Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேலைக்குப் போகும் பெண்கள் ---பிரச்சனைகள்
#1
<b>வேலைக்குப் போகும் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்</b>

இன்றைய பொருளாதார நிலையில் பெண்களும் வேலைக்குப் போவது அவசியமானதாகிவிட்டது வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் இது சர்வவாதாரணம் ஆனால் எங்கள் நாட்டில் வேலைக்குப் போகும் பெண்கள் பலவிதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள் அவை என்ன அவற்றிலிருந்து எப்படி அவர்கள் விடுவிக்கப் படுவது என்பதுகளைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். .

1. போக்குவரத்து பிரச்சனைகள் என்னதான் நாங்கள் வாய்கிழிய பெண் சுதந்திரத்தைப் பற்றிப் பேசினாலும் பெண் ஒருவர் தனிய பிரயாணம் செய்யும் போது எப்பிடியான பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார் என உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை சிலபெண்கள் தங்களின் துணிச்சலால் தப்பித்துக் கொள்கிறார்கள் ஆனால் எல்லாரும் அப்பிடி இல்லையே
2. வீட்டை விட்டு வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் போது தங்குமிடப் பிரச்சனை எல்லோருக்கும் விடுதிகள் கிடைத்துவிடுவதில்லை அப்பிடியான போது வெளி வீடுகளில் தங்க நேரிடுகிறது சாப்பாட்டுப் பிரச்சனை தொடக்கம் எல்லாமே தனித்து செய்யவேண்டிய நிலமை
3. வேலைத்தளங்களில் மேலதிகாரிகளின் கழுகுப் பார்வைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் கொஞ்சம் முறைத்துத் திரிந்தால் பலவிதமான கஷ்டங்கள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கிறது (சில இடங்களில் மாத்திரம் )
4. எடுக்கும் சம்பளம் உரிய முறையில் வீட்டுக்குப் போகாவிடில் அதைப் பற்றி அப்பா . அம்மா . அண்ணன் . தம்பி என கேள்வி கேட்க நிறையப் பேர் ( இது ஒரு ஆண் உழைக்கும் போது கேட்க மாட்டார்கள் )
5. வேலைக்குப் போவதால் கலியாணத்துக்கு வரன் தேடும் போது பெண்ணுக்கு சமனான அல்லது மேலான ஒருவரையே பெற்றோர் தேடுவார்கள் இது சில சமயங்களில் அமைவது கஸ்டம் ( காரணம் ஈகோ பிரச்சனை ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை பின்னுக்கு நல்லாக இருக்காது என பெற்றோர் நினைப்பதால்) கலியாணம் சரிவராத பட்சத்தில் உழைக்கிறம்தானே கலியாணம் தேவையில்லை என்ற நிலைக்கு சில பெண்கள் வருகிறார்கள்
6. இதைவிட கலியாணம் முடிந்து விட்டால் கணவன் பிள்ளை என்ற கடமைகளையும் பார்த்து வேலைக்குப் போவது மிகுந்த சிரமம் கணவன் அனுசரித்து சில உதவிகளைத்தான் செய்ய முடியும் வீட்டு வேலைகளை செய்வதுக்கு பெண்களுக்குத் தான் அந்த பக்குவம் இருக்கிறது இப்ப குழந்தை ஒண்று பிறந்து விட்டால் அந்த குழந்தையின் பராமரிப்பு முழுக்க முழுக்க பெண்ணால்தான் முடியும் ஆபிஸில் இருக்கும் வேலைப்பளு வீட்டில் குழந்தையின் வேலைகள் என பார்க்கும் போது தன்னையறியாமலே ஓரு டென்சன் கோவம் வரும் இவை யாருமில்லாத இடத்து கணவன் மேல்தான் ஏற்படும்

இப்பிடி சில பிரச்சனைகளை நான் கண்டபடியால் எழுதினேன் இதைவிட நீங்கள் ஏதாவது அறிந்திருந்தால் எழுதுங்கள் இவற்றிலிருந்து எப்பிடி விடுபடலாம் என்பதைப் பற்றி ஆராய்வோம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
முகத்தார் நீங்கள் சொல்வது சரியே அன்றாட வாழ்க்கையில் இப்படியான பிரச்சினைகளை பார்க்க கூடியதாக இருக்கு.

1)& 3) நீங்கள் சொன்னமாரி பிரச்சினைகள் உள்ளன அதுக்கு காரணம் ஆண்கள் தான் அவர்கள் சரியாக இருக்கும் போது பிரச்சினையே வராது பெண் துணிவாக சென்று வரலாம்.

2) தனக்கு தேவை என்றதை தான் தானே செய்ய வேண்டும் .

4) அதுக்கு காரணம் நல்ல புரிந்துணர்வு இல்லை . ஒருவர் மீது மற்றவர்க்கு நம்பிக்கையின்மையே காரணம்.

5) ம்ம் அது மனம் சம்பந்தப்பட்டது. ஏன் தான் இப்படியோ? எல்லோரும் மனிதர்கள் தானே. ஒவ்வொரு மனிதனிட்டையும் ஒவ்வொரு திறமை இருக்கு என்று நினைக்கும் பட்சத்தில் இந்தப் பிரச்சினை வராது.

6) மிகவும் உண்மை. கணவனும் சரி அரைவாசி வேலையை பங்கிட்டு செய்யும் இடத்தில் இந்தப் பிரச்சினையே ஒரளவு தடுக்கலாம்.( நான் இந்தப் பிரச்சினை வரும் என்றுதான் கலியாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போறதில்லை என்று முடிவு செய்திட்டன். ) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#3
Rasikai Wrote:ஒவ்வொரு மனிதனிட்டையும் ஒவ்வொரு திறமை இருக்கு என்று நினைக்கும் பட்சத்தில் இந்தப் பிரச்சினை வராது.

நான் இந்தப் பிரச்சினை வரும் என்றுதான் கலியாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போறதில்லை என்று முடிவு செய்திட்டன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


மேல் உள்ள ,உங்கள் இரண்டு கருத்துக்களும் முரணா இருக்குதே,இதற்கு வேறு தீர்வு இல்லையா?
இங்கெல்லாம் வேலைத் தளங்களில் ஒரு வருட விடுமுறை அழிக்கின்றனேரே?
Reply
#4
ம்ம் அதுவும் சரி தான் பட் ஒருவருடத்துக்கு அப்புறம் குழந்தையை யாரு பார்க்கிறது?
<b> .. .. !!</b>
Reply
#5
Quote:நான் இந்தப் பிரச்சினை வரும் என்றுதான் கலியாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போறதில்லை என்று முடிவு செய்திட்டன்.

இந்த கதை தானே வேண்டாம் என்கிறது? நீங்களா ஒதுங்கிக்கிறீங்க. உங்கட இயலாமையைத்தான் இது கட்டும். பிறகு மற்றவர்களில் தங்கியிருக்கத்தான் இந்த நடவடிக்கை வழிவகுக்கும். முதல் வருகின்ற சாதக பாதகங்களை எதிர்நோக்குங்க பிறகு தீர்வு காணுங்கள்.


இந்தப்பிரச்சனைக்கு முக்கியமான விடயம் புரிந்துணர்வும் அனுசரித்துப்போகும் பண்பும் தான் முக்கியம். அது பெற்றோர் சகோதரங்களும் சரி கணவனும் சரி வருகின்ற பிரச்சனையை புரிந்து கொண்டால் சாதகம் தான்.

நான் கேள்விப்பட்டிருக்கன் திருமணம் முடிச்சுவிட்டு படிச்ச நமது பெண்களை இதுக்கு முக்கியம் கணவனின் ஆதரவு தான். கணவனின் ஒத்துழைப்பு இருந்தால் சரியாக செய்யலாம். (மேற்கத்தையப்பெண்கள் செய்யவில்லையா?? படிக்கும் இடங்களிற்கு பிள்ளைகளுடன் வருகிறார்கள்.) எமது பெண்கள் தான் கலியாணம் அது இது என்று ஒதுங்குவார்கள். பிள்ளையைக்கவனிக்கிறதில் இருந்து சமையல் வரை கூட வருகின்ற துணையோடு பகிர்ந்து கொண்டால் ஒருவர் பொறுப்பை ஏற்கவேண்டிய அவசியம் வராது. (இதுக்கு ஒத்துவாற மாதிரி பாக்கிறானே) இப்ப தான் இளைஞர்கள் உள்ள பிரச்சனைகளை ஆரயா முனைகிறார்கள் அதனால் இப்படிப்பட்ட காரணங்களை இயன்றவரை தவிர்த்து சாதிக்கலாம்.
இந்த நாட்டில என்னங்க போக்கு வரத்து பிரச்சனையை எதிர்நோக்கிறீங்க?? :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
நல்ல கருத்து தமிழ். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னன் :wink: அதை நம்பிர்ரதா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)