Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முட்டை சாப்பிட பயமா..?
#1
<b>முட்டை சாப்பிட பயமா..? இல்லையே</b>.

இயற்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று முட்டை. இதில் எளிதில் ஜீரணிக்கும் புரோட்டீன்களும் சத்துப் பொருட்களும் ஏராளமான மதிப்புக் மிக்க தாதுப் பொருட்களும் காணப்படுகின்றன. அதே சமயம் சிறிதளவுக்கு வேண்டாத விஷயங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக முட்டையை முழுமையாக வெறுத்து ஒதுக்குவது சரியாக இருக்க முடியாது.

முட்டை என்றதும் அதில் அடங்கி இருக்கும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் தான் உடனடியாக நினைவுக்கு வரும். இந்த இரண்டுமே இருதய ரத்த நாளங்களுக்கு கெடுதல் செய்பவை என்பதால் பலர் முட்டையை தொடுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் தெளிய வேண்டுமானால் முதலில் இந்த இரண்டை யும் பற்றி தெளிவாக அறிய வேண்டும்.

கொலஸ்ட்ரால் என்பது ஏதோ நாம் சாப்பிடுகிற பொருட்கள் மூலம் தான் உடம்பில் சேருவதாக கருதுகிறார்கள். அதுபோல அது ஆகாத பொருள் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது. இந்த இரண்டுமே தவறு. ஏனெனில் நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலுக்காக ஏங்கி தவிக்கும். கொலஸ்ட்ரால் இல்லாவிட்டால் உடம்பு வளர்ச்சி என்பதே இருக்காது. உடம்பில் காணப்படும் 80 சதவீத கொலஸ்ட்ராலை உடம்பே உற்பத்தி செய்து கொள்கிறது. நீங்கள் கொஞ்சமாக சாப்பிட்டாலும் சரி, அதிகமாக சாப்பிட்டாலும் சரி. இது ஆட்டோமேடிக்காக நடந்து கொண்டே இருக்கும். செல்களில் காணப்படும் கொலஸ்ட்ரால்களால் பெரும்பாலும் நன்மை நடக்கிறது. ரத்தத்தில் சேமிக்கப்படும் வெறும் 7 சதவீத கொலஸ்ட்ரால் தான் பிரச்சினையை உண்டு பண்ணும். அதுவும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்தால் ஒழிய (அப்படி நடந்தால் ரத்த நாளங்களின் சுவர்கள் கடினமாகி இதயத்துக்கு ஆபத்து ஏற்படும்) பிரச்சினை எதுவும் இல்லை. இது தெரிந்து தானோ என்னவோ. இயற்கையே முட்டையில் ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு பொருளை வைத்துள்ளது. அதன் பெயர் lecithin என்பதாகும். இது முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மேற்படி சிக்கலை உண்டு பண்ணி விடாமல் தடுக்கிறது. பொதுவாக முட்டையில் எதைச் சாப்பிட்டால் ஆகாது என்று கருதப்படுகிறதோ. அதே மஞ்சள் கருவில் தான் இந்தப் பொருள் உள்ளது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும், உணவில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்கலாம். அவர்களை கொலஸ்ட்ரால் தேவையாளிகள் ( cholesterol responders ) என்று சொல்லலாம். வழக்கமாக உணவு மூலம் கொலஸ்ட்ரால் அதிக அளவில் கிடைக்கிறது என்றால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை உடம்பு தானாகவே குறைத்துக் கொள்ளும். ஆனால் இத்தகைய நபர்களுக்கு உணவு மூலமாக கிடைக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உள்ளுக்குள் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை குறைக்கும் வித்தையை உடம்பு செய்யாது. கொலஸ்ட்ரால் விஷயத்தில் இவர்கள் பிரச்சினைக்குரிய நபர்கள் என்பதால் சற்று உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியுள்ளது.

முட்டையின் மஞ்சள் கருவில் arachadonic acid உனை என்ற அதி முக்கியமான அமிலம் காணப்படுகிறது. இது மனித உடம்புக்கு மிகவும் தேவையான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். உடம்பின் வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான இந்த அமிலம் மனிதர்களில் 20 சதவீதம் பேருக்கு பற்றாக்குறையாக இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. ஒருபுறம் நன்மை செய்யும் இந்த அமிலம் இன்னொரு புறம் ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது. அதாவது பல்வேறு நோய்-நொடிகளை உண்டு பண்ணும் பொருட்களில் இது மூலக்கூறாக அமைந்து உள்ளது. இத்தகைய பிரச்சினை உள்ள நபர்களை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களாக கருதலாம். இந்த சிக்கலை சமாளிக்க arachadonic acid மற்றும் ஒமேகா-3 அமிலங்கள் இடையே சம விகித நிலையை கடைப்பிடித்தால் போதும். (ஒமேகா-3 அமிலம் மீன் மற்றும் மீன் எண்ணெயில் அதிகமாக காணப்படுகிறது.) இந்த இரண்டையும் ஒழுங்காக பார்த்துக் கொண்டால், நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ன, 10 முட்டை சாப்பிட்டாலும் ஒரு பிரச்சினையும் வராது. தற்போது நிறைய சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆர்கானிக் முட்டைகள் வந்து விட்டன. இந்த முட்டைகளில் ஒமேகா-3 அமிலமும் வேண்டிய அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, முட்டை என்பது நிச்சயம் ஆரோக்கியமான உணவு தான்.
<b> .. .. !!</b>
Reply
#2
நன்றி ரசிகை. எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் பேச்சு வாங்குவேன். என்னென்றால் முட்டை என்றால் எனக்கு சரியான விருப்பம். அதுவும் அவித்த முட்டை என்றால் சொல்லத் தேவையில்லை. உங்களது article print out எடுத்து எல்லோருக்கும் வாசிக்க கொடுத்து இருக்கின்றேன..

Reply
#3
முட்டையைப்பற்றி ஒரு டவுட் இது சைவமா? அல்லது அசைவமா? ஏனெண்டால் கொழும்பில் இருக்கும் போது எனது சினேகிதன் வெள்ளிக்கிழமைகளில் முட்டையை பொரித்தோ . அவித்தோ சாப்பிடுவான் முட்டை மச்சம் ஏன் சாப்பிடுகிறாய் எண்டு கேட்டால் இது பண்ணையில் கோழித் தீன் போட்டு வளர்த்த கோழியின் முட்டை இதில் மச்சமில்லை எண்டு சொல்லுறான் சேவல் கூடி இ.டுகிற ஊர்கோழிமுட்டையின்; கருதான் குஞ்சு உண்டாகுமாம் ஆனபடியால் பயமில்லாமல் சாப்பிடச் சொன்னான் உண்மையோ....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
முகத்தார் இங்க எல்லாரும் வெள்ளியில மச்சமே (மீன் இறைச்சியே) சாப்பிடுறம். நீங்க முட்டையில நிக்கிறியளா இன்னும்.? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
MUGATHTHAR Wrote:முட்டையைப்பற்றி ஒரு டவுட் இது சைவமா? அல்லது அசைவமா? ஏனெண்டால் கொழும்பில் இருக்கும் போது எனது சினேகிதன் வெள்ளிக்கிழமைகளில் முட்டையை பொரித்தோ . அவித்தோ சாப்பிடுவான் முட்டை மச்சம் ஏன் சாப்பிடுகிறாய் எண்டு கேட்டால் இது பண்ணையில் கோழித் தீன் போட்டு வளர்த்த கோழியின் முட்டை இதில் மச்சமில்லை எண்டு சொல்லுறான் சேவல் கூடி இ.டுகிற ஊர்கோழிமுட்டையின்; கருதான் குஞ்சு உண்டாகுமாம் ஆனபடியால் பயமில்லாமல் சாப்பிடச் சொன்னான் உண்மையோ....

வெள்ளிக்கிழமையில் முட்டை சாப்பிட விருப்பம் இருந்தால் அதை சாப்பிட்டுவிட்டு போகலாம். சிலர் தமது மனதில் இருக்கும் வெள்ளிக்கிழமையில் அசைவம் சாப்பிடகூடாது என்ற நினைப்பையும் பிறரையும் சமாளிப்பதற்காகவே சைவ முட்டை, அசைவ முட்டை என்று சமாளிப்பார்கள், Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
tamilini Wrote:முகத்தார் இங்க எல்லாரும் வெள்ளியில மச்சமே (மீன் இறைச்சியே) சாப்பிடுறம். நீங்க முட்டையில நிக்கிறியளா இன்னும்.? :wink:

அட பாவிகளா :evil:
----------
Reply
#7
முட்டை ரொம்ப சத்தான உணவுதான். யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதை பச்சையாகவோ, அரை வேக்காடாகவோ கொடுத்தால் அதிலுள்ள கிருமிகள் உங்கள் உடலைப் பதம் பார்த்துவிடும். வேகாத முட்டை உணவு நஞ்சாகவும் மாறும். நன்றhக வேக வைத்த முட்டைகளைத் தந்தாலேயே குழந்தைகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கும்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#8
மதானா நல்லது முட்டையை ஒவ்வொரு நாளும் ஒரு கை பாருங்க :wink:
<b> .. .. !!</b>
Reply
#9
முகத்தார் அங்கிள் எனக்கு தெரியாது. உங்களுக்கு முட்டை சைவம் என்று வேணும் என்றால் சைவம் நினைச்சு சாப்பிடுங்கோ அசைவம் என்று வேணும் என்றால் அசைவம் என்று நினைச்சு சாப்பிடுங்கோ அதுக்கு ஏன் மண்டையை போட்டு உடைக்குறீங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#10
vennila Wrote:அட பாவிகளா :evil:

வெண்ணிலா என்ன கோவம்? :?
<b> .. .. !!</b>
Reply
#11
சுண்டல் உங்கள் தகவலுக்கு நன்றி
<b> .. .. !!</b>
Reply
#12
vennila Wrote:
tamilini Wrote:முகத்தார் இங்க எல்லாரும் வெள்ளியில மச்சமே (மீன் இறைச்சியே) சாப்பிடுறம். நீங்க முட்டையில நிக்கிறியளா இன்னும்.? :wink:

அட பாவிகளா :evil:

ஐயராத்து மாமி கோவிக்காதேள். என்ன பண்ணட்டும். வெள்ளியும் செவ்வாயும் பாத்து ஒன்றும் ஆகல பாராமலும் ஒன்றும் ஆகல. வசதிக்கு ஏற்ப செய்யிறமாக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
நான் வசதிக்கு ஏற்ற போல் தான், இதில் வெள்ளி செவ்வாய் ஏதும் பார்ப்பதில்லை, வீட்டில் இருந்தால் வெள்ளி சைவ உணவு. வெளியில் சென்றால் அசைவம் தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#14
நானும் தான் :wink:
<b> .. .. !!</b>
Reply
#15
Mathan Wrote:வெள்ளிக்கிழமையில் முட்டை சாப்பிட விருப்பம் இருந்தால் அதை சாப்பிட்டுவிட்டு போகலாம். சிலர் தமது மனதில் இருக்கும் வெள்ளிக்கிழமையில் அசைவம் சாப்பிடகூடாது என்ற நினைப்பையும் பிறரையும் சமாளிப்பதற்காகவே சைவ முட்டை, அசைவ முட்டை என்று சமாளிப்பார்கள், Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏன் வெள்ளிக்கிழமைகளில் மச்சம் சாப்பிடக்கூடாது? அது
அப்படியாயின் பால் ஏன் குடிக்கிறீர்கள்?
Reply
#16
ஊமை Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#17
பால் மச்சமா முட்டைக்கும் பாலுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா

Reply
#18
Rasikai Wrote:
ஊமை Wrote:
Mathan Wrote:வெள்ளிக்கிழமையில் முட்டை சாப்பிட விருப்பம் இருந்தால் அதை சாப்பிட்டுவிட்டு போகலாம். சிலர் தமது மனதில் இருக்கும் வெள்ளிக்கிழமையில் அசைவம் சாப்பிடகூடாது என்ற நினைப்பையும் பிறரையும் சமாளிப்பதற்காகவே சைவ முட்டை, அசைவ முட்டை என்று சமாளிப்பார்கள், Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏன் வெள்ளிக்கிழமைகளில் மச்சம் சாப்பிடக்கூடாது? அது
அப்படியாயின் பால் ஏன் குடிக்கிறீர்கள்?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்னங்க இது? இங்கே எல்லாம் பாலாலேதான் சுவாமி குளிக்கிறவை :wink:
----------
Reply
#19
Quote:என்னங்க இது? இங்கே எல்லாம் பாலாலேதான் சுவாமி குளிக்கிறவை

அதுதானே நாங்களும் (நானும் சின்னப்புவும்) பாலாலைதான் குளிக்கிறனாங்கள் என்ன இது பனைமரத்துப் பால் இவ்வளவுதான்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
MUGATHTHAR Wrote:முட்டையைப்பற்றி ஒரு டவுட் இது சைவமா? அல்லது அசைவமா? ஏனெண்டால் கொழும்பில் இருக்கும் போது எனது சினேகிதன் வெள்ளிக்கிழமைகளில் முட்டையை பொரித்தோ . அவித்தோ சாப்பிடுவான் முட்டை மச்சம் ஏன் சாப்பிடுகிறாய் எண்டு கேட்டால் இது பண்ணையில் கோழித் தீன் போட்டு வளர்த்த கோழியின் முட்டை இதில் மச்சமில்லை எண்டு சொல்லுறான் சேவல் கூடி இ.டுகிற ஊர்கோழிமுட்டையின்; கருதான் குஞ்சு உண்டாகுமாம் ஆனபடியால் பயமில்லாமல் சாப்பிடச் சொன்னான் உண்மையோ....

மச்சம் என்பது என்ன என்பதுக்கு இன்னும் தெளிவான விடையில்லை..! விலங்கு உயிர் நிலை உடல்களை மச்சம் என்று கருதினால் கருக்கட்டாத முட்டை மச்சம் இல்லை...! மற்றும் படி தாவரங்களும் உயிர்தான்...! உயிர் கொல்லம் என்பவர்கள்...சாப்பிடாமல் பட்டினிதான் இருக்க வேண்டும்..! விலங்குப் புரத அடிப்படையில் மச்சம் தீர்மானிகப்பட்டால்...எந்த முட்டையும் மச்சம் தான்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)