Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறுக்கு வழிகள்
#1
<b>குறுக்குவழிகள்-1</b>

iexplore, iexplore www.yarl.com, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd, gpedit.msc, msaccess, mplayer2,

cleanmgr, dfrg.msc, devmgmt.msc, mmc.exe, explorer, themes, eudcedit, msinfo32.exe, services.msc, sndrec32, \boot.ini, control, dxdiag, sfc, compmgmt.msc, control userpasswords2, oobe/msoobe /a,

இவைகளெல்லாம் றன் கட்டளைகள். ஸ்ராட் பட்டனை தட்டி பின் றன்னை (run) கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை ரைப் செய்து விளைவை பார்க்கவும். பல புறோகிறாம்களை இயக்குவதற்கு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் காற்புள்ளியோ அல்லது முற்றுத்தரிப்போ இடப்படக்கூடாது

Also Please see page 2
Reply
#2
realplay என்று போட்டேன். கண்டுபிடிக்கேலல்லை என்ற வருகுது தேவகுரு அண்ணா நீங்கள் தான் சொல்லோணும் நான் என்ன செய்ய?
Reply
#3
<b>குறுக்குவழிகள்-2</b>

இளங்கோ அவர்களே!

நான் வின் 2000 யே எனது கணணியில் பாவிக்கின்றேன். றன் பெட்டியில் realplay எனத்தட்டச்சு செய்தால் realplayer இயங்க ஆரம்பிக்கின்றது. எனது கணணியில் realplayer ஐ இன்ஸ்டால் செய்துள்ளேன்

மேலும் சில விடயங்களை தருகின்றேன். மைக்கிறோசொவ்ற்றின் அநேகமான புறோகிறாம்களுக்கு இது பொருந்தும். வேட்டில் ஏதாவது டொக்கியுமென்டில் வேலை செய்யும்போது ஆல்ட்+0188 என கீ பண்ணினால் 1/4 வரும்
ஆல்ட்+0189 என கீ பண்ணினால் 1/2 வரும்
ஆல்ட்+0190 என கீ பண்ணினால் 3/4 வரும்.
இபபடி ஆல்ட் உடன் கீழ் காணும் இலக்கங்களை சேர்த்து கீ பண்ணுவதன்மூலம் அதிசய உருவங்களை தேவை ஏற்படின் உங்கள் டொக்கியூமென்டில் பதிக்கலாம்
0134, 0149, 0150, 0151, 0161, 0162, 0163, 0165, 0166, 0169, 0170, 0174, 0176, 0177, 0178, 0179, 0185, 0186, 0188, 0189, 0190, 0191, 0209, 0225, 0227, 0233, 0237, 0241, 0243, 0247, 0250, 0252,
ஆல்ட் உடன் கீ பாட்டில் உள்ள இலக்க கீக்களை மாத்திரம் பயன்ப்டுத்த்வேண்டும். அதிசயமாக உள்ளதா? பயன்பெறுங்கள். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.

நன்றி
Reply
#4
ஆஹா வந்தார் தேவகுரு
உண்மையிலேயே அதிசயம்தான்
உங்கள் முயற்சிக்கும் அதை எம்முடன் பகிரிந்தமைக்கும் நன்றிகள்
[b] ?
Reply
#5
ஓ அதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்
நான் நினைத்தேன் realpayer ஐ install பண்ணாமலே குறுக்குவழியில் realplayer ஐ இயங்க வைக்கலாம் என்று.

நான் நல்லாய் ஏமாந்துவிட்டேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


alt தகவல் நன்று
நன்றி



தாத்தாவும் யாழும் இங்கு alt தான்
என்ன ஒரு 50, 55 இருக்குமா?
Reply
#6
Quote:தாத்தாவும் யாழும் இங்கு alt தான்
என்ன ஒரு 50, 55 இருக்குமா?


install பண்ணாமலே run பண்ணக்கூடிய வயது
Reply
#7
ஆஹா

அடிக்கடி ரன் செய்யாது . . . .

Quote:தாத்தாவும் யாழும் இங்கு alt தான்
என்ன ஒரு 50, 55 இருக்குமா?


Quote:install பண்ணாமலே run பண்ணக்கூடிய வயது
[b] ?
Reply
#8
Quote:iexplore, iexplore www.yarl.com, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd,
gpedit.msc, msaccess, mplayer2, cleanmgr,

<b>இவை அப்படியாக இயங்குவதன் வழிமுறையை அல்லது எப்படி இயங்குகிறது என்று விளக்கினால் என்னைப் போன்றவர்கள் விளங்கிக்கொள்ள இலகுவாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.முடிந்தால் தாருங்கள்.உதவியாக இருக்கும்</b>

charmap எனும் சிறிய புரோகிராம் உங்கள் கணணியில் இருக்குமானால் ஒவ்வொரு எழுத்துருவிற்கும் உரிய பல அறியப்படாத எழுத்துக்களைக் காணலாம் என்று சொல்கிறார்கள்.அதாவது

Quote:ஆல்ட்+0189 என கீ பண்ணினால் 1/2 வரும்
ஆல்ட்+0190 என கீ பண்ணினால் 3/4 வரும்.
இபபடி ஆல்ட் உடன் கீழ் காணும் இலக்கங்களை சேர்த்து கீ பண்ணுவதன்மூலம் அதிசய உருவங்களை தேவை ஏற்படின் உங்கள் டொக்கியூமென்டில் பதிக்கலாம்
0134, 0149, 0150, 0151, 0161, 0162, 0163, 0165, 0166, 0169, 0170, 0174, 0176, 0177, 0178, 0179, 0185, 0186, 0188, 0189, 0190, 0191, 0209, 0225, 0227, 0233, 0237, 0241, 0243, 0247, 0250, 0252,

இவை என்ன வடிவத்தில் இருக்கும் என்பதை பார்த்துவிட்டு பின்னர் கொப்பி பேஸ்ற் அல்லது அந்த இலக்கத்தினைப் பார்த்துவிட்டு தேவகுரு அவர்கள் சொன்னது போன்று ஆல்ட் பொத்தானுடன் இணைத்தும் பெறலாம் என்று ஒரு நண்பர் சொன்னார்.

முயற்சித்துப்பாருங்கள்.
<b>RUN எனும் இடத்தில் charmap என்று ரைப் செய்து,

அல்லது START > PROGRAMS > ACCESSORIES > SYSTEM TOOLS > CHAR MAP ஐ தெரிவு செய்தும் பார்க்கலாம்.</b> [windows xp]

அடிக்கடி தேவையென்றால் CHAR MAP ஐ கொப்பி செய்து உங்கள் desktop ல் இணைத்துக்கொண்டால் ஒரே க்ளிக்கில் புரோகிராம் வேலை செய்யும்.

முயற்சித்துப் பாருங்கள்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#9
தகவல்களிற்கு நன்றி வீரா
[b] ?
Reply
#10
<b>குறுக்குவழிகள்-3</b>

ஒரு பந்தியை வெட்டி,அல்லது கொப்பி பண்ணி பேஸ்ற் பண்ணும் போது அது கிளிப்போட்டுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அது அங்கு அகற்றப்படும்வ்ரை அல்லது இன்னொரு செய்தி கொண்டுவரப்படும்வரை பதியப்பட்டு கிடக்கும்.ஆனால் அது தற்காலிகமானது.
கிளிப்போட்டில் உள்ளதை எந்த டொக்கியுமென்டிலும் பேஸ்ற் பண்ணலாம்.

கிளிப்போட் என்பது ஒன்று, கிளிப்புக் என்பது இன்னொன்று.ஆனால் கிளிப்புக்கை திறந்தால் அங்கே கிளிப்போட்டையும் அதில் பதியப்பட்டுள்ள செய்தியையும் காணலாம்.எனவே கிளிப்போட்டில் உள்ளவற்றை கிளிப்புக்கின் ஒவ்வொரு பக்கங்களிலும் நிரந்தரமாக பதிந்து பாதுகாக்கலாம். அப்பக்கங்களுக்கும் ஒவ்வொரு பெயரும் கொடுக்கலாம். தேவையெனில் இவைகளை கோப்புக்களாகவும் வின். எக்ஸ்புளோரருக்கும் கொண்டுசெல்லலாம். கோப்புக்களின் எக்ஸ்டென்ஸன் .clp என்பதாகும். மற்ற கொம்பியூட்டர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம். மேலதிக விபரம் வேண்டின் ஸ்ராட், றன் ஐ கிளிக் பண்ணி clipbrd என ரைப்பண்ணி உதவி ஐ பார்க்கவும்
start-->Run-->type "clipbrd"--> Help (for more details)
Reply
#11
<b>குறுக்குவழிகள்-4</b>

உங்கள் கம்பியூட்டர் மெதுவாக வேலைசெய்கிறதா? கவலை வேண்டாம். Overclocking செய்யலாம்.

ஒவர் க்ளொக்கிங் என்பது For eg:- செலிறோன் 366 Mhz ஐ 450 Mhz ல் செயல்படவைப்பது அல்லது பென்டியம் 11 266 Mhz ஐ 350 Mhz ல் செயல்படவைப்பது.

க்ளொக் ஸ்பீட் into க்ளொக் மல்ரிபிலையர் = சிபியு ஸ்பீட்
இந்த இரண்டில் ஒன்றை அதிகரிப்பதின் மூலம் சிபியுவின் வேகத்தை அதிகரிக்கலாம்'
விபரம் வேண்டுவோர் கீழ் காணும் லிங்கிற்கு செல்லவும்
http://www.ciol.com/content/search/showart...?arid=19442&way
Reply
#12
[quote]கரக்ட்டர்மப் எனும் சிறிய புரோகிராம் உங்கள் கணணியில் இருக்குமானால் ஒவ்வொரு எழுத்துருவிற்கும் உரிய பல அறியப்படாத எழுத்துக்களைக் காணலாம் என்று சொல்கிறார்கள்

சில எழுத்துருக்களில் எழுதுவதற்கு உரிமை கொடுக்கப்பட்டாமல் இருக்கும் அப்படியான எழுத்துருக்களில் டைப் செய்தால் ஆங்கிலத்தில் தான் எழுத்து வரும். இதுபோன்ற எழுத்துருக்களைப்ப பயன்படுத்த இந்த கரக்ட்டர்மப்பை பயன்படுத்தலாம். ஆனால் அதிக சிரமப்பட வேண்டி இருக்கும். ஒவ்வொரு எழுத்தையும் தேட வேண்டும். அதிகப்படியாக தலையங்கங்;களை வேண்டுமென்றால் டைப்பசெய்யலாம். ஆனால் இம்மாதிரி எழுத்துருக்கள் சாதாரண எழுத்துருபொன்று இல்லாது அலங்காரத்துடன் காணப்படும். உதாரணமாக திருமணஅழைப்பதல்களில் பயன்படுத்துவது போன்றதொரு எழுத்துரு.

கரக்ட்டர்மப் சிலவேளைகளில் இன்ஸடால் செய்யபடாமல் இருக்க வாய்ப்பு உண்டு.நீங்களே இதை இணைத்துக்கொள்ளலாம்.

இதுவழக்கமாக

programme accessories>systemtool>charactermap

காணப்படும் இல்லை என்றால் நீங்களே இதை இணைத்துககொள்ளலாம்.

settings>controlpanel>addremoveprogramme>systemtools>charactermap

[/php]
Reply
#13
<b>குறுக்குவழிகள்-5</b>

இதோ மீண்டும் ஒறு குறுக்கு வழி!
ஒரே அடியில் நூற்றுக்கணக்கான கோப்புக்களை திறக்கவேண்டுமெனில் போங்கள்,
ஸ்ராட்--> எக்ஸ்புளோரர் -->+C: (தேர்வு)
சீ டிரைவின் இடப்புறம் கூட்டல் அடையாளம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். இப்போ நியூமெறிக் கீபாட்டில் உள்ள ஸ்ரார் கீயை தட்டவும். ஸ்குறோல் பார் ஓடி நடுங்கி பின் நிலைக்கு வரும். பயப்படவேண்டாம். சீ டிறைவின் கீழ் உள்ள அத்தனை கோப்புக்களும் உப கோப்புக்களும் திறந்து கிடப்பதை காணலாம்.

இதேபோல் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் ஏதாவது ஒரு கோப்பை தெரிவுசெய்து நியூமெறிக் கீபாட்டில் உள்ள ஸ்ரார் கீயை தட்டினால் அதன் கீழ் உள்ள உப கோப்புக்களும் அதன் கீழ் உள்ள உப உப கோப்புக்களும் ஒரே முறையில் விரியும்.
Reply
#14
அற்புதம் தேவகுரு
Reply
#15
<b>குறுக்குவழிகள்-6</b>

கம்பியூட்டர் திரையில் காணும் காட்சிகளை கோப்பாக்கவோ அல்ல்து பிரிண்ட் செய்யவோ விரும்புகிறீர்களா?

வேண்டிய காட்சியை திரைக்கு கொண்டுவாருங்கள். பிரிண்ட் ஸ்கிறீன் என்ற பட்டனை அழுத்துங்கள். இப்போ காட்சி கிளிப்போட்டில் பதிவாகிவிடும். இத்தொகுப்பை விட்டு வெளியேறி எம். எஸ். பெயிண்டை திறக்கவும்.File-->New-->Paste பண்ணவும் படம் பெரிதாக உள்ளது. பரவாயில்லையா என கேட்கும். ஆம் என கூறவும். வேண்டிய மாற்றங்களை செய்யவும். செலக் டூலை பயன்படுத்தி வேண்டிய அளவை வெட்டி புதிய ஒரு பக்கத்தில் ஒட்டி வேண்டுமானால் விளக்க குறிப்பை சேர்த்து அல்லது வேறு சிறிய படங்களையும் சேர்த்து, கோப்பாக சேவ் பண்ணலாம் அல்லது பிறிண்ட் எடுக்கலாம்.

Thanks

Please see the second page also
Reply
#16
சின்ன வயதில் நிறைய தடவைகள் குறுக்காலை போனதுகள் என திட்டு வேண்டியதுண்டு
இப்ப இப்படி போறதாலை எவ்வளவு நன்மைகள்.

நன்றி தேவகுரு
[b] ?
Reply
#17
<b>குறுக்குவழிகள்-7</b>

உங்கள் உலாவியின் லிங் பாரில் நீங்கள் அதிகம் பாவிக்கும் வெப்தள முகவரியை பட்டன்போல் போட்டுவைத்து பாவிக்க விரும்புகிறீர்களா?


இன்ட்ர்நெற் எக்ஸ்புளோரரில், அட்றஸ் பாரில், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தளமுகவரியின் ஐகொன் ஐ நேரடியாக இழுத்து லிங் பாரில் போடவும். விரும்பியபோது டிலீற் ஐ கொடுத்து அழித்தும்கொள்ளலாம்

இதேபோல் வெப்தளத்தில், Favorites கோப்பில், டெஸ்க்ரொப்பில் உள்ள லிங் ஐயும் இழுத்துபோடலாம். மிகவும் வசதியாக இருக்கும்.
Reply
#18
சின்ன விடயம்தான் .ஆனால் இன்று இதைப் பார்த்துதான் முயற்சித்துப்பார்த்தேன்.

தகவலுக்கு நன்றி
Reply
#19
<b>குறுக்குவழிகள்-8</b>

ஒரு கட்டுரையை அல்லது அதன் ஒரு பந்தியை அல்லது அதன் ஒரு சொல்லை அல்லது அதில் ஒரு எழுத்தை தேர்வு செய்ய பல வழிகள் உள்ளன. பலரும் பாவிப்பது மவுசால் அழுத்தி இழுப்பது அல்லது ஸ்ராட்->எடிட் ஆல் ஐ பாவிப்பது.

இவை தவிர மேலும் பல வழிகள் உள்ளன
அழுத்தவும்........................................................................... முடிவு

சிவ்ற்+இட அல்லது வல அம்புக்குறி......................... ஒவ்வொரு எழுத்தாக
சிவ்ற்+மேல் அல்லது கீழ் அம்புக்குறி.......................... ஒவ்வொரு வரியாக
சிவ்ற்+கொன்றோல்+இட அல்லது வல அம்புக்குறி........சொற்களாக
சிவ்ற்+கொன்றோல்+மேல் அல்லது கீழ் அம்புக்குறி.......பந்தி பந்தியாக
கொன்றோல்+அ.............................................................கட்டுரை முழுமையாக

இவை தவிர நான் அதிகமாக பாவிக்கும் இன்னொரு இலேசான வழியும் உண்டு
வேண்டிய இடத்தில் ஒரு கிளிக் செய்துவிட்டு எங்காவது இன்னொரு இடத்தில் சிவ்ற் ஐ அழுத்திக்கொண்டு கிளிக் செய்தால் இடைப்பட்ட பகுதி முழுவதும் தேர்வாகும்
Reply
#20
<b>குறுக்குவழிகள்-9</b>

வின்டோஸ் 2000, 98, 95, மில், எக்ஸ்பி பாவிப்பவர்களுக்கு மிகவும் பிரயோசனமான ஒரு கருத்துக்களத்தின் லிங் கீழே தரப்பட்டுள்ளது. இதில் வின்டோஸ் 2000 பற்றி மாத்திரம் 1500 கு மேற்பட்ட கம்பியூட்டர் சம்பந்தப்ட்ட பிரைச்சனைகள் பற்றி போஸ்ட் செய்துள்ளார்கள். அதற்கு உரிய தீர்வுகளும் தரப்பட்டுள்ளன.மிகவும் பிரயோசனமான தளம் இது. ஆங்கிலம் ஓரளவு தெரிந்தால் போதுமானது, சகல பிரைச்சனைகளும் அலசப்பட்டுள்ளன, போய்ப்பாருங்கள். வின்டோஸ்98, 95, மில், எக்ஸ்பி ஆகியவற்றுக்கு வெவ்வேறு பக்கங்கள் உள்ளன

http://annoyances.org/exec/forum/win2000
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)