Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேச மறுத்துவிட்டதால் என்ன
#1
நீ என்னுடன்
பேச மறுத்துவிட்டதால் என்ன
உன் கொலுசுகள் பேசுகின்றனவே

மென்மையாக அவை எனக்கு
செய்தி அனுப்புகின்றனவே
உன் அசைவுகள்பற்றி..
Reply
#2
யாரிந்த கவிஞன் தெரிகிறதா?


தமிழ் என்பர்
உயிர் என்பர்
கண்கள் சிவக்க கவிசொல்வர்
தமிழின் செல்வன் தானே என்பர்

அதையும் இதையும் திருடித்திருடி
புதிய கவிதை இதுவென்பர்

திரையின் மறைவில்
பணம் வாங்கி
எதையோ எழுதி
இனி கண்ணதாசன் தான் என்பர்

இவை எதுவும் அறியஎவரும்
தமிழில் கவிபாட அயல்நாடு அழைத்துவிட்டால்
சில லட்சங்கள் வேண்டும் என்று
விலை சொல்வர்

மீண்டும் மேடைகளில் ஏறி
தமிழ் என்பர்
உயிர் என்பர்
கண்கள் சிவக்க கவிசொல்வர்
Reply
#3
aathipan Wrote:யாரிந்த கவிஞன் தெரிகிறதா?


தமிழ் என்பர்
உயிர் என்பர்
கண்கள் சிவக்க கவிசொல்வர்
தமிழின் செல்வன் தானே என்பர்

அதையும் இதையும் திருடித்திருடி
புதிய கவிதை இதுவென்பர்

திரையின் மறைவில்
பணம் வாங்கி
எதையோ எழுதி
இனி கண்ணதாசன் தான் என்பர்

இவை எதுவும் அறியஎவரும்
தமிழில் கவிபாட அயல்நாடு அழைத்துவிட்டால்
சில லட்சங்கள் வேண்டும் என்று
விலை சொல்வர்

மீண்டும் மேடைகளில் ஏறி
தமிழ் என்பர்
உயிர் என்பர்
கண்கள் சிவக்க கவிசொல்வர்

க.பே.....சா ? க.கோ...........வா?
Reply
#4
கபே வைமு
Reply
#5
மொழி என்தன் உயிர் என்பர்
மீண்டும் தமிழ் தலைநிமிர்ந்ததென்பர்
நிமிர்ந்து நில் என்பர்
சொல் இங்கு வைப்பதென்றால்
கையில் கொஞ்சம் வை என்பர்

என்ன க.பே. வையே தாக்கும் எண்ணமா ?

விட்டுவிடுங்கள் ஜயா !
பிழைத்துவிட்டு போகட்டும்
[b] ?
Reply
#6
இல்லை இது உண்மை. இலங்கையில் இருந்து ஒரு பெரியவர் இவரை ஒரு தமிழ் சம்பந்தமான மாநாட்டிற்;க்கு பேச அழைத்தபோது இவர் சில லட்;சங்கள் கேட்டார். இத்தனைக்;கும் அவர்கள் பயணச்செலவுடன் நியாயமான ஒருதொகை குடுக்கவும் உடன்;பட்டு இருந்தனர். ஆனால் இவர் குறிப்பிட்ட அந்த தொகை வேண்டும் என்று கூறிவிட்டார்.
Reply
#7
அதில் தவறென்ன...
காற்றுள்ளபோது அவர் தூற்றிக்கொள்கிறார்.இவர்களுக்கு அவர் தேவை என்பதால்தானே போய கையேந்தி நிற்கிறார்கள்.
Reply
#8
யாரைத்தான் விட்டியள். பழிசுமத்துவதற்கேன்றே இப்படி ஒரு கூட்டமா? :roll:

aathipan Wrote:கபே வைமு
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#9
பிரபல்யமாக பேசப்படுபவராகவும் வேணும் . காசு கொடுக்கவும் பஞ்சி. :?

aathipan Wrote:இல்லை இது உண்மை. இலங்கையில் இருந்து ஒரு பெரியவர் இவரை ஒரு தமிழ் சம்பந்தமான மாநாட்டிற்;க்கு பேச அழைத்தபோது இவர் சில லட்;சங்கள் கேட்டார். இத்தனைக்;கும் அவர்கள் பயணச்செலவுடன் நியாயமான ஒருதொகை குடுக்கவும் உடன்;பட்டு இருந்தனர். ஆனால் இவர் குறிப்பிட்ட அந்த தொகை வேண்டும் என்று கூறிவிட்டார்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#10
இவர்களுக்;கு ஏன் பட்டம் ...........என்று கொடுக்கின்றார்கள். பணப்பேய் என்று கொடுத்திருக்கலாமே.


இவர்சில ஆண்டுகள் டுபாயில் வேலைசெய்யும் தமிழ் மக்களின் அழைப்பின்பேரில் டுபாய் சென்;றாராம்;. ஏதோ ஒரு நிகழ்ச்சி . நிகழ்ச்;சி முடிந்தபோது இவரது ரசிகர்கள் தங்களிடம் இருந்த தங்க நகைகளை பரிசாக் கொடுத்தனராம். எல்லவாற்றையும் வாங்கிக்கொண்ட இந்த பேராசைபிடித்த நபர். இறுதியில். இங்கு வந்ததால் எனக்கு பணநஸ்டம் தான் நான் சென்னையில் இருந்திருந்தால் பல லட்சம் அதிகம் சம்பாதித்திருப்பேன் என்;றாராம். பாவம் அந்த டுபாய் வாழ் தமிழர்கள். மிகவுமு; மனம் ஒடிந்து போனார்கள் இவரின் வார்ததைகளால்.
Reply
#11
பட்டம் கொடுக்க முதல் யோசிச்சிருக்கவேணும் அதை விட,;டிட்டு இப்ப புலம்பிறது அழகல்ல. அவரின் திறமைக்கான நற்சான்றிதழ்கள் இத்தகைய கருத்து. ஒருவனின் திறமையை தவிடு பொடியாக்கிவிடாது இத்தகைய செவிவழி செய்திகள்.Idea Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#12
உங்களைப்போல் நிறைய நபர்கள் இப்படி இருப்பதால் தான் இவர்கள் கோடி கோடியாக சமப்பாதிற்குறார்களோ என்னவோ. இது செவிவழி செய்திகள் அல்ல. தினமலரில் அந்துமணிக்;கு டுபாயில் இருந்து வந்த கடிதத்தில் இருந்தவை. சரி சமீபத்தில் அவர்; வெளியிட்ட ஒரு செவ்வியில் இளம் கவிஞர்களை கிண்டல் செய்துள்ளார். அது தெரியுமா உங்களுக்கு. இது ஆனந்தவிடனில் கூட வந்துள்ளது. சரி இ;த்;துடன் நிறுத்திக்கொள்கிறேன்னே;. போதும்...
Reply
#13
போதாது இன்னமும் வேண்டாம்
வெளிப்படையாக பேசிக்கொண்டால் அது எம்மைப்பொறுத்தவரையில் தவறு. அவரைவிட எத்தனையோ பேர் தங்களிற்குள் பல விடயங்களை மூடிமறைத்துக்கொண்டிருக்கின்றார். இவர் திறந்தமனமுள்ளவர். அதனால் பேசிக்கொள்கின்றார். எதுவாகினும் நான் திறமைக்குத்தான் மதிப்புக்கொடுக்கின்றேன். அவர் புதியவர்களை சாடவில்லை கண்டித்துள்ளார். திருத்த முயன்றுள்ளார். வளரமுன்னமே வானைத்தொட்டுவிட்டதாக கூறிக்கொள்வோர் மத்தியில் வானைத்தொட்டும் நான் இன்னும் வளரவில்லை என்று சொல்லிக்கொள்பவர் இவர்.
எத்தனையோ கவிஞர்கள் இருக்கும்போது இவரிற்கு மட்டும் எப்படி இத்தனை விருதுகள் கிடைக்கப்பெற்றன. அது திறமைக்கு கிடைத்த பரிசு.

நம்மவர்களிற்கு பிரபலமானவரும் வேணும் பிறகு அவருடைய கட்டுப்பாடுகளை மீறிவிட்டதாக குறையும் சொல்லவேண்டும். இது எம்மோடு கூடப்பிறந்த குணமய்யா !

எம்மைப்போன்றவர்களிற்கு வாரியார்தான் சரியான ஆள்

யாழ் அண்ணா சொன்னதுபோல காற்றுள்ளபோது துூற்றிக்கொள்கின்றார்.
Quote:அதில் தவறென்ன...
காற்றுள்ளபோது அவர் தூற்றிக்கொள்கிறார்.இவர்களுக்கு அவர் தேவை என்பதால்தானே போய கையேந்தி நிற்கிறார்கள்.
[b] ?
Reply
#14
பட்டங்களைப்பெற திறமை மட்டும் போதும் என்றால் எத்தனையோ பேர் பெயரெடுத்து இருப்பார்கள். கவிஞர் மேத்தா இன்றும் பஸ்ஸில் தான் செல்கின்றார். நான் அடிக்கடி பார்த்ததுண்டு. எளிமையானவர். பெயரும் பட்டமும் வாங்க இங்கே காக்கா பிடிக்க தெரிந்திருக்க வேண்டும். சரி பணம் சம்பாதித்துக் கொள்ளட்டும். சரி ஆனால் அவர் தன்னை தமிழ்தாய்க்கு தொண்டாற்றுவதாக கூறுவதை ஏற்கமுடியாது.
Reply
#15
காய்க்கும் மரம் க(சொ)ல்லடிபடும்.
வாய்க்கு வந்தபடி பேசுதல் உங்களின் இயலாமையையே காட்டுகிறது.இத்தகைய வாற்தைகள் தான் ஒரு படைப்பாளியை இன்னமும் அதிகமாக உத்வேகம் செய்யவைக்கும் ரொனிக்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)