08-27-2005, 11:18 PM
மட்டக்களப்பைச் சேர்ந்த இரு தமிழர்கள் கொழும்பில் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர்.
சந்திவெளிப் பகுதியைச் சேர்ந்த காத்தமுத்து நல்லதம்பி(வயது 40), கந்தையா சசிகுமார் (வயது 22) ஆகியோரை வானொன்றில் வந்த 4 பேர் கொண்ட ஆயுதக் குழுவினர் கடத்தியுள்ளனர்.
தங்களை சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று கடத்தல்காரர்கள் கூறியதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நீர்க்கொழும்பில் இச்சம்பவம் நடந்தது.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
.............செய்தி: புதினத்திலிருந்து.........

" "