Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ தேசியக்கொடி
#1
<img src='http://www.eelamweb.com/flag/images/te_flag.gif' border='0' alt='user posted image'>

தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்திற்கு ஒரு தேசியக் கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக் கொடி சித்தரித்துக்காட்டுகிறது. தேசாபிமானத்தின் சின்னமாகவும் அது திகழ்கிறது. அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக் கொடி அமைகின்றது. தேசிய விடுதலையை இலட்சியமாகக் கொண்டு போராடி வரும் தமிழீழ மக்களுக்கு ஒரு தேசியக் கொடி உண்டு. இரண்டாவது மாவீரர் நாளன்று (27.11.1990) புலிக்கொடி தேசியக் கொடியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
எமது தேசியக்கொடியை சித்தரித்து நிற்கும் புலிச்சின்னம் எப்படி தோற்றம் கொண்டது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அந்தக் குறியீட்டின் அர்த்த பிரமாணங்கள் என்ன? என்பதைப் பிரகடனப்படுத்துகின்றோம்.
1972ஆம் ஆண்டு எமது தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு அத்திவாரமிட்டார். அன்று அவர் ஆரம்பித்த ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு ;தமிழ்ப புதிய புலிகள் எனப் பெயரிட்டார். பின்னர் 1976ம் ஆண்டில்; புதிய தமிழ்ப் புலிகள்; என்ற எமது அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் ; எனத் தலைவரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து தமிழீழ தேசத்தின் தனித்துவத்தையும் தமிழீழ விடுதலை இலட்சித்தையும் சித்தரிக்கும் சின்னமாக புலிச் சின்னம் விளங்குகின்றது.
புலிச் சின்னத்தை தமிழீழத்தின் தேசிய சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்தற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேருன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும், தேசிய எழுச்சியையும் சித்தரித்துக்காட்டும் ஒரு குறியீடு. வீரத்தையும் தன்னம்பிக்கையையும் குறித்துக்காட்டும் சின்னம். அன்று வீரவரலாறு படைத்த சோழ மன்னர்களும் புலிக்கொடியின் கீழ் தமிழனை எழுச்சிகொள்ளச் செய்தனர். இன உணர்வை, தேசியப்பற்றுணர்வை, பிரதி பலிக்கும் ஆழமான, அற்புதமான குறியீட்டாகத் திகழ்கிறது புலிச்சின்னம்.
ஐந்நூறு ஆண்டு காலத்திற்கு மேலாக அந்நியர்களாலும் அயல் நாட்டுச் சிங்களவர்களாலும் அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத்தமிழினத்தை ஆயுதப் போரட்டப்பாதையில் வழிநடத்த எமது தலைவன் அன்று புலியை தேசிய இயக்கச் சின்னமாகத் தேர்ந்தெடுத்தது மிகவும் மதிநுட்பம் வாய்ந்த ஒரு முடிவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வும் ஆகும்.
புலிச்சின்னம் தேசிய சின்னமாக மக்களின் உணர்வுகளின் ஆழமாகப்பதிந்தது. செத்துப்போய்க் கிடந்த தேசிய ஆன்மா புத்துயிர் பெற்றது. இன்று எமது தேசியக் கொடியாகிய புலிக்கொடியின் கீழ் தமிழீழ தேசிய இனம் ஒன்றுபட்டு நிற்கின்றது: எழுச்சிகொண்டு நிற்கின்றது.
எமது தலைவர் பிரபாகரன் தான் உருவாக்கிய இயக்கத்திற்கு புலிகள் என்ற பெயரை தேர்ந்;தெடுத்ததற்கு இன்னும் ஓர் காரணமும் உண்டு.
நீண்டகால அடிமைத்தனத்தில் ஊறிப்போன ஒரு சிறிய இனம் ஒரு பெரிய தேசிய இனத்தின் நவீனமான, பலம்மிக்க ஆயுதப்படைகளை எதிர்த்துப் போராடுவது எப்படி? அரசுக்கு எதிராக ஆயுதப்போரட்டத்தை வெற்றிப்பாதையில் முன்னெடுத்துச் செல்வாதாயின் சிறப்பான, விசேடமான போர்க்குணங்களைக் கொண்ட ஒரு விடுதலைப் படை உருவாக்கப்படவேண்டும். அபாரமான துணிவும், சாவுக்கும் அஞ்சாத வீரமும், விடுதலை வேட்கையும் கொண்ட விரர்களை உருவாக்க வேண்டும். புலிபோல வேகத்துடனும், மூர்க்கத்துடனும் போரடும் தலைசிறந்த விரர்களை உருவாக்கவேண்டும். இந்த நோக்கில்தான் புலிப்படையை கட்டி எழுப்பினார் பிரபாகரன். பிரபாகரனின் புலிப்படை இன்று உலகின் தலைசிறந்த விடுதலை இராணுவமாகப் போற்றப்;படுகிறது.
இன்று எமது தேசியக்கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலிச்சின்னத்தின் உருவப்படம் பிரபாகரனின் கருத்திற்கு அமையவே வரையப்பட்டது. பிரபாகரனின் நண்பரும் மதுரையைச் சேர்ந்த பிரபல ஓவியருமான நடராஜன் என்பவர் 1977ம் ஆண்டு புலிச்சின்னத்தின் உருவப்படத்தை வரைந்தார். பிரபாகரனின் யோசகைக்கமைய பல தடவைகள் வரைந்து, இறுதியில் எமது தலைவரின் எண்ணப்படம் புலிச்சின்னமாக உருவகம் பெற்றது. இந்த புலிச்சின்னம் இன்று எமது தேசியக்கொடியை அலங்கரிக்;கின்றது. சுதந்திரத் தமிழீழத்தின் தேசியக்கொடியாகவும் ஒருநாள் உயர்த்தப்படவிருக்கும் இக்கொடியில் சித்தரிக்கப்பட்டுள்ள அர்த்தங்களை இனிப் பார்ப்போம்.
எமது தேசியக் கொடியை மூன்று நிறங்கள் அலங்கரிக்கின்றள. மஞ்சள், சிவப்பு, கறுப்பு ஆகிய நிறங்கள். தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு, அந்த தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு தன்னாட்சி(சுயநிர்ணய) உரிமை உண்டு. இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமையை நிலைநாட்டுவதற்காக தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போரட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கிறது.
தேசிய சுதந்திரம் பெற்று தமிழீழ தனியரசை அமைத்துவிட்டாற்போல் நாம் முழுமையாக விடுதலை பெற்றதாகக் கொள்ளமுடியாது. தமிழீழ சமுதாயத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளை ஒழிக்கப்படவோண்டும். வர்க்க, சாதி முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண் அடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்கு சமுதாய அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமத்துவமும், சமதர்மமும், சமூக நீதியும் நிலை நாட்டப்பட வேண்டும். இப்படியான புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை வேண்டி எமது அரசியல் இலட்சியத்தை சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.
விடுதலைப் பாதை கரடு முரடானது. சாவும், அழிவும், தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இத்தனையையும் தாங்கிக்கொள்ள இரும்பு போன்ற இதயம் வேண்டும். அசைக்கமுடியாத நம்பிக்கை வேண்டும். என்றும் தளராத உறுதி வேண்டும். கறுப்பு நிறம் மக்களின் மன உறிதியைக் குறித்துக் காட்டுகிறது.
தேசியக்கொடியின் மையத்தில் புலிச்சின்னம் அமையப் பெற்றிருக்கின்றது. ஆவேசத்துடன் பாயும் புலியைக் குறிப்பதாக புலியின் தலையும், முன்னங் கால்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. புலிச்சின்னத்தின் அர்த்தம் பற்றி மேலே விளக்கியிருந்தோம். தமிழ்த் தேசாபிமான எழுச்சியை மட்டுமன்றி வலிமையையும், வீராவேசத்தையும் புலிச்சின்னம் குறித்து நிற்கின்றது. பாயும் புலியை ஒத்த எமது விடுதலைப் போரையும் அது சித்தரிக்கிறது. புலித்தலையைச் சுற்றி வட்டமாக ரவைகளும், இரு புறத்திலும் கத்திமுனையுடைய துப்பாக்கிகளும் எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போரட்டத்தைக் குறியீடு செய்கின்றன.
ஒட்டு மொத்தத்தில், எமது தேசியக்கொடி, சுதந்திரத்தையும் சமதர்மத்தையும் வேண்டி நாம் நடத்தும் வீர விடுதலைப் போரை அற்புதமாகச் சித்தரிக்கிறது. தமிழரின் வீர மரபில் வேரூன்றி நின்று பிறப்பிக்கப்போகும் தமிழீழத் தனியரசின் குறியீட்டு வடிவமாகவும் எமது தேசியக்கொடி திகழ்கிறது
----------
Reply
#2
நன்றி வெண்ணிலா
. .
.
Reply
#3
2 நிமிடத்திற்குள் வாசித்திட்டீங்களா? :roll:
----------
Reply
#4
33 ரவைகளும் ஆயுத போராட்டத்தை குறிக்கிறதா?
.

.
Reply
#5
Birundan Wrote:33 ரவைகளும் ஆயுத போராட்டத்தை குறிக்கிறதா?

அப்படித்தானே சொல்லி இருக்கிறார்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#6
நாங்க Harry Potter புத்தகமே ஒரு நாளில வாசிப்பமே Case Laws வாசிக்கிற போது இந்த ரெக்னிக்ஸ் மிகவும் உதவி தெரியுமா
. .
.
Reply
#7
Niththila Wrote:நாங்க Harry Potter புத்தகமே ஒரு நாளில வாசிப்பமே Case Laws வாசிக்கிற போது இந்த ரெக்னிக்ஸ் மிகவும் உதவி தெரியுமா


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரியுங்கோ Sorry
----------
Reply
#8
அது சரி வெண்ணிலா இதில 33 ஏன் என்டு சொல்லேல்லயே?
Reply
#9
narathar Wrote:அது சரி வெண்ணிலா இதில 33 ஏன் என்டு சொல்லேல்லயே?

நாரதர் அந்த கட்டுரையின் கடைசி பந்தியில் ரவைகள் எண்று குறிப்பிடப்பட்டுள்ளது.. அப்ப அதில 33தானே இருக்கும் எண்டு வெண்ணிலா குறிப்பிட்டுள்ளார்... எனக்கு ஒரு சந்தேகம் இந்த 33 என்னும் எண்ணிக்கை ஒரு அர்த்தத்தை குறிக்கிறது.. அது என்ன அர்த்தம்?? ஏன் 31எண்டு வைக்கவில்லை..?? :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
narathar Wrote:அது சரி வெண்ணிலா இதில 33 ஏன் என்டு சொல்லேல்லயே?

அப்படின்னா நாங்களே அவ்வசனத்திற்கு முன்னால் 33 என்று சேர்த்துக்கொள்வோமா? :wink: :?:
----------
Reply
#11
Danklas Wrote:
narathar Wrote:அது சரி வெண்ணிலா இதில 33 ஏன் என்டு சொல்லேல்லயே?

நாரதர் அந்த கட்டுரையின் கடைசி பந்தியில் ரவைகள் எண்று குறிப்பிடப்பட்டுள்ளது.. அப்ப அதில 33தானே இருக்கும் எண்டு வெண்ணிலா குறிப்பிட்டுள்ளார்... எனக்கு ஒரு சந்தேகம் இந்த 33 என்னும் எண்ணிக்கை ஒரு அர்த்தத்தை குறிக்கிறது.. அது என்ன அர்த்தம்?? ஏன் 31எண்டு வைக்கவில்லை..?? :roll:

இல்ல இதில ஒரு விசயம் இருக்கு,முன்னர் இது பற்றி எங்கேயோ கேட்டிருக்கிறன்,தல சொல்லட்டும்,அது வரை பொறுத்திருப் போம்.
Reply
#12
அப்ப யாருக்கும் வடை ச்சே விடை தெரியாதா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#13
இல்ல இது புலிகள் இயக்க ஆரம்பத்தோட சம்பத்தப் பட்ட விடயம் என்று நினைக்கிறன்,என்ன தல?
Reply
#14
narathar Wrote:இல்ல இது புலிகள் இயக்க ஆரம்பத்தோட சம்பத்தப் பட்ட விடயம் என்று நினைக்கிறன்,என்ன தல?

அட கடவுளே அப்படியாயின் என் பதில் பிழையா? ஐயோ அண்ணே இந்த தகவல் அவ்வளவும் எனக்கு ஒரு போராளிதான் தந்தார். அதுவும் அரசியல் துறையில் இருக்கும் அண்ணா தான் தந்தாரே. இதிலும் குற்றம் சாட்டுவது நல்லதல்ல ஆமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#15
vennila Wrote:
narathar Wrote:இல்ல இது புலிகள் இயக்க ஆரம்பத்தோட சம்பத்தப் பட்ட விடயம் என்று நினைக்கிறன்,என்ன தல?

அட கடவுளே அப்படியாயின் என் பதில் பிழையா? ஐயோ அண்ணே இந்த தகவல் அவ்வளவும் எனக்கு ஒரு போராளிதான் தந்தார். அதுவும் அரசியல் துறையில் இருக்கும் அண்ணா தான் தந்தாரே. இதிலும் குற்றம் சாட்டுவது நல்லதல்ல ஆமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

கவலை வேண்டாம் தங்கையே...கேட்கப்பட்ட வடிவத்தில்...வினாவுக்கான விடை சரி...! 33 பற்றி கவலைப் படத் தேவையில்லை...அவர்கள்..அதைப் பற்றிக் கேட்கவில்லை..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
kuruvikal Wrote:
vennila Wrote:
narathar Wrote:இல்ல இது புலிகள் இயக்க ஆரம்பத்தோட சம்பத்தப் பட்ட விடயம் என்று நினைக்கிறன்,என்ன தல?

அட கடவுளே அப்படியாயின் என் பதில் பிழையா? ஐயோ அண்ணே இந்த தகவல் அவ்வளவும் எனக்கு ஒரு போராளிதான் தந்தார். அதுவும் அரசியல் துறையில் இருக்கும் அண்ணா தான் தந்தாரே. இதிலும் குற்றம் சாட்டுவது நல்லதல்ல ஆமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

கவலை வேண்டாம் தங்கையே...கேட்கப்பட்ட வடிவத்தில்...வினாவுக்கான விடை சரி...! 33 பற்றி கவலைப் படத் தேவையில்லை...அவர்கள்..அதைப் பற்றிக் கேட்கவில்லை..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

நடுவர் அவர்களே இனி கேள்வியில் மாற்றம் இல்லை. அப்படி என்று ஒரு அறிக்கையை விடுவம் அண்ணா நாங்கள். :roll: :wink:
----------
Reply
#17
வட்டமான ரவைகள் கட்டுப்பாட்டை குறிக்குமா? :roll: Idea
.

.
Reply
#18
கொடியிலுள்ள ரவைகளின் எண்ணிக்கை எதனையும் குறிக்கவில்லை.
Reply
#19
inizhaytham Wrote:கொடியிலுள்ள ரவைகளின் எண்ணிக்கை எதனையும் குறிக்கவில்லை.


அப்படித்தான் தகவல்கள் சொல்கின்றன. ஆனால் தல கேள்வியில் அப்படித்தானே கேட்டிருக்கிறார். :?: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#20
இந்த கொடியில் இவ்வளவு விசயம் இருக்கா இப்பதான் தெரியும். தூயாவின் கேள்வி பதில் போட்டி இவ்வளவு தூரம் ஆராய வைக்குதே நல்லது தான்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)