Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் குழுவைச் சேர்ந்த 22 பேர் வவுனியாவுக்கு ஊருடுவியிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து சிங்களப் படையினரின் பாதுகாப்புடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்த புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எஃப் (வரதர் அணி)போன்றவற்றின் முக்கிய உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு தப்பிச் சென்றுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கெதிராகச் செயற்படும் இவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே முல்லைத்தீவிலிருந்து பிஸ்ரல் குழுவினர் வவுனியா வந்துள்ளதாக அரச புலனாய்வுத்துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து சிங்களப் படையினர் வவுனியாவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
வாகனங்களில் பயணம் செய்வோரில் சந்தேகத்திற்கிடமானவர்களை சோதனையிட்டும் வருகின்றனர்.
வவுனியாவில் கோவில்குளம், சின்னக்குளம், குருமன்காடு ஆகிய பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் குழுவினர் நடமாடுவதாக சிறிலங்கா படையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டாலும் இதுவரை படையினரால் நடத்தப்பட்ட சோதனையில் பிஸ்ரல் குழுவைச் சேர்ந்த எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் படை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
அநுரா பண்டாரநாயக்க புதிய வெளிநாட்டமைச்சராக நாளை சத்தியப்பிரமாணம்
[வியாழக்கிழமை, 18 ஓகஸ்ட் 2005, 01:13 ஈழம்] [கொழும்பு நிருபர்]
புதிய வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி சந்திரிகாவின் சகோதரரும் உல்லாசத்துறை அமைச்சருமான அநுரா பண்டாரநாயக்க, தனது பதவியின் மூலம், சிங்கள மொழி மற்றும் பௌத்த மதத்திற்கு மீண்டும் புகழ் தேடிக்கொடுக்கும் வகையில் செயற்படப்போவதாக சூளுரைத்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வந்து சிறீலங்காவில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பல, அவை உறுதியளித்த சுனாமி நிவாரணத்தையோ அல்லது புனருத்தாரணப் பணிகளையே சரியாக மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்த அநுரா, தனது புதிய பதவியில், அவர்களது நாட்டின் தலைமை நிறுவனங்களை அணுகி இதுகுறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அநுரா பண்டாரநாயக்க, தனது புதிய அமைச்சிற்கான பொறுப்பை ஏற்று, ஜனாதிபதி சந்திரிகா முன்னே பதவிப் பிரமாணம் எடுக்கவுள்ளதாகவும், இந்நிகழ்வு அதிகமாக நாளை நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
யுத்த நிறுத்த உடன்படிக்கையை பேணிப் பாதுகாப்பதற்கான பொறுப்பை இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அறிவிக்குமாறு நோர்வே சமாதானப் பிரதிநிதிகளிடம் சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர் கதிர்காமரின் கொலை தொடர்பாக மிகுந்த கவலையடைந்துள்ளதாக அண்மையில் நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அரசுத் தலைவர் சந்திரிகா தெரிவித்திருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சனை கடந்த திங்கட்கிழமை சந்தித்த போது அமைச்சர் கதிர்காமர் கொலைக்குப்பின்னர் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை எடுத்துக்கூறி அரசாங்கமும் தாமும் மிகுந்த கவலையடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளிடம் அறிவிக்குமாறு அரசுத் தலைவர் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் கூறினார்.
குறிப்பாக யுத்த நிறுத்த உடன்படிக்கையினை இரு தரப்பாரும் மதித்து பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் அவசியத்தை விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்று நோர்வே வெளிவிவகார அமைச்சரிடம் அரசுத் தலைவர் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையில் நிலவுகின்ற சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியம் உள்ளதாக அரசுத் தலைவர் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் எனினும் விடுதலைப் புலிகளிடமிருந்து இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதினம்
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
விடுதலைப் புலிகளுடன் அவசர சந்திப்பிற்கு ஜனாதிபதி சந்திரிகா அழைப்பு!
[வியாழக்கிழமை, 18 ஓகஸ்ட் 2005, 21:52 ஈழம்] [கொழும்பு நிருபர்]
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் அவசரக் கூட்டமொன்று நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நோர்வே பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தை ஏற்பாட்டாளர்கள் மற்றும் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் இது நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையின் செயல்பாடு குறித்து ஆராயும் பொருட்டும் எதிர்காலத்தில் வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்கும் பொருட்டும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
அமைச்சர் லக்ஸ்மன் கதிரகாமர் படுகொலைக்கு முன்னதாக இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் சிரேஸ்ட விடுதலைப் புலிப் போராளிகளுக்குமிடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஏற்கனவே அரசாங்கம் ஊடாக யுத்த நிறுத்த கண்கானிப்புக் குழுவிடம் ஜனாதிபதி கோரிக்கையொன்றை முன்வைத்தார் என்றும் ஜனாதிபதி செயலகம் இது பற்றி விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 50
Threads: 8
Joined: Dec 2004
Reputation:
0
கதிர்காமர் உயிர்தானா உயிர்!
By
Aug 19, 2005, 12:04
Printer friendly page
சிறிலங்கா அரசின் மிக முக்கிய பதவி வகித்து வந்த அமைச்சர் கதிர்காமர் வெள்ளி நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிங்களப் படையினரையும், படைப் புலனாய்வுப் பிரிவினரையும் திகைப்பிலாழ்த்தியுள்ள இக்கொலை ஏனைய அரசியல்வாதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்த் தேசியத்திற்கு எதிரான துரோகத்தனங்களைச் சிங்கள அரசியல் தலைமைத்துவங்களுடன் சேர்ந்து செய்து கொண்டிருப்பவர்களின் நெஞ்சை ஒரு இடி இடித்திருக்கிறது. தங்களை தமிழர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் காட்டிக் கொண்டு சிங்கள அரசு அளிக்கும் ஏக போக சலுகைகளை அள்ளிப் பரிமாறும் சிலர் தமது நாடி சாஸ்திரத்தைத் திருப்பி சரிபார்த்திருக்கின்றனர்.
இப்படி ஒரு படுகொலை கதிர்காமருக்கு துல்லியமாக இல க்கு வைத்து நடத்தப்படமாட்டாது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள் வீட்டு முற்றத்தில் கூட நிற்பதற்குத் தயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தம் கதை முடிக்க கொலையாளிகள் எந்த வடிவில் வருவார்கள் என்பதை சிந்தித்து சிந்தித்து விழிமூடாது மண்டையைக் குழப்பும் அரசியல்வாதிகள் இப்போது அவ்வாறு இருக்கும் துரோகிகள் தமக்குப் பாதுகாப்பு என இன்னும் சிங்களப் படைகளை அதிகரித்துக் கொள்வதுதான் மருந்து மாத்திரையாக அமையும்.
இவை நிற்க கதிர்காமர் சினைப்பர் தாக்குதலில் குண்டுபட்டு வீழ்த்த சேதி முதலில் சந்திரிகா அம்மையாருக்குத்தானாம் தெரிவிக்கப்பட்டதாம். அம்மையார் அந்தக் கணத்தில் இப்படி ஒரு நிலை கதிர்காமருக்கு ஏற்படும் என நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கதிர்காமர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறையாய் இருந்தார். பதறி அடித்து கொழும்புத் தேசிய வைத்தியசாலைக்கு வந்தார். சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அம்மணியின் பாதுகாப்பு பிரிவு கேட்ட போது அவர் அதனை நிராகரித்தாராம்.
தான் வழமையாகப் பயணிக்கும் மோட்டர் காரைத் தவித்தும் பிறிதொரு காரில் கொழும்பு வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்றார். 'கதிர்காமரை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என மருத்துவர்களிடம் அழுது மன்றாடியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இடத்தில் ஒரு விடயத்தைத் தொட்டுக் காட்டவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
போர் நிறுத்தம் ஏற்பட்டு இற்றைவரை சமாதானத்துக்கான எந்த அம்சங்களையும் நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்காக மேற்கொள்ளப்படவில்லை. தமிழர் தாயகத்தில் போர் நிறுத்தத்திற்குப் பின்னர் எத்தனை படுகொலைகள் அரங்கேறி விட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு, இன்னும் எத்தனை போராளிகள், பொதுமக்கள், ஊனமுற்ற போராளிகளைக் கூட ஒட்டுப்படைகள் ஊடுருவி சுட்டுக் கொன்றதல்லவா.
இந்தச் சம்பவங்களால் தமிழினம் கதறி அழும்போது அம்மையார் அனுதாபம் தெரிவித்தாரா? கொலையாளிகளை கைது செய்து போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தினாரா? கதிர்காமரின் ஆலோசனையில் அரசியல் நடத்திக் கொண்டு இருந்தார். இன்று கதிர்காமரின் உயிர் பிரியும் தறுவாயில் அவரது உயிரைக் காப்பாற்றுமாறு அழுது புலம்பியிருக்கின்றார். இறுதியில் அவரது வேண்டுகோள் தோல்வியாகி விட்டது. இன்னும் சிங்கள பேரினவாதத்துடன் இருந்து கொண்டு தமிழினத்துக்குத் துரோகம் செய்யாதே என நினைத்ததோ என்னவோ கதிர்காமர் உயிர் உடலை விட்டுப் பிரிந்து விட்டது.
தப்பித்தவறி அவரது உயிர் தப்பியிருந்தால் அவரது துரோகத்தனங்களும் பழி வாங்கலும் தமிழ் இனத்துக்கு எதிராக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். காயப்பட்ட கதிர்காமரைக் காப்பற்றி சிக்ஷர் அடிக்கலாம் என நினைத்த சந்திரிகாவுக்கு ஆடுகளத்தை விட்டே அவுட்டாக வேண்டிய நிலையே ஏற்பட்டது. அதேவேளை மீண்டும் ஒரு போர் நெருக்கடி நிலையை தமிழ் மக்கள் மீது திணித்து பழிதீர்ப்பதற்கான முயற்சியாக அவசரகாலச் சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் நுழைவாயில்களில் சோதனைக் கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் மீது தமது அராஜகத்தனங்களைக் கட்டவிழ்த்துக் கொண்டு இருக்கும் படைத்தரப்புக்கு அம்மணியின் அவசரகாலச் சட்டப் பிரகடனம் உச்சந் தலையில் ஐஸ் வைத்த மாதிரியிருந்தது. இனிநாம் எதனையும் செய்வோம் என்ற இறுமாப்புடன் படைத்தரப்பு சோதனைக் கெடுபிடிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உண்மையில் இது போர் நிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் ஒரு போர் முழுமானால் படைத்தரப்பினரின் அடாவடித்தனங்களின் ஒத்திகையாக இந்தச் சம்பவம் நோக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் அவசரகாலச் சட்டப் பிரகடனமும் படையினரின் நடவடிக்கைகளும் தமிழ் மக்களைப் பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகவே தமிழ் மக்கள் கருத வேண்டியுள்ளது. போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதன் பின் சமாதானப் பேச்சுக்கள் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இனவாதக் கூட்டோடு ஆட்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தி சமாதானத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததா? மாறாக தமிழ் மக்களின் இயல்பு நிலை மேலும் மோசமாகியதுடன் ஒட்டுப் படைகளின் உதவியோடு போர் நிறுத்தத்தைப் பலவீனப்படுத்தும் சம்பவங்களே நடந்தேறி வருகின்றன.
அதே சமயம் கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிப்புற்ற தமிழர் தாயகத்தினை மீள் புனரமைப்புச் செய்வதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட சுனாமிப் பொதுக் கட்டமைப்பினைக் கூட இயங்கச் செய்ய முடியாத அளவிற்கு உயர் நீதிமன்றத் தடை உத்தரவினால் முடங்கிப்போய்க் கிடக்கிறது. இனவாதக் கட்சியான ஜே. பி. பி ஆளும் கூட்டு முகாமிலிருந்து விலகிச் சென்ற பிற்பாடு கூட சமாதானத்துக்கான நல்லெண்ண முயற்சிகளை சந்திரிகா அம்மையார் மேற்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் உயிரையும், இரத்தத்தையும் சமாதானத்துக்காகக் கொடுத்து பொறுமை காக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது.
தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பித்து தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்தி, ஆழிப் பேரலைக் கட்டமைப்பினை இயங்கச் செய்திருந்தால் நாட்டில் அமைதிநிலை தோன்றியிருக்கும். வடக்குக் கிழக்கில் இந்த போர் ஓய்வு காலத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களைச் சமாதானத்துக்காக இழந்து கொண்டிருக்கும் போது அதற்கு காரண கர்த்தாக்களான ஒட்டுப்படைகளின் ஆயுதங்களைக் களைந்து தமிழ் மக்களின் இயல்வு நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்காத அம்மையார் அவர்கள் லக்ஷ்மன் கதிர்காமர் படுகாயமடைந்த பிற்பாடு பதறியடித்து அவரது உயிரைக் காப்பாற்றுங்கள் என ஒப்பாரி வைப்பது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.
கதிர்காமர் உயிர்தானா உயிர். மற்றவர்கள் படுகொலை செய்யப்படும் போது அது உயிர் இல்லையா? என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது. தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகளின் அராஜகத்தனத்தால் தேச விரோத நடவடிக்கைகளால், சுனாமிப் பேரழிவால் எத்தனை மக்கள் அழுதுபுலம்பி ஒப்பாரி வைக்கின்றார்கள். இனியாவது அம்மணி சிந்திப்பாரா? இந்த ஒப்பாரிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா.
i love you dadadadad
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
வவுனியாவில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் சுட்டுக்கொலை
[சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2005, 20:51 ஈழம்] [ம.சேரமான்]
வவுனியா மாவட்டம் சமணக்குளம் பகுதியில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர் நடராசா கேசவவர்ணன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு சென்ற கொலையாளிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
கொல்லப்பட்டவர் வவுனியா ஆசிக்குளத்தைச் சேர்ந்தவர் என்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையார் என்றும் அறியவருகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் புலன் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வவுனியா சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு நோர்வே ஆட்சேபனை
[திங்கட்கிழமை, 22 ஓகஸ்ட் 2005, 16:55 ஈழம்] [ம.சேரமான்]
ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நோர்வே அனுசரணையாளர்கள் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான இராஜதந்திர முன்னெடுப்புக்களை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.
"ஏற்கனவே அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் சமாதான முன்னெடுப்புக்கள் விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டால் முற்றாக முறிவடையும் என்று நோர்வே அனுசரணையாளர்கள் கருதுகிறார்கள்அதனால் இவ்வாறான முயற்சிகளை கைவிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை நோர்வே வலியுறுத்தி வருகின்றது"- இத்தகவல்களை வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
பராக்! பராக்! மகாசனங்களே… எழுந்திருங்கள்
[திங்கட்கிழமை, 22 ஓகஸ்ட் 2005, 21:49 ஈழம்] [கொழும்பு நிருபர்]
பராக்! பராக்! மகாசனங்களே… எழுந்திருங்கள்… இதோ வருகிறார்… எங்கள் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா.…இவர் பெற்றுள்ள பெருமைகள் ஒன்று இரண்டல்ல.
இவரது பெற்றோர்கள் இருவரும் பிரதமர்கள்… எனவே பிரதமர்களையே தாய், தந்தையாகக் கொண்ட உலகின் ஒரேயொரு ஆண் மகன் இவரே. அத்தோடு இவரது சகோதரி இந் நாட்டின் தற்போதைய தலைவி…
இத்தகைய பெருமைகள் தாங்கிய 56வயதுடைய பிரமச்சாரிய மகோன்மணி இதோ வருகிறார்… பராக்! பராக்!!
என்ற அறிவித்தல் இல்லாமல் சத்தம் சந்தடியின்றி வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் அநுரா பண்டாரநாயக்கா.
கதிர்காமரை தன்னால் இயன்றளவு வெறுத்து ஒதுக்கிய ஒரு சிங்கள ஆண் மகன் என்று பெருமைப்படக்கூடிய அநுரா பண்டாரநாயக்கா, கதிர்காமரின் அமைச்சுப் பொறுப்பையே ஏற்பது அரசியல் விந்தை.
1977ம் ஆண்டு பாராளுமன்றப் பிரவேசத்தை நிகழ்த்திய அனுரா பண்டாரநாயக்கா இடையே தனது சகோதரியுடனான முறுகலினால் இடையே சில ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தார். அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், வெளிவிவகார ஆலோசகராகவும் பதவி வகித்ததோடல்லாமல் அக் கட்சியின் சார்பாக பாராளுமன்றில் சபாநாயகராகவும் இருந்தவர்.
அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது, கதிர்காமரைக் கிள்ளுக்கீரையாக ஒரு பிடிபிடித்து அவர் ஒரு அரசியல்வாதியே இல்லை, சுயநலத்திற்காக சிறீலங்காவின் அரசியலைப் பயன்படுத்துகிறார் எனப் பல தடவைகள் குற்றஞ்சாட்டியதோடு, கதிர்காமரிற்குச் சவாலொன்றையும் விட்டிருந்தார்.
தனது சகோதரி சந்திரிகாவின் சேலைத் தலைப்பில் தொங்கும் ஒரு நபரே கதிர்காமர் என்று தெரிவித்த அநுரா பண்டாரநாயக்கா, மலினமான பாராட்டுதல்களுக்கும், பிரச்சாரத்திற்கும் அலையும் ஒரு நபரே கதிர்காமர் என்றும் குறிப்பிட்டதோடு,
“கதிர்காமர் தேர்தலில் நின்று பத்து வாக்குக்களை வென்று காட்டட்டும், கொழும்பிலோ அல்லது வட பகுதியிலோ போட்டியிட்டு, ஐந்து தமிழர்களின் வாக்குக்களையாவது பெற்றுக்காட்டட்டும். இதனை அடுத்த தேர்தலில் அவர் செய்து காட்டுவரா? இதனை நான் அவருக்குச் சவாலாக விடுக்கிறேன்” என பாராளுமன்றில் கேட்டிருந்தார் அநுரா பண்டாரநாயக்கா.
அது மட்டுமல்ல, சிறீலங்கா வரலாற்றில் இதுவரை கண்டிராத மோசமான வெளிவிவகார அமைச்சராகக் கதிர்காமரை வர்ணித்ததோடு, கதிர்காமரால் வெள்ளவத்தைக்குப் போக முடியுமா இல்லை, அநுராதபுரத்திற்கு அப்பால் போகமுடியுமா? அல்லது தமிழர்களின் வேதனைகளைத் தான் அவரால் அறியமுடியுமா எனவும் கேட்டிருந்தார் அநுரா பண்டாரநாயக்கா.
காலத்தின் கோலமாக, கதிர்காமர் யாராலோ கொல்லப்பட, அவரது பதவியை ஏற்றிருக்கிறார் அநுரா பண்டாரநாயக்கா. அடுத்த அரச தலைவருக்கான வேட்பாளராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த பிரதமாராகும் வாய்ப்பைக் கொண்டுள்ள அநுராவிற்கு இன்னொரு தகுதி வழங்கும் வாய்ப்பாகவும் இது இருக்கலாம்.
ஏனெனில் எதிர்வரும் அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் சந்திரிகா என்கிற பெயர் சிறீலங்கா அரசியலில் இருந்து மெலிதாக நீங்கிவிடும். எனவே அதன் பிறகும் தங்கள் குடும்ப அரசியலின் பிரகாசம் மங்கிவிடக் கூடாதென்ற விருப்பால் அநுராவைத் தூக்கிவிட்டேயாக வேண்டிய கட்டாயம் சந்திரிகாவிற்கு.
ஆனால் இப்படியான அநுராவிற்கு பலம் அவரது பலவீனமே. யாரையும் எந்நேரத்திலும் எதிர்த்துவிட்டுப் போகும் ஒரு தன்மையுடையவர். தரக்குறைவாக விமர்ச்சிக்கும் தன்மையுடையவர். அதனையே அவர் தனது பலமாகக் கருதுபவர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தபோது, தனது சகோதரியைக்கூட ஒரு கை பார்த்தவர்.
ஒரு உதாரணத்திற்கு, தனதும் சந்திரிகாவினதும் வீடுகள் அருகருகே என்றும் பிரேமதாசா இறந்த போது சந்திரிகா பால்புக்கை பொங்கியும், விருந்தளித்தும் மகிழ்ந்ததாகத் தெரிவித்து தனது குடும்ப விவகாரத்தையே செய்தியாக்கியிருந்தார்.
இவ்வாறான பலவீனங்களைக் கொண்டுள்ள அநுரா, தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக சிங்களத்தின் இருபெரும் கட்சிகளும் ஒரே முடிவைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை விருப்பாகக் கொண்டுள்ளதாகக் கடந்த காலத்தில் தெரிவித்திருந்தார். அநுரா, அரசியற் குடும்ப வாரிசு என்ற காரணத்தினால் இராஜதந்திர கையாளுகை அவருக்குப் புதிதல்ல. எனினும் அதனை அவர் கையாளப் போகும் முறையையே நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஏனெனில் தமிழர்கள் சம்பந்தமாக விவகாரத்தில், கடந்த காலப் பரப்புரையை மேற்கொள்ள முடியாதபடி உண்மைகளை அனைத்துலகும் உணர்ந்துள்ளன. சுனாமி மீளமைப்புக் கட்டமைப்பிற்கான அவற்றின் ஆதரவு இதற்கான இன்றியமையாத உதாரணம். எனவே உண்மைகளைத் தவிர்த்து கடந்த காலத்தைப் போன்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் அநுராவிடம் இந்தப் பொறுப்புப் போய்ச் சேர்ந்துள்ளது.
மறுபுறமாகத் தமிழர் தரப்புத் தொடர்பாக பலவாறான கருத்துக்களை இவர் கடந்த காலத்தில் தெரிவித்து வந்தாலும், கருணாவை உல்லாசத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவே சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார் என்ற செய்தியை ஊடகங்கள் பிரசுரித்திருந்த போது, அது தொடர்பாக ஊடகவியலாளர்களைச் சந்தித்த அநுரா தெரிவித்த கருத்துக்கள் தமிழர் தரப்பிடம் அவர் கொண்டுள்ள “மரியாதை”யை எடுத்துக் காட்டியது.
…நான் கருணா என்ற நபரை எனது வாழ்வில் எப்போதுமே சந்தித்ததில்லை. எனக்கு அவ்வாறான தேவையுமில்லை. யாரையுமே நான் வேறு நாடுகளிற்கு கூட்டிச் செல்லவுமில்லை. இது என் மீதான ஒரு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தச் செய்தியை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு கருதுவாரே என்பதே எனது கேள்வியாகவுள்ளது…
மகாசனங்களே! பராக்... பராக்… இதோ அநுரா வருகிறார்.
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி அண்ணா. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
ஊர் இரண்டு பட்டால்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்து, சமாதான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும் என்று சுட்டிக் காட்டியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இரு பிரதான கட்சிகளுக்கிடையில் நடைபெற்று வரும் நிதானமற்ற பலப் பரீட்சை பொது நிலைப்பாட்டுக்கு தடையாகவிருப்பதால் அந்த நிலை மாற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் குறித்த முயற்சிகள் ஒரு புறம் உக்கிரமடைந்துள்ள இவ்வேளையில் சம்பந்தன் எம்.பி. இத்தகைய வேண்டுகோளொன்றை விடுத்துள்ளமை சிந்திக்கத்தக்கதாகும்.
சமாதான முன்னெடுப்புக்களில் புதியதொரு செல்நெறியை ஆரம்பித்து வைக்கும் நோக்கிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
""சமஷ்டி மூலமான தீர்வுக்கு இரு கட்சிகளும் ஆதரவு வழங்குவதாக கருத்து தெரிவித்துள்ளன. எனவே இவ்விடயத்தில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இடைக்கால சுயாட்சியை வழங்கி சமாதான முயற்சியை முன்னெடுக்க இரு கட்சிகளும் முன்வர வேண்டும்'' என்றும் இரா.சம்பந்தன் எம்.பி .குறிப்பிட்டார்.
இரு கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள நிலையில் அந்தக் கருத்தின் அடிப்படையிலேயே தமது முயற்சிகளை மேற்கொள்வார்களாயின் அது நாட்டின் நிரந்தர சமாதானத்துக்கான நல்லதொரு சமிக்ஞையாகும். மாறாக, வழமை போன்று ஒரு கட்சி முன் வைக்கும், தீர்வுத் திட்டத்தை மற்றைய கட்சி விமர்சித்து அதனை எதிர்க்கும் சுய லாப அரசியலை நடத்த முற்படுமானால் அது ஒரு போதும் நாட்டுப் பிரச்சினைக்கு முடிவை கொண்டுவரப் போவதில்லை.
எனவே இத்தகையதொரு போக்கை பரஸ்பரம் இரு கட்சிகளும் பின்பற்றாமல், நாட்டினதும், மக்களதும், நன்மை கருதி, ஒரு முகமாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். அதற்கு இரு பிரதான கட்சிகளுக்கிடையிலும் பொது இணக்கப்பாடொன்று நிலவ வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது மாத்திரமன்றி, அøனத்துத் தரப்பினரதும் பொதுவான அபிப்பிராயமாகும்.
இதேவேளை புலிகளுடன் பேச அரசாங்கம் தயாராகவுள்ளது. சமாதான முயற்சிகளை ஜனாதிபதி ஆரம்பிப்பாரேயானால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவு நல்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இரு பிரதான கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து சமாதான முயற்சிகளை தொடர்ந்து தங்கு தடையின்றி முன்னெடுத்து செல்ல வேண்டும். அதனை விடுத்து சமாதான முயற்சிகளை இழுத்தடித்து மீண்டும் பின்னோக்கிச் செல்ல முயலக் கூடாது.
நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் சமாதான முயற்சிகளுக்கு நாட்டிலுள்ள அனைவருமே ஊக்கிகளாக செயற்பட வேண்டுமென்றே சமாதான விரும்பிகளும் தமிழ் பேசும் மக்களும் விரும்புகின்றனர்.
எவ்வாறெனினும் நமது நாட்டை பொறுத்தமட்டில், பேரினவாத நோக்குடன் அவற்றை எதிர்க்கும் சில சக்திகளும் செயற்படவே செய்கின்றன.
அந்த சக்திகள் இன ஒதுக்கல் செயற்பாட்டின் உச்ச நிலையை வெளிப்படுத்தும் வகையிலேயே தமது செயற்பாடுகளைத் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றன. இதை பின் புலத்தில் நோக்குகின்றபோது உண்மையிலேயே அவர்களின் கருத்துக்களை ஒரு பொருட்டாக கருதத் தேவையில்லை என்றே பலரும் அபிப்பிராயப் படுகின்றனர்.
காலனித்துவத்துக்குப் பிற்பட்ட காலம் முதலே சிறுபான்மையினரின் உரிமைகள் சேமநலன்கள் அடக்கி ஒடுக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றின் உச்ச கட்டமாகவே பொதுக் கட்டமைப்புக்கெதிராக ஹெல உறுமய,ஜே.வி.பி. போன்ற கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்து,அவை தற்பொழுது தடைப்பட்டுப் போயுள்ளன.
இதேவேளை, புலிகளுக்கும், அரசுக்குமிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீராக நடைமுறைப்படுத்துவது குறித்து நேரடிப் பேச்சுக்களுக்கும் ஜே.வி.பி. தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை போக்குவதற்காகவே அரசுபுலிகள் நேரடி பேச்சுக்கு புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று ஜே.வி.பி கூறுகின்றது.
அரசுபுலிகள் நேரடிப் பேச்சுக்களிலுள்ள சாதக, பாதகங்களை ஆராயாமல் எடுத்த வீச்சில் பேச்சுக்களுக்கு முட்டுக் கட்டை போடுவது எந்த வகையில் நியாயமானது என்பது குறித்து புரியவில்லை. இது இனத் துவேசத்தினதும், பேரினவாதத்தினதும், உச்சவெளிப்பாடென்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.
பொதுக் கட்டமைப்பும் கூடாது, யுத்த நிறுத்தம் குறித்து பேசவும் கூடாது என்றால் சம்பந்தப்பட்டவர்களின் உள் நோக்கம் என்ன என்ற சந்தேகத்தைக் கிளப்புவதாகவே அனைத்து நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
புலிகளே விரும்பி ஆயுதங்களைக் கீழே வைத்தாலும் தென்னிலங்கை அரசியற் கட்சிகளும், அரசியல் வாதிகளும் அவர்களை கீழே வைக்க விடமாட்டார்கள் போன்றே காரியங்கள் தொடர்கின்றன.
அரசுபுலிகள் நேரடி பேச்சுகளிலுள்ள சாதக, பாதகங்களை ஆராயாமல் சிறுபான்மையினருக்கு அதிகாரம் சென்று விடக் கூடாது என்ற ரீதியில் வெறுமனே இந்தப் பேச்சுக்களுக்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர். உண்மையிலேலேயே தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கக்கூடாது என்பதில் தென்னிலங்கை கட்சிகள் விடாப்பிடியுடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான போக்கைத் தவிர்த்து, மக்களுக்கான நலனோம்பல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றே தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அரசியல் சுயலாபம் தேடும் நோக்கில், அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ளாமல் மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் அனைத்துக் கட்சிகளும் செயற்பட வேண்டும். அதன் மூலமே உண்மையான நிரந்தரமான சமாதானத்தை எட்ட முடியும்.
இதற்கு பேச்சுக்களில் கலந்து கொள்ளும் சகல தரப்பினரும் மற்றும் நாட்டிலுள்ள சகல இனமக்களும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டியது இன்றியமையாதது.
மாறாக, நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு அடித்தளமிடும் இத்தகைய முயற்சிகளுக்கெதிராக செயற்படுபவர்களுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நாட்டின் சமாதான முயற்சிகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்படாமல் நிரந்தர சமாதõனத்தைக் காணவே சகலரும் விரும்புவர். அதுவே மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்வதற்கான சூழலையும் ஏற்படுத்துவதாக அமையும்.
எனவே இனவாதிகளினதோ அல்லது சமாதானத்தை குழப்பும் தீய சக்திகளினதோ பேச்சுக்கு இடம் கொடுக்காமல், நிரந்தர சமாதானத்தை அடைவதற்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்து சளைக்காமல் ஈடுபட வேண்டும். "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' எனும் போக்கையே இன்று சிலர் நாட்டில் கடைப்பிடித்து வருகின்றனர். அத்தகையதொரு நிலைக்கு எவருமே இடம் கொடுக்கக்கூடாது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
சுடரொளி ஆசிரியர், ஜே.வி.பி. காடையரால் தாக்கப்பட்டார்
[செவ்வாய்க்கிழமை, 23 ஓகஸ்ட் 2005, 23:36 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையம் முன்பாக இன்று மாலை விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜே.வி.பி.யினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற "சுடரொளி" செய்தியாளர் பிரேமச்சந்திரன் யதூசன், ஜே.வி.பி. வன்முறையாளர்களினால் தாக்கப்பட்டு "புலி" என குற்றம் சுமத்தி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழமை போல்
ஜே.வி.பியனர் வாசக அட்டைகளை ஏந்தியவாறு, இனவெறியைக் கக்கும் கோசங்களையும் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட செய்தியாளர் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த சமயம் அவரை சுற்றி வளைத்த ஜே.வி.பி. காடையர்கள், ஊடகவியளாளர் என்பதை உறுதிப்படுத்துமாறு கோரிய போது அவர் கைவசம் அதற்கான அடையாள அட்டை இருக்கவில்லை. இதனையடுத்து அவரது புகைப்பட்டக் கருவியையும் ஆவணங்களையும் பறித்து சேதப்படுத்தியதோடு "புலி" எனக் கூறி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் அந்த இடத்திற்குச் சென்றபோது அவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரைக் கைதுசெய்த பொலிசார், அவசரகாலச் சட்டத்தின்கீழ், உடனடியாக தடுப்புக் காவலுக்கு எடுத்துச்சென்று, அங்கு வைத்து அவரைத் தாக்கியுள்ளனர்.
இந் நபரிடம் ஊடகவியளாளர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள் அட்டை எதுவும் இல்லாத காரணத்தினால் அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருப்பதாக கோட்டைப் பொலிசார் இது பற்றி கூறுகின்றனர். ஆவரை விடுதலை செய்வதற்குச் சென்ற சுடரொளி நிர்வாகத்தினருக்கு மறுப்புத் தெரிவித்த பொலிசார், பிரேமச்சந்திரனை குற்றத்தடுப்பு புலன்விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட விடயம் குறித்து சுடரொளி - உதயன் பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இ.சரவணபவானிடம் கேட்ட போது, கடந்த சனிக்கிழமை தமது கிளை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலின் பின்னணி யார் என்பது குறித்து தற்போது ஊகிக்க முடிகின்றது என்றார்.
தமது செய்தியாளரை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
கதிர்காமர் கொலையின் பின்னரான அரசியல் கள நிலைவரங்கள்
ஸ்ரீலங்காவின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டு மரணச் சடங்கும் ஒருவாறு முடிந்து விட்டது. தமிழ் கிறிஸ்தவ அடையாளத்துடன் பிறந்து, ஆங்கிலக் கிறிஸ்தவ அடையாளத்துடன் வளர்ந்து, சிங்கள பௌத்த அடையாளத்துடன் அவர் மறைந்திருக்கின்றார். சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்திருந்த சிங்கள தேசத்தின் கௌரவத்தை மீட்டெடுத்து நிலைநாட்டியவர் என்ற வகையில் சிங்கள தேசம் அதற்கான நன்றிக் கடனை மரணச் சடங்கினை சிங்கள தேசச் சடங்காக கொண்டாடியதன் மூலம் நிறைவாகவே செய்து முடித்திருக்கின்றது.
அத்துடன், சிங்கள தேசத்தினால் ஒரு தமிழர் கௌரவிக்கப்பட வேண்டுமாயின் அவர் ஒரு சிங்கள பௌத்தராக மாறுதல் வேண்டும் என்ற செய்தியையும் அடையாளம் காட்டியிருக்கின்றது.
இவற்றினை விட இவரது மரணம் சிங்கள தேசத்திற்கு `பிண அரசியல்' ஒன்றினை நடாத்தும் வாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. வாய்ப்புகள் பறிக்கப்பட்டவர்கள் மீண்டும் களத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். பொதுக்கட்டமைப்பின் பிறப்புடன் நிர்ப்பந்தமாக விலக்கப்பட்ட பேரினவாத நிகழ்ச்சி நிரல் மீண்டும் மைய அரசியலில் மேலாதிக்கத்தை பெற்றிருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக பேரினவாதத்துடன் கூட்டுச் சேர்வதற்கு விரும்பியும் தடைகளைக் கண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தடைகளை எதிர்ப்பின்றித் தாண்டும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்கின்றது.
பேரினவாத நிகழ்ச்சி நிரலில் இருந்து நிர்ப்பந்தம் காரணமாக வெளியே வந்த ஜனாதிபதி சந்திரிகா மீண்டும் பேரினவாதத்தின் கைதியாக நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைந்திருக்கின்றார்.
மரணம் நிகழ்ந்த ஆரம்பத்தில் பிரதமரோ, ஜனாதிபதியோ பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லத் துணியவில்லை. யுத்த நிறுத்தம் குழம்பிவிடுமோ என்ற அச்சம் தான் அதற்குக் காரணம். ஜனாதிபதி வெளியிட்ட முதலாவது அறிக்கையில் புலிகளின் பெயரைக் கூறாமல்தான் கொலைக்கான கண்டனத்தை தெரிவித்திருந்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட பொலிஸாரின் அறிக்கை புலிகளைக் குற்றம் சாட்டுவதாக மட்டும் கூறியிருந்தார்.
ஜே.வி.பி. மரணச் சடங்கு நிகழ்ச்சிக்குள் நுழைந்த பின்னர் தான் எல்லாமே தலை கீழாக மாறின. ஜே.வி.பி. இம்மரணத்தை புலிகளுக்கு எதிரான அரசியலுக்கு பயன்படுத்த முன் வந்தது. அதற்கான நிகழ்ச்சி நிரலும் போடப்பட்டது. அடுத்தடுத்து நான்கு காரியங்கள் அரங்கேற்றப்பட்டன. முதல் கட்டத்திற்கு அனைத்து கட்சிகளையும் இணைத்த மாநாடு கூட்டப்பட்டது.
அம்மாநாட்டில் புலிகளே இக்கொலையைச் செய்தார்கள் என பகிரங்கப்படுத்தும்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிர்ப்பந்திக்கப்பட்டார். சர்வதேச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இக்கொலையினைப் பார்க்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடப்பட்டது. அதேவேளை, புலிகளைப் பெயர் குறித்து கண்டிக்காதது தொடர்பாக ஜனாதிபதி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. உடனடியாக ஜனாதிபதி இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.
இதன் பின்னர் தான் ஜனாதிபதி உண்மை நிலையினை தரிசிக்கத் தொடங்கினார். சிங்கள தேசத்திடம் இருந்து தன்னை அந்நியப்படுத்தும் வேலைத் திட்டம் ஒன்று அரங்கேறுவதை அடையாளம் கண்டார். இதிலிருந்து தப்புவது என்றால் தானும் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டு, பொதுக் கட்டமைப்பு நிர்ப்பந்தம் காரணமாக தான் கழற்றி எறிந்த பேரினவாத கவசத்தை மீண்டும் எடுத்து போர்த்துக் கொண்டார். இந்தப் போர்ப்புடன் இரண்டாவது கட்டம் அரங்கேறத் தொடங்கியது.
இரண்டாவது கட்டத்தில் ஜனாதிபதி நாட்டுமக்களுக்காக தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். புலிகளை எவ்வளவு தூரம் வெழுத்து வாங்க முடியுமோ அவ்வளவிற்கு வெழுத்து வாங்கினார். புலிகள் தான் இந்தக் கொலையைச் செய்தார்கள் என உறுதிபடக் கூறினார். அதன் மூலம் பேரினவாத அரசியலை நடாத்த ஜே.வி.பி.க்கு மட்டும் தெரியும் என நினைக்கக்கூடாது. தனக்கு அவர்களை விட நிறையத் தெரியும் என்பதை ஜே.வி.பி. யின் காதுகளில் உறைக்கக் கூறினார். அவரது செயற்பாடு எனக்கு பிரேமதாஸா காலத்தை நினைவுபடுத்தியது. அக்காலத்தில் ஜே.வி.பி.யினை விட இந்திய எதிர்ப்பினை உரக்கக் கூறி ஜே.வி.பி. யை திக்குமுக்காடச் செய்தார் பிரேமதாஸா. இந்த புலி எதிர்ப்பு உரைக்கு மத்தியிலும் மறைமுகமாக ஜே.வி.பி.யினைத் தாக்குவதையும் ஜனாதிபதி கைவிடவில்லை.
மூன்றாவது கட்டம், மரணச் சடங்கில் அரங்கேற்றப்பட்டது. அங்கு வழமையான மரபிற்கு மாறாக, அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் உரையாற்றினார். கொலைக்கு புலிகளை குற்றம் சாட்டியதுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு தங்களோடு கைகோர்த்து வரும்படி சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொண்டார். அவ்வுரை ஜே.வி.பி. எழுதிக் கொடுக்க பிரதமர் வாசிப்பது போல இருந்தது. உரைமுழுவதும் ஜே.வி.பி.யின் நாற்றம் அடித்தது. இவ்வளவு காலமும் பிரதமர் பேரினவாதத்தின் பக்கம் இருந்தாலும் வெளித்தோற்றத்தில் ஒரு நடுநிலையானவராகவே காட்சியளித்தார். இந்த உரையோடு அவரது வெளித்தோற்றம் கழன்றுவிட உண்மைத் தோற்றம் வெளியில் வர ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் ஜே.வி.பி. தம்பிமார் தம்மோடு நிற்கின்றனர் என்ற குஷிதான் காரணம். கதிர்காமரின் கொலை தனக்கு அதிர்ஷ்டத்தை தந்ததாக நினைத்து புளகாங்கிதமடைந்து காற்றில் பறந்தார். பிரதமர் பதவிக்காக கதிர்காமர் வில்லனாக நின்றதையும், ஜே.வி.பி. தம்பிமார் அவருக்கு பக்கபலமாக நின்றதையும், அவர்களை வெல்வதற்கு பௌத்த பரிவாரங்களை தான் திரட்ட நேர்ந்ததையும் ஒரு கணம் மறந்தார்.
நான்காவது கட்டத்தில், மரண நிகழ்விற்கு வந்த வெளிநாட்டுப் பிரமுகர்கள், மரணச் சடங்கிற்கு வராமல் தூதுவராலயங்களில் முடங்கிக் கிடந்த இராஜதந்திரிகள் எல்லோரும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பயங்கரவாதம் பற்றிய பெரிய வகுப்பொன்று எடுக்கப்பட்டது. கௌசல்யன் படுகொலை, சிவராம் படுகொலையெல்லாம் பயங்கரவாதமல்ல என விளக்கப்பட்டு கதிர்காமரின் கொலையே மாபெரும் பயங்கரவாதம் என எடுத்துரைக்கப்பட்டது. இராஜதந்திரிகள் எல்லாம் தங்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவ்வாறு நான்கு வகையான அரங்கேற்றங்கள் எல்லாம் சர்வதேச சக்திகளுக்காக செய்தும் அவை ஒன்றும் அவர்களின் காதில் விழவில்லை. அமெரிக்க ஜனாதிபதி புஷ் தொடக்கம் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் வரை கூறிய வார்த்தை ஒன்றே ஒன்றுதான்.
"கதிர்காமரின் கொலையைப் படிப்பினையாகக் கொண்டு யுத்த நிறுத்தத்தை வலுப்படுத்துங்கள். சமாதானத்தை முன்னெடுங்கள்"
அவர்களைப் பொறுத்தவரை கதிர்காமரின் கொலையை ஒரு தனி நிகழ்வாகப் பார்க்கவில்லை. மாறாக, தொடர் நிகழ்வின் விளைவாகத்தான் பார்த்தனர். அண்மைக் காலமாக அரங்கேறும் தொடர் நிகழ்வு தொடர்ந்தால் இவ்வாறான விளைவுகள் தான் ஏற்படும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது. எனவே, விளைவுக்கு வைத்தியம் செய்வதனை விடுத்து, தொடர் நிகழ்வுக்கு வைத்தியம் செய்வதிலேயே அவர்கள் கவனமாக இருந்தனர்.
அந்தத் தொடர் நிகழ்வு என்பது இரு தரப்பினரிடையேயும் நடந்து கொண்டிருக்கும் நிழல் யுத்தம் தான். நிழல் யுத்தங்கள் தொடர்ந்தால் சாதாரணமான மனிதர்கள் மட்டுமல்ல மகா மனிதர்களும் மரணமடையக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என்பது நிழல் யுத்தத்தின் விதி. இதனால் தான் சிவராம் மட்டுமல்ல, கதிர்காமரும் மரணமடைந்தார். இந்த விதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதிக்கும் தெரியாவிட்டாலும் சர்வதேச சக்திகளுக்கு நன்றாகவே தெரிந்தது.
இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்தியா தொடர்ச்சியான புலிக்காய்ச்சலில் இருக்கின்றது. அந்த புலிக்காய்ச்சல் தணியுமட்டும் சர்வதேச விழுமியச் செயற்பாட்டிற்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்க முடியாது. இந்தியர்கள் போரை இந்தியா வரை விஸ்தரித்தவர்கள். அதனால் ராஜிவ்காந்தியைப் பறிகொடுத்தவர்கள். எனவே, பீடித்த புலிக்காய்ச்சல் விரைவில் விட்டுப் போகும் எனக் கூறிவிட முடியாது. இந்தப் புலிக்காய்ச்சல் விடும்வரை பேரினவாதத்துடனான அவர்களது கைகோர்ப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இந்த நிழல் யுத்தம் என்பது தமிழ்த்தேசம் தொடங்கிய யுத்தமல்ல - தமிழ்த்தேசம் மீது சிங்கள அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட யுத்தம். இதுவும் சர்வதேச சக்திகளுக்கு நன்றாகத் தெரியும். சர்வதேச சக்திகளின் சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு இதுவரை காலமும் தமிழ்த்தேசம் ஒத்துழைத்து வந்ததே தவிர, சிங்கள தேசம் ஒத்துழைக்கவில்லை என்பதும் சர்வதேச சக்திகளுக்கு அனுபவ ரீதியாகத் தெரியும். அதுவும் ஒரு உச்ச நிலை அனுபவத்தை பொதுக் கட்டமைப்பு விவகாரம் அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்திருந்தது. எனவே, தங்களோடு ஒத்துழைக்கின்ற தமிழ்த் தேசத்தோடும் அதன் பிரதி நிதிகளோடும் ஒரு மோதல் நிலையினைப் பின்பற்ற சர்வதேச சக்திகள் விரும்பவில்லை. கதிர்காமர் கொலை தொடர்பாக ஒரு வேறுபட்ட அணுகுமுறைக்கு இவையே காரணம்.
இப்போது மீண்டும் எழுகின்ற கேள்வி கொலையை யார் செய்தார்கள்?
அண்மைக்காலமாக கதிர்காமர் பல்வேறு தரப்பட்டவர்களினாலும் விரும்பப்பட்ட ஒருவராக இருக்கவில்லை.
சர்வதேச சக்திகள் நகர்த்த இருக்கும் சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு பெருந்தடையாக இருக்கின்றார் என்பதற்காக அமெரிக்கா உட்பட சர்வதேச சக்திகளினால் விரும்பப்பட்ட ஒருவராக இருக்கவில்லை.
ஐ.தே.க.வின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு சவாலாக இருக்கின்றார் என்பதனால் அக்கட்சியினால் விரும்பப்பட்ட ஒருவராக இருக்கவில்லை.
தான் நகர்த்த இருக்கின்ற பொதுக் கட்டமைப்பிற்கு எதிராக இருக்கின்றமையால் ஜனாதிபதியால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.
கதிர்காமரின் கதிரையில் தொடர்ச்சியாக கண் வைத்திருப்பதனால் ஜயந்த தனபாலவினால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.
பதவி நிலையில் தான் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற போதும், தன்னுடன் போட்டி போடக் கூடிய கவர்ச்சி நிலையில் இருப்பதனால் மஹிந்த ராஜபக்ஷவினால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.
தமிழ்த் தேசத்தின் அபிலாஷைகளுக்கு எதிரானவராக இருந்ததனால் புலிகளினால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.
அவரை விரும்பியது ஜே.வி.பி. யினரும் இந்தியாவும் தான்.
இவ்வாறு பலரால் விரும்பப்படாத ஒருவராக இருக்கும் போது கொலைக்கு ஒரு தரப்புத்தான் காரணம் என எவ்வாறு உறுதியாகக் கூற முடியும்?
உயர் பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் கூட்டு முயற்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். அப்படியானால் இதில் புலிகளின் பங்கு பற்றிய ஊகம் 1/5 ஆக மட்டுமே இருக்க முடியும். சிலவேளை விஷேட பங்கு புலிகளுக்கு இருந்திருக்கக் கூடும் என தர்க்கிக்கலாம்.
புலிகள் தான் இதில் விஷேட பாத்திரத்தை ஆற்றியிருப்பார்களானால், அவர்கள் மூன்று தெளிவான செய்திகளை சிங்கள தேசத்திற்கு கூறியிருக்கின்றார்கள்.
முதலாவது, கிழக்கினை உங்களால் குழப்ப முடியுமாயின் தெற்கினை எம்மால் குழப்ப முடியும்.
இரண்டாவது, நாங்கள் எப்போதும் போருக்குத் தயார்.
மூன்றாவது, எமது தலைவர்களை கொலை செய்துவிட்டு உங்களது தலைவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
உண்மையில் நிழல் யுத்தத்தின் வளர்ச்சியான தர்க்கமும் இதுவாகத் தான் இருக்கும்.
தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்து விட்டது என மஹிந்த ராஜபக்ஷ காற்றில் பறக்கலாம்.
பேரினவாத நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகிய ஸ்ரீலங்காவின் மைய அரசியலை பேரினவாத நிகழ்ச்சி நிரலிற்குள் கொண்டு வந்து விட்டோம் என ஜே.வி.பி. யினர் எக்காளம் போட்டு சிரிக்கலாம்.
ஆனால், யதார்த்த நிலையில் சிங்கள தேசம் தொடர்ச்சியாக தோல்விகளையே தழுவிக் கொண்டிருக்கின்றது.
இதுதான் சிங்கள தேசத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்!
பிற தேசங்களை ஒடுக்கும் எந்தத் தேசமும் தோல்விகளைத் தழுவும் என்பதே இயக்க விதி! சிங்கள தேசம் மட்டும் இதற்கு எவ்வாறு விதிவிலக்காக இருக்க முடியும்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
புலிகள் தான் இதில் விஷேட பாத்திரத்தை ஆற்றியிருப்பார்களானால், அவர்கள் மூன்று தெளிவான செய்திகளை சிங்கள தேசத்திற்கு கூறியிருக்கின்றார்கள்.
முதலாவது, கிழக்கினை உங்களால் குழப்ப முடியுமாயின் தெற்கினை எம்மால் குழப்ப முடியும்.
இரண்டாவது, நாங்கள் எப்போதும் போருக்குத் தயார்.
மூன்றாவது, எமது தலைவர்களை கொலை செய்துவிட்டு உங்களது தலைவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
உண்மையில் நிழல் யுத்தத்தின் வளர்ச்சியான தர்க்கமும் இதுவாகத் தான் இருக்கும்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
தமிழீழ தேசிய அடையாள அட்டை அறிமுகம்!
[புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2005, 14:28 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைய தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற் பணியாக தமிழீழ தேசிய அடையாள அட்டையினை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்விடமாகக் கொண்ட மக்களிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பதினாறு வயதை பூர்த்தி செய்த அனைத்து மக்களும் தமிழீழ தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழீழ தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது தொடர்பாக அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் பத்திரிகை வாயிலாகவும், அருகிலுள்ள போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு, பிரதேச செயலகங்களிலும், மனித வள அலுவலகங்களிலும், கிராம அலுவலர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழீழ ஆட்பதிவுத் திணைக்கள தேசிய அடையாள அட்டைப்பகுதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img240.imageshack.us/img240/3866/journalistattacked01a7pb.jpg' border='0' alt='user posted image'>
என்ன கொடுமை இது?
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
அரசுக்குள் இருக்கும் முரண்பாடுகளே கதிர்காமர் கொலைக்கு காரணம் -வெளிநாட்டு உளவு அமைப்பு
சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்
கொலைக்கு அரசுக்குள் இருக்கும் முரண்பாடுகளே காரணம்
என்று வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் விருப்பத்திற்கு மாறாக
ஜேவிபிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மீண்டும் கூட்டணி ஏற்படுத்துவற்கு லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே இவர் கொலை
செய்யப்பட்டார் என்றும் கதிர்காமரின் கொலைக்குப்
பயன்படுத்திய துப்பாக்கி இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளது என்றும் தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவிடம்
வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
http://www.pathivu.com/content/news/doc/24...24_08_20058.htm
நன்றி பதிவு
www.pathivu.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
|