08-29-2005, 02:14 PM
அமெரிக்காவை தாக்கிய சூறாவளி
08-30-2005, 06:43 AM
அமெரிக்க தென் கடற்கரைகரைகளைத் தாக்கிய சூறாவளி
இதுவரை காலத்தில் அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளிகளில் கடுமையான ஒன்றாகக் கருதப்படும் ஹரிக்கேன் கட்ரினா என்னும் சூறாவளி அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் நகரை மையமாகக் கொண்டு அமெரிக்க தென்பகுதிக் கடற்கரைகளை தாக்கியுள்ளது. லூசியானாவின் கிராண்ட் தீவுகளை கடந்து வந்த இந்தச் சூறாவளி மணிக்கு சுமார் 300 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கியுள்ளதாக ஒரு பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார். இந்த நியூ ஓர்லியன்ஸ் நகரின் 80 வீதத்துக்கும் அதிகமானோர் முன்னெச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இந்த நகரின் பல பகுதிகள் கடல் மட்டத்துக்கும் தாழ்வாக இருப்பதால் சூறாவளியை அடுத்து கடல் நீர் உட்புகும் அபாயமும் இருப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். BBC தமிழ்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
08-30-2005, 06:43 AM
சூறாவளியால் தாக்கப்பட்ட பிரதேசங்கள் ..... படம் BBC
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
08-30-2005, 03:00 PM
நன்றி மதன் அண்ணா...என்ன உலகம் முழுக்க இயற்கையின் சீற்றம் வெளிப்படுகிறதே?
08-30-2005, 03:35 PM
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
08-30-2005, 03:57 PM
ம் இருக்கலாம். அப்படி சொல்லும் போது carrying capcity எல்லை மீற எப்படி அழிவு வருது? அது நம்பிக்கையா மூட நம்பிக்கையா என்ற கேள்விகள் வரும், ஆனால் ஒன்று இது போன்ற சம்பவங்கள் வாழ்க்கையில் நிலையின்மையை கண்ணுக்கு முன்னால் காட்டுவதால் ஒவ்வொரு செக்கனையும் சந்தோஷமாக கொண்டு செல்ல உணர்ந்து அனுபவித்து வாழ நினைவூட்டுகின்றது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
08-30-2005, 07:25 PM
காலம் கலியுகம்!
நடக்கக்கூடாதவைகள் நடக்கும்! கலி முற்றினால் கஷ்டந்தான். எல்லோருக்கும்தான்.
!:lol::lol::lol:
08-31-2005, 02:37 AM
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது சாவு என்பது எங்கிருந்தாலும் எந்த விதத்திலும் வரும் என்பது தான். இலங்கையிலிருந்து குண்டு பயத்திற்கு வேறு நாடுகளுக்கு அகதியாகப் போனோம். இனி எங்கே போவது?
08-31-2005, 11:32 AM
மேலும் சில படங்கள் .... நன்றி BBC
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
09-01-2005, 03:06 PM
ம்ம்...
Quote:இது போன்ற சம்பவங்கள் வாழ்க்கையில் நிலையின்மையை கண்ணுக்கு முன்னால் காட்டுவதால் ஒவ்வொரு செக்கனையும் சந்தோஷமாக கொண்டு செல்ல உணர்ந்து அனுபவித்து வாழ நினைவூட்டுகின்றது ரொம்ப சரியா சொன்னீங்க மதன்..
09-02-2005, 11:43 PM
நியூஓர்லின்ஸ் நகரின் நிலைமை மிகவும் பரிதாபம்
நியூஓர்லின்ஸில் வெடி விபத்தும், தீயும் அமெரிக்காவின் நியூஓர்லின்ஸ் நகரில் சூறாவளியால் பாதிப்புகளுக்கான மீட்புப் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் சூழ்நிலையில், அங்கு இடம்பெற்ற தொடர் வெடிப்புகள் மற்றும் தீயை அடுத்து நகரெங்கும் புகை மண்டலம் பரவியுள்ளது. கொள்ளைகளையும், வன்செயல்களையும் கட்டுப்படுத்துவதற்காக அங்கு படையினர் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த வெடிப்புகளால் அங்கு ஸ்தம்பித நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலும் கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளில், துர்நாற்றம் பிடித்த வெள்ள நீரில், அழுகிய சடலங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் தங்கியிருக்கும் பலர் மீட்கப்படுவதற்காக காத்திருப்பதாகவும், ஆனால் அந்த நடைமுறைகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், குழந்தைகள் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனைகளில் மின்சாரம் கிடையாது. மிகவும் மோசமாக சுகயீனமுற்ற நோயாளிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். தப்பியவர்களும், அதிகாரிகளும் மீட்புப் பணி குறித்து வருத்தத்துடன் புகார் செய்கிறார்கள். இதேவேளை பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களைப் பார்வையிட அதிபர் புஷ் சென்றிருக்கிறார். இதுவரையிலான மீட்புப் பணிகள் ஏற்கப்பட முடியாதை என்றும், ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவிகள் விரைந்து கொண்டிருப்பதாகவும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் செய்யப்படும் என்றும் அங்கு புறப்படுவதற்கு முன்னதாக அவர் கூறியுள்ளார். BBC Tamil
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
09-03-2005, 12:07 AM
இந்த சூறாவளி தாக்குதலுக்கு முன்பும் பின்பும் செய்மதி மூலம் எடுக்கப்பட்ட படங்களை பாருங்கள் .......... வலது பக்கத்தில் இருப்பவை அழிவுக்கு பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
படங்கள் நன்றி - BBC
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
09-03-2005, 12:09 AM
கலிகாலமடா சாமி
09-03-2005, 05:02 AM
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமெரிக்க அரசு சரிவர உதவிகள் செய்யவில்லை என்று அந்த பிரதேசத்து மக்களிடம் இருந்து கடும் கண்டங்கள்கள் முறைப்பாடுகள் வந்தபடி இருக்கின்றது. ஏற்கனவே சூறாவளியால் பாதிக்கப்பட்டு சிதைந்து போய் இருக்கும் அந்த பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த சம்பவத்தை பயன்படுத்தி கொள்ளை உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. போதாகுறைக்கு அங்கு தீ விபத்து வேறு ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவா அல்லது மூன்றாம் உலக நாடா தெரியவில்லை? பண படை பலமிருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவினால் ஏன் இந்த பிரைச்சனையை இலகுவாக கையாள முடியவில்லை? ஏன் அந்த மக்கள் இவ்வளவு அல்லல்படுகின்றார்கள்? அந்த பிரதேசம் அமெரிக்காவில் பின் தங்கிய பிரதேசங்களில் ஒன்றாக இருப்பதுடன் "அமெரிக்காவின் வேஸ்ட் லாண்ட்" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
09-03-2005, 05:43 AM
சூறாவளி: அமெரிக்க நகர அகதிகள் முகாமில் அராஜகம்
நியூயார்க், செப். 3: அமெரிக்காவின் நியூ ஆர்லியான்ஸ் நகரில் கேதரீனா என்ற சூறாவளி அடித்து ஓய்ந்து 4 நாள்களாகியும் மீட்பு, உதவிப்பணிகள் முழு வீச்சு பெறவில்லை; அந் நகர விளையாட்டு மைதானத்தில் அகதிகளாகக் குவிந்த 20 ஆயிரம் பேர் சுகாதாரமற்ற நிலையில் பசியாலும், களைப்பாலும் வாடுகின்றனர். பகலில் உணவு, குடிநீர் இல்லாமல் வெயிலில் வாடுகின்றனர். இரவில் இருட்டில் சமூக விரோதிகளின் கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களால் பாதுகாப்பு இல்லாமல் அவதியுறுகின்றனர். பகலில் ஏ.சி. அறைகளிலும் இரவில் மின்சார வெளிச்சத்தில் வெதுவெதுப்பான அறைகளிலும் இருந்து பழக்கப்பட்ட மக்களுக்கு விளையாட்டு மைதானத்தில் எந்த வசதியும் இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. பசி, தாகம், அரசிடமிருந்து தக்க நேரத்தில் உதவி கிடைக்காததால் விரக்தி போன்றவற்றால் உடலும் உள்ளமும் தளர்ந்த நிலையிலேயே பலரும் இருக்கின்றனர். இந் நிலையில் சமூக விரோதிகளின் இரக்கமற்ற கொடூரச் செயல்கள் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மைதானத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல வரும் ஹெலிகாப்டர்களை நோக்கி சமூகவிரோதிகள் சுடுகின்றனர். சாலை வழியாகவும் வர அனுமதிப்பதில்லை. சின்னஞ்சிறுமிகளைக்கூட பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்குகின்றனர். தடுக்க வரும் ஆண்களை கூட்டமாகச் சேர்ந்து கத்தியாலும் தடிகளாலும் அடித்து அச்சுறுத்துகின்றனர். இதைப்போன்ற சட்டம், ஒழுங்கு சீர்குலைவை என் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று நகர மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்தார். நகரில் சமூகவிரோதிகளின் செயலை ஒடுக்க உடனடியாக 40 ஆயிரம் போலீஸôர் தேவை என்று அவசரச் செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. சுட்டுத்தள்ள 300 பேர் படை: அர்கன்சாஸ் தேசிய பாதுகாப்புப்படையிலிருந்து 300 பேர் எம்-16 ரக நவீன துப்பாக்கிகளுடன் நியூ ஆர்லியான்ஸýக்கு அனுப்பப்பட்டிருப்பதாக, லூசியானா மாநில கவர்னர் கேதலின் பிளாங்கோ தெரிவித்தார். இராக்கில் பணிமுடித்து சமீபத்தில் நாடு திரும்பியுள்ள இவர்கள் சமூக விரோதிகளை தயவு தாட்சண்யம் பாராமல் ஒடுக்கிவிடுவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தன்னார்வ நிறுவனங்கள்: அமெரிக்காவின் பிற பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனங்களும் நியூ ஆர்லியான்ஸ் நகரில் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கின்றனர். விளையாட்டு மைதானம் வதைக்கூடமாக மாறிவிட்டதால் ஏராளமானோர் அங்கிருந்து தங்களுடைய வீடுகளுக்கே திரும்புகின்றனர், அல்லது நண்பர்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர். அரசாங்கமே விளையாட்டு மைதானத்தில் இருப்பவர்களை வெளியூர்களுக்கு அனுப்புவதைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. வேறு இடங்களுக்குக் கூட்டிச்செல்ல வரும் ஏர்-கண்டிஷன் பஸ்களின் எண்ணிக்கை போதவில்லை. மைதானத்தில் திரண்டுள்ள மக்கள் இத்தனை இன்னல்களுக்கு இடையிலும் பொறுமையாக வரிசைகளில் நின்று உதவிகளை ஏற்கின்றனர். தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆறுதல் தரும் வகையில் செயல்படுகின்றனர். கடைசியில் உள்ளவர்கள் கூட தங்களுடைய கைக்குழுந்தைகளையும் சிறுவர், சிறுமிகளையும் வரிசையின் முன்பகுதிக்குக் கொடுத்தனுப்பி தண்ணீர் குடிக்க வைக்கின்றனர். பிற நாடுகள் உதவி: உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்த போதிலும் இப்படிப்பட்ட நேரத்தில் அதற்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யத் தயார் என்று ரஷியா, ஜப்பான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கிரீஸ், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், நேட்டோ, சீனா, தென் கொரியா, ஹோண்டுராஸ், வெனிசூலா, கொலம்பியா, மெக்சிகோ, எல் சால்வடார், ஜமைக்கா ஆகியவை அறிவித்துள்ளன. ரஷியா அளித்த உதவிகளை ஏற்க அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாக ரஷியப்பிரதிநிதி ஒருவர் வருத்தம் தெரிவித்தார். புயலால் வீடிழந்தவர்கள் தாற்காலிகமாகத் தங்க கூடாரங்கள், உணவு, குடிநீர், மருந்து, பிஸ்கெட்டுகள், பாதுகாப்பான குடிநீர், உடைகள், வெள்ள நீரை வெளியேற்ற ஜெனரேட்டர்கள், காலணிகள், சேறு-சகதியை அப்புறப்படுத்த துப்புரவுக் கருவிகள், புல்டோசர்கள், டிராக்டர்கள், தகவல் தொடர்புச் சாதனங்கள், பூச்சி மருந்து தெளிப்பான்கள், டார்ச் லைட்டுகள் போன்றவற்றை அளிக்க பல்வேறு நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்துடன் மீட்பு, உதவிப் பணியில் ஈடுபட மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களையும் ராணுவத்தினரையும் தயார் நிலையில் வைத்துள்ளன. புஷ் அழைப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் திரட்டுமாறு தன்னுடைய தகப்பனாரும் முன்னாள் அதிபருமான மூத்த ஜார்ஜ் புஷ்ஷையும் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனையும் கோரியிருக்கிறார் இப்போதைய அதிபர் புஷ். Dinamani
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
09-03-2005, 05:44 AM
09-04-2005, 09:39 AM
பாருங்கோ உலகத்தையே அகதியாக்கிறவங்களின்ட நாட்டிலையே அகதியா ??? காலமடாடா சாமி
சரி சரி யாரா இருந்தா என்ன ம் அகதியானவன் பாவம் தானே எல்லாம் இருக்கட்டும் நான் நக்...கின வங்களில ஒருத்தர் 20.000 டொலர் க்கு தேயிலை குடுக்கிறாவாம் :wink: ம் ஏன் தடிமலுக்கு முகம் களுவவாமே .... காலோ குருவீ வணக்கமய்யா என்னையா தம்ம தலைக்கு பீஏ வா வந்ததும் நம்மளை மறந்திட்டீரோ ம் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
09-04-2005, 09:42 AM
09-04-2005, 09:58 AM
Mathan Wrote:சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமெரிக்க அரசு சரிவர உதவிகள் செய்யவில்லை என்று அந்த பிரதேசத்து மக்களிடம் இருந்து கடும் கண்டங்கள்கள் முறைப்பாடுகள் வந்தபடி இருக்கின்றது. ஏற்கனவே சூறாவளியால் பாதிக்கப்பட்டு சிதைந்து போய் இருக்கும் அந்த பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த சம்பவத்தை பயன்படுத்தி கொள்ளை உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. போதாகுறைக்கு அங்கு தீ விபத்து வேறு ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவா அல்லது மூன்றாம் உலக நாடா தெரியவில்லை? பண படை பலமிருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவினால் ஏன் இந்த பிரைச்சனையை இலகுவாக கையாள முடியவில்லை? ஏன் அந்த மக்கள் இவ்வளவு அல்லல்படுகின்றார்கள்? அந்த பிரதேசம் அமெரிக்காவில் பின் தங்கிய பிரதேசங்களில் ஒன்றாக இருப்பதுடன் "அமெரிக்காவின் வேஸ்ட் லாண்ட்" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மதன் அதுதான் இங்க முக்கியமா போய்க்கொண்டிருக்கு... நியூ ஆர்லியான்ஸ் நகரில் 95% வீதமானவர் கறுப்பர்களாம்.. அதனால்தான் அரசு அக்கறை அற்று இருப்பதாக புரளியை கிளப்புகிறார்கள்.. அதைவிட நியூ ஆர்லியான்ஸ் வை அண்டி இருந்த மீட்புப்பணியாளர்கள் தங்களுக்கு எந்த விதமான முனறிவித்தலும் வளங்கப்படவில்லை எண்றும். தாங்கள் அழிவின் செய்திகள் பத்திரிகை தொலைக்காட்ச்சி வாயிலாகத்தான் அறிந்ததாகவும் சொல்கிறார்கள்.. எது எப்படி இருந்தாலும்.. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது இலங்கை அரசு செயற்பட்டதிலும் பார்க்க அமெரிக்க அரசு அக்கறையோடு செயற்படுகிறது... ஆனால் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் போல் எவையும் ஒருங்கினைக்கப் பட்டதாய் இல்லை என்பதுதான் உண்மை..
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)