Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை ருசிஷாவுடன் ஒரு நாள்!
#1
மும்பை தாராவி... அங்கேதான் அந்த இளம் பெண் சுனாமி, மேகக்கூட்டங்களோடு மேக்-அப் உடன் குடியிருக்கிறது.

"வெயிலடிக்குது' படத்தில் அறிமுகம். முதல் படமே 100 காட்சிகள் ஓடி செம ஹிட்! அடுத்து "காதல் பிச்சை', "இதயத்தை நோண்டாதே', "5 ஜி, கீழ்ப்பாக்கம் ரோடு' என சொதசொதவெனக் கையில் நான்கைந்து படங்கள்! ருசிஷா... கவர்ச்சிக் கால்வாய்! கிளாமர் கிளுகிளுப்பை! இளமை இஞ்சி முட்டாய்! மன்மத மாரத்தான் ரேஸ்! இவர் பெயரைச் சொன்னாலே இளைஞர்களுக்குத் தூக்கம் இன்ஸ்டால்மெண்டில் வருகிறது. பசி பக்கத்து வீட்டில் போய் ஒளிந்துகொள்கிறது. நாம் ருசிஷாவை மும்பையிலுள்ள அவரது வீட்டிலேயே போய் சந்தித்தோம்.

""டேய் யூ...வாடா... வா'' என மிகுந்த மரியாதையுடன் தன் 10 செ.மீ. வாயை விரித்து பற்களால் சிரித்து வாசலிலேயே வரவேற்றார் ருசிஷா. ""மவனே உள்ள வந்துருவ... கண்ட கண்ட நாயை எல்லாம் உள்ள விட முடியாது'' என்று சொல்வது போல் குரைத்தது வாசலில் கட்டிப் போடப்பட்டிருந்த நாலடி உயரமுள்ள நாய்!

""நீங்க வளர்க்கிற நாயா, என்ன பேரு?'' எச்சில் தெறிக்கக் கேட்டோம்.

""யூ இடியட். அது டாக் இல்லை. மை சுவீட்டி. அது பேரு கிளி!'' என ஸ்ருதி சற்றும் பிசகாத சுண்டெலிக் குரலில் பேசுகிறார் ருசிஷா!

""என்னது உங்க செல்லப் பிராணி பேரு கிளியா...ச்சோ சுவீட்!'' எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே நிஜமாய் கிளி கத்தும் சத்தம் கேட்க, ""அட, உள்ள நாய் குரைக்குற சத்தம் கேட்குதுங்க!'' என்றோம் முன்னெச்சரிக்கையாக!

""நான்சென்ஸ்... அது பூனை. நான் வலர்க்குர பேரட்டைச் செல்லமா "பூனை'ன்னுதான் கூப்பிடுதேன்.''

அப்போது ஒரு பூனை (நிஜமாகவே பூனைதாங்க) கடந்து போனது. நாம் தெளிவாக நிதானமாக யோசித்துக் கேட்டோம். ""அங்க ஒரு சார் கிராஸ் பண்ணிப் போறாங்களே, அவங்க பேரு என்ன?''

""ஹே என்ன மேன் நக்கலா... அது என் குட்டி பிரதர் வலர்க்குர குட்டி புஸி கேட். அதுக்கு அவன் "நாய்'னு பேரு வைச்சிர்க்கான். கொஞ்சம் இர்ங்க நான் கிளிக்கு மீன் கொடுத்துட்டு வந்த்டுதேன்'' என்று தண்ணீர் லாரி மாதிரி அங்கிருந்து உள்ளே செல்கிறார் ருசிஷா!

வீட்டினுள் நுழைகிறோம். சுவரெங்கும் சித்திரங்கள்! எல்லாம் கருப்பு-வெள்ளை ஓவியங்கள். உள்ளிருந்து ஒன்றரை லிட்டர் மிராண்டா பாட்டில் மாதிரி வருகிறார் ருசிஷா! ""இதெல்லாம் நீங்களே வரைஞ்சதா?'' ஆனந்தக் கண்ணீரோடு கேட்டோம்.

""யெஸ். என்கு கலே ஆர்வம் ஜாஸ்தி. கரித்துண்டு கிடச்சா போதும். சுவத்லே கிர்க்க ஆர்ம்பிச்சுடுவேன். அப்படி நான் வரைஞ்சதுதான் இங்க இர்க்கு! எம்.எஃப்.ஹுசைன் அங்கிள் கூட ஒரு நாள் வந்து நான் ரொம்ப்ப அழ்கா சர்க்கிள், லைன், ஸ்கொயர்லாம் போட்றதா பாராட்டினாரு!''

""கிரேட்! எப்ப வந்தாரு?''

""போனமாசம் நான் எயர்லி மார்னிங் 10 மணிக்கு தூங்கிட்டு இருந்தேன். அப்ப என் ட்ரீம்ல வந்தாரு!''

""ஓ... வெரி நைஸ்! நீங்க எங்க தூங்குவீங்க?''

""நான் மட்டுமில்லே. எங்க ப்ரம்ப்ரையில எல்லாருமே பெட் ரூம்லதான் தூங்குவோம். வாங்க என் பெட் ரூமைக் காட்டுறேன்.'' ஒரு பெரிய பாத்ரூமின் வழியே ஒரு குட்டி அறைக்குக் கூட்டிச் செல்கிறார். ""இதான் என் பெட் ரூம். குறட்டை, கொட்டாவியைத் தவிர வேற யாரும் இங்க வரமாட்டாங்க! தன் முட்டை போண்டா கண்களை உருட்டியபடியே கூற, ""என்னங்க இது, வித்தியாசமா வைச்சிருக்கீங்க'' என்றோம். ""ஆமா எங்க பப்பாக்கு வாஸ்த்து மேல ரொம்ப்ப ஹோப்! அதான் இப்டி கட்டிருக்காரு. அடுத்த தடவை வீட்ட ரீ-மாடல் பண்றப்போ மொட்டை மாடிய கிரெüண்ட ப்ளோர்ல கொண்டு வர்ப்போறோம். எங்க வீட்டு சாமி ரூமைக் கூட வாஸ்துப்படி பக்கத்து வீட்டுலதான் வைச்சிருக்கோம். யாருக்கு அவசரமா பக்தி வந்தாலும் பக்கத்து வீட்டுக்குப் போய்தான் சாமி கும்பிடுவோம்.'' சொல்லும்போதே ருசிஷாவின் கண்கள் மணியடிக்கிறது.

""உங்களோட பேவரிட் சாமி யாரு?

""கிருஷ்ணசாமி''

""வெரி நைஸ். உங்க வீட்டு கிச்சன் எங்க இருக்கு. பால்கனியிலயா?''

""யூ நாட்டி! எங்க வீட்டுல யாருக்கும் சமைக்கத் தெரியாது. அதான் இடத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்னு கிச்சனே கட்டலே.''

""ஐயய்யோ! அப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறீங்க?''

""பொதுவா சூட்டிங் ஸ்பாட்ல இர்ந்து பார்சல் பண்ணிக்கொண்டு வந்துர்வேன். ஷூட்டிங் இல்லாட்டி வெளிய இட்லிக் கடை போட்டுர்க்குற ஆயாகிட்ட சொன்னா டோர் டெலிவரி பண்ணிடும். இது போக யாரு பார்ட்டிக்குக் கூப்ட்டாலும், கூப்டாட்டியும் வெக்கமே படமாட்டோம். குடும்பத்தோட போய் கொட்டிக்குவோம். ஏன்னா நாங்க ராஜ ப்ரம்ப்ரை.'' சொல்லும்போதே ருசிஷாவின் டாடி தன் அழகான தொப்பையைத் தடவிக்கொண்டே உள்ளே செல்கிறார்.

""ஓ.கே. உங்க வீட்டுலேயே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச இடம் எது?'' என்றதும் வாசலை நோக்கி ஜீன்ஸ் அணிந்த வாத்து போல் ஓடுகிறார் ருசிஷா.

""இதோ இந்த இடம்தான் நான் செருப்பு கழட்டி போடுற இடம். நான் "வெயிலடிக்குது' படத்துக்காக முதல் நாள் ஷூட்டிங் போறப்ப இந்த இடத்துல தடுக்கி விழுந்தேன். அன்னிக்கு "முடியாது'ன்னு ஒரே வார்த்தை பேசுற மாதிரி ஒரு கஷ்டமான சீன். அதுவும் கேமராவைப் பார்க்காம முதுகைக் காட்டிக்கிட்டு பேசணும். சூப்பரா பண்ணுனேன். அந்த சென்டிமென்ட்ல எப்ப வெளிய கிளம்பினாலும் இங்க விழுந்து முட்டிட்டுத்தான் போவேன். அப்பத்தான் அந்தக் காரியம் நல்லா நடக்கும்.'' கீழே ஒரு பூசணிக்காய் தொப்பென விழுவது போல் விழுந்து முட்டிக் காண்பிக்கிறார்.

""நீங்க வீட்டுல எக்ஸர்சைஸ்லாம் பண்ணுவீங்களா... எப்படி உங்க 90 கிலோ ஸ்லிம்மான உடம்பை மெயின்டெய்ன் பண்ணுறீங்க?'' விழிகள் பிதுங்கக் கேட்டோம்.

""ஓ... அதுவா... டெய்லி மார்னிங் சீக்கிரமா 10 மணிக்கு எந்திருச்சுருவேன். ப்ரஷ் கூட பண்ணாம ஒரு லிட்டர் ஆரஞ்சு ஜீஸ் மட்டும் குடிச்சிட்டு, போர்வையை இழுத்துப் போத்திட்டு, பயங்கரமா எக்ஸர்சைஸ் பண்ற மாதிரி கனவு காண்பேன். அப்புறம் மம்மி திருப்பி வந்து எழுப்புவாங்க. எக்ஸர்சைஸ் பண்ணி டயர்ட் ஆயிருப்பேன்ல. úஸô, நாலு எக், ஒரு கிலோ கிரேப்ஸ், 2 ஆப்பிள், ஒரு பைனாப்பிள் மட்டும் சாப்பிடுவேன். இப்படித்தான் என் உடம்பை ஸ்லிம்மா மெயின்டெய்ன் பண்றேன்.'' மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க சொல்லுகிறார் ருசிஷா.

""மேடம் உங்க ரசிகர்கள்கிட்ட இருந்து எப்படிப்பட்ட லெட்டர் வருது?''

""ஓ... நிறைய லெட்டர் வருது. எங்க குடும்பத்துல யார்க்கும் டமில் படிக்கத் தெரியாது. இங்க்லீஸ் எழுதத் தெரியாததால அந்த லெட்டரையெல்லாம் விலைக்குப் போட்டு சோன்-பப்டி வாங்கி தின்போம்!''

""ஓ.கே.ருசிஷா நீங்க உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?'' ""என் ரசிகனுங்க... நல்லவங்க...என்க்கு மன்றம் வைக்கிறது, போஸ்டர் ஒட்டுறது, கோயில் கட்டுறது மாதிரி சோஷியல் சர்வீஸ் பண்ணுவாங்க. அதைத் தொடர்ந்து பண்ணுங்க...என்னை, என் வீட்டு நாய்க்குட்டிய வாழ வைக்றது நீங்கதான்!'' சொல்லும்போதே அவர் கண்கள் அழ நினைப்பதாக நம் மனசு துடிக்கிது!

பிரேமுக்குள் அடங்காத அந்த "டாடா சுமோ'வைப் புகைப்படங்கள் எடுத்துவிட்டு "டாடா' காட்டினோம். வாசல்வரை வந்து துரத்திவிட்டார். ஒரு ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய கடமையோடு அலுவலகம் திரும்பினோம்.

ThnaksBig Grininamani
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#3
நல்ல ருசிஷாதான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#4
þôÀÊ ±ò¾¨É ருசிஷா ¿õÁ ¡ú ¸Çò¾¢Ä õõõõ
õõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#5
யாழ் களத்திலயா?
பெயர சொல்லுங்க வினித்.....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#6
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
SUNDHAL Wrote:யாழ் களத்திலயா?
பெயர சொல்லுங்க வினித்.....

¿¡ý ¦º¡ýÉ¡ ¡ú¸Çò¾¢Ä ´Õ ¦Àâ¡ «ÏÌñÎ ¦ÅÊìÌõ ¾íÌÅ¢í¸Ç¡ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#8
வினித் Wrote:[quote=SUNDHAL]யாழ் களத்திலயா?
பெயர சொல்லுங்க வினித்.....

¿¡ý ¦º¡ýÉ¡ ¡ú¸Çò¾¢Ä ´Õ ¦Àâ¡ «ÏÌñÎ ¦ÅÊìÌõ ¾íÌÅ¢í¸Ç¡ :?: :?: :?: :?:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#9
நான் தாங்க ரெடி சொல்ல நீங்க ரெடியா..?
இவங்களுக்கெல்லாம் பயந்தா...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#10
[quote="vennila"]நல்ல ருசிஷாதான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote










----- <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)