Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இந்தியத் தமிழர்களின் அதரவு ஈழத்து தமிழர்களுக்கு நிச்சம் தேவை என நினைக்கின்றேன்.
அரசியல் வாதிகளை விட்டுவிடுங்கள். அவர்கள் வோட்டு வேட்டைக்காக எம்மை பகடைகளாக பயன்படுத்துகின்றவர்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் குறிப்பாக கிராமத்து தமிழர்கள் எம்மை இன்றும் நேசிக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களுக்கு இந்திய பத்திரிகைகள் தவறான செய்தியை கொடுத்து எமது பெயரை கெடுத்து வைத்துள்ளன.
இன்று இலங்கைத்தமிழன் என்றால் கஞ்சா கடத்துபவன் என்ற அவப்பெயர் வந்துவிட்டது. எமது மக்களின் சுதந்திர போராட்ங்கள் கொள்கைகள் இங்கே திரித்து எம் போராளிகள் சர்வதேச கடத்தல்காரர்கள் என்று எண்ணும் அளவிற்கு மக்களிடையே தவறான ஒரு கண்ணோட்டம் வந்துவிட்டது. இதைகண்டு அடிக்கடி இந்தியாவிற்கு வருகைதரும் இலங்கை அரசியல்வாதிகள் யாரும் கவலைப்படுவதாக தெரியவில்iலை. இந்தியாவில் இருக்கின்ற இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை.
எமக்கமாக பேசிய வைக்கோ இன்று சிறையில். இராமதஸ் அவர்களும் வாயை மூடிவிட்டார். இவர்களைபற்றிகூடு கவலையில்லை. இங்கே இருக்கின்ற இந்து நிறுவனத்தின் ஒரு பத்திரிகையாளர் கல்லூரியில் எமது போராட்டம் பற்றி தவறான எண்ணம் இளம் பத்திரிகையாளர் மத்தியில் விதைக்கப்படுகிறது. விரிவுரையாளராக இலங்கையில் இருந்து லக்ஸ்மன் கதிர்காமர் தான் வருகிறார். இல்லையேல் சிங்கள பத்திரிகையாளர்கள் வருகின்றனர். இவர்கள் எம் போராட்டம் பற்றிதவறான் பல கருத்துகளை இங்கே விதைத்துவிட்டு செல்கின்;றனர்.எமது போராட்டம் பற்றி இவர்களுக்கும் தெளிவு இல்லை. எமது தரப்பில் எமது கருத்துக்களை இங்கே தெளிவுபடுத்த அடிக்கடி எம் நாட்டில் இருந்து படித்த பெரியவாகள் தலைவர்கள் இங்கு வரவேண்டும். அவர்கள் இந்த அரசியல் வாதிகளின் வலையிpல் விழுந்து விடாமல் எமது தரப்பு நியாயங்களை எடுத்துவைக்ககவேண்டும். பத்திரிகையாளர்களை கூட்டி எம் நியாயங்களை சொல்லவேண்டும்.
முன்பு ஒருகாலத்தில் தொண்டமான் ஒரு பாலமாக திகழ்ந்தார். யார் இப்பணியை தொடர்ந்து செய்யப்போவது. அவர் அரசியல் வாதியாக தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
பக்கத்து வீட்டுக்காரனுக்கே எங்கள் பிரச்னைகளை நாம் தெளிவு படுத்து முடியாவிடில் எப்படி மூன்றாம் தரப்பு நாடுளுக்கு விளக்க முடியும்
சம்பந்தபட்டவாகள் நடவாடிக்கை எடுக்க வேண்டும்..
அன்பு
ஆதி
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
ஆதீபன் நல்லதொரு கருத்து , நமக்கெதிராக தவறான ஒரு சில சக்திகள் பேசுகின்றன. ஆனால் நம்மில் ஒரு சிலர் எமக்கு சார்பானவர்களையும் பேச முடியாதபடி இந்திய எதிர்பாளர்களாக பேசுகிறார்கள். அங்கு வாழும் உங்களுக்கு மக்கள் யார்? போலி அரசியல்வாதி யார் என்பது தெரியும். எமக்கு கை கொடுத்தவர்கள் மற்றும் எம்மைக் காத்தவர்கள் பற்றி எழுதுங்கள்.
அதைக் கேட்டாவது விடயம் தெரியாதவர்கள் பேசுவதை கொஞ்சம் நிறுத்தட்டும்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு தடவை நான் ஒரு நிறுவனத்தில் புதிதாக சேர்ந்திருந்தேன். அந்த நிறுவனம் ஓரு காங்கிரஸ் முக்கிய புள்ளியின் மகனுடையது. அந்த முக்கிய புள்ளி எமக்கு எதிரானவர் தினமும் எமக்கு எதிராக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதே அவர் பொழுது போக்கு. அப்படிப்பட்ட இடத்தில் ஏன் போய் சேர்நதாய்? என கேட்கிறீர்களா என்ன செய்;வது வறுமைதான் காரணம். அங்;கு அதிக சம்பளம். சரி விடயத்திற்கு வருவோம். எனக்கு அங்கு தமிழ் பேச பயம் எங்கே என்னை இலங்கையன் என்று கண்டு பிடித்து விடுவர்களோ என்று. ஆங்கிலமும் சரளமாக பேச வராது. திக்கிதிணறி சாமாளித்து வந்தேன்.
ஒருநாள் அங்குள்ள மலையாள (கேரள மாநிலம்) நன்;பர்(அவர் நன்பர் ஆனது பின்புதான்) ஒருவர் கிண்டாலாக நீ விடுதலைப்புலிதானே. நீ ஆபத்தான ஆள் என்று எல்லோர் முன்;னிலையில்; சொல்ல என்;க்கு என்ன சொல்வது என்று தோன்ற வில்லை. ஆனால் அங்கிருந்த ஒரு தஞ்சாவுூர் இளைஞன். அவனை ஆங்கிலத்தில் திட்டி உனக்;கு என்ன விடுதலைப்புலிளை பற்றி தெரியும்.உனக்;கு அவர்கள் திவிரவாதிகளாக தெரியலாம் ஆனால் உண்மையில் அவர்கள் சுதந்திரபோராட்டவாதிகள். இன்;று அங்கு தமிழர்கள் உயிருடன் இருப்பதற்;கு அவர்கள் தான் காரணம். நீ அவனை அப்படிச்சொல்வதில் அவனுக்கு பெருமை தான் என்;றான். அதன் பின் எனக்கு அவர்கள் மத்தியில் தனி மரியாதை. அந்த மரியாதை எனக்காக அல்ல என் இனத்திற்காக. எமக்காக அங்கு போரிடும் எம் உறவுகளுக்காக. அதன்பின் அந்த நிறுவனத்தில் எல்லோரும் எனனை நல்ல நன்பனாக நடத்தினார்கள். அந்த அரசில் வாதி இப்போது இறந்து போனார். அவரின் வாரிசுகள் அரசியலை விரும்பவில்லை. இன்றும் அவர்கள் என் நன்பர்களாக உள்ளனர். ஒருதடவை என் மாமாவிற்கு மாரடைப்பு என்ன செய்வது யாரிடம் காட்டுவது என்று தெரிய வில்லை. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று விட்டேன். ஆனால் யாரையும் தெரியாது. பணம்வேறு கையில் இல்லை. உடனே இந்த நபருக்கு தொடர்பு கொண்ட போதுஅவர் வெகுதூரத்தில் இருந்தார். உடனே தன் மனைவியை அனுப்பி எல்ல உதவியும் செய்;தார். இவர்கள் எல்லாம் எம் நாட்டில் நடக்கும் போரட்டத்தை ஆதரிப்பவர்கள் எம் கஸ்டம் அறிந்தவர்கள். இன்றும் எங்காவது என்னைப்பார்த்தால். என்னை நலம்விசாரித்துவிட்டு பேச்சுவார்த்தை வெற்றி யாக போகிறதா என்றுதான் கேட்கிறார்கள். மூன்றாம் தர அரசியல் வாதிகளுக்காகவும் நாட்டின் மறைமுக கொள்கைக்காக எம்மை எதிர்த்து எழுதும் பத்திரிகைக்காரகர்களுக்காகவும் எப்படி நாங்கள் எம்மேல் அன்பு பாராட்டும் இநத மக்களை வெறுப்பது. ஏதோ ஒன்று எம்மை இந்த மக்களுடன் இணைக்கிறதே. அது எம் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் கால தொப்புள்க்கொடி பந்தமா? இந்த உறவுகளை அவ்வளவு இலகுவாக வெட்டிவிட முடியுமா? சிந்தியுங்கள். முன்;பு எம் முதாதையர் செய்த செயல்களால்தான் நாம் இன்று நாடற்று நிற்கின்றோம். இன்னும் பழமபெருமை தேவையா?
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் சொல்வதும் சரிதான்...எனது தமிழ்நாட்டு நண்பர்களில் பெரும்பாலானோர் தவறான செய்திகளையே தெரிந்து வைத்திருக்கிறார்கள்...அதே நேரம் விபரம் அறிந்து...இன்னும் அறிய ஆவலாயுள்ளவரும் இருக்கின்றனர்....
ஆனால்...சமாதான முயற்சிகளைக் குழப்ப இந்தியா எடுக்கும் மறைமுக நடவடிக்கைகள் பற்றி தமிழக மக்கள் அறியாததுதான் புதிராக உள்ளது....
அண்மையில யத்வந் சிங்கா சமஷ்டிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் (இந்திய சமஷ்டியை விட அதிக அதிகாரங்களுடன் கூடிய சமஷ்டி) அதே நேரம் இலங்கை அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் செய்யப்பட்டது...இது பற்றி தமிழ்நாட்டுக்குத் தெரியாதா என்ன?
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இவர்களைப்பற்றிய வேதனைக்ககுரிய செய்தி இவர்களில் பெரும்பாலோருக்கு இலங்கை செய்திகள்; எதுவுமே போய்;;ச்சேருவதில்லை. இங்கு உள்ள செய்யதித்தாள்கள் இவர்களின் மனதில் எமக்கு அனுதாபமோ அன்போ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக உள்ளனர்.
இவர்கள் இலங்கை பற்றி வெளியிடும் செய்திகள் பெரும்பாலும் இலங்கை அரசு பத்திரிகைகளு;க்கு வெளியிடும் செய்திகளைத்தான். இதில் எப்படி எம் மக்;களின் இன்னல்கள் இருக்கும்.
எப்போதுமே (ராஜீவ் கொலைக்குப்பின்) இந்த பத்திரிகைகள் எமக்கு எதிரான செய்;திகளை வெளியிடுவதுடன் எமது போராளிகளை பயங்கரவாதிகள் என்றே சித்தரிக்கின்றன. எம் தமிழ் மக்களி;ன் செய்திகள் ஏனோ வெளியிடப்படுவதில்லை. இதனால் இம்மக்களுக்கு இவை ஏதும் தெரிவதில்லை.சொல்லப்பபோனால் இவர்கள் ஆட்டு மந்தைகளாத்தான் உள்ளனர்.
இந்;து என்ற ஒரு நாளிதழ் வெளிவருகிறது. இதைத்தான் பெரும்பாலான படித்தவர்கள் ஏன் படிக்காதவர்களும் வாங்கு கின்றனர் கௌரவத்திற்காக.
இப்பத்திரிகை 100 வீதம் எமக்;கு எதிரான பத்திரிகை. எப்போதும் நாங்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் பேச்சுவார்த்தைகளை நாம் தான் மீறுகின்றோம். என்றே செய்தி வெளியிடும். ஓசாமாவுடன் தீவிரவாத இயக்கங்களுடன் எமது போராட்ட இயக்கங்களையும் ஒன்றாக பாவித்து செய்;திவெளியிடும். இவற்றை எல்லாம் மீறி எம் உண்மையான செய்திகள் போய்ச்சேருவது கடினம்.
இத்துடன் சினிமாNவுறு சினிமாதான் இங்கே பெரி மீடியா. மக்களின் ஓய்வு நேரத்ததை இந்தசினிமாவும் டிவியும் பிடிங்கிக்ககொள்கின்றன. அப்படி இவர்கள் சிந்தித்தால் அது சினிமா பற்றித்தான் இருக்கும்.
உண்மையில் நாம் சினிமாகாரர்களுக்ககு கடமைப்பட்டு உள்ளோம். கன்னத்தில் முத்தமிட்டால். நந்தா தெனாலி போன்ற படங்கள் தான் இப்போது இவர்கள் மனங்களில் எமக்கு மீண்டும் இடம்பிடித்துத் தந்துள்ளன. ஆனால் பெரும்பாலனன எம் மக்கள் இப்படங்களை கண்டித்துள்ளனர். சரியாகஎமது போராட்டம் வெளிக்கொணரப்படவில்லை என்;று கூறுகின்றனர். இவர்களை தவறுசொல்லிப்பயன் இல்லை. குறைந்;தது இவர்களாவது எம் நிலையை வெளிக்கொணர முயன்றார்கள் என நன்றிதான் சொல்ல வேண்டும். முழுதாக சொல்ல முயன்றவர்களின் படம் எதும் வெளிவரவில்லை என்ற உண்மையை உணர்ந்தே ஆகவேண்டும்.
புத்தரின் பெயரில் என்ற படம் முழுதாக எம் நிலையை சொல்ல முற்பட்டுள்ளது. இருந்தும் என்ன பயன். எமக்கு எம் பிரச்சனைகள் தெரியும். நாமே நம்மை பார்பது பொலத்தான் அந்த படம். ஆனால் தமிழ் நாட்டில் அந்தப்படம் வெளிவந்ததா என்றுகூட தெரியவில்லை.
உலக்த்pல் எங்கோ இருந்துகொண்டு இப்படங்கள் எமது இன்னல்களை முழுதாக காட்டவில்லை என் எழுதுவதில் என்ன பயன். ஓரளாயினும் சொல்லப்பட்டதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
இது தவிர ரசியல் வாதிகள் வேறு. சோ சுப்பிரமணிய சாமி காங்கிரஸின் கோஸ்டித்தலைகள் வேறு அடிக்கடி பத்திரிகைகளில் தங்கள் புகைப்படம் வெளிவரவேண்டும் என்று எதாவதஅறிக்கை விட்டபடி இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் இப்போதுதான் எப்எம் ரேடியோ பிரபலம். அதற்கு முன்பு இலங்கை வானோலி;ன சர்வதேச சேவைதான். இவ்வானொலியை சிங்கள அரசு எமக்கு எதிராக லாவகமாக பயன்படுத்தியது. பாட்டுகளுக்கு நடுவில் எம்மக்களி;ன் போராட்டங்களை கொச்சைபடுத்தியது. இந்த சர்;வதேச வானொலியை வைத்து இந்தியத் தமிழர்கள் மத்தியில் எமதுபோராட்டம் பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்;தியது. ராஜீவ் கொலைக்குப்பின் எம்மீது இம்மக்களுக்கு இருந்த வெறுப்பை இம்மியளவும் குறைந்துவிடாது பார்த்துக்கொண்டது.
இதற்கு மத்தியில் இவர்களின் ஆயிரம ஆயிரம் சொந்தப்பிரச்சனைகள்.
இத்தனைக்கும் மத்தியில் ஒரு இந்தியத்தமிழன் எம் போராட்டத்தை தெரிந்து வைத்திருக்கிறான் என்றால் அது ஆச்சரியம் தானே.
எந்த தேசத்துக்காரன் அவன் தேசத்து முக்கிய தலைவன் கொலைசெய்பட்டபின்பும் ஆதரவு கொடுப்பான். இந்த மக்கள் பெருபம்பாலோர் அதை பெரிதுபடுத்தவில்லை. ஓருவகையில் நியாயம்தான் என் என ஏற்றுக்கௌ;கின்றனரே. யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை.
இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும் எமக்கு என கொள்கை பரப்பும் குழுக்கள் இருக்கவேண்டும். அவை ரகசியாகவேனும் இயங்க வேண்டும்.
படித்தவர்கள் எழுத்தாளர்கள் சாதனையாளர்கள் என பிரபலமானவர்கள் இதை செய்யதலாம். இங்கு வரும் போது பத்திரிகை டிவி போன்றவற்ளை சந்;திக்க வேண்டும். எம் போராட்டம் பற்றி தெளிவை ஏற்படத்த வேண்டும்.
மக்களை எப்போதும் எம்பக்கம் வைத்திருப்பது அவசியமான ஒன்று.இது எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும். அதை இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கலாமே.