கர்பச்சானிடம் கேட்க, தங்கர்பச்சான் ''நான் அப்படி கூறவே இல்லை. நான் பேசியதை திரித்து வெளியிட்டுவிட்டார்கள்'' என்று கூறினார்.

<b>நடிகைகள் ஆவேசம்</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/aug/30tangar3.jpg' border='0' alt='user posted image'>
உடனே தங்கர்பச்சானை நடிகர்\நடிகைகள் சூழ்ந்து கொண்டு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா, விந்தியா ஆகிய மூவரும் தங்கர்பச்சானை நோக்கி ''சம்பந்தப்பட்ட நிருபர் முன் உங்களால் இதை மறுக்க முடியுமா?'' என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

உடனே விஜயகாந்தும், சரத்குமாரும் கூச்சலிட்டவர்களை சமாதானப்படுத்தி, அந்த நிருபரை உள்ளே வரச் செய்தனர். அந்த நிருபரும், தங்கர்பச்சான் சொன்னதைத்தான் எழுதினேன் என்று கூறினார். உடனே தங்கர்பச்சான் ''நான் அப்படி சொல்லவேயில்லை'' என்று மறுக்க மீண்டும் கூச்சல் எழுந்தது.

<b>பகிரங்க மன்னிப்பு</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/aug/30tangar2.jpg' border='0' alt='user posted image'>
அதைத் தொடர்ந்து அனைத்து பத்திரிக்கையாளர்களும் உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்பு தங்கர்பச்சான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.

''நான் வேறெங்கும் பேசவில்லை. என் குடும்பத்தினராகிய உங்களுடன்தான் பேசுகிறேன். என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இப்போதும் சத்தியமாக மறுக்கிறேன். நடிகைகளைப் பற்றி அந்தப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள பொருளில் நான் பேசவில்லை.

<b>மனோரமா கண்ணீர்</b>

இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும், மீண்டும் என் சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கூட்டம் முடிந்து வெளியே வந்த மூத்த நடிகையான மனோரமா கூறும்போது ''விபசாரிகள் என்ற வார்த்தையை கேட்டுக் கொண்டு உயிரோடு இருப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்'' என்று கண் கலங்கி குமுறலோடு கூறினார்.

நேற்றைய கூட்டத்தில் மிகவும் ஆவேசமாகக் காணப்பட்ட நடிகை குஷ்புவிடம் ''இனி தங்கர்பச்சான் இயக்கும் படங்களில் நடிப்பீர்களா?'' என்று கேட்டதற்கு, ''தங்கர்பச்சான் என்பவர் யார்? அவர் எங்களுக்கு யாரும் இல்லை. அவர் எவ்வளவு முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும், அவரை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்'' என்று ஆவேசம் பொங்கக் கூறினார்.

<b>ஸ்டிரைக்கைத் தவிர வேறு வழியில்லை</b>

நேற்றைய கூட்டத்தில் பெரும்பாலான பகுதி கூச்சல், குழப்பங்களுக்கிடையேதான் நடந்தது. ஆவேசத்துடன் காணப்பட்ட நடிகர், நடிகைகளை சமாதானப்படுத்துவதற்கு விஜயகாந்தும், சரத்குமாரும் பெரும் பாடுபட்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த விஜயகாந்த் ''இனி நடிகர்,நடிகைகளை தரக்குறைவாக யாராவது பேசினால் உடனே ஸ்டிரைக் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை'' என்று உறுதிபட தெரிவித்தார்.

இப்படியாக தமிழ் திரையுலகத்தை ஒரு வாரகாலமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த தங்கர்பச்சான் விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.


- பாலாஜி
</span>( Vikadan)
Reply
#2
தங்கர்பச்சான் சொல்வதில் விசயமும் உள்ளது :|
.
Reply
#3
<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->''பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபசாரிகளுக்கு ஒப்பானவர்கள்''<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அந்த மனிதன் உண்மையையும் தங்களது அனுபவத்தையும் தானே சொன்னார் அதிலென்ன தப்பு இருக்கிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#4
இதுவா பிரச்சனை. கனஇடங்களில் தங்கர் பச்சான் பற்றிபோட்டிருந்தது வாசிக்க முடியவில்லை. நன்றி அண்ணா.

Quote:அந்த மனிதன் உண்மையையும் தங்களது அனுபவத்தையும் தானே சொன்னார் அதிலென்ன தப்பு இருக்கிறது.
_________________
ஒரு சிலர் அப்படி நடந்திருக்கலாம் விட்டிருக்கலாம். அதுக்காக எல்லா நடிகைகளையமா சொல்றது?? எது உண்மையோ :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
சா தங்கர் பச்சான்... இனியும் நீ உயிரோடு இந்த உலகத்தில் இருக்க வேண்டுமா?? பேசமல் அரசியல்ல சேர்ந்துடப்பா........ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
குஸ்பூ நன்றாக சண்டப்படுறா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#7
vennila Wrote:குஸ்பூ நன்றாக சண்டப்படுறா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குஸ்பூ தங்கரை தாகத வார்த்தைகளால் திட்டினதுக்கு எதிரொலியாக....

<img src='http://img362.imageshack.us/img362/9267/kusbuthankar4305to.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
ம்ம்...ஒரு சில பேர் அப்பிடி இருக்கலாம்..அதுக்காக எல்லரையும் கதைப்பது பிழை..அப்படி என்றால் நிறைய நடிகர்களையும் கதைக்கலாம்..
..
....
..!
Reply
#9
ப்ரியசகி Wrote:ம்ம்...ஒரு சில பேர் அப்பிடி இருக்கலாம்..அதுக்காக எல்லரையும் கதைப்பது பிழை..அப்படி என்றால் நிறைய நடிகர்களையும் கதைக்கலாம்..

முடிவாக என்ன சொல்லவருகிறீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#10
என்ன எல்லாரும் தங்கருக்கு சப்போர்டா பேசுறீங்க செய்யிற வேலைக்கு தான் காசு கேட்டவ அதுக்கு போய் அவர் அப்பிடி விமர்சித்து இருக்க கூடாது...
தங்கர் கூட தான் இயக்குவதர்க்க பணம் வாங்காம இயக்கவாரா? இல்ல தாயாரிப்பாளர் காசு கொன்ஞம் கஷ்ட்டமா இருக்க பிறகு தாரன் இப்ப இயக்குங்கன்னா இயக்கிடவாரா?
அநியாயாமா இல்ல?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#11
SUNDHAL Wrote:என்ன எல்லாரும் தங்கருக்கு சப்போர்டா பேசுறீங்க செய்யிற வேலைக்கு தான் காசு கேட்டவ அதுக்கு போய் அவர் அப்பிடி விமர்சித்து இருக்க கூடாது...
தங்கர் கூட தான் இயக்குவதர்க்க பணம் வாங்காம இயக்கவாரா? இல்ல தாயாரிப்பாளர் காசு கொன்ஞம் கஷ்ட்டமா இருக்க பிறகு தாரன் இப்ப இயக்குங்கன்னா இயக்கிடவாரா?
அநியாயாமா இல்ல?

சுண்டல் சூப்பர்..பின்னிட்டீங்க.....எங்க எல்லரும் ஒருக்க ஓ போடுங்கோ..
..
....
..!
Reply
#12
யார் எதை தான் சொன்னாலும் சினிமா நடிக, நடிகையர்கள் பணத்துக்காக பிறரை கட்டித்தழுவும் வேசியரே என்று இந்த யாழ் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#13
[quote="ப்ரியசகிஅநியாயாமா இல்ல?[/quote]

சுண்டல் சூப்பர்..பின்னிட்டீங்க.....எங்க எல்லரும் ஒருக்க ஓ போடுங்கோ..


¿øÄ ¾¡ý ƒ Š Íñ¼ø ¸ÅÉõ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#14
வினித் Wrote:[quote="ப்ரியசகிஅநியாயாமா இல்ல?

சுண்டல் சூப்பர்..பின்னிட்டீங்க.....எங்க எல்லரும் ஒருக்க ஓ போடுங்கோ..


¿øÄ ¾¡ý ƒ Š
அண்ணா..தங்கையை இப்பிடி சொல்றீங்க..நான் உண்மையா த்தான் சொன்னேன் Cry
..
....
..!
Reply
#15
ஊமை Wrote:யார் எதை தான் சொன்னாலும் சினிமா நடிக, நடிகையர்கள் பணத்துக்காக பிறரை கட்டித்தழுவும் வேசியரே என்று இந்த யாழ் நீதினமன்றம் தீர்ப்பளிக்கிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->




மன்னிக்கவும் நீங்க ஒரு தொழிழை கொச்ச படுத்துகின்றீர்கள்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#16
SUNDHAL Wrote:மன்னிக்கவும் நீங்க ஒரு தொழிழை கொச்ச படுத்துகின்றீர்கள்

எப்படி இப்படியா சுண்டல் :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#17
நாங்க சின்ன புள்ளங்க தமிழ் கொஞ்ஞம் அப்பிடி இப்பிடி தான் எழுதுவமாக்கும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#18
[quote=SUNDHAL]நாங்க சின்ன புள்ளங்க

அப்ப சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#19
என்னைப் பொறுத்தவரை தங்கர் பல இடங்களில் வாய் கொடுத்து சுழித்து தப்பியிருக்கிறார்.
இவருக்கு வாழ்வு கொடுத்ததே எனது நெருங்கிய இரு நண்பர்கள்.
அவர்களுக்கு பரிகாரமாக என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியும்...........................

தவிர சாதி பேர் சொல்லி ஏற்படுத்திய பிரச்சனைகளால் பல இடங்களில் உதை படாத குறையாக தப்பித்துக் கொண்டார்.
தனது பாதுகாப்புக்காக ஒரு அரசியல் நிழலில் தஞ்சம் புகுந்திருக்கிறார். அதுவும் ஒரு சாதிக் கட்சியே....................

இலங்கைத் தமிழரை வைத்து படமெடுக்க வந்தவர்.
இவர்களுக்கு ஒண்ணும் தெரியாது என்று சென்னையில் என் நண்பர்களிடம் சொல்லியிருந்தார். அதற்கான பதிலை நான் கொடுத்து விட்டுத்தான் வந்தேன்......................
அதை இங்கே எழுத முடியாது. லண்டனுக்கு இவரை அழைத்து வந்ததும் எனது நண்பர் ஒருவர்தான்.
மேலதிக விடயங்களை இங்கு எழுதுவது முறையல்ல என்பதால் பலதை விட்டு விடுகிறேன்.

அவரது பேச்சில் நிச்சயமாக எனக்கு உடன்பாடு இல்லை.
நடிகைகளும் சாதாரண மனித பிறவிகள்தான்.....................
எனக்கு பல நேர்மையான நடிகைகளைத் தெரியும்.
இவர்களை கெடுக்கிறதே இதைச் சொல்கிற ஆண்கள்தானே?
இதில் சரி பாதி இவர்களுக்கு சேர்வதில்லையா?
Reply
#20
அண்ணா சுப்பர் அண்ணா நல்ல பதில்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)